KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் அனுபவிக்க தகுதியானவர் நீங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் அனுபவிக்க தகுதியானவர் நீங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உணவே மருந்தாகலாம். ஆனால், மருந்தே உணவாகக் கூடாது.

எப்போதும் மனிதன் ஆனந்தமாயிருக்கலாம். இது இயற்கை.

ஒருபோதும் மனிதன் துக்கமாயிருக்கக் கூடாது. காரணம் அது செயற்கை.

ஒரு சின்ன கதை...

யாரோ சிலர் அந்த ஜென் ஞானியைப் பற்றி வதந்திகள் பலவற்றை கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த அரசரிடம் ஊதிவிட்டார்கள்.

அது வதந்தி என்பதைப் புரியாத அரசனும் ஜென் ஞானியைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டார்.

அந்த ஜென் ஞானியைத் தூக்கிலிடுவதற்கு இன்னும் 24 மணி நேரமுமே மீதம் இருந்தது.

அப்போதும், எப்போதும் போல் கலகலப்பாக சிரித்துப் பேசி, நிதானமாக தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்த தங்களின் குருவைப் பார்த்து கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

அந்தச் சீடர்களில் ஒருவர் தன் குருவிடம் உடைந்த குரலில் கேட்டார், "இன்னும் 24 மணி நேரத்தில் உங்களைத் தூக்கிலிடப் போகிறார்கள். நாங்கள் இவ்வளவு பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லையா? இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே. எப்படி இதெல்லாம் சாத்தியம்?"

ஜென் குரு சீடனைப் பார்த்து மிகவும் சிரித்தபடியே சொன்னார், "அப்பனே, இந்த நொடியிலேயே முழு திருப்தியிலும், முழு ஆனந்தத்திலும் இருக்கின்றேன். எனக்கு இந்த நொடியே அதிகமானதுதான். ஒருவேளை, அடுத்த நொடி கிடைத்தால் அது இன்னும் ஆனந்தமயமானதாக இருக்கும்.

Sadhguru portrait

எனக்கு இந்த
நொடியே
அதிகமானதுதான்.
ஒருவேளை, அடுத்த
நொடி கிடைத்தால்
அது இன்னும்
ஆனந்தமயமானதாக
இருக்கும்.

இன்னும் 24 மணி நேரம் இருக்கின்றதா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு, அதே குதூகலத்தோடு அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்த குருவைப் பார்த்து மெய் சிலிர்த்தது நின்றார்கள் சீடர்கள்.

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் உங்களுக்கும் மெய் சிலிர்த்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கானதல்ல. ஏற்கனவே, உங்களுக்குள் நடக்க வேண்டியது நடந்து விட்டது.

இந்தக் கதை ஒரு கதையாக மட்டுமே தோன்றினால் நிச்சயம் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.

"உடல்நோய், மனநோய் பற்றி எல்லோருக்கும்
தெரியும்.
ஆனால், உணர்வு நோய் பற்றி யாருக்கும்
தெரியாது."

உடல், மன நோய்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளையும், மருத்துவத்தையும் தேடி ஓடும் மனிதனுக்கு உணர்வு நோயுற்றிருப்பது பற்றித் தெரியாததால்தான் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது.

துள்ளி ஓடும் நதி நீரை ஒரு டம்ளரில் பிடித்து வைத்தால், அது முதலில் தண்ணீர். சில நாட்களுக்குப் பின் அதுவே கெட்டு விஷமாகி விடும்.

அதேபோலத்தான் இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் ஆனந்த சக்தி 'நான்' எனும் தனி மனித உணர்வுக்குள் சிக்கும்போது, அது மனிதனாகிறது.

எப்படி டம்ளரில் சிக்கிய நதி 7 நாட்களுக்குள் அதன் தன்மையை இழந்து விஷ நீ ராக மாறி விடுகின்றதோ, அதேபோலத்தான் 7 வயதைத் தாண்டத் தாண்ட 'நான்' எனும் தனிமனித உணர்வு ஆழமாக, ஆழமாக, அந்த மனிதனுக்குள் சிக்கிய உணர்வு கெட ஆரம்பிக்கின்றது. அகங்காரம் எனும் விஷமாக அது வேரூன்ற ஆரம்பிக்கின்றது.

