KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/24 மணி நேரத்தை உற்சாகமாக்கும் மூன்று நுட்பங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

24 மணி நேரத்தை உற்சாகமாக்கும் மூன்று நுட்பங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“மன ஆரோக்கியத்திற்கும், உணர்வு மேம்பாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைத் தாங்கள் தருகின்றீர்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் தந்து பேசாமல் இருப்பது ஏன்? என்று விளக்கம் தாருங்கள்.

மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவல்ல ஒரு எளிய தியானத்தைச் சொல்லுங்கள். அது ஒருநாள் முழுவதும் எங்களுக்குச் சக்தியை தருவதாக இருக்க வேண்டும்.

நான் கேட்டதில் எதுவும் தவறாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என FIMT மாணவரொருவர் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் உங்களனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.

“நல்ல கேள்வி. நல்ல ஆசை.

உடல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவத்தைத் தருவதினால்தான் மன ஆரோக்கியத்திற்கும், உணர்வு மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றேன்”.

“அப்படியா!”

“90% நோய்கள் மனரீதியானவை.

நோய்களுக்கு மூலமாக இருக்கும் மனத்தின் ஆணிவேர், ஒரு தனிநபரின் உணர்வானது எப்படியிருக்கின்றது என்பதைப் பொருத்தது.

உணர்வு மேம்பட்டால்,
மனம் தன்னால் மேம்படும்.
மனம் ஆரோக்கியமானால்,
உடல் தன்னால் ஆரோக்கியமாகும்.

இப்போது புரிகின்றதா..... மன ஆரோக்கியத்திற்கும், உணர்வு மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஏன்? எதனால் என்று!"

"அப்படியென்றால் மருந்து மாத்திரைகளே தேவையில்லை என்று சொல்கின்றீர்களா?"

"முள்ளை முள்ளால் எடுப்பது போல உடலின் சில நச்சுக்களை வெளியேற்றவும், தேவையற்றக் கிருமிகளை உடனடியாகப் போக்கவும் மருந்துகள் செய்யும் உதவி வரவேற்கத் தக்கதே.

ஆனாலும் யாரொருவர் நேரடியாக மூலக்காரணத்தைச் சரி செய்துவிட்டாரோ, அவர் தான் சந்திக்கப்போகும் 90% நோய்களால் பாதிக்கப்படாத ஆரோக்கிய நிலையைப் பெற்றுவிடுகின்றார்.

மருந்துகளின் அவசியத்தைக் கடந்து வாழும் சித்தர்களின் ஆரோக்கியத்தை அவர் தொட்டுவிடுகின்றார்.

portrait

ஆரோக்கியமான
மனிதருக்கு
4 அல்லது 6 மணி நேர
தூக்கமே
போதும் என்பதால்,
இன்றிலிருந்து
தூக்கத்தின்
நேரத்தைக் குறைக்க
ஆரம்பியுங்கள்.

ஆரோக்கியமாய் இருப்பவரை ரோகம் தீண்டாது.

எனவேதான் சொல்வேன்.

ஆரோக்கியமான மனிதருக்கு 4 அல்லது 6 மணி நேர தூக்கமே போதுமானதென்பதால், இன்றிலிருந்து தூக்கத்தின் நேரத்தைக் குறைக்க ஆரம்பியுங்கள்.

அது தூக்கத்திலிருந்தும், சோர்விலிருந்தும் உங்களை விடுவிப்பதையும், அசாத்தியமான சக்திரீதியான மாற்றங்களை உங்களுக்கு சாத்தியமாக்கிக் காண்பிப்பதையும் அனுபவமாய் உணர்வீர்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்க உழையுங்கள், செல்வம் சேர ஆரம்பிக்கும்."

ஆரோக்கியத்தால் எப்படி செல்வத்தைச் சேர்க்க முடியும்"

"ஆரோக்கியத்தை அதிகரித்துவிட்டால், எதிர்காலத்தில் எதிர்பாராத விதமாக வரப்போகும் நஷ்டங்களைத் தடுக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நோய், கவலையால் வரும் சோர்வு, அதனால் வரும் நஷ்டங்களைக் கடந்துவிடுவீர்கள்.

ஆரோக்கியத்தோடு இருந்தால் வயது அறுபது ஆனாலும், இருபது வயது இளைஞனைப்போல் உற்சாகமாய் உழைக்க முடியுமல்லவா?

இருபது வயது உற்சாகமும், அறுபது வயது அனுபவமும் சேர்ந்தால் என்ன ஆகும்? எவ்வளவு செல்வம் சேரும்?!

