செல்வங்களை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதிகரிக்கும் செல்வம்

பரபரப்பாக வங்கி இயங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தயங்கிய குரலில் வாடிக்கையாளர், “சார்...” என்று நுழைந்தார். கேஷ் கவுண்டரில் இருந்து, “என்ன???” என்று கடுகடுப்பாக மிரட்டும் தொனியில் உள்ளிருந்து கேள்வி வந்தது.
வாடிக்கையாளர், “சார் அரை மணிநேரத்திற்கு முன்புதான் இங்கு வந்து என்னுடைய அக்கௌண்டிலிருந்து 10,000 ரூபாய் பணம் எடுத்துச் சென்றேன். அதில் ....” என்று இழுத்தார்.
உடனே உள்ளேயிருந்தவர், “இப்ப அதுக்கென்ன?...” என்று சுதாரித்து, அதே குரலில் கோபம் குறையாமலேயே கேட்டார்.
“ஏனய்யா இப்படி உயிரை வாங்குவீர்கள். வாங்கிச் செல்லும்போதே சரியாக எண்ணிப் பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? நாங்கதான் இங்கேயே ஒரு பலகை வைத்திருக்கிறோமில்லையா.... அதைப் பாருங்கள். இங்கேயே பெற்ற பணத்தை சரிபார்த்துச் செல்லுங்கள்’ என்று போட்டிருக்கில்லே. படித்துத் தொலைய வேண்டியதுதானே” என்று சத்தமிட்டு நிறுத்தினார்.
பயந்த சுபாவம் கொண்ட அந்த வாடிக்கையாளர் சொன்னார், “மன்னிக்க வேண்டும். நான் படிக்காமல் போனது தப்புதான். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
நீங்க ஒரு ஐநூறு ரூபாயை அதிகமாகத் தந்துவிட்டீர்கள்.
இந்தாங்க உங்க ஐநூறு ரூபாய்" என்று தந்த வாடிக்கையாளரைப் பார்த்து உறைந்துபோய் அதிர்ச்சியும், நன்றியும் பொங்கியவராய் கேஷ் கவுண்டரில் அவர் அமர்ந்திருந்தார்.
இப்படி சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுபவர்கள் எதை வீணடிக்கின்றார் என்று அவர்களுக்கே தெரியாது.
எப்போதும் எரிந்து விழுபவர்கள் அதுதான் தங்களுடைய பாதுகாப்பு, அதுதான்

பணம்
திவாலானால்
முதலுக்குத்தான்
மோசம். சக்தி
திவாலானால்
உங்களுக்கே
மோசம்.
தங்களுக்கான மூலதனம் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்கு மாபெரும் நஷ்டம் என்பது தெரியாததுதான் வேடிக்கை. உங்களோடு இங்கு பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான சத்தியம்...
உங்களின் உணர்வுகளும், எண்ணங்களும் பணத்திற்குச் சமம்.
உங்களுடைய மனோ சக்தி பணத்திற்குச் சமம்.
எப்படி பணத்தை அனாவசியமாக, ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் பணரீதியாக திவால் ஆகிறோமோ அதே மாதிரி நம்முடைய சக்தியை ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் சக்தி ரீதியாக திவால் ஆகிவிடுவீர்கள்.
பணரீதியான திவால் (Bank ruptcy) எப்படி வாழ்க்கையில் நடக்கின்றதோ. அதுபோலவேதான் சக்தி ரீதியான திவால் (Energy ruptcy) நடக்கின்றது.
சக்திரீதியான திவால், பணரீதியான திவாலைவிட மோசமானது. பணம் திவாலானால் முதலுக்குத்தான் மோசம். சக்தி திவாலானால் உங்களுக்கே மோசம்.
சக்தி திவாலாகிக் கொண்டிருக்கும் ஒருவரால் பணத்தை ஈர்க்க முடியாது.
ஆத்ம தியானம்

