KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஆனந்த ஊற்று நீங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆனந்த ஊற்று நீங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

'எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன். என்னுள் இருக்கும் மனத்திடமிருந்து என்னால் விடுபடவேமுடியவில்லை.

உடலும், மனமும் சொல்பேச்சு கேட்பதில்லை. உடலையும், மனத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத என்னால் எதைச் சாதிக்க முடியும்?" என்ற வருத்தத்தில் இருந்தால்கூட கவலை வேண்டாம். இங்கே பதில் இருக்கின்றது.

கட்டுரைக்குள் நுழைவோம்

காலனி கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள்
கால்களை நினைப்பதில்லை!
பெல்ட் கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள்
வயிற்றை நினைப்பதில்லை!
செயின் கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள்
கழுத்தை நினைப்பதில்லை!

இவைகளெல்லாம், சுகமாய் பொருந்தாத சமயத்தில்தான் நீங்கள் உங்களின் கால்களைப் பற்றியோ, வயிற்றைப் பற்றியோ, கழுத்தைப் பற்றியோ நினைப்பீர்கள்!

"மீண்டும் மீண்டும் கால்களை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் செருப்பு உறுத்துகின்றது" என்று பொருள்.

செருப்பு கச்சிதமாகப் பொருந்திவிட்டால் கால்களைப் பற்றிய நினைவே இல்லாமல் வேறு வேலையைத் தொடர முடியும்.

அதேப்போல் ஆனந்தம் உங்களுக்குள் பொருந்திவிட்டால் உடலோடும், மனத்தோடும் கட்டுப்பட்டிருக்க மாட்டீர்கள்.

"உடல், மனம் பற்றிய நினைவுகள் இருந்தாலே ஆனந்தம் இன்னும் பொருந்தவில்லை" என்று பொருள்.

"ஆனந்தம் பொருந்திய க்ஷணத்தில் ஞானம் மலர்ந்துவிடும்".

"உடலும், மனமும் அவற்றின் உச்சத்தில் இயங்க ஆரம்பிக்கும்."

Sadhguru

"நம்முள் ஆனந்தத்தைப் பொருந்தவிடாமல் தடுப்பது எது?"

இதற்குப் பதில் சொல்லும் அருமையான கதை....

புத்தர் உடலை விட்டபின் நடந்த சம்பவம்...

"ஆனந்தம்
பொருந்திய
க்ஷணத்தில்
ஞானம்
மலர்ந்துவிடும்".

புத்தர் மறைந்த பிறகு பௌத்த மகா சங்கம் கூடியது. புத்தரோடு நிழல்போல் வாழ்ந்து வந்தவர் அவரின் அண்ணன் ஆனந்தன். "புத்தரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஞானமடைந்தவர்கள் பலர் இருக்க புத்தரோடு இருந்த அவருடைய அண்ணன் ஞானமடையவில்லை."

"ஞானமடையாதவர்கள்யாரும்இந்தக்கூட்டத்திற்குள் நுழைய முடியாது" என்று சங்கம் முடிவெடுத்துவிட்டது. எனவே, மண்டபத்திற்குள் நுழைய அழைப்பு இல்லாததால் மண்டபத்திற்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டார் ஆனந்தன்.

இருந்தாலும் அவர் புத்தரின் அண்ணன் அல்லவா?

"ஆயிரம்தான் ஆனாலும், புத்தப்பெருமானோடு நாள் முழுவதும் வாழ்ந்தவரல்லவா அவர்?" என்ற மற்றவர்களின் கேள்விகளையெல்லாம் பௌத்த மகா சங்கம் கேட்கத் தயாராயில்லை.

கடும் துக்கத்திற்குள் விழுந்தார். புத்தரோடு வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது...

புத்தர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆனந்தன் ஆழ்ந்த வேதனையை அனுபவித்தார்.

தன் வேதனையை புத்தரிடம் வெளிப்படுத்தினார், "எத்தனையோ பேர் உங்களால் ஞானமடைந்துவிட்டார்கள். உங்களின் ஒரு பார்வையே பலருக்கு ஞானத்தைத் தந்தது.

ஆனால் இத்தனை ஆண்டுகள் உங்களுடன் இருந்தும் எனக்கு ஞானம் வாய்க்கவில்லையே! நான் என்ன செய்வேன்? நாற்பது ஆண்டுகளாக அடையாததை இனியும் அடைவேன் என்ற நம்பிக்கையே நசிந்துவிட்டது. நற்கதி இன்னும் அடையாதது ஏன்?"

