KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உடலுக்குள் அமிர்த மழைSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உடலுக்குள் அமிர்த மழை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒவ்வொரு வினாடியும் உங்களுக்குள் மழை பெய்கிறது.

அது அமில மழையா? இல்லை அமிர்த மழையா?

என்பதைப் பொருத்தே உங்களின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயமாகின்றது.

ஒரு சின்ன கதை...

மாமியார் மீது மாளாத வெறுப்பு. “நேரடியாக அந்த அம்மாவை திட்டவும் முடியவில்லை. திட்டாமல் இருக்கவும் முடியவில்லை” என்று தன் தோழியிடம் சலித்துக்கொண்டாள் அந்த மருமகள்.

தோழி, “உன் மாமியார் அப்படி என்ன செய்துவிட்டாரென்று இப்படிச் சலித்துக்கொள்கிறாய்?” எனக் கேட்டதற்கு, மருமகள் பெருத்த கோபத்தோடு பதில் சொன்னார்.

“என் மாமியாருக்கு இரண்டு மகன்கள். உனக்குத்தான் தெரியுமே... மூத்தவர் சென்னையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். அவர் வீடே ஒரு மாளிகையைப் போல இருக்கும்.

இங்கே என் வீட்டுக்காரர் சம்பாதிப்பது அந்தந்த மாதச் செலவிற்கே கட்டுப்படியாவதில்லை. மாதமானால் ஏதோ ஒரு லோன் போட்டால்தான் குடும்பத்தை நகர்த்த முடிகிறது. இதில் இந்த கிழவி வேற இங்கேயே குத்துக்கல்லாய் உட்கார்ந்திருக்கிறது. இருக்கிற செலவில் இதெல்லாம் சமாளிக்க முடியவில்லை.

இப்பசொல்லு.. என் மாமியார் மூத்தவர் வீட்டில் போய்தங்கிக்கொள்ளலாமில்லையா? ஒரு கட்டத்துக்கு மேலே என்னால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியலையேடி!!!" என்று மனம் குமுறி அழுது கொட்டினாள்.

தன் தோழி நேற்று அழுதது மனத்திலேயே நினைவில் இருந்ததால், "இன்று எப்படியாவது அவளின் மாமியாரிடம் இதைப்பற்றி கேட்டுவிட வேண்டும்" என்ற எண்ணத்தோடேயே கோயிலுக்கு வந்திருந்த அந்த மாமியாரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

Swami

தியாகத்தில்
மூழ்கி,
ஆனந்தம்
மிகுந்த
வாழ்வை வாழ
வழியிருக்கிறது.

பதினைந்து நிமிடம் பேச்சுக்கொடுத்து கடைசியாக அந்தத் தோழி மிகவும் நாசுக்காக கேட்டுவிட்டார். "ஏம்மா, உங்களுடைய மூத்த மகன்தான் இவ்வளவு நல்லாயிருக்கிறாரே, அவர் ஏன் தன் வீட்டுக்கு இன்னும் உங்களை அழைத்துக்கொள்ளாமலே இருக்கிறார்?"

அதற்கு அந்த மாமியார், கண்கள் கலங்க சிரித்த முகத்தோடு பதில் சொல்ல ஆரம்பித்தார். "மூத்தவன் வரும்போதெல்லாம் அழாத குறையாய் என்னை அவன்கூட இருக்கச்சொல்லித்தான் கூப்பிடுகிறான்.

இங்கே என்னுடைய சின்னப் பையன் இவ்வளவு கஷ்டப்படும்போது, நான் மட்டும் அங்கே நிம்மதியாய் நல்ல சோறு சாப்பிட்டு சொகுசாக இருக்க முடியுமாம்மா?

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.நான் இங்கே இருக்கிறதனால் மாதத் திற்கு ஒரு முறையாவது என்னைப் பார்க்க பெரியவன் வருவான். வரும்போது கை நிறைய என் செலவிற்காக பணம் தருவான். அந்தப் பணத்தைத் தந்துதான் சின்னவன் வீட்டில் ஏற்படுகின்ற அவசர செலவையெல்லாம் சமாளிக்கிறேன். இதெல்லாம் என் சின்ன மருமகளுக்குத் தெரியாது.

அவ கொஞ்சம் முன்கோபக்காரி. நீ, நான் சொன்னதையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள். பெரியவன் ரொம்ப நல்லவன். சின்னவனுக்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன்," என நெஞ்சே நிரம்புமளவிற்கு உருக்கமாய் பேசி தன் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்த மாமியார், அந்தத் தோழிக்கு தாயாய் தெரிந்தார்.

