KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/வரங்கள் கொட்டSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

வரங்கள் கொட்ட

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆரம்பிக்கும்...!

Nithyananda

உங்களது ஒரு சாதாரண நாள் எப்படி இருக்கிறது?

சற்றே நினைத்துப் பாருங்கள்.

நாள் முழுவதும் நமக்குள் எத்தனையோ உணர்வுகள் பாய்கின்றன. காலையில் கண் விழிக்கும்போது மகிழ்ச்சியாக அல்லது சாதாரணமாக இருக்கிறது.

காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது ஆசையாக மனைவி காபி கொண்டு வருகிறார். அதை மேஜை மேல் வைக்கும் போது, கை தவறி கொஞ்சம் சிந்திவிடுகிறது. அப்போது சட்டென உங்களுக்கு மனைவி மீது கோபம் வந்து விடுகிறது.

ஆனால் அதே கோபம், சிற்றுண்டி முடித்தவுடன் மறைந்து பழையபடி நல்ல மன நிலைக்கு வந்துவிடுகிறீர்கள். வீட்டிலிருந்து வேலைக்குப் போகும் வழியில் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள, யாரையாவது கொன்றுவிட வேண்டும் என்பது போலக் கோபம்!

அலுவலகத்தில், திட்டமிட்டபடி வேலை முடிவதில்லை. மறுபடியும் மன இறுக்கம்.

இப்படியே...

ஒவ்வொரு நிமிடமும் உணர்வுகள் உங்களைத் தாக்குகின்றன. இப்படி வாழ்வது, தலைகீழாகப் பறக்கும் சக்கரக் குடை ராட்டினம் போல இருக்கிறது.

நல்லவேளையாக, நாம் அனுபவிக்கும் உணர்வுகள் எல்லாமே மோசமானவை அல்ல. ஒவ்வொரு நாளிலும் நாம் சில தருணங்களில் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ, தியானநிலையிலோ இருக்கத்தான் செய்கிறோம்.

சாதாரணமாக தினசரி செய்யக் கூடியவை.

உங்கள் தோட்டத்தில் அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தேநீர் அருந்துவது. குளிப்பது, இசை கேட்பது, குழந்தைகளோடு விளையாடுவது.

portrait

சின்ன சின்ன
விஷயங்களுக்கு
நன்றி
பாராட்டுங்கள்!

ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணங்கள் வாய்க்கின்றன.

ஆனால் நம்மில் எத்தனைபேர் இவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம்?

"இன்றைய நாள் எப்படிக் கழிந்தது?" என்று யாராவது நம்மைக் கேட்கும்போது, நமக்கு நினைவிற்கு வருவன வாகன நெரிசலும், சிந்திய காபியும், தேங்கிப்போன வேலையும்தான். அனுபவங்களிலேயே ஏன் தினசரி கவனம் செலுத்தக் கூடாது.

இந்த சோதனையைச் செய்து பாருங்கள்.

ஒரு நாளில் 24 மணி நேரத்தில் நடைபெற்ற நல்லவைகளை மட்டும் நினைத்துப் பாருங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு நன்றி பாராட்டுங்கள்!

வேலைக்குப் புறப்படும்போது நமது வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் மஞ்சள் மலர்களுக்காக, இன்று வீட்டு வேலைக்காரப் பெண் விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காக நாம் திருப்தியடைவதில்லை. மாறாக இவற்றையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம். ஆனால் வேலைக்காரப் பெண் ஒருநாள் வராமல் போனாலும், அதை நாம் சாමාන්‍யத்தில் ஏற்றுக்கொள்வதில்லை.

எரிச்சலடைகிறோம். பொறுமையிழக்கிறோம்.

இன்றிலிருந்து ஒவ்வொரு சுகமான அனுபவத்தையும் நினைவு கூறுங்கள்.

முதலில் 24 மணி நேரமாவது இதைச் செய்து பாருங்கள்.

சுகமான அனுபவத்தை ஒருமுறை சுவைக்க ஆரம்பித்து விட்டால், மறுபடியும் உங்களை என்றும் சலிப்பில் ஆழ்த்திக் கொள்ளவே மாட்டீர்கள்.

இந்தப் பயிற்சி விளையாட்டுக்கல்ல. இது நாம் வாழ்வதற்கான ஒரு சிறந்த தியானமுறை.

வாழ்வின் மீது நீங்கள் கல்லெறிந்தால், அது உங்கள் மீது கல்லெறியும். வாழ்வை மலர் கொண்டு வரவேற்றால், உங்களுக்கு மலர்களே கிடைக்கும்.

வாழ்வை இனிமையாக வரவேறுங்கள். வரம் தரும் தேவியாக அது உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.

ஆத்ம தியானம்

வரங்களை, உங்களை நோக்கி ஈர்க்கும் தியானத்திற்குள் நுழையலாம்...

இரு எண்ணங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில்தான் கடவுள் தன்மை ஒளிந்திருக்கின்றது. எண்ணங்களுக்கு எதை வேண்டுமானாலும் படைக்கும் சக்தி உண்டு.

எண்ணங்களுக்கு இடைப்பட்ட மௌனத்திற்கு, எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் தன்மையையே படைக்கும் சக்தியுண்டு. உங்களுடைய கவனத்தை எதன்மீது போடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

எண்ணங்களுக்கு உங்களின் சக்தியையும், கவனத்தையும் தந்தால் வெளியுலகில் செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும். அதற்கான எல்லா அனுகூலங்களும் உங்களைச்சுற்றி நடக்க ஆரம்பிக்கும்.

மௌனங்களுக்கு உங்களின் சக்தியையும், கவனத்தையும் தந்தால், அது உள்ளுலக செல்வமான ஆனந்தத்தை 24 மணி நேரமும் உங்களின் ஒவ்வொரு செல்லிலும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்.

முடிவு செய்யுங்கள்.

எதன்மீது கவனத்தைச் செலுத்துவது என்று கேட்டால், எதன்மீது நீங்கள் கவனத்தைச் செலுத்தினாலும் ஞானமே. எதன் மீதும் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதுதான் அஞ் ஞானம்.

ஞானம் நோக்கி முன்னேறுங்கள்!

செல்வமும், ஆனந்தமும் வாழ்வில் கொழிக்க ஆரம்பிக்கும்!

வரங்கள் கொட்ட ஆரம்பிக்கும்!