புத்தர் சொன்னார், "ஞானமடைவது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஒருவேளை, நீ ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கலாம். நான் உடலை விட்டுப்போன பின்தான் நீ ஞானமடைவாய் என்று நினைக்கிறேன்"

"நீங்களா எனக்குத் தடை?" என்று தழுதழுக்கும் குரலில் புத்தரிடம் கேட்டார் ஆனந்தன்.

புத்தர், "ஆம்!. என்னைக் குருவாய் ஏற்கும் முன்பு நீ பெற்ற மூன்று வாக்குறுதிகளே தடைகளாக மாறிவிட்டது" என்றார்.

சீடனாக தீக்ஷை பெறும்முன் தன் தம்பியான புத்தரிடம், ஆனந்தன் மூன்று வாக்குறுதிகளைக் கேட்டார்.

"புத்தா, நான் சீடனான பின்பு உன்னிடம் எதுவும் கேட்க முடியாது. உன் சொல்படிதான் நான் நடக்க வேண்டும். அதனால் இப்போதே மூன்று வாக்குறுதிகளை நீ தர வேண்டும்" என்றார்.

எத்தனையோ பேர் உங்களால் ஞானமடைந்துவிட்டார்கள். உங்களின் ஒரு பார்வையே பலருக்கு ஞானத்தைத் தந்தது.

"சரி, சொல்லுங்கள்" என்றார் புத்தர்.

"முதலாவது, தூங்கும் நேரம் உட்பட நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன்".

"சரி, அப்படியே ஆகட்டும்".

"இரண்டாவது, போதனைக்காகவோ வேறு வேலைக்காகவோ மற்றவர்களோடு வேறு எங்கும் என்னை அனுப்பக்கூடாது"

ஆனந்தன்/புத்தர் சித்தரிப்பு

'இனி
ஞானமடையாமல்
ஒரு நொடிகூட
வாழ முடியாது'

"மூன்றாவது, நான் யாரை அழைத்து வந்தாலும் நீ மறுக்காமல் அவர்களுக்கு ஆசி தர வேண்டும்" என்று ஆனந்தன் கேட்டதற்கு புத்தர் புன் சிரிப்போடு தலையசைத்தார்.

இப்போது வருடம் நாற்பத்தி இரண்டைத் தாண்டி விட்டது. புத்தர் இதை நினைவுபடுத்தினார், "அன்று நீ போட்ட மூன்று நிபந்தனைகள்தான், இன்று உனக்கே தடையாக மாறும் என்பதை அறியாமலே பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய்.

நீ எனக்கு மூத்தவன் என்ற நினைவிலேயே இருக்கிறாய்..

இந்த உலகில் உனக்கு மட்டுமே நான் வாக்கு கொடுத்திருக்கிறேன் என்ற பெருமையும் உனக்கு உண்டு. எப்போதும் என்னுடனேயே இருக்கிறாய் என்ற இறுமாப்பும் உனக்கு கர்வத்தைத் தந்தது.

மூத்தவன், உயர்ந்தவன் என்ற செருக்கு, உன் பெருமிதம், உன்னுடைய கர்வம் ஆகிய அனைத்துமே ஞானத்தைப் பெற விடாமலேயே தடுத்துவிட்டன.

இந்தத் தடைகள் நீங்கினால்தான் ஞானம் கிடைக்கும்" என்றார்.

இதுபோன்ற பல நினைவுகள் ஆனந்தனுக்குள் எழுந்து எழுந்து, பௌத்த மகா கூட்டத்திற்குள் நுழைய முடியாத வேதனை மிகவும் ஆழமானது.

"இனி ஞானமடையாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது" எனும் வேதனை தீவிரமாக கடுமையாக தியானத்தில் அமர்ந்தார். எவ்வளவு நேரம் அமர்ந்தும் எந்தப் பயனும் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்க, இதயம் பிழிய, கண்களில் நீர் பொங்க ஆரம்பித்தது. “உடல் குலுங்க விம்மி விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார்.”

“ஒரு கட்டத்திற்கு மேல் அழுவதாலும் ஒரு பயனும் இல்லை” என்று தெரிய வந்ததும் எல்லா முயற்சிகளையும் கை விட்டுவிட்டார். மெல்ல தலை சாய்ந்தார். “ஆழ்ந்த ஓய்வில் அவர் கரையக் கரைய அவருள் மின்னலென ஞானம் உதித்தது. அவருக்குள் இதுவரை பொருந்தாமல் இருந்த ஆனந்தம் பொருந்தியது. ஆனந்தம் பொங்கும் ஞானியானார்.”