எனவே தான் சொல்கிறேன் ...
ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்,
அது செல்வத்தை அதிகரிக்கும்"

"ஆரோக்கியத்திற்கான சூத்திரத்தைக் கேட்டால், செல்வத்திற்கான சூத்திரத்தையே சொல்லிவிட்டீர்கள். மிகவும் நன்றி"

"உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள்.

எனவே என்னுடைய ஆஸ்ரமவாசிகளின் 24 மணி நேர உற்சாகத்திற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நான் தரும் ஒரு சிறந்த நுட்பத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்." என்று FIMT மாணவர்களோடு அன்று பகிர்ந்துகொண்ட நுட்பத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

"ஆரோக்கியத்தை அதிகரிக்க உழையுங்கள், செல்வம் சேர ஆரம்பிக்கும்."

ஆத்ம தியானம்

24 மணி நேர உற்சாகத்திற்கான நுட்பம்

இந்த மூன்று செயலை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள். குன்றாத உற்சாகமும், குறையாத ஆரோக்கிய உணர்வும் பொங்க ஆரம்பிக்கும்.

இம்மூன்று நுட்பங்கள் தரும் பலன்கள்

  1. உடல் சக்தி அதிகரிப்பு
  1. களைப்படையாத மனம்
  1. நல்ல ஜீரண சக்தி
  1. நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பு.

தொடர்ந்து இம்மூன்று நுட்பங்களைக் கடைப்பிடித்தாலே உங்களின் பெரும்பாலான உடல் தொந்தரவுகள் தொலைந்து போகும்.

உடல் அசதி உங்களுக்கே கூட வராது. மனச் சோர்வு உங்களை எட்டிப்பார்க்கக் கூட செய்யாது.

‘இவ்வளவு மகிமைகளைக் கொண்டவையா அந்த நுட்பங்கள்?! உடனே சொல்லுங்கள்! உடனே சொல்லுங்கள்...’ என உற்சாகமாகும் உங்களின் பூரிப்பு எனக்குப் புரிகிறது.

சரி. நேரடியாக நுட்பத்திற்குள் நுழைவோம்.

3. நுட்பங்கள்

1. சுவாசத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக இழுத்து விடுங்கள்.

2. தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

3. தூங்கும் நேரத்தைக் குறைத்து விடுங்கள்.

1. சுவாசத்தை ஆழமாக்குதல்

உங்களின் நினைவுக்கு வரும்போதெல்லாம் குறைந்தது 4 முறையாவது மூச்சுக்காற்றை எவ்வளவு ஆழமாக்க முடியுமோ அவ்வளவு ஆழமாக்கி மூச்சை இழுத்துவிடுங்கள்.

தொடர்ந்து மூச்சுக்காற்றை மேம்போக்காக இழுத்துவிடும் தன்மையை மாற்றி, சுவாசத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவது உங்களின் பிராணவோட்டத்தை அதிகரித்து, உயிரோட்டத்தையே அதிகரிக்கச் செய்யும்.

2. அதிக நீர் பருகுதல்

உடலின் சூடுதான் உடல் நோய்களுக்கான ஆயத்தகளம். பத்து நிமிடத்திற்கொரு முறை ஒரு வாயளவு நீரையாவது தொடர்ந்து பருகிக்கொண்டேயிருந்தால் உடல் சூடு அதிகமாகாது.

ஒரு பாட்டில் நீரை உங்களுக்கேயே வைத்துக் கொண்டிருப்பது இந்த இரண்டாவது பகுதியை வெற்றிகரமாகச் செய்ய உதவும்.

3. தூக்கத்தைக் குறைத்து ஆழமாக்குதல்

தூக்கத்தை குறைத்தல் துக்கத்தை குறைக்கும்.

அளவுக்கு அதிகமான சாப்பாடு, எப்படி உடலை மந்தமாக்கி மனத்தை மந்தமாக்குகின்றதோ, அதேப்போல் அளவுக்கு அதிகமாய் தூங்குவது மனத்தை மந்தப்படுத்தி உடலை மந்தமாக்கிடும்.

ஆரோக்கியமான மனிதனுக்கு 5 அல்லது 6 மணி நேர தூக்கமே போதுமானதென்பதால், இன்றிலிருந்து தூக்கத்தின் நேரத்தைக் குறைக்க ஆரம்பியுங்கள்

அது தூக்கத்திலிருந்தும், சோர்விலிருந்தும் உங்களை விடுவிப்பதையும், அசாத்யமான சக்தி ரீதியான மாற்றங்களை உங்களுக்கு சாத்தியமாக்கிக் காண்பிப்பதையும் அனுபவமாய் உணர்வீர்கள்.