வாழ்க்கை ஒரு ஜோக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனிதன் : "கடவுளே ஒரு சின்னச் சந்தேகம்" கடவுள் : "சொல்லப்பா," மனிதன் : "உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி வருடம் என்பது என்ன?" கடவுள் : "சும்மா. ஒரு நொடி போலத்தான்" மனிதன் : "உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி ரூபாய் என்பது என்ன?" கடவுள் : "சும்மா ஒரு பைசா போலத்தான்" மனிதன் : "அப்படின்னா! ஒரு சின்ன உதவி, எனக்கு நீங்க செய்ய முடியுமா?" கடவுள் : "ம்... முடியும்." மனிதன் : "எனக்கு, ஒரு பைசா கொடுங்கள்" கடவுள் : "ஒரு நொடி பொறுத்திரு"
கடவுள் கடவுளாயிருப்பது அவரின் எளிமைத்துவத்தில்தான். ஒரு பைசாவும், ஒரு கோடி ரூபாயும் கடவுளுக்கு ஒன்றுதான்.
அந்தக் கடவுளுக்கு மனிதன் வாழும் பூமியே ஒரு சிறு புள்ளிதான்.
ஆனால், அதில் ஒரு புழுதி போல் இருக்கும் மனிதன்தான் மானப் பிரச்சினை, வரப்புச் சண்டை, எல்லையோர கலவரம் என சிறிதும், பெரிதுமாய் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைப் பெரிதுபடுத்திப் பார்க்கிறான். சில நேரம் அது போரில்கூட கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
பலர் என்னிடம் பேசும்போது, "நான் வாழ்க்கையில் படாத கஷ்டமில்லை, எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது.
இவ்வளவு தொல்லைகள் எனக்கு மட்டும் ஏன் வர வேண்டும்?" எனச் சொல்லி புலம்புவார்கள்.
இந்த நிலையிலிருக்கும் அன்பர்களுக்குச் சொல்லும் தீர்வு...

"உலகம் ஒரு ஜோக் கிளப்,
வாழ்க்கை ஒரு ஜோக் சீரியல்,
நீங்கள் ஒரு ஜோக்கர்."
"உலகம் ஒரு ஜோக் கிளப்,
வாழ்க்கை ஒரு ஜோக் சீரியல்,
நீங்கள் ஒரு ஜோக்கர்."
நீங்கள் ஒரு ஜோக்கர் என்ற உண்மை புரிந்துவிட்டால், ஒருமுறை சிரித்து முடிப்பதற்குள் அடுத்த சிரிப்பு ஆரம்பித்துவிடும். வாழ்வு அவ்வளவு இனிமை தருவதாக இருக்கும்.
ஏதோவொரு வகையில் தன்னைப் பெரிய ஆளாக நினைக்கும் மனிதருக்குத்தான், "வாழ்க்கையில் கஷ்டங்களையே அதிகம் சந்திக்கிறேன்" என்ற உணர்வு பிறக்கும். கஷ்டப்படுவார்கள்.
எறும்பின் கண்முன்னால் ஆடும் நூலின் அசைவானது எறும்பின் கண்ணுக்கு ஒரு அரசமரமே ஆடுவது போலத்தான் தோன்றும்.
"கடுகளவு எறும்பு உடலுக்குள் இருந்து பார்க்கும்போது சிறு நூல்கூட பெரிதாய் தெரியும்.
மனிதன் என்ற பெரிய வட்டத்திலிருந்து பார்க்கும்போதுதான், நூலைப் பார்த்து நடுங்கும் எறும்பின் செயல் நமக்கு சிரிப்பைத்தரும். மனிதன் என்னும் எண்ணம்கூட சிறு வட்டம் தான்."
இதையும் தாண்டும் போது தான் வாழ்வில் தொடர்ந்து நடக்கும் நகைச்சுவைகள் புரிய வரும்.
சுபம்! என்று முடிக்கப்போகும் படத்தை படு த்ரில்லாக கடைசிவரை பார்க்க வைப்பது, டைரக்டரின் கையிலிருக்கிறது.
