KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/இனி கோபம் உங்களை பாதிக்காதுSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

இனி கோபம் உங்களை பாதிக்காது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை.

ஒவ்வொரு முறை கோபப்பட்ட பிறகும் அதற்காக வருந்துகிறேன். இதற்கு மேல் கோபப்படக் கூடாது" என முடிவெடுக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அது என்னை மீறி வந்து விடுகிறது. என்னால் இந்தக் கோபத்தை கட்டுப்படுத்தக் முடியவில்லை இதிலிருந்து வெளிவர ஏதாவது தியானம் இருக்கிறதா?" என்று அலுவலகத்தில் மானேஜராக இருக்கும் பெண்மணி ஒருவர் என்னிடம் கேட்டார்.

அப்போது அவரிடம், "ஒரு சின்ன நுட்பத்தினாலே கோபத்திலிருந்து நீங்கள் உங்களைக் கழட்டிக் கொள்ள முடியும்." என்றதும், மிகவும் ஆர்வத்தோடு, "அப்படியா! கோபத்திலிருந்து நான் விடுபட முடியுமா?" என்று கேட்டார்.

"முதலில் கோபத்தைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு சம்பவத்தைத் தாக்குவதற்காக முன்னோக்கி பீறிட்டு எழும் சக்தி கோபம். இதிலிருந்து தன்னைக் கழட்டிக் கொண்டால் கோபத்தால் உங்களை எதுவும் செய்ய முடியாது?" எனச் சொன்னதும், "அதெப்படிச் செய்வது." என்று கேட்டார்.

"உங்களை நோக்கித் தாக்கும் நோக்கில், உங்கள் மீது யாராவது கல்லை எறிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு, “அங்கிருந்து நகர்ந்து விடுவேன்.” என்றார்.

“இதையேத்தான் உள்ளுக்குள் செய்ய வேண்டும்.

உங்களைக் கோபப்படுத்தும் சம்பவம் வந்த உடனேயே, இந்த சின்ன நுட்பத்தைச் செய்யலாம். முன்னோக்கி சீறும் சக்தி உடனே சாந்தமடைய ஆரம்பிக்கும். இருக்குமிடத்தில் கண்களை மூடி, முடிந்தால் அமர்ந்து கொண்டு, நூறிலிருந்து பின்னோக்கி எண்ண ஆரம்பியுங்கள்.

portrait

இருக்குமிடத்தில்
கண்களை மூடி,
முடிந்தால்
அமர்ந்து கொண்டு,
நூறிலிருந்து
பின்னோக்கி எண்ண
ஆரம்பியுங்கள்

100,99,98,97... என்று சிறு பிழை இல்லாமல் மனத்திற்குள் சொல்ல வேண்டும். ஒருவேளை நடுவில் எண்களை மாற்றிச் சொல்லிவிட்டால், மீண்டும் நூறிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நூறிலிருந்து ஒன்று வரை முடித்து விட்டுப் பார்த்தால்...

“அடடே! எனக்கா சில நிமிடங்களுக்கு முன்னால் கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது” என்று ஆச்சர்யமடைவீர்கள்.

“கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வரும்,” என்ற பழமொழி மக்களிடையே இருப்பதற்குக் காரணம். நிஜமாகவே ஒரு நபர் கோபப்படும்போது நிகழும் மாற்றங்களுக்கும், முகத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கின்றது என்பதுதான்.

இந்தத் தாத்பரியத்தை மையமாகக் கொண்ட தியானம் ஒருவரை முழுமையாகக் கோபத்திலிருந்து விடுபடுத்தி விடும். முதலில் கற்றுக்கொண்ட நுட்பம் தற்காலிகமாக முழுமையாக விடுவித்து விடும்.

ஆத்ம தியானம்

கோபம் வரும்போது, அது முகம் நோக்கிப் பொங்கும் உஷ்ணமாக வெளிப்படும் . அதுவும் முன்கோபம் வரும்போது இது மிகத் தெளிவாகப் பொங்கும்.

அடுத்து, மூச்சுக்காற்று அதிகமாகும்.

உங்களின் கவனம் முழுவதையும் உங்களின் முகம் நோக்கித் திருப்புங்கள். பொங்கும் உஷ்ணம், எகிறும் மூச்சுக்காற்று ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சாந்தமாகி உள்நோக்கி உணர்வு திரும்ப ஆரம்பிக்கும்.

புகை கரைவது போல கோபம் கரைய ஆரம்பிக்கும்.

மீண்டும் மீண்டும் உங்களின் கவனம் முழுவதையும் கோபம் பொங்கும் இடம் நோக்கித் திருப்ப ஆரம்பியுங்கள்.

உங்களின் கட்டுப்பாட்டை மீறி உங்களைத் தாக்கும் கோபம், முதல் முறையாக உங்களின் கட்டுக்குள் வருவதைக் காண்பீர்கள்.

நெருப்பு போல உங்களைச் சுட்ட கோபம், இந்த ஒரு தியானத்தால் உங்களைச் சிறிதும் பாதிக்காத ஒன்றாகி விடும்.

இதற்கு மேல் கோபம் என்பது உங்களின் கட்டுக்குள், உங்களின் சுய எல்லைக்குள் நிகழும் ஒன்றாக மாறிவிடும். இனி கோபம் உங்களைப் பாதிக்காது.