கோபம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘என் பிள்ளைக்கு மூக்கிற்கு மேல் கோபம் வரும். அவனால் ஒரு விஷயத்தைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாது.’
இப்படிப்பட்ட உங்கள் கோபத்திற்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
'நியாயமான விஷயத்திற்கு மட்டும்தான் கோபப்படுவேன். மற்ற சாதாரண விஷயத்திற்காகக் கோபப்பட மாட்டேன்,’ என்று ஏதேனும் காரணங்களைச் சொல்ல முடியும். தப்பித்துக்கொள்ள முடியும்.
ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கோபப்படுவது நியாயமான விஷயத்திற்காகவே இருந்தாலும், கோபம் வரும் அந்தக் கணங்களில் எல்லாம், கோபம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
உதாரணத்திற்கு நீங்கள் நினைக்கும்போதெல்லாம் வண்டியை Start செய்யவும், தேவைப்படாதபோது Switch off செய்து வைக்கவும் முடிந்தால், வண்டி நீங்கள் உபயோகப்படுத்தும் நிலையில் (Condition - ல்) இருக்கிறது என்று பொருள்.
வண்டி உங்களுடன் தொடர்பு (Connect) ஆகவில்லை என்றால் அதில் எப்போது வேண்டுமென்றாலும் சாவியை நுழைக்கலாம். துவங்கச் செய்யலாம். விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம்.
நீங்கள் நினைத்து, நீங்கள் விரும்பி இந்த அளவுதான் கோபப்பட வேண்டும், இத்தனைமுறை (Volt)தான் கோபப்பட வேண்டும். இந்த அளவு (Hertz)தான் சப்தம் எழுப்ப வேண்டும் என்று உங்களால் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டு பின் முழுமையாக உங்களால் கோபப்பட முடிகிறதா?
அப்படி இல்லாத பட்சத்தில் தொடர்ந்து படியுங்கள். நீங்கள் ஞானியாவதற்கான பகுதி இது.

கோபம்
வருகிறது என்று
தெரிந்தவுடனேயே
அந்தக் கோபம்
உடலை என்ன
செய்கிறது?
என்பதை மட்டும்
பாருங்கள்.
"கோபப்படும்போது நம் சக்தியானது மேல்நோக்கி எழும்புகிறது." என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
இன்றைய சமுதாயத்தில் கெட்ட குணங்கள் என்று
சொல்லப்படும் எல்லா உணர்ச்சிகளாலும் சக்தி
மேல்நோக்கி எழும்பும்.
கண்டிப்பாக, கோபம் என்னும் சக்தியானது மேல்நோக்கி எழும்பும். அந்தச் சக்தி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரை உங்களை எந்தத் தொந்தரவும் செய்யாது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போதுதான் nervousness - ஐ உருவாக்கி விட்டு விடும்.
கட்டுப்பாட்டை மீறியவுடன் உடலையும், மனத்தையும் துன்பப்படுத்தும். அப்படி கோபம் சக்தியாக மேலேறி வரும்போது ஒரு நிமிடம் இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள்.
உண்மையில் இந்தத் தியானத்திற்காக நீங்கள் எதையும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை.
கோபம் வருகிறது என்று தெரிந்தவுடனேயே அந்தக் கோபம் உடலை என்ன செய்கிறது? என்பதை மட்டும் பாருங்கள்.
ஆயிரம் எறும்புகள் ஒன்றாக சரசரவென ஆயிரம் கி.மீ வேகத்தில் எப்படி இயங்குமோ, அதேபோன்று உடலின் மொத்த சக்தியும் நேராக முகத்திற்கு ஏறி வருவதைப் பார்ப்பீர்கள்.
முகம் முழுவதும் சூடாகும். இது அனைத்தும் சில கணங்களுக்குள் நடந்து முடிக்கும்.
இதை ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் உங்களால் இந்த ரஸவாதத்தை அருமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
திபுதிபுவென கொழுந்துவிட்டு எரியத் துவங்கும் தீயின்மீது நீரை ஊற்றினால் எப்படி உடனே அணைந்துபோகுமோ, அதேப்போன்று உள்ளுக்குள்ளே எம்பி எகிறி வருகின்ற மொத்தச் சக்தியையும் சாட்சியாகப் பாருங்கள்.
அந்த மொத்த சக்தியும் (Energy) உடலுக்குள் கரைந்து விடும். பெரும் உற்சாகமாய் கரைந்து விடும்.
வெடித்துச் சிதறத் தயாராய் இருக்கும் நெருப்பு முதலில் குழம்பாகத் தோன்றும். இது ஆங்காங்கே பரவியிருக்கும் ஆட்டு மந்தையின் மீதும், பிற பொருட்களின் மீதும் தெறித்து விழுவது போன்றே கட்டுப்படாத கோப சக்தியும் ஆங்காங்கே நம் உறவுகள் மீது தெறித்துவிடும்.
அப்பாவின்மீது, அம்மாவின் மீது, பிள்ளைகளின் மீதென தெளித்துவிடும். பின் ஒவ்வொருவரையும் கஷ்டப்படுத்திவிடும்.
உற்சாகம் என்று எதைப்பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது அல்ல உற்சாகம்.
ஆம்! அந்தச் சக்தி கீழே இறங்கி வரும்போது உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்.
இதுவரை உற்சாகம் என்று நினைத்துக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் விறுவிறுப்பு மட்டுமே. அது உற்சாகமாக மாற முடியாது.
> மேலெழும்பும் ஒவ்வொரு சக்தியும், ஓர் இடத்தில் போய் சக்திக் > கட்டிகளாக சிக்கிக்கொள்ளாமல், உடல் முழுவதும் பாய்ந்து பரவியது > என்றால் அதுதான் உற்சாகம்.
மேலெழும்பும் ஒவ்வொரு சக்தியும், ஓர் இடத்தில் போய் சக்திக் கட்டிகளாக சிக்கிக்கொள்ளாமல், உடல் முழுவதும் பாய்ந்து பரவியது என்றால் அதுதான் உற்சாகம்.
அவ்வாறு பாய்ந்து பரவும் சக்தி உங்களை ஒருபோதும் ஓர் இடத்தில் சோம்பி உட்காரவிடாது. அதற்கு அந்தச் சக்தி அனுமதியளிக்காது.
எங்காவது ஒரு குழந்தை, ஒரு ரூமில் ஒரு மூலையில் துக்கமாக, ஒரு முறையாவது கும்பிப்போய் உட்கார்ந்து இருக்கிறதா?
அதுபோல உங்களின் உடலில் இந்த உற்சாகச் சக்தியை பரவவிடுவீர்கள் என்றால் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளர் ஆகிவிடுவீர்கள்.
ஆத்ம தியானம்
கோபம் வெளிவரப்போகிறது என்று தெரிந்தவுடன் அந்த மொத்த நிகழ்ச்சியையும் பாருங்கள்.
மொத்த உடலையும் பாருங்கள்... மொத்த மனத்தையும் பாருங்கள்... அப்போது மேலெழும்புகிற மொத்தச் சக்தியும் உடல் முழுவதும் கரைந்து விடுகிறது. சைக்கிளையும், ஸ்கூட்டரையும் தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு பின் தேவைப்படாதபோது அதிலிருந்து விடுபட்டு, தூக்கி ஓரமாக வைத்துவிட்டு relaxed - ஆக இருப்பீர்கள் அல்லவா? அதைப்போன்று கோபத்தைக் கையாளுங்கள்.
கோபப்பட வேண்டிய இடங்களில் கூட ஓய்வாக relaxed -ஆக இருப்பீர்கள்.
