KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/துக்கத்திற்காக சந்தோஷப்படுங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

துக்கத்திற்காக சந்தோஷப்படுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சூஃபி ஞானியிடம் வியாபாரி ஒருவர், "அடிக்கடி துக்கத்தில் விழுகின்றேனே. துக்கம் வரும்போதெல்லாம் ஸ்தம்பித்துப் போகின்றேனே, இனி என்னைத் தாக்கும் துக்கம் வரும்போது என்ன செய்ய? அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்" என்று வெகு கலக்கத்தோடு கேட்டார்.

கலங்கிக் கேட்டவர் கால் நிமிடத்திற்குள் கலகலப்பாகிவிட்டார், சூஃபி ஞானியிடமிருந்த வந்த ஆச்சர்யமிகு பதிலால்!

வியாபாரியிடம் சூஃபி ஞானி சொன்னார்,

"துக்கம் வரும்போதெல்லாம் சந்தோஷப்படுங்கள். நன்றி சொல்லுங்கள்".

ஆனந்தம் உங்களுக்குள் மலர ஆரம்பித்துவிட்டது என்பதற்கான ஆதாரம்தான் துக்கம்.

முட்டாளாலும், ஞானியாலும் துக்கப்படவே முடியாது.

வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தோடு அணுகும் ஒருவரால்தான், ஒரு செயலை பலகோணத்திலிருந்தும் பார்க்க முடியும். ஆராய முடியும்.

அப்படி ஆராயும்போது தட்டப்பட்ட தூசியால் ஏற்படும் தும்மல்தான் கவலை.

“கவலைப்படுமளவிற்கு புத்தியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாலே தெரிந்துகொள்ளுங்கள், மனவலையிலிருந்து நீங்கள் வெளிவர ஆரம்பத்துவிட்டீர்கள்.

துக்கப்படுமளவிற்கு உணர்வு உருக ஆரம்பித்துவிட்டாலே உணர்ந்துகொள்ளுங்கள், தோல்விகளை ஈர்க்கும் மந்தத்தன்மையிலிருந்து நீங்கள் முற்றிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள்.

உணர்வுகள் இறுகிப்போனவர்களால் துக்கப்படக்கூட முடியாது.

Nithyananda seated

எனவேதான் சொல்கின்றேன்.

துக்கம் வந்தால் சந்தோஷப்படுங்கள்.

அதை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

காரணம், புத்திசாலிகளாக மாறமுடிவெடுத்தவர்களை வந்து பார்த்து மரியாதை செய்யும் வி.ஐ.பி.தான் துக்கம்”

இங்கு ஒரு மெய்ஞான உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்...

எப்போதெல்லாம் உங்களுக்கு துக்கம் வருகின்றதோ, அப்போதெல்லாம் உங்களுக்குள்ளிருக்கும் ஏதோவொருகாயம் குணமடைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

புத்திசாலிகளாக
மாற
முடிவெடுத்தவர்களை
வந்து பார்த்து
மரியாதை செய்யும்
வி.ஐ.பி.தான்
துக்கம்

கரடி பொம்மையை யாரோ ஒருவர் பிடுங்கி கொண்டதற்காக சிறுவனாயிருக்கும்போது துக்கப்பட்டு, அழுது தீர்த்த நீங்கள் இப்போது ஒரு கரடி பொம்மைக்காகவெல்லாம் துக்கப்படுவதில்லை, அழுவதில்லை.

ஏனென்றால், சிறுவனாயிருந்தபோது உங்களிடம் இருந்த காயம் இப்போது உங்களிடம் இல்லை. அடுத்தடுத்து உங்களுக்குக் கிடைத்த சில துக்கங்கள் உங்களின் உணர்வைப் பதப்படுத்தியிருக்கும், அந்தக் காயத்தை குணப்படுத்தியிருக்கும். அதற்குமேல் அந்த விஷயத்தில் துக்கப்படுவதற்கான உணர்வம்சமே எழாது.

ஒருவேளை, சிறுவயதிலேயே அளவுக்கு அதிகமாக செல்லங்கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவனின் வாழ்க்கையில் மேற்சொன்னது போன்றதுக்கங்களை சந்திக்காமலே சென்றிருந்தால், சிந்திக்காமலேயே அவர் வளர்ந்திருப்பார்.

இப்படி வளரும் நபரால் எதிர்காலத்தை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டுவிட முடியாது. இவருக்குதான் மூட்டை மூட்டையாக அதிர்ச்சிகள் காத்திருக்கும்.

ஏற்கெனவே துக்கப்பட்டவர்களும், துக்கங்களை சந்தித்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள். காரணம் புண்பட்டாலும் இவர்கள் புண்ணியசாலிகள் எனவே...

“துக்கங்களை நினைத்து துக்கப்படாதீர்கள். துக்கங்களை நினைத்து நன்றி சொல்லுங்கள்.”

அன்பர் ஒருவர் நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் பேசிக்கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார். “என் வாழ்வில் எனக்கு நேர்ந்த கொடுமைகளைப் போல வேறுயாருக்கும் நடக்கக்கூடாது.

என்னுடைய சிறுவயதில் பலமுறை செத்துவிடலாமா என யோசித்திருக்கின்றேன்... இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகு வாழ்ந்துதான் என்ன கிடைத்துவிடப்போகின்றது. பேசாமல் விஷம் குடித்து இறந்துவிடலாமா,’ என்றெல்லாம் பலமுறை முடிவெடுத்திருக்கின்றேன்.

தொடர்ந்து போராட்டங்களிலேயே என் வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது.

போராட்டம் இல்லாத வாழ்வு வெறும் கனவுதானா?”