தன்னை மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அந்தத் தாய் வயதானவராக இருந்தாலும் பார்ப்பதற்கு உற்சாகம் மிக்கவராகவும், முகம் மலர்ந்தவராகவும் இருந்தார். ‘அவரின் கண்களில் இருந்த தெளிவும், நிம்மதியும், திருப்தியும் முன்கோபக்காரியாய் இருக்கும் தன் தோழியிடம் ஏன் இல்லை?’ என்பது இப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது.

அந்த மருமகளைப்போல வெறுப்பில் மூழ்கி, போராட்டம் மிகுந்த வாழ்வை வாழவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த மாமியாரைப் போல தியாகத்தில் மூழ்கி, ஆனந்தம் மிகுந்த வாழ்வை வாழவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒவ்வொரு முறை வெறுப்பில் மூழ்கும்போதும், உங்களுக்குள் அமில மழை பொழிகின்றது. உங்களின் நரம்பு மண்டலத்தையும், தசை நார்களையும் எரிச்சலூட்டும் அமிலத் துளிகளையும், ஹார்மோன்களையும் ஒரு சில வினாடிக்குள் ஒரு சிறு எரிச்சலால் பாய்ச்சிவிட முடியும்,” என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது.

வெறுப்பும், எரிச்சலும் நாம் நினைப்பது போல் மற்றவர்களை அழிப்பதில்லை. அவை நம்மைதான் முதலில் அழிக்கின்றன. அவை பொங்கும் ஒவ்வொரு நொடியும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அமில மழையாக ஒவ்வொருவருக்குள்ளும் பொழிகின்றது.

தியாகம் போன்ற உயர்ந்த உணர்வுகள் ஒருவருக்குள் பொங்கும்போது, அவை மற்றவர்களுக்கு நன்மைகள் தருவதைவிட முதலில் அவருக்குள்தான் பல நன்மைகளை உண்டாக்குகின்றன என்று நவீன மருத்துவத் துறைகளில் ஒன்றான "Mind - Body Medicine சொல்கின்றது.

நரம்புகளையும், தசைநார்களையும் ஆரோக்கியமாக்கி, மனத்தில் ஆழ்ந்த நிம்மதியை உருவாக்கி, முகத்தில் பொலிவை எடுத்துவரும் அமிர்த மழையை,

வெறுப்பும், எரிச்சலும் நாம் நினைப்பது போல் மற்றவர்களை அழிப்பதில்லை. அவை நம்மைதான் முதலில் அழிக்கின்றன.

ஆனந்த உணர்வைத் தரும் ஹார்மோன்களை இந்த உயர்ந்த உணர்வுகள் பொழியச் செய்கின்றன.

நிஜமான தியாகிகளிடம் இருக்கும் பொலிவு மிக்க தெளிவும், வறட்டுக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களிடம் இருக்கும் வெறுமை மிக்க இறுக்கமும்தான், அமிர்த மழையும், அமில மழையும் ஒவ்வொருவருக்குள்ளும் பொழிந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள்.

கடைசியாய் சொல்ல விரும்பும் சத்தியம்...

தியாகம் ஆரோக்கியத்தை அளிக்கும் அமிர்தம்.

வெறுப்பு ஆரோக்கியத்தை அழிக்கும் அமிலம்.

எந்த மழையை உங்களின் உடலுக்குள் பெய்ய வைக்கலாம். முடிவு செய்யுங்கள். தியாகிகள் எனும் பட்டம் பெறாமலேயே ஆனந்த வலம் வருவீர்கள்.

ஆத்ம தியானம்

தியாகம் என்பதே அருமையான தியானம்தான்.

உங்களிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுக்குத் தருவது உயர்ந்த தியாகம் அல்ல.

மற்றவர்களுக்காக, மற்றவர்களின் வளர்ச்சிக்காக, உங்களிடம் உயர்ந்த உணர்வுகளை மலர்த்துவதுதான் தியாகம்.

உடலையோ, பொருளையோ, நேரத்தையோ, ஏன் உயிரையோ தியாகம் செய்வதுகூட உயர்ந்த தியாகமாகிவிட்டது. இது தியானமாகாது.

உங்களைச் சுற்றியிருப்பவரின் நலனுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக நிதானத்தை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் 'நீங்கள் தியாகி.'

மற்றவர்களின் நலனுக்காக ஆனந்தத்தை உங்களுக்குள் உயிர்ப்பித்தால், நீங்கள் மகாத்மா.

உங்களின் நலனுக்காகவும், எல்லோரின் நலனுக்காகவும் உங்களுக்குள் ஜீவன் முக்தியை மலர்த்தினால், 'நீங்கள் புண்ணியாத்மா. ஞானி!'

Swami Nithyananda meditating in saffron robes