தனி மனிதன் எனும் சக்தி மீண்டும், பிரபஞ்ச சக்தியோடு இணையாததாலும் பிரபஞ்ச சக்தி மீண்டும் தன்னுள் பாய அனுமதிக்காத அகங்காரத்தாலும் உள்ளே சிக்கிக்கொண்ட சக்தி, நாளுக்கு நாள் பல கெடுதல்களை ஈர்க்கும் துர்சக்தியாக மாறிவிடுகின்றது.

பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருந்த ஆனந்த சக்தி, தன்னை மனிதன் என்ற சிறுவட்டத்தில் உணர ஆரம்பித்த போதே, உணர்வு நோய் தொற்றிக் கொண்டுவிட்டது.

தானும் எல்லாம் வல்ல சக்திதான் என்பதையும், ஒவ்வொரு நொடியும் அளவில்லா ஆனந்தமயமானது என்பதையும், எப்படி அந்த ஆனந்த சக்தியோடு எப்போதும் தொடர்பில் இருப்பது என்பதையும் மறந்ததுதான் மனிதகுலம் தனக்கு இழைத்துக் கொண்ட மிகப்பெரிய கொடுமை. பிரபஞ்ச சக்தியிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டதுதான் மிகப்பெரிய தீங்காகிவிட்டது.

விளைவு,

உணவே மருந்தாய் இருப்பதற்குப் பதில், மருந்துகளையே உணவாய் எடுக்குமளவுக்கு உடலும், மனமும் கெட்டுவிட்டது. எப்போதும் ஆனந்தமயமாய் இருக்கவேண்டிய மனிதன், எப்போதும் துக்கமயமாய் இருக்க ஆரம்பித்து விட்டான்.

உணர்வு நோயைச் சரி செய்தாலே மனநோயையும், உடல் நோயையும் சரி செய்து விடலாம். சக்தி பிரவாகத்தோடு இணைந்து விடலாம். இதையெல்லாம் தாண்டி

> இந்த பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் > ஆனந்த சக்தி 'நான்' எனும் தனி மனித உணர்வுக்குள் சிக்கும்போது, > அது மனிதனாகிறது.

ஒவ்வொரு நொடியையும் மிக ஆனந்தமாக மிக ஆழமாக, முழுமையாக வாழலாம்.

ஒவ்வொருவரும் உணர்வு நோயுற்றவர்கள்தான் என்ற புரிந்து கொள்ளுதலே, அதிலிருந்து வெளி வருவதற்கான ஞானத்தையும், வழியையும் தந்துவிடும். இதைப் புரிந்து கொள்பவர்கள் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் அனுபவிக்கத் தகுதியானவர்கள்.

ஆத்ம தியானம்

ஒரு பெரிய பட்டிமன்றம் நடந்தது. அதற்கு ஒரு ஜென் ஞானியே நடுவராய் அமர்ந்திருந்தார்.

விவாதம் சூடு பிடித்தது.

வாழ்வே துக்கமயமானது என்று ஒரு அணியும், வாழ்வே சந்தோஷமயமானது என்று இன்னொரு அணியும் விறுவிறுப்போடு பேசி முடித்துவிட்டு நடுவரின் இறுதித் தீர்ப்புக்காக ஆர்வத்தோடு காத்திருந்தது.

ஜென் ஞானி சொன்னார்.

"இரண்டுமே பொய்.

வாழ்வு துக்கமயமானதும் அல்ல; வாழ்வு சந்தோஷமானதும் அல்ல; வாழ்வு ஆனந்தமயமானது.

வெளியே இருந்து துக்கம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் இரண்டாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஆனந்தம்.

ஆனந்தம் உள்ளுக்குள் மலர்ந்த பின்புதான் வாழ்வு முழுவதும் ஆனந்தம் கொட்டிக் கிடப்பது புரியவரும். வாழ்வு ஆனந்தமயமானது என்று புரிய வரும்."

இந்தக் கதையில் வரும் தியான சூத்திரத்தை மட்டும் வாழ்வில் நிஜப்படுத்த ஆரம்பியுங்கள். மாபெரும் தியானம் நிகழ ஆரம்பிக்கும்.

துக்கத்தையோ, சந்தோஷத்தையோ தரும் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், உள்ளுக்குள் உங்களின் உணர்வுச் சமநிலையை (Emotional balance) இழக்காமல் இருங்கள். ஒருவேளை உணர்வுக் கொந்தளிப்பு ஏற்பட்டால்கூட, எவ்வளவு சீக்கிரத்தில் சமநிலையைப் பெற முடியுமோ, அதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யுங்கள்.

