நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிங்கமொன்று காட்டு விலங்குகளில் பெரியது எது? என்று கண்டுபிடிக்க காட்டுக்குள் அலைந்தது, எதிரே வந்த முயலைப் பார்த்து, “காட்டரசன் யார்?” என்று கேட்டது.
“நீங்கள் தான்” என்றது முயல்.
அடுத்து அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டது, “நீ தான்” என்றது ஒட்டகச்சிவிங்கி.
இந்த உரையாடலைச் சற்றும் மதிக்காதவாறு சிங்கத்தைக் கடந்துசென்ற யானையின் முழங்காலில் ஒரு தட்டுத்தட்டிய சிங்கம், “காட்டரசன் யார்?” என்று கேட்டது.
சிங்கத்தை நோக்கித் திரும்பிய யானை, சிங்கத்தைத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரத்தின் மேல் அடித்தது!
மரத்தில் அடிபட்டு கீழே விழுந்த சிங்கம், தன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து,
“ஹலோ! கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லையென்றால், “தெரியவில்லை”, என்று சொல்லிவிட்டுப் போகலாமே.... அதற்காக இப்படியா செய்வது?” என்றது. அருகேயிருந்த ஒட்டகம் சிரித்தது.
மனித மனத்தில் இருக்கும் சம்ஸ்காரங்கள் இந்தச் சிங்கத்தைப் போல வெட்டி பந்தா விடுபவையே. கேட்க ஆள் இல்லாவிட்டால்
சாதாரண முரடன்கூட தாதாவாக மாற முயற்சிப்பான். கேட்க ஆள் இல்லாத பட்சத்தில் அவன் தாதாவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தாதாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதிகளின் நிம்மதி பறிபோகும். பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
சம்ஸ்காரங்கள் தாதாவாக மாற முயற்சிக்கும் உள்ளுலக ரவுடிகள்.
நித்யானந்தம் மாத இதழ் நிருபர் ஒருமுறை சம்ஸ்காரங்கள் பற்றி கேட்டது.

சம்ஸ்காரங்கள்
தாதாவாக மாற
முயற்சிக்கும்
உள்ளுலக ரவுடிகள்.
"சம்ஸ்காரங்கள்"
"ஆனந்தத்தின் எமன்கள்"
"எப்படி "
உள்ளிருந்து பொங்கும் தெய்வ சுகம் ஆனந்தம். சம்ஸ்காரங்கள் அந்த ஊற்றை அடைத்துக் கொண்டு நிற்கும் எமன்.
'விடுபட வழியே இல்லையா"
இருக்கிறது
என்ன வழி?
சம்ஸ்காரங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது.
சுருங்கச்சொல்ல வேண்டுமானால், "சம்ஸ்காரங்களைத்தான் கர்மவினைகள்", என வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதையே இக்கால ஆராய்ச்சியாளர்கள் ENGRAMS என குறிப்பிடுகின்றார்கள்.
திருவிழா நடக்குமிடத்தில் கேமராவை ஸ்விட்ச் ஆன் (Switch on) செய்து விட்டு கேமராமேன் நகர்ந்து சென்றால்கூட, கேமராவில் அங்கு நிகழும் எல்லாமே பதிவாகிக் கொண்டேயிருக்கும்.
திடீரென அங்கே ஒரு கலவரம் ஏற்பட்டால், அதுகூட அந்தக் கேமராவில் பதிவாகிக் கொண்டேயிருக்கும். கேமராவில் பதிவானதை எப்போது திரையிலிட்டுப் பார்த்தாலும், அங்கு நடந்த மொத்த நிகழ்வுமே தெரிய வரும். அதே கலவரத்தை மீண்டும் உணரமுடியும்.
இதேபோலத்தான் நம்முடைய ஆழ்மனம் எனும் கேமராவானது தொடர்ந்து நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றது.
UNCONSCIOUS IS A NON-STOP CAMERA.