அப்போது சொன்னேன்.

“ஒவ்வொரு போராட்டமும் உங்களின் உயிரோட்டத்தை ஊற்றெடுக்க வைக்கும் அருமையான காரணிகள். ஒவ்வொரு போராட்டத்தையும் சந்திக்க ஒருவரிடமிருந்து அளவில்லாத சக்தியும், புத்தியும் பொங்க வேண்டும்.

> “துக்கங்களை நினைத்து துக்கப்படாதீர்கள். > துக்கங்களை நினைத்து நன்றி சொல்லுங்கள்.”

உங்களுக்குள் உயிரோட்டத்தை பொங்கவைக்கும் போராட்டத்தைக் கண்டு பயப்படாதீர்கள். எப்படி அதிலிருந்து முழுப்பயனைப் பெறுவது என கற்றுக்கொள்ளுங்கள்.

எனவேதான் சொல்வேன், என்றுமே துக்கத்தைச் சபிக்காதீர்கள், போராட்டங்களும், துக்கங்களும் மனிதன் உருப்பட வேண்டுமென்பதற்காக இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்த ஆசான்கள்.

portrait

போராட்டம்
மிகுந்த வாழ்வு,
உயிரோட்டம்
மிகுந்த
வாழ்வாகிவிடும்.

அடுத்து நான் சொல்லப்போவதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சத்தியம் இதுதான்...

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைத் திருத்துவதுபோல, வாழ்க்கையில் மனிதர்களைத் திருத்தும் ஆசான்கள் தான் போராட்டங்களும், துக்கங்களும்.

எனவே இவற்றைக் கண்டு பயப்படுவதைத்தாண்டி, இவற்றை எப்படிப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்...

போராட்டம் மிகுந்த வாழ்வு, உயிரோட்டம் மிகுந்த வாழ்வாகிவிடும்.

இன்றிலிருந்து துக்கம் வந்ததும் ‘அச்சச்சோ வந்துவிட்டதா?’ என்று கலங்காமல், ‘ஆஹா! வந்துவிட்டதா?’ என சுறுசுறுப்பாகுங்கள். போராட்டம் உயிரோட்டமளிக்கும். துக்கம் தியானமாகும். கவலைகள் கலைந்து போகும்.

ஆரம்பியுங்கள், வாழ்வை புதுக்கோணத்தில் அணுகக் கற்றுக்கொள்வீர்கள்.

ஆத்ம தியானம்

துக்கத்தைத் தாண்டி வாழ - தியானம்

உங்களை உள்நோக்கித் திருப்பிவிடும் மாபெரும் சக்தி ஒவ்வொரு துக்கத்திற்கும் உண்டு.

உள்நோக்கி உங்களைத் திருப்பிவிடுவதனாலேயே வெளிநோக்கிய விழிப்புணர்வையும் பல மடங்குகள் அதிகரிக்கும் சக்தியும் துக்கத்திற்கு உண்டு.

உங்களின் வெளிநோக்கிய விழிப்புணர்வை பலமடங்குகள் அதிகரித்துவிடும் சக்தி ஒவ்வொரு போராட்டத்திற்கும் உண்டு.

இரண்டுமே இயற்கையாய் உங்களுக்குள் நிகழ்த்தி வைக்கப்படும் தியான அனுபவங்கள்.

துக்கம் - உள் வளர்ச்சியையும்
போராட்டம் - வெளி வளர்ச்சியையும்

நிகழ வைத்துக் கொண்டேயிருக்கின்றன.

இந்த விவரம் புரியாதவர்தான் துக்கத்தால் கவலையும், போராட்டத்தால் அதிர்ச்சியும் அடைவார்கள்.

ஆனால் இதில் இறைவன் செய்து வைத்திருக்கும் இனிமைத்துவம்தான் ரசனைக்குரியது. நீங்கள் கவலைப்பட்டாலும், கவலைப்படாவிட்டாலும் துக்கம் உங்களை உள்நோக்கி அழுத்தும். உள்நோக்கி உங்களைப் பார்த்தே தீருவீர்கள்.

கணிசமான அளவு தியானம் உங்களையும் மீறி உங்களுக்குள் நடக்கும் வகையில் இறைவன் துக்கத்தை வடிவமைத்து அனுப்புவதுதான் இரசனைக்குரியது.

அதேபோல் போராட்டம் என்ற ஒன்று வந்துவிட்டால், சோம்பேறிகூட அதிலிருந்து வெளிவருவதற்காக துள்ளி எழுந்தாகவேண்டும். நீங்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அடையாவிட்டாலும், திடீரெனச் சந்திக்க நேரிடும் போராட்டமானது பலமடங்கு விழிப்புணர்வை உங்களுக்குள் உருவாக்கி விடுகின்றது.

விழிப்புணர்வு அதிகரிப்பதால் உங்களுக்குள் உங்களின் அனுமதியையும் மீறி தியானம் நிகழும் வகையில் இறைவன் போராட்டத்தையும் வடிவமைத்து அனுப்புவது இன்னும் இரSearchனைக்குரியது.

எனவே இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

அது...

“எப்போதும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்குள் தியானமானது நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.”

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் “எனக்குள்ளேயும், 'வெளியேயும் நடப்பதெல்லாம் தியானம்தான்'', என்ற உயர்ந்த புரிந்துகொள்ளுதலை எடுத்துவந்து...

துக்கத்தை சந்தோஷத்தோடும், போராட்டத்தை உயிரோட்டத்தோடும் அணுகுங்கள். தியானம் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.

துக்கம் இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் தாண்டக்கூடிய மஹாபண்பைப் பெறுவீர்கள்.

Portrait