KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஆனந்த சொர்க்கம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆனந்த சொர்க்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியானம் முரடனைக் கூட மகானாக்கும்.

  • வேத உண்மை தியானம் கொலைக் குற்றங்களை குறைக்கிறது.
  • சர்வே ரிப்போர்ட் தியானம் மனிதர்களை தெய்வமாக்கும்.
  • அனுபவ உண்மை

திருடுவதும், கொள்ளையடிப்பதும் இன்று அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாகி விட்டது. அதிகரித்து வரும் குற்றங்கள் பற்றி பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியோடு மட்டும் நிறுத்தாமல் அதற்கு பல எளிய தீர்வுகளும், வழங்கியுள்ளார்கள்.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் நிகழ்த்தப்பட்ட தியான ஆராய்ச்சி மிக சுவாரஸ்யமானது.

1987-ல் இருந்து பதிவு செய்யப்பட்ட குற்றப் பதிவேடுகளை (F.I.U) புரட்டிப்பார்த்தால் அது அதிர்ச்சியைத் தருகிறது. வருடத்திற்கு குறைந்தது 11% என்ற ரீதியில் குற்றங்கள் அதிகமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

""தியானம் நம் உள்ளுலகைத் தாண்டி, வெளியுலகிலும் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துகிறது" என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிய அந்த தியான ஆராய்ச்சிக் குழு வாஷிங்டன்னைத் தேர்வு செய்தது. அக்குழுவினர், அவர்கள் தினம் தியானம் செய்வதோடு, வாஷிங்டன்னில் உள்ள மக்களுக்கும் தியானங்களைக் கற்றுத்தந்து, அவர்களையும் தினம் தியானம் செய்ய வைத்தார்கள்.

ஐந்தாறு வாரங்கள் தொடர்ந்து தியானம் செய்ததால் நிகழ்ந்த மாற்றமானது கேட்பவரையெல்லாம் புல்லரிக்க வைத்தது. வருடத்திற்கு 11% குற்றங்கள் என்ற ரீதியில் அதிகரித்துக்கொண்டிருந்த க்ரைம் ரேட், தொடர் குழு தியானத்திற்குப்பின் 11% இதிலிருந்து 8%, 4%, என்று குறைந்து கொண்டே வந்து அமைதியானது.

அப்புறம் 1%, 2%, 3% என்று அதிகரித்து வருடத்திற்கு 13% அமைதி என்றரீதியில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், கூட்டு தியானமானது 11% கலவரத்தை, 13% அமைதியாக மாற்றிவிட்டது. தியானம் உள்ளுலகில் மட்டுமல்ல, வெளியுலகிலும் அமைதியைத் தருகிறது.

நாட்டின் அமைதிக்காக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் முப்பதாயிரம் பேர் தியானம் செய்யும் தியானமுகாம் சேலத்தில் ஒருமுறை நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த அன்பரொருவர் இந்த அருமையான கேள்வியைக் கேட்டார்.

"ஒரு சின்ன சந்தேகம்! இப்போது நீங்கள் கற்றுக்கொடுத்த நித்ய தியானத்தை ஒரு வருடத்திற்கு முன்பே உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு விட்டேன். தொடர்ந்து அதைச் செய்து வருகிறேன்.

நித்ய தியானத்தை தினமும் செய்யுங்கள்

ஆனால் இன்றைய தியானம் எனக்குள் ஆழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. ஏதேனும் நல்ல மந்திரசக்தியை இந்த மண்டபத்திற்குள் அனுப்பி வைத்தீர்களா?" என்று கேட்டார்.

அப்போது சொன்னேன், "மந்திர மாயமெல்லாம் செய்யவில்லை, நீங்கள் எல்லாரும் சேர்ந்து செய்த மந்திரம் தான் இது". முப்பதாயிரம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து கூட்டு தியானம் செய்ததால் நிகழ்ந்த அற்புதம் இது.

இதை நன்றாக புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம்...

பத்து பேர், ஆளுக்கு பத்து ரூபாய் வீதம் போட்டால் நூறு ரூபாய் சேரும். அதை பத்து பேரும் அனுபவிக்க முயற்சித்தால் ஆளுக்கு பத்து, பத்து ரூபாய் மட்டும் தான் கிடைக்கும்.

அதே பத்து பேர் ஆளுக்குப் பத்து, பத்து வோல்டேஜ் கரண்டை தந்தால், அது நூறு வோல்டேஜாக மாறிவிடும். நூறு வோல்டேஜ் கரண்டைக் கொண்ட மின்சாரப்பெட்டியைப் பத்து பேரும் தொட்டால் என்ன ஆகும்!? ஒவ்வொருவருக்கும் அதே நூறு வோல்டேஜ் ஷாக் அடிக்கும்!

அதேபோல்தான் பத்துபேர் ஒன்றாய் சேர்ந்து கூட்டு தியானம் (Group Meditation) செய்தால், ஒவ்வொருவருக்கும் ஒரு தியானத்தின் பலன் மட்டும் கிடைக்காது, ஒவ்வொருவருக்கும் பத்து தியானங்களின் பலன் கிடைக்கும்.

இன்று முப்பதாயிரம் பேர் ஒரே இடத்தில் தியானம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பல மடங்கு சக்தியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.