பல சீன்களில் பயப்படவோ, கண் கலங்கவோ வைப்பது உங்களின் மூன்று மணிநேர சினிமா வாழ்வை சுவாரஸ்யமாக்குவதற்காகத்தான்.
'ஞானி' என்று முடியப்போகும் உங்களின் 'மனிதப் பிறவியெடுத்தல்' எனும் சினிமாவை வெகு சுவாரஸ்யமாகக் கொண்டுபோகும் பொறுப்பை எடுத்துக்கொண்ட டைரக்டர் இறைவன். அதனால்தான் எல்லா சீன்களும் எதிர்பாராத திருப்பங்களாகவே இருக்கின்றன.
சாதாரண மனிதனுக்குத் தான் படத்தில் காமெடி சீன்கள், ஆனால் அருமையான டைரக்டருக்கு, படமே ஒரு பெரிய காமெடி சீன்தான்.
இதை உணர்ந்து விட்டால் நீங்கள்கூட டைரக்டர்தான். அதற்கப்புறம் உங்களின் வாழ்க்கை எனும் படத்திற்கு திரைக்கதை, வசனம், டைரக்டர் என்ற எல்லாமே நீங்கள்தான். அதற்குப்பிறகு தொடர்வதெல்லாம் இனிமையானதாக மட்டுமே இருக்கும்.
ஒரு ஜென் ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த திருட்டு சம்பவமிது. அவருடைய வீடு பல பணக்கார பக்தர்கள் தந்த விலையுயர்ந்த பொருட்களால் நிரம்பியிருக்கும்.
ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரைத்தவிர வேறுயாருமில்லை. அறையிலிருக்கும் கட்டிலில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரிந்த நிலவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்த திருடன், சத்தமேயில்லாமல் அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே இருக்கும் தன் கையாட்களிடம் தந்து கொண்டிருந்தான்.
உங்களின் வாழ்க்கை எனும் படத்திற்கு திரைக்கதை, வசனம், டைரக்டர் என்ற எல்லாமே நீங்கள்தான்.
தன்னைச்சுற்றி நடப்பது பற்றித் தெரிந்திருந்தும் ஜென் ஞானி அதைக் கவனிக்காதவர் போல கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.
எல்லாவற்றையும் திருடி முடித்த திருப்தியில் திருடன் அறைக் கதவைத் திறந்தான். அப்போது...
ஜென் ஞானி, "அப்பா நில்லப்பா" என்றார் இனிமையான குரலில். எதிர்பாராத இந்த அழைப்பில் திருடன் நடுங்கிப் போனான்.

“ஒருவேளை
என்னால்
முடிந்திருந்தால்
அந்த நிலவைக்கூட
உனக்காய் திருடித்
தந்திருப்பேன்.
என்ன செய்ய?
நிலவை யாராலும்
திருட முடியாது?”
ஜென் ஞானி, "இந்தக் கட்டிலை யார் எடுத்துப் போவார்களாம். இதையும் எடுத்துட்டுப் போப்பா" என்றார்.
திருடனால் அங்கு நிகழ்வதை ஜீரணிக்கவே
முடியவில்லை. இருந்தாலும் அதையும்
எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஞானியின் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்ற திருடனை, ஜென் ஞானி மீண்டும் அழைத்தார். அழைத்து "இந்தக் கம்பளியைப் போர்த்திக்கோ, வெளியே குளிர் அதிகமிருக்கும்" என்று, தான் போர்த்தியிருந்த கம்பளியையும் தந்தார்.
கம்பளியை எடுத்துக் கொண்டு திருடன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள், "இந்தாப்பா இதையும் எடுத்துச் செல்" என தான் உடுத்தியிருந்த உடைகளையும் அவனிடம் தந்துவிட்டு நிலாவைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.
உடைகளை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறும்போது திருடனின் காதில் விழுந்த ஜென் ஞானியின் பேச்சு அவனை உலுக்கியது.
