KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/இங்கேயே,Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

இங்கேயே,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இதிலேயே, இப்போதே

portrait

கல்லூரி மாணவர்கள்: “ஏன் பல உறவுகள் தோல்வியடைகின்றன?”

ஜென் குரு: “ஏனென்றால் அன்பு செய்யும்போது அன்பு செய்வதில்லை”.

ஜென் குருவின் பதில் கேட்பதற்குப் புதுமையாக இருக்கலாம். ஆனால் நிஜநிலவரம் இதுதான்.

அன்பு செய்வது மட்டுமல்ல, கோபப்படுவதுகூட ஏதோ பழைய எரிச்சலை மென்று உமிழும் தருணமாகத்தான் இருக்கின்றது. கோபப்பட கிடைத்த வாய்ப்பை, பழைய கோபங்களைத் தீர்த்துக்கொள்ளும் தருணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் வரை கோபத்தைக்கூட வெற்றியடைய முடியாது. அதுகூட நம் விருப்பப்படி முழுமையாக நடக்காது.

ஒரு முறை நிருபர் என்னிடம் இப்படி கேட்டார்.

“உடல் பருமன், முழுமையற்றத் தூக்கம் இரண்டும், வளர்ந்து வரும் சமுதாயத்தில் மிகப்பெரிய புதுப்பிரச்சினையாக இருக்கின்றன. இதற்கு ஆழமான காரணம் ஏதும் இருக்கின்றதா? நாகரீக மனிதன் மட்டும் இப்படி பாதிக்கப்படுவது ஏன்?”

“ஏனென்றால் யாரும் சாப்பிடும்போது சாப்பிடுவதில்லை, தூங்கும்போது தூங்குவது இல்லை. இது தான் காரணம்” என பதிலளித்தேன். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, வாக்மென்

கேட்டுக்கொண்டே தூங்குவது, வேலை செய்ய வேண்டிய இடத்திலும், படிக்க வேண்டிய இடத்திலும் செய்ய வேண்டியதைவிட்டு வேறு ஏதாவது பகல் கனவு கண்டுகொண்டேயிருப்பது என்பதெல்லாம் நாகரீக மனிதர்களின் வாழ்வில் அவர்களையும் மீறி நுழைந்து விட்ட இடைஞ்சல்கள்.

நீங்கள் சாப்பிடும்போது உணவை மட்டும் மென்று சாப்பிடுவதில்லை. அப்போது நீங்கள் என்ன எண்ணங்களை மேல் எடுத்து வருகிறீர்களோ அவற்றையும் சேர்த்துதான் மெல்லுகின்றீர்கள். அவையும் உங்களின் பாகமாகின்றன. எனவே வேறெந்த நேரத்தையும்விட உண்ணும்போது மிகக் கவனத்தோடு இருக்க வேண்டும்.

மன உளைச்சல் இருந்தால் இயற்கையிலேயே நிறைய சாப்பிடுவீர்கள்.

மிகப் பிரபலமான ஜென் வாக்கியம் ஒன்று இப்படிச் சொல்கின்றது.

“உண்ணும் போது எண்ணாதே, எண்ணும் போது உண்ணாதே”

இதே பாதிப்புதான் T.V பார்த்துக் கொண்டே சாப்பிடும் போதும் நிகழ்கின்றது. விளைவு வயிற்றுக்குள்ளே என்ன செல்கின்றது என்றும் நமக்குத் தெரிவதில்லை. மனதிற்குள்ளும் என்ன செல்கின்றது என்றும் தெரிவதில்லை.

ஊளைச் சதையும், மன உளைச்சலும் உருவாக இதுகூட ஒரு முக்கியக் காரணமாக அமைந்து விடுகின்றது. இப்போதெல்லாம் பாருங்கள், 40 வயதைத் தாண்டிய பிறகு மன உளைச்சல், உடல் பருமன், தூக்கமின்மை என்ற மூன்றும் பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகின்றது.

இது ஒரு முக்கோணம் மாதிரி ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. மனஉளைச்சல் இருந்தால் இயற்கையிலேயே நிறைய சாப்பிடுவோம். உள்ளே உளைச்சல் இருப்பதினால், எவ்வளவு உள்ளே போகின்றது என்பதே தெரிவதில்லை. உள்ளே போட்டு நிரப்பிக்கொண்டே இருக்கின்றோம். விளைவு ஊளைச்சதை, உடல் பருமன்

சாப்பிடும் போது சாப்பிடுவதைச் செய்தாலே ஊளைச்சதை மட்டுமல்ல, மன உளைச்சலும் குறையும், சரியாகும்”.

"தூங்கும்போது தூங்குவதில்லை, என நீங்கள் சொன்னதை இன்னும் ஆழமாக விளக்கிச் சொல்ல முடியுமா?" என அந்த நிருபர் தொடர்ந்து கேட்டார்.

அதற்கு, "கண் விழித்துக்கொண்டே தூங்குவது அதிகமானால் கண்மூடிக்கொண்டே தூங்குவதின் தரம் குறைந்துவிடும்" என பதில் சொன்னோம்.

"அதென்ன கண்விழித்துக் கொண்டே தூங்குவது?" என ஆச்சரியமாகக் கேட்டார்.

"இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்".

