உடலுக்குள்ளே ஆனந்த உலா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'உங்களின் காலணிகளையும், மனத்தையும் இங்கே விடவும்' என்ற வாசகத்தை படித்துவிட்டு தியான முகாமிற்குள் வந்த அன்பர் ஒருவர் இப்படிக் கேட்டார்......
> 'காலணிகளைக் கழட்டி வைப்பதுபோல, > மனத்தையும் கூட கழட்டி வைத்து விடமுடியுமா என்ன? > அவ்வளவு சுலபமா அது?'
"நீங்கள் பயணம் செய்த காரை விட்டு நினைத்த மாத்திரத்தில் எப்படி உங்களால் இறங்கிச் செல்ல முடியுமோ, அப்படியே உங்களின் உடலை விட்டு உங்களால் இறங்கிச்செல்ல முடியும்.
தியானத்தில் உயர்பவர் யாராயிருந்தாலும் அவருக்கு இது சாத்தியமே.
உடலைக் கழட்டி வைப்பது சாத்தியம் எனும்போது, மனத்தையும் கழட்டி வைப்பது எளிதில் சாத்தியமான ஒன்றுதான்."
'உடலைக் கழட்டி வைப்பதா?!' என ஆச்சரியப்பட்டு கேட்டார்.
அதற்கு, 'ஆச்சரியப்படுமளவிற்கு இதில் ஒன்றுமில்லை. உங்கள் கையில் பாதி குடித்து, பாதி ஆப்பிள் ஜூஸ் மீந்த பாட்டில் ஒன்று இருக்கின்றது. அதைத் தூக்கி எறிய மனசு வருமா? யாராவது அந்த பாட்டிலைப் பிடுங்க முயற்சித்தால்கூட சண்டையிட்டு உங்களுடனேயே வைத்துக்கொள்ளத்தான் முயற்சிப்பீர்கள்.
அதே சமயத்தில், ஒரு சொட்டு பாக்கியில்லாமல் அந்த பாட்டிலிலுள்ள எல்லா ஆப்பிள் ஜூஸையும் குடித்து விட்டீர்கள் என்றால், அதற்கப்புறம் அந்த பாட்டிலைத் தூக்கியெறிவது வெகு சுலபம்.
அதேபோல்தான் இந்த உடலின் மூலமாக அனுபவிக்க வேண்டிய உயர்ந்த அனுபவங்களை, ஒரு துளி பாக்கியில்லாமல் அனுபவித்து விட்டால், உடலைக் கழட்டி வைப்பதும் வெகு சுலபமாகிவிடும்."

சுருங்கிப்
போயிருக்கும் மனித
உணர்வு செழித்து
விரியத்
துவங்கினாலே,
மனத்தை கழட்டி
வைப்பதென்பது
மிகச் சுலபமானதாகி
விடும்.
"அப்படியா!
அது சரி, மனத்தை கழட்டி வைப்பது எப்படி? அதைச் சொல்லுங்கள்?"
"கரடி பொம்மையைக் கையில் வைத்திருக்கும் குழந்தையிடமிருந்து அந்தப் பொம்மையை எதைச் சொல்லியும் பிடுங்க முடியாது. காரணம் அந்தக் குழந்தைக்கு அந்தப் பொம்மைதான் உலகம்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், அதற்கப்புறம் அந்தப் பொம்மையைத் திரும்பிக்கூடப் பார்க்காது.
மனிதனின் உணர்வு (Consciousness) சுருங்கிப்போயிருக்கும் போது தான், மனத்தை கரடிப்பிடியாக பிடித்திருப்பான். சுருங்கிப்போயிருக்கும் மனித உணர்வு செழித்து விரியத் துவங்கினாலே, மனத்தை கழட்டி வைப்பதென்பது மிகச் சுலபமானதாகி விடும்" என்று சொல்லி முடித்தோம்.
உடலிலிருந்து கழலுவதும், மனத்திலிருந்து கழல்வதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் கலை.
