அழகாயிருக்க, ஆரோக்கியமாயிருக்க மூன்று நுட்பங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“அழகாயிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அது ஆடம்பரமில்லையா?” என்று ப்யூட்டி அண்ட் கிரேஸ் வகுப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கேட்டபோது,
“அழகாயிருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் ஆடம்பரமில்லை.
அவையிரண்டும் ஆன்மீகத்தின் அடிப்படைத் தேவைகள்” எனச் சொன்னோம்.
தன்னை மற்றவர்களிடம் அசிங்கமாகக் காட்டிக் கொள்வதென்பது மிகப்பெரிய வன்முறை. ஆன்மீகத்திற்கு எதிரானது.
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று பெரியவர்கள் சொன்னது முழுக்க முழுக்க தியானபூர்வமானது. விழிப்புணர்வுமயமானது.
இடுப்பில் கட்டியிருப்பது ஒரு துணியாக இருந்தாலும், அதைக்கூட நேர்த்தியாக அணிந்திருப்பவர்கள் ஞானிகள். எப்போதும் பொலிவோடும், பூரிப்போடும் இருக்கும் இவர்களைப் பார்ப்பதே நமக்குள்ளும் பூரிப்பை உருவாக்கும்.
சுத்தபத்தமாகவும், நேர்த்தியாகவும், பொலிவாகவும் எப்போதும் தன்னை வைத்துக் கொள்ளமுடியவில்லை என்றாலே, அவர் மன உளைச்சல் நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
இன்றைய சோம்பல்தான் நாளைய டிப்ரஷன்.
ஆரோக்கியமான மனம் படைத்த ஒருவர் இனிமையானவராகவும், அருமையானவராகவும் தன்னை வைத்துக் கொள்வதற்கு எப்போதும் தவற மாட்டார்.
“ஆரோக்கியமான உடலுக்கு
ஆரோக்கியமான மனம் தேவை.
ஆரோக்கியமான மனதிற்கு
ஆரோக்கியமான உணர்வு தேவை.”

ஆரோக்கியமான
மனம் படைத்த
ஒருவர்
இனிமையானவராகவும்,
அருமையானவராகவும்
தன்னை வைத்துக்
கொள்வதற்கு எப்போதும்
தவற மாட்டார்.
உணர்வை ஆரோக்கியமாக்குவதற்கு மூன்று முக்கிய சுதந்திரங்கள் தேவை.
இம்மூன்று சுதந்திரங்களை அடைவதென்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது.
அவை:-
- பணி சுதந்திரம்.
- மணி சுதந்திரம்.
- குண சுதந்திரம்.
1. பணி சுதந்திரம்
இரண்டுவிதமான வாழ்க்கைமுறை இருக்கிறது.
- டைட்பிட்டிங் (Tight fitting)
- லூஸ்பிட்டிங் (Loose fitting)
மனத்தின் பிடியில் இருப்பவர்கள்தான் முதல்வகையான வாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள். தினமும் வேலை செய்தாகவேண்டும். மாதத்திற்கு இத்தனை நாட்கள்தான் விடுமுறை, இவ்வளவுதான் சம்பளம் என்ற வாழ்வுமுறைதான் -'டைட்பிட்டிங்.'இது ஓட ஓட விரட்டும் வாழ்வுமுறை.
எப்படியோ மனத்தின் பிடியில் வாழப் பழகாமல், சிறுவயதிலிருந்தே மனச் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள், இரண்டாம் வகையான வாழ்வு முறையையே தேர்ந்தெடுப்பார்கள்.
சுதந்திரமுள்ள சுயதொழில், தானே முடிவுசெய்து முன்னேறும் சுதந்திரம், தன் நேரத்தை நீட்டவும், குறைக்கவும் சுதந்திரம்; தான் நேரடியாகயில்லாமல், தன் மேற்பார்வையாலேயே வேலைகள் நடக்கும் படி தொழிலை வடிவமைத்து வாழும் வாழ்வுமுறைதான் ‘லூஸ்பிட்டிங்’ எனப்படும். இதுதான் ‘பணி சுதந்திரம்’.
மனச் சுதந்திரத்திற்கு, பணிச்சுதந்திரம்தான் மிக முக்கியம்.
வாழ்வதற்குத்தான் வேலை. வேலையே வாழ்க்கை அல்ல.
பணி சுதந்திரம் பெறப் பெற, ஆரோக்கியமான உணர்வு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
2. மணி சுதந்திரம்
ஒவ்வொரு நொடியும், மனிதனின் சுதந்திரத்தைக் குடித்துக்கொண்டே இருக்கிறது.
காலம் என்னும் பாம்பின் வாயில் சிக்கிக் கொண்ட வாழ்க்கையை மீட்டெடுத்தால், சுதந்திரத்தின் இன்னொரு பெரிய பரிமாணத்தை உணர்வீர்கள்.
பசிக்காவிட்டாலும் மணியடித்தவுடன் சாப்பிட்டாக வேண்டிய வாழ்வுச் சூழல்,
தூக்கம் வராவிட்டாலும் தூங்கச் செல்லவேண்டிய இரவு, தூக்கம் கலையாவிட்டாலும் எழுந்தாக வேண்டிய காலை, படித்தாலும், படிக்காவிட்டாலும், சோர்வாகயிருந்தாலும், நொந்து போயிருந்தாலும் செய்தாகவேண்டிய வேலை.
என காலத்தின் காலடியில் மனிதவாழ்வு சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கிறது.
வாழ்வதற்குத்தான் வேலை. வேலையே வாழ்க்கை அல்ல.
'காலம் பொன்னானது' - பழைய மொழி
காலம் புண்ணானது - அனுபவ புதுமொழி.
மாதத்தில் ஓரிரு நாளாவது உங்களின் பரபரப்பான தினசரி வாழ்விலிருந்து விடுதலை பெற்று வாழ்வது உங்களின் மொத்த உணர்வையும் ஆரோக்கியமயமாக்கும்.