மீண்டும், மீண்டும் உணர்வுச் சமநிலைக்கு வந்துவிடுங்கள். ஆனந்தத்தைத் தொட்டுவிடுவீர்கள். சக்தி பிரவாகத்தைத் தொட்டுவிடுவீர்கள்.

ஒருமுறை ஆனந்தத்தைத் தொட்டுவிட்டால் போதும். அந்த உணர்வு மீதமுள்ள எல்லாவற்றையும் ஆனந்தமயமாக்கிவிடும் தன்மையைத் தந்துவிடும்.

முழு சுதந்திரம் பெற

portrait

'கமகம என மணக்கும் காப்பியை காலை 7 மணிக்குத் தராவிட்டால் இவர் சூடாகி விடுவார். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது புகைப்பிடிக்கா விட்டால் அவர் நிம்மதியின்றி நடுக்கத்தோடு புலம்ப ஆரம்பித்து விடுவார்...' என பலரின் நிலை இருக்கிறது.

இவர்களின் நடவடிக்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இவர்களின் செயல்கள் அனைத்தும் இவர்களை மீறி நடப்பதாகவே இருக்கும்.

"மது அருந்தக் கூடாது என முடிவெடுத்திருந்தேன்... ஆனால் அந்தக் கடைகளைத் தாண்டும்போது என்னையுமறியாமல் காந்தம்போல் ஈர்க்கப்பட்டு உள்ளே சென்று விடுகிறேன்.

ஒவ்வொரு முறையும் என்னை ஏதோவொன்று அந்த இடத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது?

இதிலிருந்து விடுபட முடியுமா?" எனக் கோவையிலிருந்து அலெக்ஸ் எனும் வாசகர் கடிதம் மூலமாகக் கேட்டிருந்தார்.

இவர் மட்டுமல்ல, சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களும், களியாட்டங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களும் அலெக்ஸைப் போலவே மீண்டும் மீண்டும் அந்த இடங்களுக்கு இழுத்துச் செல்லப்படுபவர்களே.

இதையெல்லாம் விடுங்கள். தினசரி வாழ்வில் என்னால், "பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது" "டீ சாப்பிடாமல் இருக்க முடியாது", "அந்த சீரியலைப் பார்க்காமல் இருக்க முடியாது," என்று சொல்பவர்களும் அதே சிக்கலில் சிக்கியிருப்பவர்கள்தான்.

டீ சாப்பிடுவதும், படிப்பதும், பார்ப்பதும் தவறில்லை. ஆனால், "அவற்றைச் செய்யாமல் என்னால் இருக்க முடியாது," என்னுமளவிற்கு அவை நம் மேல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் போதுதான் அது தவறாகிறது.

ஒரு ஜென் ஞானியிடம், "நீங்கள் எப்போதும் ஆனந்தமாயிருக்கிறீர்கள், லேசாயிருக்கிறீர்கள். நீங்கள் நடப்பதுகூட பார்ப்பதற்கு மிதந்து செல்வதுபோல, அவ்வளவு அழகாயிருக்கிறது.

portrait

தேவைக்கு
அதிகமாகச்
செய்யப்படும்
எதுவாக
இருந்தாலும் அது
துக்கத்தில்தான்
முடிந்து விடுகிறது.

இவ்வளவு லேசாயிருப்பதின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா?" எனக் கேட்கப்பட்ட போது,

"அது ரொம்ப சிம்பிள்," என்றார். "அதைச் சொல்லுங்களேன்," என மீண்டும் கேட்டபோது,

"பசிக்கும் போது புசிப்பேன்" எனச் சொன்னார்.

அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுவதென்பது பலரிடம் தங்களையுமறியாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்திற்கும், மது அடிமைத்தனத்திற்குமான வித்யாசங்கள் மிக மிகக்குறைவு.

இவற்றையெல்லாம் தாண்டி பாசத்திற்கு அடிமையாக இருந்தால்கூட அதுவும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.

தேவைக்கு அதிகமாகச் செய்யப்படும் எதுவாக இருந்தாலும் அது துக்கத்தில்தான் முடிந்து விடுகிறது.

"பசிக்காத போதே புசிப்பதும்,
அவசியமில்லாத போது குடிப்பதும்,
சும்மாயிருப்பதானாலேயே தூங்குவதும்,

பொழுதுபோக்கிற்காக எதையாவது செய்ய ஆரம்பித்து அதற்கு அடிமையாவதும் மனிதனின் ஆனந்தத்தை உறிஞ்சும் அட்டைகள்" என்று NSP தியான முகாமில் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு பக்தர் கேட்டார்.