சில நிமிடங்களில் கூட்டத்திலிருந்து வந்த வயோதிக பௌத்த ஞானி, “நாற்பத்திரண்டு ஆண்டுகளில் பெறாததை ஒரே நாளில் பெற்று விட்டாய்” என்று பாராட்டி உள்ளே அழைத்தார்.

அவர் ‘நான் அவரோடிருப்பவன் என்ற பெருமிதமும், நான் மூத்தவன். அவர் எனக்கு வாக்களித்தவர்,’ என்ற கர்வமும் கரைந்தது.

“இவ்வளவு சின்ன விஷயங்களா என்னைத் தடுத்தன?” என்று இப்போது எண்ணினாலும் சிரிப்பு வருகின்றது என்றார், ஆனந்தத்தை அடைந்த ஆனந்தன்.

இந்தக் கதை சொல்லும் சத்தியம்.

ஏதோ ஒரு பெருமிதம், ஏதோ ஒரு சிறு கர்வம்தான் இன்று வரை உங்களுக்குள் ஆனந்தத்தைப் பொருந்தவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும்.

‘அவை எது?’ என்று கண்டுபிடித்துத் தூக்கி எறிந்துவிட்டால் இப்போதேகூட நீங்கள் ஞானமடைந்து விடலாம்.

“உங்களின் பெருமிதங்கள் எவை? கர்வங்கள் என்ன?” என்று பட்டியலிடுங்கள். இவை நல்ல பெருமிதம்தானே இதில் தவறில்லையே என்றுகூட மனம் சொல்லும்.

ஏதோ ஒரு பெருமிதம், ஏதோ ஒரு சிறு கர்வம்தான் இன்று வரை உங்களுக்குள் ஆனந்தத்தை பொருந்தவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றது. முதலில் அதைப் பட்டியலில் எழுதுங்கள். எது வேண்டுமானாலும் நம்மைத் தடுக்கலாம்.

நீங்கள் கண்டுபிடித்தவற்றை இன்றோடு உங்களிடமிருந்து தூக்கியெறியுங்கள்.

42 வருட தடை ஆனந்தனை விட்டு அகன்றது போல, உங்களை விட்டு இந்தக் கணமே தடைகள் மறைந்து போகும். ஆனந்தம் உங்களுக்குள் பொருந்திவிடும்.

ஆத்ம தியானம்

ஒரு ஜென் ஞானியிடம், "நிகழ்காலத்திலேயே வாழ்வது ஞானம், ஆனந்தம் ஆகிய எல்லாவற்றையும் தந்துவிடுமா? நிகழ்காலத்திலேயே வாழ ஒரு வழி சொல்லுங்கள்" என ஒருவர் கேட்டபோது, பதிலேதும் சொல்லாமல் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாராம்.

அவரின் இனிய இசையில் அங்கு வந்தமர்ந்த பறவைகள்கூட எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டன. குளத்தில் இருந்த மீன்கள்கூட நீந்த மறந்து நின்றன.

எவ்வளவு நேரம் சென்றதென்று தெரியவில்லை.

வெகு நேரம் கழித்து, அமைதி கலைந்து எழுந்தவர் ஞானியிடம், "நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி என்று புரிந்தது. மிகவும் நன்றி!" என்று வணங்கினார்.

வணங்கியவரிடம் ஞானி சொன்னார், "இது அல்ல நிகழ்காலத்தில் வாழ்வது. வெளியே இருந்துவரும் ஒரு உதவியால் அமைதியாவது அமைதியாகாது. இதில் கிடைக்கும் ஆனந்தம் ஆனந்தமாகாது.

வெளிப்பொருளின் உதவியில்லாமலே உள்ளுக்குள்ளிருந்து ஆனந்தம் பொங்க வேண்டும். அதற்குத்தான் தியானம் செய்ய வேண்டும்" என்றார்.

ஆனந்தத்தின் ஊற்று நீங்கள். இதைப் படிக்கும் இந்த நிமிடத்தில்கூட அது நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது உண்மைதான்.

உங்களுக்குள் தொடர்ந்து ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. பொங்கும் ஆனந்தத்தை தடுப்பதைத் தடுத்தால் போதும். ஏற்கனவே பொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்தம், பொங்க ஆரம்பிக்கும்.

சின்ன தியானம். முயன்று பாருங்கள்

கண்களை மூடி உங்களுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்தத்தை உணருங்கள். பெரிய கடலலைப்போல பொங்கவேண்டிய ஆனந்தத்தைத் தடுக்கும் தடைகள் எது இருந்தாலும் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போடுங்கள்.

ஆனந்த ஊற்றானது, ஆனந்த அலையாக மாறுவதை முழு அனுபவமாக உணர்வீர்கள்.

Portrait of Swami Sukhabodhananda