"ஒருவேளை என்னால் முடிந்திருந்தால் அந்த நிலவைக்கூட உனக்காய் திருடித் தந்திருப்பேன். என்ன செய்ய? நிலவை யாராலும் திருட முடியாது?" என இனிமையான குரலில் ஞானி சொன்ன வார்த்தைகள், திருடனின் மனத்தையே உருக்கியது. பிற்காலத்தில் அவன் அவருடைய சீடர்களில் ஒருவனாகிவிட்டார்.
ஞானி தன்னிடமிருப்பதையெல்லாம் தந்த பின்னும் இனிமையாகவே இருந்தார். ஆனந்தமாகவே இருந்தார்.
திருடன் எல்லாவற்றையும் பெற்றபின்னும் துக்கமாகவே இருந்தான். குதூகலமாகவோ, இனிமையாகவோ மாறவேயில்லை.
ஞானியின் இந்த நிலைதான் திருடனை உலுக்கியது. பிற்காலத்தில் அவன் சீடராக மாறுவதற்கான விதையாக ஊன்றப்பட்டது அவரின் இனிமைத்துவம்தான்.
இனிமைத்துவத்தை மீண்டும் எடுத்து வராதவர்கள்தான், 'தான் ஒரு தனி ஆள்! தான் ஒரு பெரிய ஆள்!' என்ற கருத்துக்களை ஆழமாய் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தை நழுவவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
"நான் ஒரு தனி மனிதன் என்ற கண்டுபிடிப்பே தவறானது. அகங்காரம் மிகுந்தது. கடலில் இருந்து எழுந்த ஒருதுளி நீர் மீண்டும் கடலுக்குள் விழும்முன்பு, "நான் ஒரு தனி ஆள்" என நம்ப ஆரம்பித்தால், அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமாயிருக்கும்! யோசித்துப் பாருங்கள்.
மனிதனின் இனிமையைப் பறிக்கும் தனிமையுணர்வைத் தாண்டுங்கள்... நீர்த்துளியானது கடலைக் கண்டுபிடிப்பது போல, நீங்கள் கடவுளைக் கண்டுபிடிப்பீர்கள்.
மனித வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய ஜோக் என்பது அப்போது புரியும். முயன்று பாருங்கள்.
இனிமைத்துவத்தை மீண்டும் எடுத்து வராதவர்கள்தான், 'தான் ஒரு தனி ஆள்! தான் ஒரு பெரிய ஆள்!' என்ற கருத்துக்களை ஆழமாய் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தை நழுவவிட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆத்ம தியானம்
கற்றுக்கொள்வது மாபெரும் தியானம்.
வளர்ச்சிக்கு வானமே எல்லை என்பர். இல்லையில்லை. எல்லையில்லா நிலைக்கு பிரபஞ்சம் தான் அதற்கு எல்லை.
ஏன் ஞானம்கூட அதற்கு எல்லையில்லை.
Enlightenment is ultimate, But not final.
ஞானமடைவது உன்னதமானதுதான். ஆனால் அதையே இறுதி என்று சொல்ல முடியாது.
காலத்தின் தேவைக்காக ஞானிகூட பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கற்றுக் கொள்வது என்பது ஒரு ஞானிக்கே தொடர்நிகழ்வு என்றால், சாதாரண மனிதர்களுக்கு?!
ஒரு ஜென் ஞானியிடம், "வாழ்வில் எதுவரை கற்றுக் கொள்ள வேண்டும்?" எனக் கேட்டபோது,
“மனிதர்கள் தூங்கும் போது கூட"என்றார்.
“அதெப்படி முடியும்?” என ஆச்சரியமாய் கேட்டதற்கு,
"கனவு என்பது உங்களின் நிஜரூபத்தை உங்களுக்கே காட்டுமிடம். அதிலிருந்து கூட கற்றுக்கொள்ளலாம். அப்போதுகூட விழிப்புணர்வை எடுத்துவரலாம்," என்றார்.
கனவிலிருந்து, நினைவுவரை எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் கற்றுக் கொள்ளுங்கள்.
