உடல் ஆரோக்கியமும்,
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மன ஆரோக்கியமும் பெருக

"இடுப்பை வளைக்காமல், இருக்கும் இடத்திலேயே இருந்து செய்ய தியானம் ஏதாவது இருக்கிறதா?" என இளைஞர் ஒருவர், கல்லூரிகளுக்கான நித்யானந்த ஸ்புரண தியான முகாமை நடத்திக்கொண்டிருக்கும்பொழுது கேட்டார்.
அப்போது, "ஏன் தலையைக்கூட வளைக்காமல் செய்வதற்கு ஒரு தியானம் இருக்கிறதே!" எனச் சொல்லி அவருக்குத் தந்த தியானத்தையும், அதன் சாரத்தையும் உங்களோடு இப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன்.
"ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் கலந்த காற்றை சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழவில்லை.
மூச்சிழுக்கும் காற்றுக்குள் இருக்கும் சத்துதான் மனித உயிரோட்டத்தின் மூலகாரணம்.
நான் அதை 'ஆர்கான் எனர்ஜி' என்று குறிப்பிடுகிறேன்" என வில்யம் ரிச் என்ற ஜெர்மானிய உளவியலாளர் சொல்கிறார்.
"நாம் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான்" என்ற உண்மைகூட சில வருடங்களுக்கு முன்புவரை விஞ்ஞானிகளுக்கே அது யூகமாகத்தான் இருந்தது. விஞ்ஞானிகளால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பே அதை உண்மை என மனிதன் நம்புகிறான்.
"மூச்சுக்காற்றில் உயிர்ச் சத்தாக ஒன்று இருக்கிறது" எனச் சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யூகித்திருக்கிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும்.
ஆனால் மெய்ஞானப்பூர்வமாக இதை ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள்...

மூச்சு
ஆழமாவதோடு
உங்களின் கவனம்
எனும் வீச்சும்
ஆழமானால், மன
ஆரோக்கியமும்
சேர்ந்து
அதிகமாகும்.
"மூச்சுக்காற்று என்பது
உயிர்ச்சத்தான பிராணனை
எடுத்துவரும் ஓடம் மட்டுமே.
நீ வாழ்வது மூச்சின் ஓட்டத்தால் அல்ல,
பிராணனின் ஓட்டத்தால்தான் சாத்தியமாகிறது"
என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒருவருக்குள் விழிப்புணர்வு அதிகரிக்க, ஆரம்பித்த பின், முதலில் அவரின் கவனத்திற்குள் வருவது மூச்சுக்காற்று எனும் ஓடம் மட்டுமே.
விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க சுவாசிக்கும் ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் "பிராணசக்தியை" முழுமையாய் உணர ஆரம்பிப்பீர்கள். சக்தி மயமாவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். கடைசியாக, பிரபஞ்சமயமாகவே மாறுவீர்கள்.
மூச்சின் சத்தான பிராண சக்தியை உணரும்வரை மூச்சோட்டத்திற்குள் ஒளிந்திருக்கும் ஞான ரகசியம் யாருக்கும் புரியாது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டாலே, சுவாச காலத்தையெல்லாம் தியான காலமாக்கும் கலையை கற்றுக்கொள்வீர்கள். அப்புறமென்ன இருக்குமிடத்திலிருந்தே தலையைக்கூட வளைக்காமல் தியானம் செய்யக் கற்றுக்கொள்வீர்கள்.
மூச்சை மட்டும் உள்ளே இழுத்து வெளியே விடுவது ஆழமானால், உடல் ஆரோக்கியம் அதிகமாகும். மூச்சு ஆழமாவதோடு உங்களின் கவனம் எனும் வீச்சும் ஆழமானால், மன ஆரோக்கியமும் சேர்ந்து அதிகமாகும்.
இதையெல்லாம் தாண்டி அந்த மூச்சுக்குள் இருக்கும் உயிர்ச்சத்தான பிராணனையே உணரும் அளவுக்கு நீங்கள் ஆழமாகிவிட்டால் உடல், மனம் தாண்டி உயிரும் உற்சாகமாக ஓட ஆரம்பித்துவிடும்.
புத்தர் தன்னுடைய உடலை விட்டுப்பிரியும் தருவாயில் இந்தத் தியானத்தைத்தான் "விப்பாசனா" என்ற பெயரில் உலகுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தத் தியானம் ஒன்றை மாத்திரமே செய்து ஞானம் பெற்றவர்கள் பலர். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கிறது.
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.
"மூச்சோட்டத்தைக் கவனிப்பது மிக எளிமையான, ஆனால் மிக வலிமையான தியானம்". முயற்சி செய்யுங்கள்.
ஒருமுறை வேதாந்தி ஒருவர் "பூரகம், ரேசகம் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்" எனக் கேட்டார்.
அப்போது சொன்னேன், "பூரகம், ரேசகம், கும்பகம்... இடகலை, பின்கலை, சுழுமுனை... பற்றிய கவலை வேண்டாம். வெறுமனே உள்வரும், வெளிச்செல்லும் மூச்சின்மேல் கவனம் வையுங்கள்! தியானம் நிகழும்".
பலரை ஞானியாக்கிய இந்த எளிய தியானத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து பாருங்கள். முதலில் உற்சாகமும், ஆரோக்கியமும் பெருகும். இரண்டாவது விழிப்புணர்வு பெருக ஆரம்பிக்கும்.
உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் தன்னால் பெருக ஆரம்பிக்கும்.
> மூச்சோட்டத்தைக் கவனிப்பது மிக எளிமையான, ஆனால் மிக > வலிமையான தியானம். முயற்சி செய்யுங்கள்.
தியானம்
உங்களின் விழிப்புணர்வு முழுவதையும் மூக்கின் நுனிப்பகுதிக்கு எடுத்துவாருங்கள். காற்று உள்ளே வந்து வெளியே செல்வதால் மூக்கின் நுனியில் ஏற்படும் உஷ்ண மாற்றங்களை கவனிக்க ஆரம்பியுங்கள். காற்றின் உள்ளே இருக்கும் பிராணசக்தியையும் உங்களுள் இருக்கும் அமைதியையும் உறையவைக்கும் அற்புதமான தியானமிது.
இந்த எளிய தியானத்தை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் செய்துபாருங்கள்.
முக்கிய குறிப்பு :
இந்தத் தியானத்தை செய்யும்போது மூச்சின் ஓட்டத்தை அதிகமாக்கவோ குறைக்கவோ வேண்டாம். வெறுமனே சுவாசத்தை கவனித்தால் போதுமானது. மூச்சோட்டம் இயல்பாகவும், சீராகவும் இருப்பது இந்தத் தியானத்திற்கு நல்லது.
இது மூச்சை மாற்றுவதற்கான தியானம் அல்ல. மனத்தை மாற்றுவதற்கான தியானம்.