உணர்ச்சிக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கொந்தளிப்புகளில் இருந்து விடுதலை

உங்களுக்குப் பசிப்பதில்லை.
கோபம்கூட உங்களுக்கு வருவதில்லை.
சுருங்கச் சொன்னால் உங்களின் எல்லா
உணர்ச்சிகளும் பொய்யே!
-ஜென் தத்துவம்
அப்படியென்றால் எங்களுக்கு பசிப்பதும், நாங்கள் புசிப்பதும் என்ன? எனும் உங்களின் கேள்விகளைத் தாண்டிய சத்தியத்தைச் சொல்லும் கட்டுரை.
இனிமையான கருத்தைச் சொல்லும் ஆராய்ச்சி ஒன்று...
அது ஒரு பிரபல ஆய்வுத் தொழிற்சாலை.
ஆயிரம் தொழிலாளர்கள், வேலை செய்யும் இடம் லெபாரட்டரிக்குள் செல்லும் ஒவ்வொரு தொழிலாளரும் தனியாய் உருவாக்கப்பட்ட உடையை அணிந்துதான் செல்லவேண்டும். சொந்த உடை களை அணியக்கூடாது. பேனா, வாட்ச் கூட எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இதுதான் சரியான இடம் என்று தேர்வுசெய்து, அந்தப் புது ஆராய்ச்சியை செய்து பார்த்தார்கள்.
சுவற்றில் இருக்கும் எலக்ட்ரானிக் கடிகாரமும், அலாரமும்தான் அவர்களின் சிற்றுண்டி இடைவேளைகளையும், உணவு இடைவேளைகளையும் அறிவிக்கும். மற்றபடி மும்முரமாக அங்கு வேலை நடந்துகொண்டேயிருக்கும்.
புது ஆராய்ச்சிப்படி... அங்கு உள்ள எல்லா கடிகாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மணிநேரம் அதிகமாக்கி வைத்தார்கள். மேலும் 1.00 மணிக்கு அடிக்க வேண்டிய மதிய உணவு அலாரத்தை கடிகாரப்படி 1.10 மணிக்கு அடிக்க முடிவு செய்தார்கள். பொதுவாக மதியம் ஒரு மணி ஆனதும் சாப்பிட வேண்டிய உணவிற்கு அங்கிருந்த தொழிலாளர்களில் 10% பேருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிடும். இன்னும் 50% பேருக்கு சாதாரண பசி உணர்வு ஏற்பட்டுவிடும். (முக்கியமாக அந்த 10% நபர்களின் நடவடிக்கைகளை குறிப்பாய் ஆராய்ந்து பதிவு செய்தார்கள்.)

அன்று ஒரு மணிநேரம் கூட்டி வைத்திருந்தார்கள். நிஜமாக 11.30 மணி ஆகும்போது எல்லா கடிகாரங்களும் 12.30 என்று காட்டிக்கொண்டிருந்தன.
உங்களின் எல்லா
உணர்ச்சிகளும்
பொய்யே
- ஜென் தத்துவம்
நிஜத்தில் மணி இன்னும் 11.30 மணியைக் கூட தாண்டவில்லை. ஆனால், அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பசி வயிற்றை கிள்ளும் 10% பேருக்கு அப்போதே பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது.
காரணம் கடிகாரங்கள் மணி 12.30 என்று காட்டிக்கொண்டிருந்தன. கடிகாரப்படி மணி ஒன்றை தாண்டி ஒன்று பத்தாகிவிட்டது. அப்புறம்தான் உணவு மணி அடித்தது. இந்த 10% பேர் பசி வயிற்றைக் கிள்ளியதால் கடுகடுப்போடு அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டிய பசி, இன்று ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பித்தது எப்படி? அது கோபமாக மாறியது எப்படி? இந்தப் பசி நிஜமா?
அடுத்த நாள் அதே தொழிற்சாலையில் இன்னொரு ஆராய்ச்சி செய்தார்கள்.
இன்று, எல்லா கடிகாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து ஒரு மணி நேரம் குறைத்து வைத்து விட்டார்கள். நிஜமாக மணி இப்போது 12.30 ஆகிவிட்டது. ஆனால் கடிகாரம் மணி 11.30 என்றுதான் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த 10% பேரில் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடிகாரத்தில் 12.30 மணி என்று காட்டும் வரை நன்றாய் இருந்தவர்களுக்கு பசி ஆரம்பித்துவிட்டது. இன்று கடிகாரப்படி 12.50க்கே மதிய உணவுக்கான மணி அடிக்கப்பட்டது.
