தூக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர்...
ரோஸி : "என் கணவர் என்னிடம், அன்பே! உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா? கோவில் எழுப்பவான்னு கேட்டார்..."
ஆனந்தி : "ம்ம்... அதற்கு நீ என்ன சொன்னாய்?"
ரோஸி : "நீங்க எத வேணும்னாலும் எழுப்புங்க. ஆனால் இப்ப தூக்கத்திலிருந்து மட்டும் எழுப்பாதீங்கன்னு" சொன்னேன்.
ரோஸிக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தூக்கத்தில் மிக, ஆழமான சுகம் இருக்கத்தான் செய்கிறது. தூக்கத்திற்காக எதை வேண்டுமானாலும் மனிதர்கள் இழக்கத் தயாராயிருக்கின்றார்கள். இந்த அளவிற்கு, மனிதரை ஆட்டிப்படைக்கும் இந்தத் தூக்கத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது? ஆழ்ந்து பார்க்கலாம்.....
QMP எனும் நினைவாற்றல் பயிற்சி முகாமில் பரபரப்பான கேள்விகளை மாணவ, மாணவியர் கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கேட்டார்..
"மாணவர்களையும், இளைஞர்களையும் குடும்பஸ்தர்களையும் பாதிக்கும் ஒரு விஷயம் தூக்கம். நாங்கள் இந்தத் தூக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சிக்கிறோம். ஆனால் முடியவில்லை.
முக்கியமாக எப்போதெல்லாம், 'இனிமேல் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்', என முடிவு செய்கிறோமோ அப்போதெல்லாம்தான் இந்தத் தூக்கம் ரொம்ப சுகமானதாக தெரிகிறது. இந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் ஒரு நல்ல வழி சொன்னீர்களென்றால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது செய்திடுவோம். அது எங்களெல்லோருக்கும் பேருதவியாக இருக்கும்."
"அட! அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லைங்க.
கஷ்டமேயில்லாமல் தூக்கத்தைக் கையாள ஒரு அருமையான தியானம் இருக்கிறது."

உங்கள் மொத்தத்
தூங்கும் முயற்சியும்
அவ்வளவு நேர
தூக்கத்தில் வரும்,
இரண்டே இரண்டு
மணி நேர ஆழ்ந்த
தூக்கத்திற்காகத்தான்
"அவ்வளவு எளிமையாக இருந்தால் அந்தத் தியானத்தை இப்போதே சொல்லிக் கொடுங்கள்."
"அதற்கு முன் தூக்கம் ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்."
"ஆமாம், அதுகூட மிக முக்கியமாக நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். சொல்லுங்கள்."
"நீங்கள் எட்டு, பத்து மணிநேரம் தூங்கினால்கூட, உங்கள் மொத்தத் தூங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும், இரண்டே இரண்டு மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்காகத்தான்"
"இரண்டு மணி நேர ஆழ்ந்தூக்கத்திற்காகவா இரவு முழுவதும் தூங்குகின்றோம்.?"
REM Sleep என்று அதைக் குறிப்படுவார்கள். அதாவது, கண்களை மூடியிருந்தாலும் உள்ளுக்குள்ளே நாம் காணும் கனவுகளில் நம் விழிகள் அசைந்து கொண்டே இருக்கும் நிலை.
இந்த நிலைதான் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது.
இது அதிகமாக ஒருவருக்குள் இருக்கும்போதுதான், அவருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும் தூங்கிய திருப்தியே கிடைப்பதில்லை.
"அப்படியா!?"
"ஆமாங்க. சாதாரணமாக கண்களை விழித்துப் பேசிக்கொண்டிருக்கும் நினைவு நிலையில் ஒருவரின் எண்ணங்களைக் கணக்கிட்டால் அது 100 TPS ஆக இருக்கும் (TPS -என்றால் Thought per second. அதாவது ஒரு நொடியில் உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள்.)
அதே மனம் அலைபாயும்போது இருநூறு, முன்னூறு என அதிகரிக்கும்.
கனவு நிலையில் TPS ஆயிரம் வரை கூட எகிறும்!
எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழையவே முடியாது. இப்படி தூக்கம் தொந்தரவுக்குள்ளாவதால் தான் காலையில் எழும்போது உடல் அசதி அதிகமாக இருக்கிறது."
"கனவுகள் கன்னாபின்னாவென்று வருவதற்கும், எண்ணங்கள் எகிறவதற்கும் என்ன காரணம்?"
"அன்றைய வாழ்வை ஒழுங்காக வாழாததுதான் காரணம்"
"வாழாதது என்றால்?"
அன்று கோபப்பட வேண்டிய அளவுக்கு ஏதோ நடந்து விடுகிறது. ஆனால் அந்தச் சூழலில் உங்களால் கோபப்பட முடியவில்லை. அதையும் மீறி உங்களை பாதித்த நபরাল அன்று நீங்கள் பயத்திற்குள்ளாகி விட்டீர்களென்றால் அன்று இரவு தூக்கம் அம்பேல்!
பயமும், கோபமும் கலந்த காட்சிகளாகவே அன்று இரவு தூக்கம் இருக்கும்.
எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அந்தச் சூழலில் வந்திருக்க வேண்டிய, வாழ்ந்திருக்க வேண்டிய கோபம் இரவு கனவில் வர முயற்சிக்கும், வாழ முயற்சிக்கும். அதேப்போல் அன்று உருவான பயமும் இரவில் ஆட்டம்போடும்.
கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய கனவில் அவை பிரதிபலிக்கும்.
விளைவு உணர்ச்சிகளின் பலிகடாவாகி தூக்கம் மாறிவிடுகிறது.
ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றே தோன்றுகிறது.
தூக்கத்தின் பிடியிலிருந்து விடுபட துக்கத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் எனச் சொல்லி முடித்தபோது "எப்படி?" எனக் கேட்டார்.
"அனுபவிக்கப்பட வாழ்வின் பகுதிகள்தான் துக்கம். அதிலிருந்து விடுபட இத்தியானம் பெரிதும் உதவும்."
ஆத்ம தியானம்
இந்தத் தியானம் தினந்தோறும் செய்யப்பட வேண்டிய தியானம். இந்தத் தியானம் வந்த நோய்களைக் கரைக்கும், வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.
தியானத்திற்குள் நுழைவோம்.
நினைவு நிலையிலிருந்து, தூக்கத்திற்குள் கனவு எனும் பாலத்தின் வழியாகத்தான் பிரயாணம் செய்கிறீர்கள்.
தூக்கத்திற்குள் அழைத்துச் செல்லும் கனவு சில நிமிடங்களில் ஓய்ந்து விட்டால், ஆழ்ந்தத் தூக்கம் சாத்தியமாகும்.
பல நேரங்களில் கனவுகள் ஓய்வதேயில்லை. எனவே தூக்கம் ஆழமாய் நிகழ்வதில்லை. தூக்கம் ஆழமாக கனவுகள் ஓய வேண்டும். கனவுகள் ஓய உணர்ச்சிகள் ஓய வேண்டும். உணர்ச்சிகள் ஓயத்தான் இந்தத் தியானம்...
இரவு தூங்கச் செல்லும் முன் உங்களின் படுக்கையறையின் கதவைச் சாத்திவிட்டு பத்து நிமிடங்களாவது உங்களுக்காக செலவு செய்யுங்கள்.
அன்றைய தினத்தில் உங்களைத் தாக்கிய கோப, மோக, பய, வெறுப்பு உணர்ச்சிகளை வெளியே கொட்ட ஆரம்பியுங்கள். திட்டுவது, உளறுவது மெத்தையைக்குத்தி கோபத்தைக் கொட்டுவது என எல்லா வழிகளிலும் அன்றைய குப்பைகளை அகற்றிவிடுங்கள். பின்னணியில் பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவது மிகுந்த பலன்களைத் தரும்.
கோபதாபங்களை வெளிக்கொட்ட ஒரு ஆள் தேவைப்பட்டாலோ வெறுப்பைத் தீர்க்க ஒருவர் தேவைப்பட்டாலோ அதற்கு அந்தத் தலையணையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அடிப்பது, உதைப்பது, பிடிப்பது என்று எல்லாவகைகளிலும் அவற்றை வெளிக்கொட்டிவிட்டால் மனம் சுத்தமாகிவிடும். இரவில் கனவாக வரவேண்டிய அவை அப்போதே தீர்ந்து போய்விடும்.
பத்து நிமிடங்கள் வெளிக்கொட்டிய பின் சில நிமிடங்களாவது பின்னணியில் ஏற்கனவே ஒலிக்கவிடப்பட்ட பக்திப் பாடலை சிரித்த முகத்தோடு கேட்டுக்கொண்டே தூங்கச் செல்லுங்கள். கனவுகள் ஓயும். தூக்கம் ஆழமாகும். தூக்கம் ஆனந்தமாகும். தூக்கம் உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.
ஆழ்ந்த தூக்கத்திற்கான தியானம்
அன்று வெளியே கொட்டுமளவிற்கு உள்ளுக்குள் எதுவும் இல்லை என்றால், இந்தத் தியானத்திற்குள் நுழையலாம்.
நன்றாய், ஓய்வாய் படுத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் மீண்டும் கரிய இருளை மட்டும் தியானம் செய்யுங்கள்.
ஒரு கீற்று வெளிச்சம்கூட புகாத ஆழ்ந்த இருளை மீண்டும் மீண்டும் கற்பனை மனத்திரைக்கு எடுத்துவாருங்கள்.
இருளையே பாருங்கள்.
இருளையே சுவாசியுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த இருளிலேயே நீங்கள் கரைவதை உணருங்கள்.
தண்ணீரில் கரையும் சர்க்கரைக் கட்டியைப்போல, மெல்ல மெல்ல அந்த இருளில் கரையுங்கள்.
ஆழ்ந்த நிம்மதி உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிப்போயிருப்பீர்கள்.
இப்படி தூக்கத்திற்குள் நுழைந்தால், அடுத்த நாள் காலையில் எழும்போது உற்சாகத்தை உணர்வீர்கள். புது சக்தியோட்டத்தை அனுபவிப்பீர்கள்.