இதைக் கற்றுக்கொண்டால், உங்களுக்குள்ளேயே ஆனந்த உலா வரமுடியும்.
உடலிலிருந்து கழல்வது எப்படி?
இதற்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் உடலிலிருந்து கழல முடியாமல் நாம் தவிக்கும் கணங்களை ஆராய்வது அவசியம்.
அதிகமாக இரவு உணவு எடுத்துக்கொண்டு, அடுத்த நாள் காலையில் எழ முயற்சி செய்யும்போது, எழ முடியாமல் தவிப்பது உடலிலிருந்து கழல முடியாமல் தவிப்பதற்கான ஒரு நல்ல உதாரணம்.
ஒரு சின்ன நுட்பம்...
வயிறு முட்ட உண்ணாமல், அரை வயிறு உணவு உண்டு, ஒரு டம்ளர் நீர் அருந்தி, இலேசான வயிற்றோடு உறங்கிப்பாருங்கள், அடுத்த நாள் காலையில் பூப்போல படுக்கையிலிருந்து எழுவீர்கள். துள்ளிக் குதித்து ஓடும் சுதந்திரம் அப்போது இருக்கும்.
உடலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் சுதந்திர நிலை காலை எழுவதிலிருந்து, இரவு உறங்கும் வரை ஒவ்வொரு செயலிலும் இருக்க வேண்டும்.
ரிஷி ஒருவரிடம் சுகபோகி ஒருவர் இப்படிக் கேட்டாராம், “எனக்கு வாழ்க்கை அலுத்துவிட்டது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஆனாலும் வாழ்வு அலுப்பு தட்டி விட்டது. என் உடல் சொல் பேச்சு கேட்பதில்லை.
கொஞ்சம் வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது. படுத்தால் எழுந்திருக்க முடிவதேயில்லை. சாப்பிட உட்கார்ந்தால், கட்டுப்படுத்த முடியவில்லை. உடலைத் தூக்கி நடப்பதே ஒரு சுமையாயிருக்கிறது. கஷ்டமாயிருக்கிறது. நிஜமாகவே என்னிடம் உள்ள பிரச்சினை என்ன?”
அதற்கு ரிஷி சொன்னார்........
> வயிறு முட்ட உண்ணாமல், அரை வயிறு உணவு உண்டு, ஒரு டம்ளர் > நீர் அருந்தி, இலேசான வயிற்றோடு உறங்கிப்பாருங்கள், அடுத்த > நாள் காலையில் பூப்போல படுக்கையிலிருந்து எழுவீர்கள்.
"தமஸ்"
"தமஸ் என்றால்..."
"தேவைக்கு அதிகமான தூக்கம், அதிகமான உணவு, அதிக மசாலா, போதைப் பொருட்களின் உபயோகம் போன்ற அனைத்துமே உடலின் சக்தியோட்டத்தை மந்தமாக்கும் பிசின்கள்.

வியர்வை
வரவைக்கும்
உடல் உழைப்பில்,
சேவையில் ஒரு
மணி நேரமாவது
ஈடுபடுங்கள். தமஸ்
எரிய ஆரம்பிக்கும்.
மிதமிஞ்சிய செயல்களால் உருவாகும் மந்த சக்திக்கு பெயர்தான் தமஸ். இது உங்களை (உணர்வை) உடலோடு கட்டிப்போடும் சக்தி படைத்தது."
"அப்படியென்றால் இதிலிருந்து வெளிவர என்னதான் செய்வது?"
"தமஸை அழிப்பதுதான் தீர்வு."
"எப்படி அழிப்பது?"
