KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஐம்புலன்களும் அற்புதமாக இயங்கSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஐம்புலன்களும் அற்புதமாக இயங்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

‘நீ இவ்வளவுதான்' என்று முடிவு செய்யப்படுமளவுக்கு சிறியவனல்ல நீ!

மனிதனின் தோல்விக்குக் காரணம், அவனைப் பற்றி அவனுடைய நலிவடைந்த வாழ்க்கைப் பகுதிகளைக் கோர்த்துக் கோர்த்து முடிவு செய்வதுதான்.

பௌதீகத்தில் ஒரு சங்கிலியின் வலிமையைக் கண்டுபிடிக்க அந்த சங்கிலி எந்த இடத்தில், எவ்வளவு இழுவிசையைத் தாங்கி, எவ்வளவு நேரத்தில் அறுந்தது என்பதை வைத்து முடிவு செய்வார்கள்.

அது சங்கிலிக்கு சரி,
மனிதனுக்கு சரியல்ல.

ஒவ்வொரு மனிதரும் அவருடைய மனம் அறுந்ததை வைத்தே அவரைப் பற்றி முடிவுக்கு வருகிறார். தோல்விகளாலும், ஏமாற்றங்களாலும், அவமானங்களாலும் மனம் இழுபறிக்குள்ளாகும் போது ஒரு கட்டத்திற்குமேல் தாங்க முடியாத நிலை வரும்போது, அவரின் மனம் அறுந்து போகிறது. அம்மனிதர் நிலைகுலைந்து போகிறார்.

இதுவரை நிகழ்வதெல்லாம் இயற்கையே.

ஆனால் அதற்கப்புறம் நிகழ்வதுதான் மோசம். இது போன்றவற்றால் அம்மனிதனின் மனம் தன்னைப் பற்றிய மிகத் தாழ்ந்த, மிகக் குறுகிய முடிவுக்கு வந்து விடுகின்றது. இதுதான் தேவையற்றது. இதுதான் தாண்டப்பட வேண்டியது எனச் சொல்கின்றேன்.

ஒரு வித்தியாசமான பிரச்சினையோடு இளைஞர் ஒருவரை பிடதி ஆஸ்மரத்திற்கு அழைத்து வந்தார்கள்.

தான் காதலித்த பெண்ணின் புகைப்படத்தைத் தவிர வேறு எதையும் அவரால் பார்க்க முடியாது. இதை selective blindness என்பார்கள்.

portrait

இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததோடல்லாமல், பெண் வீட்டில் அவருக்கு திருமணத் தேதியையும் நிச்சயித்து விட்டார்கள். இதனால் பாதிப்படைந்து தன் காதலி விஷமருந்தியதைக் கேட்டு, தானும் விஷமருந்த முயற்சித்தபோது எல்லோரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள். அப்போதிலிருந்தே அவருடைய கண்கள் குருடாகி விட்டன. ஆனால் காதலியின் புகைப்படத்தை மட்டும் இவரால் பார்க்க முடிகிறது. இதற்கு "ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா?" என்று கேட்டார்கள்.

அந்த இளைஞரிடம் தனியாய் கலந்தாலோசனை செய்தபோதுதான் அவருக்கு அவரே செய்து கொண்ட தீமை அவருக்குப் புரிய வந்தது. அந்த இளைஞர் சொன்னதிலிருந்து சில முக்கிய வரிகள், "என் காதலி இல்லாத உலகத்தை நான் பார்க்க மாட்டேன் எனச் சொல்லி தான் விஷத்தை எடுத்தேன்... ஆனால், தடுத்து விட்டார்கள்.

இப்போது நானே பார்க்க முயற்சித்தால் கூட காதலியின் முகத்தைத் தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஏன்?" எனக் கேட்டார்.

உங்களைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் நீங்கள் ஆனந்தமாயிருக்கும் போது எடுக்கும் உறுதியான முடிவுகள் மனத்தை திடமாக்குகின்றன. அதேபோல், துக்கமாக எடுக்கும் முடிவுகள் மனத்தை அறுத்து விடுகின்றன.

இதற்கு, இந்த இளைஞருக்கு நேர்ந்தது ஒரு நல்ல உதாரணம். அவருடைய துக்கத் தின் உச்சத்தில், "இனி நான் உலகத்தைப் பார்க்க மாட்டேன்" என எடுத்த முடிவு மனத்தையே அறுத்து விட்டது.

"உங்களின் ஐம்புலன்களும் இயங்குவதற்கு மனத்திலிருந்து சக்தி பாய வேண்டும். சக்தி பாயும் அளவைப் பொறுத்துதான் உங்களுடைய உறுப்புகளின் இயங்கும் தன்மையே நிர்ணயமாகிறது. மனம் அறுபடும்போது சக்தியோட்டமும் அறுபட்டு விடும்.