> மாதத்தில்
> ஓரிரு நாளாவது
> உங்களின் பரபரப்பான
> தினசரி வாழ்விலிருந்து
> விடுதலை பெற்று
> வாழ்வது உங்களின்
> மொத்த உணர்வையும்
> ஆரோக்கியமயமாக்கும்.
நாட்டுப் பகுதிக்கோ, ரிசார்ட்டுக்கோ செல்வது மணி சுதந்திரத்தைத் தந்துவிடாது. காரணம், காலமானது கடிகாரத்தில் இல்லை. அது உங்களின் மனத்திலிருக்கிறது. உடல் ஓய்வு மன ஓய்வைத் தரமுடியாது.
எனவே மனமெனும் கடிகாரத்தையே நிறுத்தும் சக்திச் சூழல்களான ஆஸ்ரமங்கள், பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள், தியான மையங்களுக்குச் செல்வது அங்கு ஓரிரு நாட்கள் எல்லா பிக்கல்பிடுங்கலிலிருந்து விடுபட்டு வாழ்வது மனிதனின் ஆரோக்கியமான உணர்வுகளை அதிகப்படுத்தும்.
அதைப்போல் ஒரு நாளில் ஓரிரு மணிநேரங்களாவது பரபரப்பாயிருக்கும்உங்களுக்குபூரணவிடுதலையளிப்பதும், தியானமயமாவதும், ஆரோக்கியமயமான உணர்வுகளை உங்களுக்குள் புதுப்பிக்கும்.
3. குண சுதந்திரம்.
நன்றாய் யோசித்துப் பாருங்கள்...ஆராய்ந்து பாருங்கள்.
இந்த நிமிடம்கூட உங்களின் ஏதோ ஒரு குணம் உங்களுக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கும்.
கோபம், கவலை, பொறாமை, சாதிக்கும் வெறி, காமம் என்று ஏதாவது ஒரு குணம் குமுறிக் கொண்டேயிருக்கும்.
தினுசு தினுசாய் உங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் இந்த எரிமலைகளை எப்போது அகற்றப் போகிறீர்கள்? எப்படி அகற்றப் போகிறீர்கள்?
உங்களின் இந்தத் தேடுதலுக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்

குமுறிக் கொண்டிருக்கும் குணங்களுக்குத் தேவை முறிவு மருந்துதானே அன்றி அந்தக் குணங்களைத் திருப்திபடுத்தும் தீனிகள் அல்ல.
குமுறும் குணங்களை முறித்து, ஆரோக்கியமான உணர்வைப் பூக்க வைக்கும் இரண்டு மருந்துகள்.
முதல் மருந்து - பக்தர்களுக்கு
இரண்டாவது மருந்து - பகுத்தறிவாளர்களுக்கு
முதல் மருந்து
ஆழ்ந்த பக்திபூர்வமான பிரார்த்தனையுணர்வை மீண்டும் மீண்டும் மேலெடுத்து வாருங்கள். எப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு குணம் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த மருந்தை உள்ளுக்குள் உருவாக்குங்கள்.
பக்திபூர்வமான பிரார்த்தனையுணர்வு உங்களுக்குள் எழும் குமுறல்களைச் சாந்தப் படுத்துவதோடு, உங்களுக்குள் ஆரோக்கியமான உணர்வுகளை எழும்பச் செய்யும்.
இரண்டாவது மருந்து
ஒருவேளை நீங்கள் பகுத்தறிவாளராக இருந்தால் உங்களுக்கு மருந்து இது.
'நன்றி நவிழ்ன்றி நவிலல்'
‘உங்களுக்குள் திரும்பிப் பார்க்கலாம்’ என்ற நினைவு வரும்போதெல்லாம் ஆழ்ந்த நன்றியுணர்வுக்குள் மூழ்குங்கள்.
யோசிக்குமளவிற்கு மூளையையும், உடலையும், வாழ்வையும் இன்னும் நமக்காக விட்டுவைத்திருக்கும் காரணத்திலிருந்து நீங்கள் அனுபவமாக்கும் ஒவ்வொரு நல்ல நிகழ்வுக்கும் காரணமாகயிருக்கும் நிறுவனங்கள், நிபுணர்கள், நண்பர்கள்வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லுங்கள்.
கோபப்படும்போது எப்படி நன்றி சொல்லமுடியும்? என யோசிக்காதீர்கள். கோபம் வருவது தெரியுமளவிற்கு நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கிற காரணத்திற்காகவே நன்றி சொல்லுங்கள். நன்றியுணர்வு மாபெரும் மருந்து. அது எல்லாவற்றையும் குணமாக்கிவிடும்.
கட்டுரையை மீண்டும் படித்து கடைபிடியுங்கள்.
ஆரோக்கியமயமாவீர்கள்!
ஆனந்தமயமாவீர்கள்!
அழகாவீர்கள்!