வாழ்வு சூதாட்டமல்ல ...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அது ஒரு சுக ஆட்டம்
ஒவ்வொரு தனி மனிதனுடைய ஆழ்மனக் காயங்களையும், குரூரங்களையும் சரிசெய்வதற்காக தனித்தனியான பிரத்யேக தியானக்கூடங்களைக் கொண்ட ஜென் மடாலயம் அது.
பயத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம்,
கோபத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம்,
துக்கத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம்...
என விதவிதமாக மனிதர்களை அவர்களின் உள்ளுலக பிடிப்புகளிலிருந்து விடுபடுத்தி, அவர்களின் வளர்ச்சியைப் பலபரிமாணங்களில், பல மடங்குகள் அதிகரிக்கும் தியானக்கூடங்கள் அங்கு இருந்தன.
அந்த ஜென் மடாலயத்தின் அமைப்பே அங்கு வருபவர்களை அவர்களின் பல பிடிப்புகளிலிருந்து விடுபடுத்தி, அவர்களுக்குள் புத்தியையும், சக்தியையும் அதிகரிப்பதாக இருந்தது.
ஒரு ஞானியால் சக்தியூட்டப்பட்ட இதுபோன்ற ஆஸ்ரமங்களில் ஒருநாள் தங்கியிருப்பதே பல வருட வளர்ச்சியைத் தந்துவிடும்.
இந்த உண்மையை அனுபவமாக உணர்ந்திருந்ததால்தான் தங்களை முன்னேற்றிக் கொள்ள விரும்புபவர்கள் இது போன்ற இடங்களுக்கு அடிக்கடிச் செல்வார்கள்.
அப்படி அடிக்கடி அங்கு வரும் ஒருவர் அவருடைய நண்பரை அழைத்து வந்திருந்தார். அவர் எதை எடுத்தாலும் ஏகத்துக்கும் ஆராயும் பகுத்தறிவாளி.
"அதெப்படி இந்த இடமே ஒருவரின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்க முடியும்? இது பார்ப்பதற்கு சாதாரண ஒரு ஆஸ்ரமம் போல்தானே இருக்கின்றது''. என்று நண்பரிடம் வாதம் செய்து கொண்டே வந்தார்.
மெதுவாய் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த இவர்களின் மீது பாய்வது

போல அங்கே இருந்த ஒரு தியானக்கூடத்திலிருந்து குரைத்தபடியே ஒரு நாய் ஓடி வந்தது. அதற்கு எதிரே இருந்த தியானக்கூடத்திலிருந்து இன்னொரு நாய் சாதாரணமாக நிதானமாக வெளியே வந்தது.
இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்த பகுத்தறிவாளி ஆச்சரியப்பட்டார்!
மிரண்டடித்து இந்த நாய் ஓடி வருமளவிற்கு அப்படி அந்த தியான கூடத்திற்குள் என்னதான் இருக்கின்றது பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு, 'மாய அதிர்ச்சி' என்று தலைப்பிட்டிருந்த தியான கூடத்திற்குள் நுழைந்தார்.
நுழைந்தவர் இரண்டே நிமிடத்தில் வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தார்
அந்த மாய அதிர்ச்சிக் கூடத்திற்குள் விதவிதமான கண்ணாடிகள் இருந்தன. ஒவ்வொரு கண்ணாடியும் அவரை அவருக்கே ஒவ்வொரு விதத்தில் காட்டியது.
சில கண்ணாடிகள் அவரின் உருவத்தையே அவருக்கு பேய் போலக் காட்டியது. இன்னும் சில கண்ணாடிகளில் அவரைப் பார்க்க அவருக்கே பயம் வருமளவிற்கு அவரை மிக அகோரமாய் காட்டியது.
நாய் ஏன் குரைத்துக்கொண்டே ஓடி வந்தது, என்று இப்போது அவருக்கு புரிந்தாலும், எதிரே இருக்கும் தியானக்கூடத்தில் அப்படி என்ன இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்கும் ஆசை வந்தது.
உடனே எதிரே இருந்த தியானக் கூடத்திற்குள் நுழைந்தார்.
உள்ளே நுழைந்ததும் அவர் அமைதியாவதை அவரே உணர்ந்தார்.
காரணம் அங்கே இசைத்துக்கொண்டிருந்த ஒருவித வண்டுகளின் ரீங்காரம், அங்கு பரவிக்கொண்டிருந்த புதுவிதமான சாம்பிராணி வாசனை, அங்கு இருந்த அடர்ந்த இருள் நடுவில் ஒரு பொட்டுபோல் இருந்த சிறுதீபம், தரையில் போடப்பட்டிருந்த வழவழப்பான, ஒட்டும் மிருதுவான துணியால் ஆன கம்பள விரிப்பின் மெல்லிய உரசல், மூக்கிற்குள் நுழைந்த சாம்பராணி புகை தோற்றுவித்த ஒருவித சுவை வயிற்றிலும், நாவிலும் ஊற அவரின் முயற்சியில்லாமலே அவர் அமைதியானார்.