நேற்று கோபப்பட்டு பசி வயிற்றைக் கிள்ளியதாகத் திட்டியவர்கள், இன்று சந்தோஷத்தோடும், குஷியோடும் உணவு அருந்தச் சென்றார்கள்.
அரை மணிநேரத்திற்கு முன்பாக பசிக்க வேண்டியவர்களுக்கு, ஒரு மணி நேரம் தாண்டியும் பசிவராமல் இருந்தது எப்படி? கோபம் வராமல் இருந்தது எப்படி? என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்கிறார்கள்.
பதில் கண்டுபிடியுங்கள்.
இப்போது உங்களிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி...
பசி வயிற்றில் இருக்கிறதா? இல்லை கடிகாரத்தில் இருக்கிறதா?
கோபத்தைத் தூண்டியது பசியா? கடிகாரமா?
நம் எல்லோருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இனிமையான முடிவுகள்.
முடிவு 1: மனிதர்களுக்கு பசிப்பதில்லை. மனதிற்குத்தான் பசிக்கின்றது. காரணம் அவர்கள் கடிகாரத்தில் பார்த்த மணிதான் பசியைத் தூண்டுகிறது.
மனதிற்கு கோபம் வருவதில்லை. தர்க்கத்திற்குதான் கோபம் வருகின்றது.
முடிவு 2: மனதிற்கு கோபம் வருவதில்லை. தர்க்கத்திற்குதான் கோபம் வருகின்றது. காரணம் 10 நிமிடம் முன்பும், 10 நிமிடம் பின்பும் வடிவமைக்கப்பட்ட மணியோசைதான் கோபத்தையும் குஷியையும் தந்தது.
முடிவு 3: இந்த இரண்டு முடிவுகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு மூன்றாவது முடிவு முழுமையாய் புரியும்.

உங்களின்
கோபம்கூட
உங்களின்
தர்க்கத்தோடு
நேரடியாக
தொடர்புடையது.
உடல்ரீதியாக வரும் பசி, தூக்கம் என்ற எல்லாமே மனோரீதியானவை. மனோரீதியாக வரும் கோபம், துக்கம் என்ற எல்லாமே தர்க்கரீதியானவை.
இவற்றைப்புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தால் உடல் ரீதியாக, மனோரீதியாக எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.
உங்களின் பசி போலியானது.
கோபம்கூட போலியானதுதான்.
உங்களின் கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமா? இல்லையா? என்பதை நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள். உங்களின் கோபம்கூட உங்களின் தர்க்கத்தோடு நேரடியாக தொடர்புடையது.
ஜென் ஞானி ஒருவரிடம், குடும்பஸ்தர் ஒருவர் தன்னுடைய குறைகளைப் பகிர ஆரம்பித்தார்.
குடும்பஸ்தர், "நான்குபேர் முன்னிலையில் யாராவது என்னை ஏதாவது பேசிவிட்டால் நிலைதடுமாறிப் போகிறேன். சில நேரங்களில் கோபம் தலைக்கேறி அவர்களை அடிக்குமளவுக்கு சென்றுவிடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த ஞானி தலையை வேறொரு பக்கம் திருப்பினார்.
தான் பேசுவதை இதுவரை ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஜென் ஞானி அந்தச் சூழ்நிலைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர் போல வேறு எங்கோ பார்க்க ஆரம்பித்ததும் குடும்பஸ்தர் தடுமாறினார். கொஞ்சம் கோபம்கூட வந்தது.
சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துவதா? தொடருவதா? என்று புரியவில்லை.
நிறுத்தினால் ஞானியை அவமானப்படுத்தியதாகும். தொடர்ந்தால் தனக்கு அவமானமாக இருக்கும். தடுமாறினாலும் அவரால் நிறுத்த முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல், சரி குருநாதருக்கு நம் பேச்சைக் கேட்க விருப்பமில்லை போலத் தெரிகிறது. நாம் பேச்சை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பேச்சை நிறுத்த முயற்சிக்கையில்.... “சரி மேலே சொல்லுங்கள்” என்று குடும்பஸ்தரைப் பார்த்து ஞானி சொன்னார்.
தடுமாற்றம் மறைந்து உற்சாகத்தோடு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். “இப்பகூட உங்களிடம் பேச ஆரம்பித்ததும், நீங்க வேறு எங்கோ பார்க்க ஆரம்பித்ததும், நான் தடுமாறிவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது ஜென் ஞானி, “வாங்க! வாங்க!” என்று அங்கு வந்த இன்னொரு பக்தரை உற்சாகத்தோடு வரவேற்று அவரின் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த முறை குடும்பஸ்தருக்கு கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. ஆனால், சூழ்நிலையைப் புரிந்து அமைதியானார்.