கூர்மையான கண்கள், சிறு சத்தத்தைக் கூட கேட்டு விடுமளவுக்கு ரொம்ப கூர்மையான காதுகள் என்பதெல்லாம், தேவையான அளவு சக்தி அந்தந்த உறுப்புகளுக்கு பாயும் வரைதான்.

‘இனி உலகத்தைப் பார்க்க மாட்டேன்’ என இளைஞர் எடுத்த முடிவு, இனி உலகத்தைப் பார்க்க முடியாது" என்ற மனக்கட்டளையாகவே மாறிவிட்டது. அதன் விளைவுதான் கண்களுக்கு சக்தி செல்வது நிற்க, அவரால் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

இதைப்போலதான் வாழ்க்கையில் மனிதனை நிலைகுலைய வைக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் ஒன்றாய்ச் சேர்ந்துதான் அவருடைய மனத்திலிருந்து பாயும் சக்தியை நிர்ணயம் செய்கின்றன.

ஒரு ஜென் ஞானியிடம், “சிலர் மட்டும் வாழ்வில் ஜெயிக்கிறார்கள். பலர் தோற்றுவிடுகிறார்களே ஏன்?” என நிருபர் ஒருவர் கேட்ட போது,

ஜென் ஞானி, “தோல்விகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் தோல்வியடைகிறான். வெற்றிகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் ஜெயிப்பவனாகிறான்” என்றார்.

நிருபர், “நீங்கள் எந்தவகை?” எனக் கேட்டார்.

ஜென் ஞானி “எந்த வகையுமல்ல. கோர்த்துப் பார்ப்பதில்லை.

“தோல்விகளை மட்டுமே கோர்த்து பார்ப்பவன் தோல்வியடைகிறான். வெற்றிகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் ஜெயிப்பவனாகிறான்”

இரண்டிலிருந்தும் பெற்ற அனுபவங்களை வைத்து நான் சந்திக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் புதிது புதிதாய் கற்று கையாள்கிறேன். எனக்கு வெற்றிகளுமில்லை, தோல்விகளுமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது அனுபவம். அவ்வளவுதான்” என்றார்.

ஆம். எதையும் சேர்த்துப் பார்க்காமலே வாழ முடியும்.

கண் குருடாகிப் போன இளைஞருக்கு இந்தத் தியானத்தைத்தான் தந்தேன், “அப்பா,

Nithyananda

எனக்கு
வெற்றிகளுமில்லை,
தோல்விகளுமில்லை.
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு புது
அனுபவம்

அடுத்த ஏழு நாளைக்கு அறையை விட்டு வெளியே வராதே, உன் காதலியின் புகைப்படத்தை முன்னால் வைத்துக் கொள், இது சம்பந்தமாக நிகழ்ந்த எந்தவொரு சம்பவத்தையும் இப்போது கோர்க்காதே. எதையும் கோர்த்துப் பார்க்காமல், அந்தப் புகைப்படத்தை மட்டும் ஆழ்ந்துப் பார்” என்றேன்.

ஆச்சர்யம்! அடுத்த மூன்று மணி நேரத்தில் அறையை விட்டு எல்லோரையும் பார்த்து கையசைத்தபடி உற்சாகத்தில் ஓடி வந்த அந்த இளைஞரை குடும்பமே ஆச்சர்யத்தோடு பார்த்தது.

நிகழ்ந்தது என்ன?

கண்கள் நோக்கி பாயும் சக்தியைத் தடுத்துக் கொண்டிருந்த மனக்கட்டளையானது, கோர்த்துப் பார்க்கும் குணம் மறையும் போதே மறைந்துள்ளது. இயல்பு நிலைக்கு மீண்டு விட்டார்.

உங்களிடம் மறைந்து போயிருக்கும் பல இயல்புகளை மீட்டுத்தரும் இந்தத் தியானம் ஒரு மனசிகிச்சை தியானம்.

ஆத்ம தியானம்

மன சிகிச்சை தியானம்

காற்றையாவது தோல்களின் மூலமாக உணரலாம். ஆனால் மனம் அதை விட லேசானது. அதை உணருவதுகூட கடினம்தான். இதில் அதற்கு சிகிச்சையளிப்பது என்பது ஓடும் மானை பிடிப்பது போலத்தான். ஆனால் தியானத்தில் அதுவும் சுலபம்தான்.

உங்களின் தலையைப் பிடித்து உலுக்கும் பிரச்சினைகளை பட்டியலிடுங்கள். அந்த இளைஞர் செய்த அதே தியானத்தைச் செய்யுங்கள். அவர் புகைப்படத்தை பார்த்ததற்கு பதில், கண்களை மூடி உங்களினுள்ளே பாருங்கள்.

இந்தத் தியானத்தைத் தொடர்ந்து செய்யச் செய்ய மனத்துக்கு சிகிச்சை நிகழ ஆரம்பிக்கும். ஐம்புலன்களும் அற்புதமாய் இயங்க ஆரம்பிக்கும்.

Sadhguru