எவ்வளவு நேரம் சென்றதென்று தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் அங்கு அமைதியாக அமர்ந்துவிட்டு வெளியேறினார்கள்.
வெளியேறும்பொழுது இந்தத் தியானக்கூடத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று தேடினார்...அதிர்ந்தார். காரணம் சின்ன எழுத்துக்களில் ‘போலி அமைதி’ என்று எழுதியிருந்தது.
அதன் அருகிலேயே ‘நிஜ அனுபவம்’ என்று அம்புக் குறியிட்ட சிறுபலகை ஒன்று உள்நோக்கி உள்ள ஒரு தியானக்கூடத்தை காட்டியது.
அந்தத் தியானக்கூடத்திற்கு இருவரும் சென்றார்கள்.
பார்க்க எளிமையாக இருந்த அந்தத் தியானக்கூடத்தில் உட்காருவதற்கு இடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
சில நிமிடங்கள் அங்கு அமர்ந்து பார்த்தவர்கள் உடனே எழுந்தார்கள்.
பகுத்தறிவாளி சொன்னார், “இங்கு அமர்ந்ததும் என் மனதின் இயக்கம் வேகமாவது போல இருக்கின்றது. எனக்குள் குழப்பங்கள் அதிகமாகின்ற மாதிரி இருக்கின்றதே!
> தியானத்தில் அமரும் பொழுது, முதலில் மனத்தின் இயக்கம் > வேகமாகுவதுபோல் தோன்றுவது இயல்பானதே.
வேண்டாம். நாம் போகலாம்'' என்றார்.
நண்பர், 'சரி'என்றுதலையாட்டஇருவரும்வெளியேவருவதற்காகத் திரும்பினார்கள். வாசற்கதவின் உள்புறமாக 'Exit' என்று எழுதப்பட வேண்டிய இடத்திற்கு அருகில் இந்த அறிவிப்பு பலகை இருந்தது.
அதில்....

ஐம்புலன்களையும்
சாந்தமாக்கும்
வெளிப்
பொருட்களால்
வந்த அமைதி,
அந்தப் பொருட்களால்
வந்த அமைதி,
நிஜ அமைதி அல்ல.
“போலி அதிர்ச்சிக்கூடம் உங்களுக்கு தந்த அதிர்ச்சி போலிதான்.
ஒவ்வொரு கண்ணாடியும் உங்களை வெகு மோசமாகக் காட்டினாலும், நீங்கள் அந்த நிமிடம்கூட நீங்களாகவே இருந்தீர்கள்.
போலி அமைதிக்கூடம் தந்த அமைதி போலிதான்.
ஐம்புலன்களையும் சாந்தமாக்கும் வெளிப்பொருட்களால் வந்த அமைதி, அந்தப் பொருட்களால் வந்த அமைதி, நிஜ அமைதி அல்ல.
'நிஜ அனுபவக்கூடம்' தந்த அமைதிதான் நிஜமானது.
உங்கள் மன இயக்கமோ, குழப்பமோ அதிகரிக்கவில்லை.
ஒரு அதிர்ச்சி, ஒரு அமைதி என்ற இரு முனைகளைத் தொட்டதால் முதல் முறையாக நீங்கள் தியானத்தில் நுழைந்தீர்கள். உங்களின் மனத்தைப் பார்த்தீர்கள். மனமென்பது ஏற்கனவே இவ்வளவு குழப்பத்தில்தான் இருக்கின்றது.
இதைத் தாண்டியும் உங்களுக்குள் உள்ள பலவற்றையும் தூர்வாரி எடுக்க உதவுவதற்காகத்தான் இந்த ஆஸ்ரமமே இருக்கிறது.
வருக! வருக! ஆனந்தம்!” என எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்து முடித்து புன்முறுவல் புரிந்த பகுத்தறிவாளி தன் நண்பனிடம், “நான் இப்போது புரிந்து கொண்டேன். இந்த இடமே நம்மை வளர்க்கும் புத்தியும், சக்தியும் பெற்றது. நன்றி!” என்று சொல்லி கைகளைக் கூப்பினார்.
சிரித்த நண்பர், “இல்லை இப்போதும் நீ இன்னும் முழுவதுமாக இந்த இடத்தை அனுபவிக்கவில்லை. ஒரு துளி அனுபவத்திற்கே இப்படிச் சொல்கிறாய்.
உனக்குள் நிஜமாகவே ரஸவாதம் நிகழ ஆரம்பித்துவிட்ட பிறகு நீ என்ன சொல்வாய் என்று எனக்கே தெரியவில்லை” என்றார்.
இதுவரை நாம் சந்தித்த அதிர்ச்சிகள் அனைத்தும் போலியே. இன்னும் சொல்லப்போனால் நம்முடைய சுகம், அமைதி, அறிவு என்று நாம் சொல்லும் அனைத்தும் போலியே.