அரை மணிநேரம் அந்தப் பக்தரோடு செலவுசெய்து, அவரை ஆசீர்வதித்து அனுப்பினார்.
குடும்பஸ்தரைப் பார்த்த ஞானி, “சரி சொல்லுங்கள்” என்றார்.
விட்ட இடத்திலிருந்து குடும்பஸ்தர் தொடர ஆரம்பித்தார். அவர் ஐந்து நிமிடம்கூட பேசியிருக்கமாட்டார். அதற்குள் அந்த ஞானி மூன்றுமுறை அந்தப்புறமும், இந்தப்புறமும், திரும்பிப் பார்த்துவிட்டார்.
உங்களின் கோபமே தர்க்கம் சம்பந்தப்பட்டது.
இந்த முறை குடும்பஸ்தருக்கு எரிச்சலே வந்துவிட்டது. ஆனால், தொடர்ந்து தடுமாறாமலே தன்னுடைய நிலையைப் பற்றி பேசி முடித்தபோது "எனக்கு ஏதாவது வழி" சொல்லுங்கள் எனக் கேட்டார்.
ஞானி சொன்னார், "உங்களைப் பற்றிய குற்றச்சாட்டே போலியானது. நன்றாக உங்களைக் கவனித்தேன். மூன்றுமுறை உங்களுக்குக் கோபம் வந்தது. ஆனால் அது வெளிப்படவே இல்லையே ஏன்?"

குடும்பஸ்தரிடம் பதில் இல்லை.
ஞானி மிக அழகாய் விளக்கினார்...
"நன்றாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதே இல்லை. இந்த நிலையில் நான் எதையாவது இழந்துவிடுவேனா? எனக்கு இது சாதகமா? பாதகமா? என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.
கோபப்படுவதால் உங்களுக்குப் பாதகம் வரும் என்றால், அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால்கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.
கோபப்படுவதால் உங்களுக்கு பாதகமில்லை என்றால், அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாக நம்மைப் பேசி வைத்தால் கூட கோபம் பொங்குகிறது.
எனவே உங்களின் கோபமே தர்க்கம் சம்மந்தப்பட்டது.
உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள். கோபம் தன்னால் சரியாகும்.
ஆத்ம தியானம்
உணர்ச்சிக் கொந்தளிப்புகளிடமிருந்து விடுபடும் தியானம்
பக்தர் ஒருவர் என்னிடம் கேட்டார், "கோபத்தை வெளியேற்றுவது சிறந்ததா? இல்லை கோபத்தை அடக்குவது சிறந்ததா?"
அவரிடம் சொன்னோம், "இரண்டுமே நல்லதல்ல."
நீங்கள் கேட்கலாம், "பிறகு நாங்க என்ன தான் செய்வது?" உங்களிடம் எதையும் செய்யச்சொல்லவில்லை. வெளிப்படுத்துவது, அடக்குவது என்ற இரண்டையுமே செய்ய வேண்டாம். வெறுமனே இருங்கள்.
இன்னும் ஆழமாய் சொல்ல வேண்டுமானால்...
"எப்பொழுதெல்லாம் ஒரு உணர்ச்சி உங்களை ஆட்கொள்ளுகிறதோ, அந்த நிமிடத்தில், அதனோடு ஒத்துழையாமல் இருந்தால் பொங்கிய உணர்ச்சி தானாய் அடங்கிவிடும்."
இந்தக் கருத்தை அனுபவமாக்கும் தியானம்...
"ஒரு உணர்ச்சி அது எதுவாய் இருந்தாலும் அது பொங்கும்போது உங்களின் உடலை ஒரு துளிகூட அசைக்காமல் இருக்க முடியுமானால் அந்த உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுவிடுவீர்கள்.
உணர்ச்சிகள் உங்களை அடித்துச் செல்லும்போது, உடலை அசைக்காமல், உங்களின் உணர்ச்சியளவில் ஒத்துழைக்காமல் இருங்கள்... அந்த ஒரு உணர்ச்சி அல்ல, மற்ற எல்லா உணர்ச்சிகளுமே அடங்கிவிடும். உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.
எல்லா உணர்ச்சிகளிடமிருந்தும் விடுபடுவீர்கள்.
அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தத் தியானம். செய்து பாருங்கள்."
இந்தத் தியானத்தை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை.
ஒரே ஒருமுறை முழுமையாகச் செய்யுங்கள். உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தே விடுதலை பெறுவீர்கள்.