அது 24 மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தப் பதிவுகளைத்தான் எண்ணப்பதிவுகள் என்று குறிப்பிடுகின்றோம்.
நம் ஆழ்மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது எந்த ஒரு பழைய எண்ணப்பதிவையும், எப்போது வேண்டுமானாலும் அதன் இஷ்டம்போல் மனத்திரையில் Replay செய்துவிடும். அதனால்தான் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதேயில்லை.
எந்த எண்ணம் வேண்டுமானாலும் வரலாம் என்பதால்தான் நம்மை கவலைக்குள்ளாக்கிய ஒரு எண்ணம் மனத்திரைக்கு வரும்போது காரணமேயில்லாமல் கவலை வந்துவிடுகிறது. எரிச்சல், பயம், நம்மை ஆட்கொள்வதெல்லாம்...
மனத்திரையில் அவ்வப்போது வரும் சம்ஸ்காரங்களே!
NSP தியான முகாமில் கல்லூரி மாணவர் ஒருவர், "வேண்டாம், வேண்டவே வேண்டாம். அந்த எண்ணங்களை மீண்டும், மீண்டும் நினைக்க வேண்டாம், என முடிவெடுத்தாலும் தடுக்க முடிவதேயில்லை. என்ன செய்ய?" எனக் கேட்டதற்கு "தடுக்க வேண்டாம். விட்டுவிடுங்கள்" என்று சொன்னோம்.
"அதெப்படி விட்டுவிட முடியும்? வேண்டாம், வேண்டாம் என விட முயற்சித்தாலும் விட முடியவில்லையே?" என்று கேட்டார்.
> நம்முடைய ஆழ்மனம் எனும் கேமராவானது தொடர்ந்து நம்மைச் சுற்றி > நிகழும் நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றது. “இங்குதான் ஆழமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் விட முயற்சிக்கவேயில்லை. அந்த எண்ணங்களைவிட வேண்டும் என்ற முயற்சியில், அந்த எண்ணங்களை கரடிப்பிடியாக பிடித்துக்கொண்டு இருப்பதுதான் நிகழ்ந்திருக்கிறது.”
“என்னது? அவற்றை விடுகிறேன் என்ற பெயரில் பிடித்துக் கொண்டிருந்தேனா?” என ஆச்சரியமாய் கேட்ட மாணவர், அப்புறம் ஆனந்தமடைந்தார்.
“நீங்கள் சொல்லித்தந்த ஒரே தியானத்தில் என்னுடைய நான்கு வருட பிரச்சனைகளும் சரியாகி விட்டது.” என்று பின்னொரு நாளில் பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்தபோது பகிர்ந்து கொண்டார்.
அன்று அவர் கற்றுக்கொண்ட தியானம் இதுதான்.

ஆத்ம தியானம்
மனோவசிய தியானம்
“எல்லா மனிதர்களும் மனம் எனும் மோகினியால் வசியம் செய்யப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனதும் மாபெரும் சக்தி படைத்தது.
எந்த மனிதர் அந்த மனத்தையே வசியம் செய்கிறாரோ, அவர் எல்லாம் வல்ல சக்தி படைத்தவராகிறார், கடவுளாகிறார்” என்ற தியானக் கருத்தை சொல்லிக் கொண்டிருக்கையில்,
ஆனந்த யோகி ஒருவர் கேட்டார், “உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டார்.
“நீங்கள் மனத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஞானிகள் அந்த மனத்திற்கே விளையாட்டு காண்பித்தவர்கள்", என்று சொன்னோம்.
மனத்தின் நிஜ நிலவரத்தைப் புரிந்துகொண்டு விட்டால் உள்nodeகில் மட்டுமல்ல வெளியுலகிலும் ஆனந்தமாய் வாழக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்களின் பெயர் மனோஜ் என்றால், அது உங்களின் மனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்தான். உங்களின் உடலுக்கு வைக்கப்பட்ட பெயர் அல்ல.