யாராவது உங்களுக்கு 1000 ரூபாய் பெறுமானமுள்ள வேலை செய்தால், ஆயிரம் ரூபாய் அவருக்குச் சம்பளமாய் கொடுப்போம்.
புத்திசாலியாக இருந்தால் 900 ரூபாய் சம்பளமாகக் கொடுப்போம். உண்மையிலேயே அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 1000 ரூபாய் சம்பளம் கொடுப்போம்.
இது நம்முடைய மனப்பழக்கம்.
ஆனால் அதே மனிதர் 1000 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு தவறைச் செய்துவிட்டாரானால், எந்த அளவிற்கு கோபத்தை அவர்மேல் கொட்டுவோம்? 10,000 ரூபாய் பெறுமானமுள்ள கோபத்தையாவது அவர்மேல் கொட்டுவோம். அவர்மேல் விழுந்து என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்துவிடுவோம்.
எப்படி 1000 ரூபாய் வேலை செய்தவருக்கு 10,000 ரூபாய் பணம் கொடுத்தால் நீங்கள் திவால் ஆவீர்களோ, அதேமாதிரி 1000 ரூபாய் தவறு செய்தவருக்கு, 10,000 ரூபாய் கோபத்தைப் பொழிந்தீர்களானால் சக்திரீதியாக திவால் ஆகிவிடுவீர்கள்.
உங்களுக்குள் இருக்கின்ற கோபம், காமம், ஆவேசம், எல்லாமே சக்திதான். அதை முறையாக உபயோகித்தோமானால் வாழ்க்கையில் தேவையான அளவு பொருள் வளமோ, சுகமோ சுலபமாக அடைந்து இனிமையாக வாழ்க்கையை நடத்தலாம்.
அப்படியில்லாமல் முறை தவறி தேவையில்லாத இடங்களில் பொழிவது, வீணடிப்பது என்று செய்ய ஆரம்பித்தோமானால் இயற்கையிலேயே உங்களின் சக்தி திவால் ஆகிவிடும். அப்புறம் செலவு செய்வதற்கு சக்தி இருக்காது. இயற்கையாக பணம் திவாலாவதுபோல் சக்தியும் திவாலாகிவிடும்.
இந்தச் சக்தி திவாலைச் சரி செய்ய முடியும். உள்ளுலக செல்வத்தை அதிகரிப்பதால் மட்டுமே வெளியுலக செல்வத்தை அதிகரிக்க முடியும்.
நம்முடைய எண்ண ஓட்டங்களும், மன ஓட்டங்களும் தெளிந்த ஒரு பாதையை நோக்கிச் செல்லும் போது இந்த ஆன்மீகக் கருத்துக்களை, வாழ்வியல் தீர்வுகளுக்கான கருத்துக்களை உள்வாங்கும் போது, சக்தி விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
பலமுறை நம் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வந்து சொல்வதுண்டு, "உண்மையிலேயே தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு 6 மாதத்தில் என்னுடைய வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வந்து விட்டது. இது என்ன மந்திரம்? இது என்ன மாயத்தினால் இப்படி இது நடக்கிறது?"
எந்த மந்திரமும், மாயமும் இல்லை. உங்களுக்குள்ளே தெளிவு வரும்பொழுது செல்வத்தை ஈர்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் என்னென்ன குணங்கள் வேண்டுமோ அத்தனையும் உங்களுக்குள் வளரத்துவங்குகிறது.
முதல் விஷயம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் செல்வத்தை ஈர்க்கவும், அனுபவிக்கவும் உடலும், மனமும் தயாராகிறது.
இரண்டாவது உங்களுக்குள் உருவாகின்ற ஆனந்த சக்தி, படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் எதிரொலிக்கும்பொழுது, உங்கள் உடலும், மனமும் தயாராகின்றது. படர்க்கையில் அது பரவும்பொழுது உங்கள் வாழ்க்கையில் எதுவெல்லாம் வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ, அதே மாதிரியான நிகழ்ச்சி களையும், அதற்கு ஏற்றாற்போல் நபர்களையும் உங்களை நோக்கி ஈர்க்கும் .
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வங்கியில் பணத்தைச் சேமித்து வைப்பது போல மனத்தில், உணர்வில், சக்தியை சேமிக்க வேண்டும். ஆனந்தத்தை, உள்ளுலக செல்வத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகரித்தால், வெளியுலக செல்வம் தன்னால் ஈர்க்கப்படும்.
இது ஏதோ ஒரு கருத்து என்று நினைத்துவிட்டு விடாதீர்கள்.
என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் ... ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.