KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஆத்மாவை திறSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆத்மாவை திற

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்தம் பெருகட்டும்

Portrait

நீங்கள் விலை மதிக்க

முடியாத வைரம்

portrait

ஒரு சூஃபி ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த இனிய சம்பவம்....

அலுவலக வேலை சம்பந்தமாக, அந்த சூஃபி ஞானியை அடிக்கடி சந்தித்த நபர் அவர். துறவிகளைப் பற்றிய உண்மை புரியாமல் அவர்களைப் பற்றி அவதூறாக எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் குணம் கொண்டவர்.

சூஃபி ஞானி இவருக்கு தக்கபாடம் புகட்ட நினைத்தார்.

ஒருநாள் தன்னிடம் இருந்த வைர மோதிரத்தை அந்த நபரிடம் கழட்டித் தந்து,

"அந்தக் காய்கறி கடைக்காரரிடம் சென்று இந்த மோதிரம் எவ்வளவு ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்று விசாரித்து வர முடியுமா?" என்று சூஃபி ஞானி கேட்டுக்கொண்டார்.

அந்த நபருக்கு ஞானியின் கோரிக்கை விநோதமாய் இருந்தது.

"இது வைர மோதிரம். யாருமே பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்வார்கள். இதைப் போய் கேட்கச் சொல்கிறாரே? சரி போய் கேட்போம்" என்று யோசித்தபடி காய்கறிக்காரரிடம் மோதிரத்தைக் காட்டிப் பேசினார்.

காய்கறிக்காரர், "நல்ல மோதிரமாக இருக்கிறது. எப்படியும் இரண்டாயிரம் ரூபாய் தரலாம்" என்றார். இந்தச் செய்தியைக் கேட்ட சூஃபி ஞானி, அந்த நபரை மீண்டும் அங்கு இருந்த ஒரு பாத்திரக் கடைக்காரரிடம் விசாரிக்கச் சொன்னார்.

பாத்திரக்கடைக்காரர், “எப்படியும் ஒரு பத்தாயிரம் ரூபாய் தரலாம்” என்றார்.

கடைசியாக அந்த நபரை ஒரு நகைக் கடைக்காரரிடம் சென்று அந்த மோதிரத்தைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.

portrait

‘நீங்களும் வைரம்தான்.’

மோதிரக்கடைக்காரர், “ஆஹா! விலையுயர்ந்த கல். எப்படியும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறையாமல் போகும்!” என்றார்.

இந்த மூன்று பதில்களையும் கேட்டுக் குழம்பி போனவரைப் பார்த்து சூஃபி ஞானி சொன்னார், “வைரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் வைர வியாபாரியிடம் தான் சென்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீ வைர வியாபாரியாகவேண்டும். துறவிகளைப் பற்றி சரியாய் தெரிந்துகொள். இல்லாவிட்டால் நீ துறவியாகு. சும்மா அவதூறு பேசாதே” என்றார்.

அதேபோல், ""நீங்கள் ஒவ்வொருவருமே வைரம்தான். அதைச் சரியான நபர்களிடமிருந்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்"

‘நீங்களும் வைரம்தான்.’ என்பதை உங்களுக்குச் சரியாய் புரியவைக்கும் அந்த நபரைத்தான் குரு என்கிறோம்.

எப்படி அந்தக் கதையில் வரும் நபர், தனக்கு எந்த லாபமும் இல்லாவிட்டாலும் துறவிகளைத் தூற்றித் திரிந்தாரோ, அப்படித்தான் ‘தான் விலை மதிப்பற்ற வைரம்’ என்பதை உணராதவரின் மனம், வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசும்.

துறவிகளை அவதூறு பேசுவதினால், ஒருவர் அதிகபட்சமாக ஞானியைத்தான் இழப்பார். ஆனால், “தன் ஆன்மா ஒரு விலைமதிக்க முடியாத வைரம்” என்பது உணரப்படாவிட்டால் வாழ்க்கையையே இழக்க நேரிடும். வாழ்வே சூன்யமாகிவிடும்.

நீங்கள் வைரம் என்பது புரியாத வரை... மற்றவர்கள் உங்களை மதிப்பதல்ல, நீங்கள் உங்களை மதிப்பதே சாத்தியமில்லை.

மற்றவர்கள் உங்களை மதிக்க ஒரே வழி, நீங்களே ஒவ்வொரு நிமிடமும் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் பூத்துப்போகும் ஜீவன் முக்தராகுங்கள். உங்களுக்குள் இருக்கும் விலைமதிக்க முடியாத வைரத்தை கண்டுபிடிப்பதே நிரந்தரமான தீர்வாகும்.

ஆத்ம தியானம்

என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால், வாழ்வே ஒரு ஆனந்த லீலை. அதில் நீங்கள் ஒவ்வொருவரும் விலைமதிக்க முடியாத வைரங்கள்.

ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சொன்னார்: “ஒன்பது வருடங்கள் நீங்கள் பரிவராஜகம் செய்திருக்கின்றீர்கள். வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு ஊர்கள், சிலநேரம் மனிதர்களோடு, சில நேரம் காட்டு விலங்குகளோடு என்று எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களின் கடினமான தவங்கள் என்னை உலுக்கிவிட்டது” என்று குரல் தழுதழுக்க முடித்தார்.

அவரிடம் சிரித்தபடி சொன்னேன், “உண்மையைச் சொல்ல வேண்டுமானால்... எனக்குதான் உங்களைப் பார்க்கும்போது பல நேரங்களில் வியப்பாயிருக்கிறது. எப்படி இவர்கள் எல்லோராலும் ஒரே மாதிரியான வாழ்வை தொடர்ந்து வாழ முடிகிறது? நீங்கள்தான் எனக்கு பெரிய யோகிகளாகத் தெரிகின்றீர்கள்?” அதே அலுவலகம், அதே நபர்கள், அதேப் பிரச்சனை என்று தினமும் ஓடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

எனக்கு ஒன்பது வருடங்களும் ஆனந்த உலாவாகவே இருந்தது.

ஒவ்வொரு தவமும் முந்தைய தவத்தைவிட இன்னும் ஆழமான உற்சாகத்தை உருவாக்கும் இனிய சவாலாக இருந்தது.

புது மனிதர்கள், புது இடம், புது வாழ்வு எனக்கு தொடர் சுற்றுலாவாகத்தான் தெரிந்தது. என் வாழ்வு முழுவதுமே கொண்டாட்டம் நிறைந்த நிமிடங்களாக மட்டுமே இருக்கின்றது.

சுருங்கச் சொன்னால்.... எனக்கு உங்களைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. உங்களுக்கு என்னைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்... ஆனந்தம், ஆரோக்கியம், தியானம், ஜீவன் முக்தி போன்ற கொண்டாட்டமான வாழ்வின் அடிப்படை அம்சங்களுக்காக உழைப்பவர்கள் கஷ்டப்படுவதாகவும், அவர்கள் எதையோ இழந்துவிட்டதாகவும் நீங்கள் நினைக்கின்றீர்கள். ஆனால் அவர்கள் ஆனந்தமாகவே இருக்கின்றார்கள்.

பங்களா, பதவி, அதிக பணம் என்று வாழ்வின் அடிப்படைத் தேவைக்கு அதிகப்படியான அம்சங்களுக்காக உழைப்பவர்கள் ஆனந்தமாக இருப்பதாகவே காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் எப்படியிருக்கிறார்கள்? உங்களுக்கே அனுபவமாக தெரியும்.

நேரடியாக இதயத்தில் பட்டதை சொல்ல வேண்டுமானால்....

"எங்களைப் பார்த்து கஷ்டப்படாதீர்கள். உங்களைப் பார்த்து கஷ்டப்படுங்கள்..." என்ற ஜென் வாக்கியத்தைத்தான் சொல்ல வேண்டும்.

உங்களின் பூரண விடுதலையை, ஊருக்காக உருகுவதை உங்களை நோக்கித் திருப்பினால், அதுவே உங்களை வைரமாக்கிவிடும்.

வாழ்க்கை ஒரு ஆனந்த லீலை.

இதை நீங்கள் புரிந்துகொள்ளும் தகுதி உங்களுக்கே இருக்கிறது. அதனால்தான் உங்களிடம் நேரடியாக உள்ளதை உள்ளபடி உடைத்து பேசிவிட்டேன்.

சரியாய் உள்வாங்கியிருந்தால்.... இந்த நிமிடத்திலிருந்து உங்களின் வாழ்வும் ஒரு ஆனந்த லீலையாகிவிடும்." என்று சொல்லி முடித்தேன்.

குரல் தழுதழுக்க, கண்ணீர் ததும்பப் பேசியவரின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது. ஆனால் இப்போது அது ஆனந்தக் கண்ணீராயிருந்தது.

வெளியிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் எந்த மரியாதையும், மரியாதை அல்ல. அது அவமரியாதை. மற்றவர்களின் மரியாதைக்கு ஏங்குவதை நிறுத்தினாலே அவர்கள் உங்களை மதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இதுதான் ஒவ்வொரு ஜீவன் முக்தரும் மதிக்கப்படுவதற்கான ரகசியம்.

இது போன்ற ஏக்கங்களை நிறுத்துவதும், தன்னிடமே மாறவேண்டியவை பல இருக்கும்போது, மற்றவர்களுக்காகக் கஷ்டப்படுவதை நிறுத்துவதும், உங்களை வைரங்களாக்கிவிடும்.

Portrait of Nithyananda