யாராவது உங்களை அவமானப்படுத்திவிட்டால், அவமானப்படுத்தப்பட்டது நீங்களல்ல, உங்களின் மனமே அவமதிக்கப்பட்டது.
அவமானப்படும்போதும், ஏமாறும்போதும், தோல்வியடையும்போதும் பாதிக்கப்படுவது பக்குவப்படாத மனமே. இதுதான் மனத்தை வாட்டும் எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
நாம் "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொன்னாலும் மீறி, மீறி வந்துகொண்டேயிருக்கின்றன.
மனம் வாடினால்,
நாமும் வாடிப்போகின்றோம்.
மனம் மகிழ்ந்தால்,
நாமும் மகிழ்ச்சியடைகின்றோம்.
மனத்தின் வசியத்திற்கு மனிதன் கட்டுப்பட்டிருக்கும் நிலை மாற, ‘ஆனந்தமாயிருப்பது என்றால் என்ன?' என்று கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் ஆனந்தத்தின் முன்பு அந்த மனமே வசியமாகிவிடும்.
ஆனந்தமாயிருப்பது என்றால், மனம் வாடிப்போனால்கூட நாம் வாடாமல்லியாக பூத்துச் சிரிக்கும் புத்துயிர் நிலை.
"துக்கமாயிருக்கும்போது, ஆனந்தமாயிருப்பது சாத்தியமா? என நீங்கள் கேட்கலாம்.
சந்தோஷமாயிருக்கும்போது ஏதோவொரு சிறு மனக்காயத்தால் உங்களை துக்கத்தில் விழவைக்கமுடிவது எப்படி சாத்தியமான ஒன்றோ! அதுபோல இதுவும் சாத்தியமான ஒன்றுதான்.
இதற்குப் பதஞ்சலி யோக சூத்திரத்தில் வரும் பிரமாதமான பலன்களைத் தரும் எளிய தியானம் ஒன்றைச் சொல்கிறேன். செய்து பாருங்கள்.
மனம் வாடுதல் எனும் இரைச்சல் உங்களுக்குள் எழும்போதெல்லாம், "ஆனந்தமாயிருக்கிறேன்" எனும் எதிர்முனைக்கு உங்களைத் திருப்புங்கள், திருப்பினால் அந்த அதிசயம் நிகழும்... உங்களின் உயிரும், உடலும் ஆனந்தமயமாவதைக் காண்பீர்கள்.
அப்புறம் இந்தத் தியானத்தில் மனம் என்னும் சிறு குடிசையை விட்டு உணர்வுச் சுதந்திரம் பெற்றுவிடுவீர்கள். உணர்வு எனும் வரையறையற்ற நிலப்பரப்பை அடைவீர்கள்.
மனத்தை வாட்டும் மிக மோசமான எண்ணப்பதிவுகள் (சம்ஸ்காரங்கள்) உங்களை வாட்டுவதென்பதுகூட... உங்களின் உள்ளுலகம் எனும் மாபெரும் நிலப்பரப்பில் ஒரு மூலையில் வெடிக்கும் சிறு பட்டாசு போலத்தான் இருக்கும். அவை உங்களை துவம்சமாக்கும் அணுகுண்டுகளாக இருக்காது. ஆட்டிப்படைக்கும் அணுகுண்டாக இருக்காது.
பாகிஸ்தானில் ஏற்படும் கலவரம், இந்தியாவில் இருக்கும் உங்களைப் பாதிக்காது. அதேபோல் சம்ஸ்காரங்கள் நிறைந்த மனமும், அதன் கலவரமும் உங்களைப் பாதிக்காமல் வாழ முடியும்.
"எப்போதும் ஆனந்தமாயிருப்பேன்", என்ற முடிவெடுத்து வாழ்ந்து பாருங்கள். அந்த வாழ்வு தரும் இடைவிடாத ஆனந்தத்தால் மனத்தை வாட்டும் எண்ணங்கள் வாட ஆரம்பிக்கும். மனம் வசியமாகும். மகா சக்தி படைத்தவராவீர்கள்.