பலமுறை உங்களின் அலுவலகத்திலிருந்து, வீட்டிற்குச் செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்து ஓட்ட ஆரம்பித்திருப்பீர்கள். கடைசியாக வீடு வந்து விட்டதென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தும் போதுதான் வீடு 'வந்துவிட்டதென்றே' தெரிய வரும். இதை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்போம்.

வீடு வரை வரும் வழியில் பல வளைவுகளில் திரும்பி இருப்பீர்கள். பல இடங்களில் ரெட் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தி, அப்புறம் எடுத்து ஸ்பீடு பிரேக்குக்காக வேகத்தைக் குறைத்து, அதிகரித்து என்று வண்டியைச் சரியாகத்தான் இயக்கி வந்திருப்பீர்கள். ஆனால் இது எல்லாமே தன்னிச்சையாக நடந்திருக்கும். உங்களின் சுய நினைவு இல்லாமலே வண்டியை ஓட்டி வந்திருப்பீர்கள்.

"அடடே நம்ம இடம் வந்து விட்டது" எனத் தெரிய வரும்வரை வேறு எதிலாவது மனம் சிக்கிக் கொண்டிருக்கும். கனவு கண்டு கொண்டிருக்கும். கண்களைத் திறந்திருந்தாலும் அங்கே அப்போதில்லாமல் எங்கோ, எதிலோ சிக்கியிருப்பதுதான் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவது. இதுதான் பகல் கனவு என பதில் சொன்னோம்.

இந்த மாதிரியான கனவுகள் எந்த அளவிற்கு அதிகரிக்கின்றனவோ அந்த அளவிற்கு இரவுத் தூக்கத்தில் கனவுகள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.

> சாப்பிடும் போது சாப்பிடுவதைச் செய்தாலே ஊளைச்சதை > மட்டுமல்ல, மன உளைச்சலும் குறையும், சரியாகும்.

பகல் கனவின் உச்சமும், இரவு தூக்கத்தின் ஆழமும் ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புடையவை. பகலில் கனவுகளைக் குறைத்தால் இரவுத் தூக்கம் ஆழமாகும். அத்தோடல்லாமல் காற்றில் கரைந்து காணாமல் போகும் வாசனையைப் போல ஒவ்வொரு நாளும் பகல் கனவில் கரைந்து காணாமல் போகும்.

அந்த நாள் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். ஏராளமான நேரமும், ஆரோக்கியமும் மிச்சமாகும்.

Nithyananda

வெற்றி
அடைந்தவர்கள்
கனவில் நேரத்தைக்
கரையவிடாமல்
காப்பாற்றியவர்கள்.
நேரத்தைப்
பொன்னாக்கியவர்கள்.

வாழ்வில் வெற்றி அடைந்தவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் 24 மணி நேரம் தான். ஆனால் வெற்றியடைந்தவர்கள் கனவில் நேரத்தைக் கரையவிடாமல் காப்பாற்றியவர்கள். நேரத்தைப் பொன்னாக்கியவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...

★ வெற்றியடைந்தவர்களெல்லாம்...

தூங்கும்போது தூங்கியவர்கள், வாழும்போது வாழ்ந்தவர்கள்.

★ ஆரோக்கியத்தைப் பெற்றவர்களெல்லாம்...

உண்ணும்போது உண்டவர்கள், எண்ணும்போது எண்ணியவர்கள்.

★ காதலில் ஜெயித்தவர்களெல்லாம்...

அன்பாயிருக்கும்போது, அன்பாகவே மாறிவிட்டவர்கள்.

இந்தத் தியான சூத்திரங்களை முழுமையாக உள்வாங்கினாலே வாழ்வு உய்வு பெற ஆரம்பித்துவிடும்.

ஆத்ம தியானம்

‘அன்பு செய்யும்போது அன்பு செய்வது எப்படி?’ என்ற கேள்விதான் இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு மீண்டும், மீண்டும் பலரின் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அது வெகு சுலபம்.

முதலில் மலரிடமிருந்து ஆரம்பியுங்கள். அழகிய மலரை ஆழமான அன்புணர்வோடு பாருங்கள். பார்க்கும் பார்வையாகவே மாறுங்கள்.

அங்கிருந்து உங்களை வேறு இடத்திற்கு மனரீதியாக அழைத்துச் செல்லும் எண்ணங்கள், கனவுகள் வரும்பட்சத்தில் அவற்றைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் மீண்டும் மலருக்கே மொத்தக் கவனத்தையும் திருப்புங்கள். மலரோடு மலராய் கரையுங்கள்.

அதே போல எச்செயலைச் செய்தாலும் அச்செயலாய் மாறிவிடுங்கள். அதிலேயே கரைந்து விடுங்கள்.

அன்பு செய்யும்போது ‘அன்பு செய்வது எப்படி என்பதிலிருந்து, தூங்கும்போது தூங்குவது எப்படி?’ என்பதுவரை இந்த ஒரு தியானமே சாத்தியமாக்கிக் காண்பிக்கும்.

வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்து அங்கேயே, அதிலேயே, அதனோடேயே வாழ ஆரம்பியுங்கள்... மற்ற எல்லா தியான சூத்திரங்களும் அனுபவங்களாக மாறிவிடும்.

Portrait