தவம் உங்களை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
செழிப்பாக்கும்
“உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்.” என்பது சாதாரண வாக்கியமல்ல, மிக ஆழமான சத்தியம்.
அதனால்தான் எங்களுடைய ஆஸ்ரமவாசிகளிடம் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு...
“ஆன்மீகவாதி என்ற பெயரில் உடல் வளையாத சோம்பேறிகளாக மாறிவிடக்கூடாது.
உங்களின் இலக்கு ‘ஞானம்’ மட்டும்தான் என்றால்கூட, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாது நின்றுவிடக் கூடாது.
சாதுவாக இருந்தாலும் சக்கரவர்த்திபோல் உற்சாகமாக இருக்கவேண்டும்.”
பலர் என்னிடம் கேட்பதுண்டு.
“ஆரோக்கியம் என்றால் என்ன?.” அப்போதெல்லாம் இந்த பதிலைத்தான் சொல்வது வழக்கம்.
“ஆரோக்கியம் என்றால்...
எதைப் போட்டாலும் ஜீரணிக்கும் வயிறு - உடல் ஆரோக்கியம். என்ன படித்தாலும் அதைப் புரிந்துகொள்ளும் மனம் - மன ஆரோக்கியம்.
எது நடந்தாலும் அதையெல்லாம் ஆனந்தமயமாய் அணுகும் உணர்வு - ஆன்ம ஆரோக்கியம்.
இந்த ஆரோக்கிய நிலையைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவது, அதை அடைவது என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருந்தாக வேண்டிய அடிப்படை க் குணம். அடிப்படை இலக்கு."

எது நடந்தாலும்
அதையெல்லாம்
ஆனந்தமயமாய்
அணுகும்
உணர்வு - ஆன்ம
ஆரோக்கியம்.
ஆரோக்கியத்தை அடைவதற்காகச் செய்வதெல்லாம்
தவம். ஆரோக்கியத்தைக் குறைப்பதற்காக
செய்வதெல்லாம் அவம்.
வானப்பிரஸ்த சன்யாசி ஒருவர் இப்படிக் கேட்டார், "எதைப் போட்டாலும் ஜீரணிக்கும் வயிறு என்றால்... என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாமா, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா?"
"அப்படியெல்லாம் அர்த்தம் கொள்ளக் கூடாது.
'என் உடம்புக்கு இது ஆகாது. இது எனக்கு அலர்ஜி. இது எனக்குப் பிடிக்காது' என்று ஒருவரைச் சொல்ல வைக்குமளவுக்கு வயிற்றின் நிலை இருத்தல் கூடாது.
எதைப் போட்டாலும் அதை ஜீரணித்துத்தள்ளும் ஆரோக்கிய நிலையில், வயிறானது இருக்க வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில் தேவைக்கு அதிகமாய் சாப்பிடாமல், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியம். தவம்.
வயிறு முட்ட கொட்டுவது, பசிக்காமலேயே புசிப்பது என்ற எல்லாமே அவம்தான்." என்று சொல்லி முடித்தோம்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
தவமில்லாப் பண்டம் நோயினிலே!
உப்பைச் சேர்த்தால் அழியக்கூடிய காய்களையும், கனிகளையும்கூட அழியாத ஊறுகாயாக புடம் போட்டு மாற்றிவிட முடியும்.
தவத்தைச் சேர்த்தால் அழியக்கூடிய உடலையும், மனத்தையும் கூட அழியாப் புகழ் பெரும் மகானின் உடலாகவும், மனதாகவும் புடம் போட்டு மாற்றிவிட முடியும்.
சிவசூத்திரத்திற்கான உரையை முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும்போது பிரம்மச்சாரி ஒருவர் என்னிடம் இப்படி கேட்டார், “தவம் என்றால் என்ன? சரியான விளக்கம் சொல்லுங்கள்.”
அப்போது சொன்ன பதில் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் என்பதனால் இங்கு குறிப்பிடுகின்றோம்,
“தவம் என்றால் உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு விடுதலையைத் தருவது.
மனிதர்களின் தரித்திரங்களையும், தந்திரங்களையும் தகர்ப்பதே தவம். வலிகூட விடுதலையே.
உடலின் எந்தப் பகுதியில் பிரச்சனையிருக்கிறது என்பதையும், குணமளிக்கும் சக்தி அங்கு பாய்ந்து அதைச் சரிசெய்து கொண்டிருக்கிறது என்பதையும் நமக்கு சொல்லும் சமிக்ஞைதான் வலி. இது புரியாதபோதுதான் வலியை வேதனை என்று முத்திரையிட்டு பூதாகாரப்படுத்திப் பார்ப்போம்.
விளைவு,
ஆரோக்கியத்தின் சமிக்ஞையான வலியே, நோயின் சமிக்ஞையான வேதனையாக மாற்றிவிடும்.
அதேப்போலத்தான், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பல தவங்களை அவங்களாக மாற்றிப் புரிந்து கொள்கின்றோம். சங்கடப்படுகின்றோம்.
ooထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထထ
> மனிதர்களின் தரித்திரங்களையும், தந்திரங்களையும் தகர்ப்பதே தவம்.
இங்கு ஒரு உண்மையைக் குறிப்பிட விரும்புகின்றேன்...
நம்மை மேலெடுத்து வருவதற்காகவும், நம்மை மேல்நிலைக்கு உயர்த்துவதற்காகவும், இறைவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைத்தான், நாம் எதிர்க்கும்போதுதான் பிரச்சனைகள் என்றும், சங்கடங்கள் என்றும் உணருகின்றோம்.
நிஜத்தில் அவை அனைத்தும் தவங்கள்.
உடலிலிருந்து முள்ளை உருவுவது போல, வாழ்விலிருந்து தரித்திரத்தையும், மூடத்தனங்களையும் உருவும் நிகழ்வுகளைத்தான் சங்கடங்கள் என்று சொல்கின்றோமேயன்றி நிஜத்தில் சங்கடங்கள் என்ற ஒன்றே இல்லை. எல்லாமே சந்தோஷங்கள்தான்.
> இதை ஆழமாய் உள்வாங்கிக்கொண்டாலே... > சங்கடங்களை சந்தோஷங்களாகக் கற்றுக்கொள்வீர்கள். > ரோகங்களை ஆரோக்கியமாக்கக் கற்றுக்கொள்வீர்கள்.
தவம் மேற்கொள்வதற்கும், கடும் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் தயங்கமாட்டீர்கள். மாறாக தயாராயிருப்பீர்கள்.