KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தியானம் ஒரு மருந்துSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தியானம் ஒரு மருந்து

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"குளிப்பதனால் ஒரு மில்லி மீட்டர் தோலைச் சுத்தப்படுத்தி விடுகின்றோம்.

அதிலுள்ள நச்சுக்களை அகற்றி விடுகின்றோம்.

ஆனால் அதற்கு கீழுள்ள, அதைவிட தடிமனான தசைகளிலும், எலும்புகளிலும் படியும் நச்சுக்களை எப்படிச் சுத்தப்படுத்துவது? சுத்தப்படுத்தாமலே விட்டால் என்ன ஆகும்?"

பதில் : இப்படிச் சுத்தப்படுத்தாமல் விடப்படும் நச்சுக்களிலிருந்து முளைக்கும் கள்ளிகள்தான், கட்டிகள் முதல் இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் வரை உள்ள எல்லாமே.

முகம் கழுவாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூச்சப்படும் நாகரீக மனிதர்கள், அகம் கழுவாமல் உலகையே வலம் வருவதற்கு கொஞ்சமும் தயங்குவதில்லை. அகம் சுத்தமாயிருப்பது ஆரோக்கியத்திற்கு அடிப்படை.

ஒருமுறை கல்லூரி மாணவர் ஒருவர் சத்சங்கம் ஒன்றில் இப்படிக் கேட்டார், "மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, தியானம் செய்வது மருந்துகளின் மருத்துவக் குணத்தை பாதிக்குமா?"

அதற்கு, "தியானமே ஒரு மருந்தாகும்" என பதில் சொன்னேன்.

"தியானம், மருந்தா?! முக்தி, சொர்க்க வாசம், ஞானமடைதல் போன்ற வாழ்வின் மிக உயர்ந்த உணர்வு நிலைகள் சம்பந்தப்பட்டதல்லவா தியானம். அது எப்படி வாழ்வின் அடிப்படை நிலைகளுக்குள் ஒன்றான மருந்தாக வரமுடியும்?"

"ம்... சரியான கேள்வி.

உதாரணத்திற்கு, நித்ய தியானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தியானத்தின் இலக்கு மனிதர்களை ஞானமடைய வைப்பதுதான் என்றாலும் நேரடியாக எல்லா மனிதர்களையும் அப்படி ஞானமடைய வைத்துவிட முடியாது. ஞானமடைவதற்கு அவர்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்ய வேண்டும். நித்ய தியானம் ஞானத்தைத் தருவதற்கு முன் ஆரோக்கியத்தைத் தருவதால்தான் பலரும் அதை விரும்பிச் செய்கின்றார்கள்."

portrait

ஞானமடைவதற்கு
உங்களின்
உடலையும்,
மனத்தையும் தயார்
செய்ய வேண்டும்.

"ஏன் ஞானமடைவதற்கு முன் உடல் ஆரோக்கியம் அவசியமானதாயிருக்கின்றது?"

"ஒரு இடியை நல்ல இடிதாங்கியால்தான் உள்வாங்க முடியும். அதைப்போல் பிரபஞ்ச சக்தியே நேரடியாக மனிதருக்குள் இறங்கும் 'ஞானமடைதல்' எனும் பெரும் நிகழ்வை உள்வாங்க உடலும், மனமும் முழு ஆரோக்கியத்தில் இருந்தால் மட்டும்தான் ஞானமடைதல் சாத்தியம். 'ஞானமடைதல் மட்டும்தான் என் இலக்கு' என ஒருவர் சொன்னால் கூட அதற்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பெறுவதுதான் முதல்படி.

எனவே தான் சொல்கிறோம்.

'தியானம்... நோயாளிகளுக்கு மருந்து,

பக்தர்களுக்கு விருந்து, சீடர்களுக்கு அமிர்தம்.'

யார் எந்த நிலையில் இருந்தாலும், அவருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்து, அவரை அடுத்த படிக்கு அழைத்து வரும் தாய் அன்புக்கு இணையானது தியானம்."

"தியானம் ஒரு பொருளாகவோ, துகள்களாகவோ இல்லாத பட்சத்தில் எப்படி அது மருந்தாக முடியும்?"

"முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஒரு மருந்து என்ன செய்கிறது?"

"நோய்களிலிருந்து விடுதலையைத் தருகின்றது"

"விடுதலை என்றால்?"

"உடல் மன வேதனைகளிலிருந்து விடுதலை, வலிகளிலிருந்து விடுதலை, சோர்வுகளிலிருந்து விடுதலை"

"அதாவது உடல்வலிகளைத் தரும் நச்சுவேதிப் பொருட்களை (Toxic chemicals, Hormones) உடலிலிருந்து எடுப்பது மருந்து.

மன வேதனைகளைத் தரும் நச்சு எண்ணங்களை (Bad thoughts) மனத்திலிருந்து எடுப்பது மருந்து.

உயிரைச் சோர்வடைய வைக்கும் நச்சு உணர்ச்சிகளை (Bad feelings) உணர்விலிருந்து எடுப்பது மருந்து"

"ஆஹா! அருமையான விளக்கம். மேலே சொல்லுங்கள்."

"நச்சு, வேதிப்பொருட்களை மட்டும் சரி செய்வதால் அது மருந்து. நச்சு எண்ணங்களையும், நச்சு உணர்வுகளையும் சரி செய்தால்தான் அது ஒளஷதம். தியானம் ஒரு ஒளஷதம்.

இப்போது புரிகிறதா தியானம் எப்படி ஒரு மருந்தாகும் என்று."

"ம்ம்... ஆழமாய் புரிகிறது"

"மருந்து உடலைச் சரிசெய்து உணர்வைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றது. தியானம் உணர்வைச் சரிசெய்து உடலைச் சரிசெய்கின்றது.

| மன வேதனைகளைத் தரும் நச்சு எண்ணங்களை | | (Bad thoughts) மனத்திலிருந்து எடுப்பது மருந்து. | | உயிரைச் சோர்வடைய வைக்கும் நச்சு உணர்ச்சிகளை | | (Bad feelings) உணர்விலிருந்து எடுப்பது மருந்து |

எனவேதான், எந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் தியானம் செய்யலாம் என்று சொல்கின்றனர். அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள் கூட உடல் இயக்கம் தேவைப்படாத அமைதித் தியானங்களை (Passive Meditation) செய்யலாம். தியானம், ஆரோக்கியம் நிகழும் வேகத்தை அதிகரிக்கின்றது.

"குறிப்பாக தியானம் மருத்துவக் குணத்தில் என்ன செய்கின்றது? எப்படி நோய்களைச் சரி செய்கின்றது?"

portrait of Nithyananda

தியானம்
உணர்வைச்
சரிசெய்து
உடலைச்
சரிசெய்கின்றது.

"குறிப்பாக தியானம் செய்வது ஒன்றே ஒன்றைத்தான்.

நோயின் ஆணிவேரை அறுக்கும் வேலையைச் செய்கின்றது. எந்த நோயாக இருந்தாலும் அதன் ஆணிவேர் ஏதோ ஒரு உறுப்பு ஒழுங்காய் இயங்காமல் போனதுதான் காரணமாக இருக்கின்றது.

நோய்க்கு காரணமான உறுப்புகள்
சுறுசுறுப்பானால் நோயிலிருந்து விடுபட்டு
விடலாம்.

தியானம் நேரடியாக உறுப்புகளைச் சுறுசுறுப்பாக்குகின்றது. இதன் மூலமாக எல்லா நோய்களிலிருந்தும் எதிர்பாராத முன்னேற்றங்களையும், நம்ப முடியாத விடுதலையையும் தருகின்றது.

நச்சு வேதிப்பொருட்களைப் போக்கி, அதனால் நமக்கு ஆரோக்கிய உணர்வை மருந்துகள் தருகின்றன. நேரடியாக ஆரோக்கிய உணர்வையே தரும் தியானத்தை எடுத்துக் கொள்ளும்போது, எந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அந்த மருந்து ஆழ்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

தியானத்தைத் தொடர்ந்து செய்யும்போது அது ஆரோக்கியத்தை பொங்கிப் பரவ வைக்கின்றது.

ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

தியானத்திற்குள் நுழையும் முன், ஒரு இலட்சம் ஆசனங்களிலிருந்து இக்கால மனிதர்களுக்கு நேரடியாக உதவும் சில ஆசனங்களில் ஒன்றான வஜ்ராசனத்தின் பலன்களைத் தெரிந்து கொள்வோம்.

வஜ்ராசனத்தின் பலன்கள்

* வாத நோய்கள் வராமல் தடுத்திடும். நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும்.

* ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

* இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

* சில நிமிடங்களில் உடலை உற்சாகமாக்கும்.

உடலில் சக்தியின் ஓட்டம் பெரும்பாலும் (Energy flow) உச்சந்தலையிலிருந்து கீழ் நோக்கி ஓடுகிறது. தியானத்தில் குறிப்பாக வஜ்ராசனத்தில் அமர்ந்தால் சக்தி மேல்நோக்கி ஓட ஆரம்பிக்கும்.

புயல் காற்று பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கி எறிவது போல, ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும் நோயின் வேரையே பிடுங்கி எறியும் சக்தி இந்தத் தியானத்திற்கு உண்டு. சரி உடலில் உள்ள நச்சுக்களைப் பிடுங்கி எறியும் ஸ்தூல சுத்தி தியானத்திற்குள் நுழைவோம்.

ஸ்தூல சுத்தி தியானம்

வண்டியை ஓவர் ஆயிலிங் செய்யும்போது, பிசின் போல படிந்திருக்கும் அழுக்கு களை எடுத்து விடுவார்கள். பூத சுத்தி தியானத்தில் உங்களின் உடல் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு ஒவ்வொரு செல்லும் ஒரே நேரத்தில் தனித்தனியாக ஓவர் ஆயிலிங் செய்யப்படும்.

பல வருடங்களாக உடலுக்குள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நச்சுக்களையும் இத்தியானம் வெகு எளிதாக எரித்து விடும். நம் மூச்சுக் காற்றுக்கும், உடலுக்குள் சுரக்கும் ஹார்மோன்கள் மற்றும் வேதிப்பொருட்களுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கின்றது.

உற்சாகமாக ஹார்மோன்கள் சுரந்து குஷியாக ஒருவர் இருக்கும்போது அவருக்குள் மூச்சோட்டம் ஆழமாகவும், நீளமாகவும் இருக்கும்.

துக்கமிகு ஹார்மோன்கள் சுரந்து மனச்சோர்வில் ஒருவர் பீடிக்கப்பட்டிருக்கும்போது, அவருக்குள் மூச்சோட்டம் மந்தமாகவும், மேலோட்டமாகவும் இருக்கும்.

மூச்சோட்டத்தை உற்சாகப்படுத்துவதனாலேயே உடலை உற்சாகமாக்கி விட முடியும் என்பதுதான் ஸ்தூல சுத்தி தியானத்தின் அடிப்படை விதி.

இந்தத் தியானத்தில் முடிந்த அளவு ஆழமாகவும், நீளமாகவும் எந்த ஒரு சீறும் இல்லாமல் வேகவேகமாக (Chaotic Breathing) மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள்.

இப்படி வேகவேகமாக விழிப்புணர்வோடு வஜ்ராசனத்தில் அமர்ந்தவாரே இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, உடலைத் தேவையான அளவு முன்னும் பின்னும் அசைத்து மூச்சை உள்ளிழுத்து 7 நிமிடங்கள் வெளியிடுவது... உடலை முழுமையாய் சுத்திகரிக்கும். சக்தியூட்டும். (Body cleansing and energising)

7 நிமிடங்கள் இந்த முதல் படியை செய்ததும், அடுத்த 5 நிமிடங்கள் கண்களை மூடி சாட்சியாக அமர்ந்திருங்கள்.

உள்ளேயும் வெளியேயும் நிகழும் மாற்றங்களை முழுமையாய் அனுமதித்து சாட்சியாக அமர்ந்திருங்கள். தியான அனுபவம் மிகவும் ஆழமாகும்.

Nithyananda