"பசிக்கா விட்டால்கூட காலையில் டீ குடிப்பது, சாயங்காலத்தில் நொறுவல் தீனி சாப்பிடுவது, இரவு ஏதாவது ஒரு சீரியலைத் தினமும் பார்ப்பது எங்களின் வழக்கம்.

இதை எங்களால் தவிர்க்க முடியாது என்னுமளவிற்குத்தான், எங்களின் மனம் இந்த சமஸ்காரங்களுக்கு (நம்மைத் தூண்டும் எண்ணப்பதிவுகள்) அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல இவற்றால் எங்களுக்கு நேரடியான பலன் எதுவுமில்லைதான். இவை கெட்ட சம்ஸ்காரங்கள்தான்.

ஆனால், நல்ல சம்ஸ்காரங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

காலை 6 மணிக்கு சூரிய நமஸ்காரம்,
6.30க்கு பிராணாயாமம்
மாலை 7 மணிக்கு குருபூஜை

இரவு ஏதாவது ஒரு தியானம் அல்லது ஞானம் சம்பந்தப்பட்ட புத்தகத்திலிருந்து சில பக்கங்களாவது படிக்காமல் தூங்கக் கூடாது, என்று சில நல்ல சம்ஸ்காரங்களுக்கும் அடிமைப்பட்டுத்தானே இருக்கின்றோம்.

இவையும் எங்களைத் தூண்டுகின்றனவே... இவற்றையும் எங்களால் தவிர்க்க முடியவில்லை.

இப்படிப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் சரியானவை. அவசியமானவை என்று தோன்றுகின்றது.

"சிகரெட் பிடிக்காவிட்டால் தூங்க முடியாது என்பதற்கும், பூஜை செய்யாமல் தூங்க மாட்டேன் என்பதற்கும் வேறுபாடுகள் குறைவுதான். இரண்டுமே சம்ஸ்காரங்கள்தான். இரண்டுமே உங்களை ஓயாமல் தூண்டிக் கொண்டே இருக்கும்.

அப்படியென்றால் ஆனந்தமாயிருக்க சில சம்ஸ்காரங்களை விட்டு வைக்க வேண்டுமா? விளக்கமளியுங்கள்,” எனக் கேட்டார்.

அப்போது சொன்னோம், “சிகரெட் பிடிக்காவிட்டால் தூங்க முடியாது என்பதற்கும், பூஜை செய்யாமல் தூங்க மாட்டேன் என்பதற்கும் வேறுபாடுகள் குறைவுதான்.

இரண்டுமே சம்ஸ்காரங்கள்தான். இரண்டுமே உங்களை ஓயாமல் தூண்டிக் கொண்டே இருக்கும்.

Nithyananda meditating

வாழ்வில் எப்போதோ
தியானம் என்பது மாறி,
வாழ்வே தியானம்
எனும் ஆனந்த நிலை
மலர நல்ல, கெட்ட
என்ற இரண்டு
சம்ஸ்காரங்களும்
தாண்டப்பட வேண்டும்.

சிகரெட் பிடிப்பதும் ஒருவித சுகம்தான். பூஜை செய்வதும் ஒருவித சுகம்தான்.

முதல் சுகம் உடலை அரிக்கும், நோயைத் தரும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

இரண்டாவது சுகம் மனத்தை அரிக்கும், மகிழ்ச்சியைத் தரும், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

உடலளவு ஆரோக்கியமும், மனதளவு ஆரோக்கியமும்
மனிதனின் இலக்கல்ல. உயிரளவு ஆரோக்கியமே
மனிதனின் இலக்கு. அதுவே ஆனந்தம்.

வாழ்வில் எப்போதோ தியானம் என்பது மாறி, வாழ்வே தியானம் எனும் ஆனந்த நிலை மலர நல்ல, கெட்ட என்ற இரண்டு சம்ஸ்காரங்களும் தாண்டப்பட வேண்டும்.

எப்போதும் எதனாலும் அசைக்கப்படாத, கலைக்கப்படாத முழுச் சுதந்திரம் வேண்டும். நித்ய தியானம் முழு சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் எல்லா உள்ளுலக வைரஸ்களான சம்ஸ்காரங்களையும் அழித்து விடும். அப்போதுதான் ஆனந்தம் மலரும்.