"தமஸிலிருந்து விடுபடும்வரை, முதல் சில நாட்களுக்கு நீங்கள் எதையெல்லாம் தேவைக்கு அதிகமாக சேர்த்துக் கொள்கிறீர்களோ, அதையெல்லாம் குறைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதாவது, அளவுக்கு அதிகமாகவோ, இல்லை தேவைக்குக் குறைவாகவோ இல்லாமல், நடுநிலையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிகமாக எடுத்துக்கொள்ளும் தன்மை மறைய மறைய இந்த உடல் மூலமாக அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கின்றது எனும் உணர்வு மறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவது, வியர்வை வரவைக்கும் உடல் உழைப்பில், சேவையில் ஒரு மணி நேரமாவது ஈடுபடுங்கள். தமஸ் எரிய ஆரம்பிக்கும். உடலுக்குள்ளே சுதந்திரம் பெருக ஆரம்பிக்கும். உடலிலேயே ஆனந்த உலா வருவது சாத்தியம்தான் என்பது புரிய வரும்" எனச் சொல்லி முடித்தார்.
மேற்சொன்ன தியான நுட்ப அனுபவத்தை ஆழமாக்க சில வாழ்வியல் கலை துணுக்குகள்...
- எப்போதும் நிமிர்ந்து அமர முயற்சி செய்யுங்கள்
- நடப்பதை அதிகப்படுத்துங்கள்
- எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்யுங்கள்.
ஒரு செயல் ஆரம்பிக்கும்போது இருக்கும் உற்சாகத்தை, அச்செயல் முடியும்வரை வைத்திருங்கள். இது உடல் முழுவதும் சக்தி பரவ உதவும். உடல் முழுவதும் சக்தி பரவினாலே, உடல் மூலமாக அனுபவித்தாக வேண்டும் எனும் வெறி கட் டுக்குள் வரும்.
இதையெல்லாம் செய்யுங்கள். உடலிலிருந்து வெகு எளிதாக கழல்வதற்கான பக்குவம் பெறுவீர்கள்.
காரிலிருந்து இறங்குவது போல இறங்குவதற்கு, உடலின் ஆரோக்கியத்தை மட்டும் அதிகப்படுத்துவது போதாது. அதற்கு மன ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்த வேண்டும். மனத்திலிருந்து சுழல்வது எப்படி? என்பது அனுபவமாக வேண்டும்.
இதற்கு நேரடியாய் உதவுவதுதான் இந்த ஆத்ம தியானம்.
ஆத்ம தியானம்
| ஜென் மாணவர் | : | "மனம் எனும் பேயிடமிருந்து விடுபடுவது எப்படி?" | | ஜென் குரு | : | "நீ பூதமாக வேண்டும்." |
மனத்திடமிருந்து நம்மைச் கழல வைப்பதற்கான எளிய சூத்திரத்தைத்தான் ஜென் குரு மிக அழகாகச் சொல்லியிருக்கின்றார்.
தமஸிடமிருந்து விடுபட மிக எளிய வழி ரஜஸிகத்தை நோக்கிச் செல்வதுதான்.
தமஸ், அதாவது மந்தம் எனும் இந்த எல்லையிலிருந்து ரஜஸ், அதாவது பரபரப்பு எனும் இன்னொரு எல்லைக்குச் செல்வது எவ்வளவோ மேல், நல்லது.
அதிகமான ஞானக் கருத்துக்களைப் படிப்பது; அறிவுசார்ந்த வேலைகள், செயல்களை அதிகரிப்பது; ஓயாமல் புதிது புதிதாய் யோசிப்பது; ஏதாவது ஒரு படைப்பாற்றலை அதிகரிப்பது.
நேரத்தை ஒரு வினாடியும் வீணாக்காமல் பொன்னாய் மதித்து, ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்ற குணங்களை வளர்ப்பது தமஸீகத்தை முற்றிலுமாய் அழித்துவிடும்.
அப்புறம் சாத்வீகத்தை, அதாவது சாந்த நிலையை ஆனந்த, ஆரோக்கிய நிலையை அடைவது வெகு எளிது.
ஒரு முக்கிய சத்தியம்
உடல் எனும் உடும்பிடமிருந்து விடுபட,"Intensity" - யும், மனம் எனும் பேயிடமிருந்து விடுபட "Intelligence"- மிக அவசியமானவை.
இவ்விரண்டையும் அடையுங்கள், நிச்சயமாய் உடலுக்குள்ளேயே ஆனந்த உலா வருவீர்கள்.