நிஜமான அனுபவம் ஆழமானது.
அதைச் சிரத்தையோடு தேடும்போது மட்டுமே ஒருவரால் அடைய முடியும்.
இல்லாவிட்டால் வாழ்வே போலி அதிர்ச்சிக்கும், போலி அமைதிக்கும் இடையில் விளையாடப்படும் சூதாட்டமாகிவிடும்.
வாழ்வு சூதாட்டமல்ல. அது சுக ஆட்டம்.
நிஜமான அனுபவம் ஆழமானது. அதைச் சிரத்தையோடு தேடும்போது மட்டுமே ஒருவரால் அடைய முடியும்.

போலி அதிர்ச்சியிலிருந்து விடுபடுத்தும் தியானம்
இந்த ஜென் கதையைப் படிப்பதினாலேயே ஒருவருக்குள் ரஸவாதம் நிகழ ஆரம்பிக்கும். மீண்டும் ஒருமுறை இந்தக் கதையை படித்துவிட்டு தியானத்திற்குள் நுழையுங்கள்.
“அந்த மனிதரின் அதிர்ச்சிக்குக் காரணம், அவர் ஒவ்வொரு கண்ணாடியோடு தன்னை கோர்த்துப் பார்த்தது அல்ல. கண்ணாடியில் தெரிந்ததைத் 'தான்' என உள்ளூர நம்பியதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்”.
எப்படி ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு வகையோ, அப்படித்தான் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமானவர்களே.
எந்த விதமான மனிதர்களாய் இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து வாழ்வதில் எந்த பாதிப்பும் ஒருவருக்கு வந்துவிடாது.
எப்படி கண்ணாடி அதன் தரத்திற்கேற்றார்போல் ஏதேதோ விகாரமாக்கி காட்டியதோ, அதேபோல் உங்களை மற்றவர்கள் விகாரப்படுத்தி, குறைப்படுத்திக் காட்டுவதை, உங்களைப் பற்றிய கருத்துக்கள் என நீங்கள் நம்பும் போதுதான் பாதிக்கப்படுகின்றீர்கள், அதிர்ச்சி அடைகின்றீர்கள்.
உங்களைப் பற்றி போலியாக மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் இருந்து விடுபடுத்திக் கொள்ளுங்கள். நிஜ அனுபவம் நோக்கி நகர்வீர்கள்.
நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கள், வர்ணனைகள் நிஜக் கண்ணாடியில் பார்ப்பதற்குச் சமம். இந்தத் தவறுகளை மட்டும் சரி செய்ய உழையுங்கள். போலி அதிர்ச்சிகளில் இருந்து விடுபட்டு நிஜ அனுபவத்திற்குள் நுழைவீர்கள்.
போலி அமைதியில் இருந்து விடுபடுத்தும் தியானம்
உங்களை மிகவும் நேசிக்கும் நபர்கள், உறவினர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதெல்லாம் உங்களுக்கு இதமாகயிருக்கும்.
இது போலி அமைதிக் கூடத்தில் இருந்த ரீங்காரம், வாசனை, கம்பளம் போன்றது.
இந்த அமைதி, இந்த இதம் போலியானது.
நிஜ அனுபவம் நிகழ வேண்டும்.
ஆழமான இந்த உண்மையைப் புரிந்து கொண்டாலே போலி அமைதியை நிஜம் என்று நம்புவதால் வாழ்வில் வீணாகப் போக இருக்கும் காலங்களை சேமித்து விடுவீர்கள்.
எப்போதும் உங்களை இதப்படுத்தும் வார்த்தைகளையே மனம் தேடி அலையும். இந்த குணத்தாலேயே இப்படி இதப்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் மனம் ஒருவித கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
இதுவும் ஒருவிதத்தில் சுதந்திரத்தைக் குறைக்கும் செயலே.
எவ்வளவு காலம் மனத்தை சிறுபிள்ளை போலவே வைத்திருக்கப்போகின்றீர்கள்?
வெளியே இதப்படுத்தும் வார்த்தைகளைத் தேடாமல், நீங்கள் பழகும் ஒவ்வொருவரிடமும் இதப்படுத்தும் வார்த்தைகளைத் தர ஆரம்பியுங்கள்.
துவக்கத்தில் புதிதாய் இருந்தாலும், உங்களுக்குள் அந்த நிஜமான அனுபவமான ஆனந்தம் மலரும்.
நிஜ அனுபவம் மலராத வரை வாழ்வு சூதாட்டம். நீங்கள் அதில் ஒரு பகடைக் காயாக இருப்பீர்கள்.
நிஜ அனுபவம் மலர்ந்து விட்டால் வாழ்வு சுக ஆட்டம் ஆகிவிடும்.
நீங்கள் அதில் ஒரு ஜீவன் முக்தராக இருப்பீர்கள்!