KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தியானம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களுக்காகவே உழைக்கும் உங்களின் உடலுக்காக 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் செலவு செய்கின்றீர்கள்?

ஒரு ரோஜாச் செடியை எப்படி தினந்தோறும் பராமரித்து வளர்ப்பீர்களோ, அதேபோல், உங்களின் உடலை தினந்தோறும் பராமரித்து வளர்க்க வேண்டும்.

> தினம் இருமுறை தியானம் செய்வது, > வாரம் இரு முறை எண்ணை வைத்துக் குளிப்பது, > மாதம் இரு முறை விரதம் இருப்பது.

வருடம் இரு முறை குடலைச் சுத்தப்படுத்துவது என்பதெல்லாம் இனிமையான தவங்கள்.

அதேப்போல் உங்களால் முடிந்த அளவு காலையில் சீக்கிரமாக எழுவது;

உங்களுக்கு உணர்வுத் தடுமாற்றம் வரும்போது தியானம் செய்வது;

உங்களை தூக்கம் ஆட்கொள்ளும் போதெல்லாம் ஞானக் கருத்துகளைக் கேட்பது என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் உங்களை உயிர்பிக்கும் தவங்கள்.

சோர்வடையும் போது உறங்கச்செல்வது எனும் பழக்கத்தைத் தாண்டி சில நிமிடங்களாவது சிரித்தோ, குதித்தோ, ஆடிப்பாடியோ, உங்களை உற்சாகமாக்கி கொண்டு உறங்கச்செல்வது, அடுத்த நாளையே உற்சாகமாக்கும் உற்சாக தவம்.

இங்கு குறிப்பிட்டிற்கும் தவங்கள் மிக மிக எளிமையான, ஆனால் மிக மிக வலமையான முதல் நிலைத் தவங்கள்.

கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இந்த வார ஆத்ம தியானத்தை செய்து பாருங்கள்.

“சங்கடங்கள் சந்தோஷங்களாகும். உடம்பும் வளரும், உணர்வும் வளரும்.”

நீங்களும் செழிப்பீர்கள், உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் செழிப்பானவர்களாக மாற்றும் சக்தி பெறுவீர்கள்.