நல்ல சம்ஸ்காரம் தங்க ஊசிதான். அதற்காக கண்ணில் எடுத்தா குத்திக் கொள்ள முடியும்?! அவற்றையும் விடத்தான் வேண்டும். அப்போதுதான் முழு சுதந்திரத்தைப் பெறுவீர்கள்.”

இராஜஸ்தானிலிருந்து இன்னொரு வாசகர் திரு. சைக் முகமது ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்...

"ஒரு சந்தேகம்.

மற்றவர்களைத் தவிக்க விடுவதில் மனம் சுகம் காணுவது ஏன்?

நம் நெருங்கியவர்கள், மிக ஆழமாய் நம்மை நெருங்க விடுவதே இல்லை.

இவர்களே! அடிக்கடி ஊடல், சண்டை என்ற பெயரில் அன்புக்காகவும், ஆதரவுக்காகவும் நம்மைத் தவிக்க விடுகிறார்கள்.

எவ்வளவு முயன்றாலும் நம்மை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

நிஜத்தில்...

நம்மை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை, அவர்களை நாம் புரிந்து கொள்ளவில்லையா?" எனக் கேட்டிருந்தார்.

பதில்: நெருங்கியவர்களிடம் சுதந்திரத்தை நாம் உணர முடியாததற்கான காரணம்கூட ஒரு நல்ல சம்ஸ்காரமே. அதைத்தான் பாசம் என்கிறோம்.

பாசம் எப்போதும் சிறிதளவு பகையையும், வெறுப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிஜம்.

அன்பு எனும் ஆனந்தம் மலர பாசம் எனும் நல்ல சம்ஸ்காரமும், பகை எனும் கெட்ட சம்ஸ்காரமும் மறைந்து போகும். நெருக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே நெருக்கம் அதிகரிப்பதற்கு மட்டுமன்றி, முழு சுதந்திரத்தைப் பெறவும், இந்த சம்ஸ்காரங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும் எனும் ஞானத் துளியைத் தியானியுங்கள். சம்ஸ்காரங்களைத் தாண்ட தியானம் செய்து முழு சுதந்திரத்தைப் பெறுங்கள்.

> அன்பு எனும் ஆனந்தம் மலர பாசம் எனும் நல்ல சம்ஸ்காரமும், > பகை எனும் கெட்ட சம்ஸ்காரமும் மறைந்து போகும். நெருக்கம் > அதிகரிக்க ஆரம்பிக்கும்.

ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

எந்த ஜீவனையும் பிரித்துப் பார்க்காதீர்கள். எல்லா ஜீவன்களும் உயர்ந்தவையே.

ஒரு செல் அமீபாவிற்கும், மனிதனுக்கும் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை வேறுபாடு மிக மிகக் குறைவு என Genetic Engineering சொல்கிறது. உங்களுக்குள்ளும், நீங்கள் தங்கும் தரையிலிருக்கும் மண்ணுக்குள்ளும் இருப்பது ஒரே சக்தி தான் என Quantum Physics சொல்கிறது.

‘எனக்குள்ளும், உனக்குள்ளும் அதே கடவுள்தான் இருக்கிறார்’ என Life Bliss En-gineering சொல்கிறது. ஞானியரும் சொல்கின்றனர்.

ஒரு சிலரை அந்தஸ்து, ஜாதி, மதம், பணம், புகழ் போன்றவற்றிற்காக உயர்த்திப் பார்ப்பது, உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதை.

இது மற்ற பலரை தாழ்த்திப் பார்க்கப் போவதற்கான முன்னோட்டம்.

நாயைக்கூட “ச்சே நாய்தானே!” எனச் சொல்லுவதானால் சொல்பவர்தான் முதலில் பாதிக்கப்படுவார்.

யாரையாவது, எதையாவது தாழ்த்திப் பேசுவதாலும், பார்ப்பதாலும் முதலில் அதைச் செய்பவருக்குள்தான் தாழ்ந்த எண்ணங்களும், தாழ்ந்த உணர்வுகளும் உருவாகும். இது அவரையே சுருக்கும்.

எல்லோரையும் மதித்து வாழ்பவருக்குள், ஆனந்தமானது ஓயாத அலைகளாய் எழும்பிக் கொண்டேயிருக்கும். நீங்கள் ஜீவன் முக்தர்களாகி விடுவீர்கள்.

எல்லா ஜீவன்களும் புனிதமானவையே. நீங்களும் புனிதமானவரே!