கூட்டு தியானம் தான் உங்களுக்குள் பல மடங்கு சக்தியைத் தந்திருக்கிறது. அது மந்திர மாயமல்ல...!

தியானம் என்பது, வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஊறுகாய் அல்ல, உடலுக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படி உயிருக்கு தியானம் முக்கியம்.

அதுவும், இன்றைய கால கட்டத்தில், தியானம் என்பது தனி மனித தேவை என்பதையும் தாண்டி, சமுதாய தேவையாக மாறியிருக்கிறது.

நிருபர் ஒருவர் கேட்டார், "தியானம் ஒரு சமுதாய தேவை எனச் சொல்கிறீர்களே? சமுதாய தேவை எனும் அளவுக்கு அப்படியென்ன அவசியம் உருவாகியிருக்கிறது?" அதற்கு பதிலளித்த போது, "அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட! இன்று

> இன்றைய கால கட்டத்தில், தியானம் என்பது தனி மனித > தேவை என்பதையும் தாண்டி, சமுதாய தேவையாக > மாறியிருக்கிறது.

ஆற்றைக்கடந்து அலுவலகத்திற்குச் செல்ல பெரிய பாலம் இருக்கிறது. பேருந்து இருக்கிறது.

இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் விகிதாச்சாரத்திலேயே குற்றங்கள் வளர்ந்து கொண்டே சென்றால், அடுத்த பத்து, பதினைந்து வருடங்களில்,

உங்களின் வீடு இருக்கும், அலுவலகம் இருக்கும். ஆனால் காலையில் அலுவலகத்திற்கு வர பயன்படுத்திய பாலமும், பேருந்தும் இருக்காது.

Nithyananda

கூட்டு
தியானம்,
நாட்டுக்கு
நாம் செய்யும்
தானம்.

ஒரு வேளை பாலமும், பேருந்தும் இருக்கும். வேலை முடித்து சென்றால், விட்டு விட்டு வந்த வீடு உங்களை வரவேற்க இருக்குமா? இருக்காதா? என உறுதி தர முடியாது.

எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னுமளவுக்கு சமூகத்தில் கலவர உணர்வு அதிகரித்து விடும்.

எதிர்காலம் எதிரிகளின் கையில்லாமல் நம் கையில் இருக்க வேண்டுமானால்... க்ரைம் ரேட் சந்தடியில்லாமல் சமூகத்திலிருந்து மறைந்து போக வேண்டும்.

கூட்டு தியானத்தால் ஒரு நாட்டின் க்ரைம் ரேட்டையே குறைக்க முடியும் என்பது, சர்வே ரிப்போர்ட்டோடு நிரூபணமாகியிருக்கும் உண்மை.

கூட்டு தியானம், நாட்டுக்கு நாம் செய்யும் தானம்.

இதனால் சமூகம் சுமுகமாகும். எதிர்கால சாபம் சுபமாகும்," எனச் சொல்லி முடித்தேன்.

கூட்டு தியானமானது நாட்டில் அமைதியைத் தருவதோடு நில்லாமல், யார்யாரெல்லாம் அதில் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்குப் பல மடங்கு சக்தியையும், ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

எங்கெல்லாம் பத்து, இருபது பேர் ஒன்றாய்ச் சேர முடியுமோ, அங்கெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கூட்டு தியானம் செய்யுங்கள். நாட்டில் அமைதி பெருகட்டும், நாடு நலம் பெறட்டும்.

ஒரே ஒரு ஆன்மாவைத் திறப்பதாலே, அவருக்குள் ஆனந்தம் பொங்கும் என்றால்?

இதை படிக்கும் கோடிக்கணக்காண வாசகர்களாகிய நீங்களெல்லாரும் ஒன்றாய் ஆத்மாவைத்திறந்தால் என்ன ஆகும்!?

உலகமே ஆனந்த சொர்க்கமாகும்!...

எட்மண்ட் ஹிலாரி, எவரெஸ்டைத் தொட்ட போது "என்னிடம் எதுவுமில்லை" என்றாராம்.

நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி வைத்த போது, "பூமி ரொம்ப சிறுசு" என்றாராம்.

அதேபோல் நீங்கள் உள்ளுக்குள் உள்ள சிகரத்தைத் தொடும் போது "என்னிடம் எதுவுமில்லை, பூமி ரொம்ப சிறுசு" எனச் சொல்வீர்கள்.

உங்களின் உள்ளுலகம் நீங்கள் காணும் வெளியுலகைவிட விசாலமானது. ஆச்சரியமயமானது. ஆனந்தமயமானது.

இந்த எல்லையில்லா ஆனந்த உணர்வை அடைவதுதான் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் இலக்கு, தொடுதல், நோக்கம் என்ற எல்லாமே.

இதை உணர்ந்து தேட ஆரம்பியுங்கள். பூமியே சிறுசாகும். துக்கங்களெல்லாம் தூளாகும். எல்லோரும் இதைச் செய்தால் நாடே நலமாகும், சில நிமிடங்களில்!

எங்கெல்லாம் பத்து, இருபது பேர் ஒன்றாய்ச் சேர முடியுமோ, அங்கெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கூட்டு தியானம் செய்யுங்கள். நாட்டில் அமைதி பெருகட்டும், நாடு நலம் பெறட்டும்.