ஆரோக்கிய வாழ்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எது ஆரோக்கியமல்ல?
"24 மணிநேர உற்சாகத்திற்குக் குறைவாய் உங்களுக்குள் வாழும் எதுவும் ஆரோக்கியமல்ல.
எங்கும் எப்போதும் எதிலும் பொங்கும் உற்சாகத்தோடு உடலையும், மனத்தையும் இயங்க வைக்கும் குதூகல உணர்வு ஆரோக்கியம்."
ஆரோக்கியத்தின் அளவீடு
"காலையில் எழுந்ததும்... படுக்கையிலிருந்து நடக்கும் உங்களின் நடை நடையாக இருக்கின்றதா? இல்லை நடனமாக இருக்கின்றதா?"
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நடை, நடையாக இருக்காது. அது நடனமாக இருக்கும்.
எழுந்ததும் துள்ளியோடத் தயாராயிருக்கும் மான் குட்டியைப் போல உங்களின் உடலும், மனமும் குதூகலத்தோடு எழுந்தால் உங்களுக்குள் ஆரோக்கியம் மலர்ந்துவிட்டது என்று பொருள்.
அப்படியில்லை என்றால் ஆழ்ந்த கவனத்தோடு மேற்கொண்டு படியுங்கள். படிப்படியாக பதில்கள் படிக்கட்டுகளில் காத்துக்கொண்டிருக்கின்றன."
ஆரோக்கிய வாழ்வு
எப்போதும் பார்ப்பதற்கு பளிச்சிடும் கண்களோடும், உற்சாகம் பொங்கும் பேச்சோடும் வாழ்ந்து கொண்டிருந்த ஜென் ஞானியிடம் மருத்துவர் ஒருவர் கேட்டார்...
"எப்படி நீங்கள் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள்?"
அதற்கு மிக அழகாய் ஞானி பதிலளித்தார்...

'பசிக்கும்போது
மட்டும் புசியுங்கள்.
தூக்கம்
வரும்போது
மட்டும்
தூங்குங்கள்.''
ஏனென்றால்.......
"பசிக்கும் போது சாப்பிடுகின்றேன். தூக்கம் வரும்போது தூங்குகின்றேன்."
ஞானியின் பதிலால் ஆச்சரியமடைந்த மருத்துவர், "இவ்வளவு எளிய காரியமா அவ்வளவு பெரிய ஆரோக்கியத்தைத் தந்தது?" என்று கேட்டார்.
ஞானி, "எல்லா பெரிய பெரிய சத்தியங்களும் எப்போதும் எளிமையானவை.
All great truths are always simple.
வேண்டுமானால் இன்றிலிருந்து வாழ்ந்து பாருங்கள். 'பசிக்கும்போது மட்டும் புசியுங்கள். தூக்கம் வரும்போது மட்டும் தூங்குங்கள்.''
ஆரோக்கியம் பொங்குவதோடல்லாமல் ஞானம் நோக்கியும் முன்னேற ஆரம்பிப்பீர்கள்'' என்றார்.
ஆரோக்கியம் என்பது மிகவும் அடிப்படையானது. அதாவது நீங்கள் ஞானியாக விரும்பினாலும் சரி.. நல்லாயிருக்க விரும்பினாலும் சரி, இல்லை நல்ல குடும்பஸ்தராக இருக்க விரும்பினாலும் சரி, இதற்கு அடிப்படையான விஷயம் ஆரோக்கியம்.
ஆரோக்கிய உணர்வு
பக்தர் ஒருவர் தன்னுடைய வெகுநாள் சந்தேகத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.....
"காட்டு இலாக்கா அதிகாரியின் வாகன ஓட்டுனராக பத்து ஆண்டுகள் பணி செய்து கொண்டிருந்த காலம் அது.
அந்தக் காற்றின் அடர்ந்த பகுதிக்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சித்தரோடு பழகும் பாக்கியம் கிடைத்தது. வாரத்தில் ஒரு முறையாவது அவரைச் சந்தித்து விடுவேன். என்னுடைய எல்லா குடும்பப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவார். ஒரு நண்பர் போல பழகினாலும், தாயின் கருணையோடு நான் அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் வெகுநேரம் என்னோடு பேசுவார். என்னுடைய நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார்.
மேலும், மேலும் ஞானம் நோக்கிச் செல்வதற்கு எனக்கு பல தியான நுட்பங்களை கற்றுத்தருவார்.
பிறப்பின் இரகசியத்திலிருந்து, பிரபஞ்சத்தின் இரகசியம் வரை அவர் பேசும் கருத்துக்கள் என்னை பிரமிக்க வைக்கும்.
அவர் ஞானி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் என்னை மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கின்றது."
"என்ன சந்தேகம்? சொல்லுங்கள்."
"அவருடைய முதுகில் ஒரு பெரிய கட்டி வந்தது.
> பிறப்பின் இரகசியத்திலிருந்து, பிரபஞ்சத்தின் இரகசியம் வரை > அவர் பேசும் கருத்துக்கள் என்னை பிரமிக்க வைக்கும்.
அவ்வளவு பெரிய கட்டியால் சிறிதும் பாதிப்பில்லாமல் அவர் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார். எனக்குதான் அதைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
நகரத்திற்குள் வராமலே இருந்தவரை மிகவும் வற்புறுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ஆராய்ந்த மருத்துவர்கள் சொன்ன செய்தி என் இதயத்தை கிழித்து விட்டது...
மருத்துவர்கள்... ‘இது மிகவும் முற்றிய கேன்சர் கட்டி. எங்களைப் பொருத்தளவிற்கு ஆறு மாதத்திற்கு முன்பே இவர் இறந்திருக்க வேண்டும். இனி இவர் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் அதிசயம்தான்’ என்றார்கள்.
கண்ணீரோடு அவரிடம் மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னேன்.
இதைக் கேட்டு சிறிதும் கலங்காமல், ‘அப்படியா.... சொன்னார்கள்?’ என்று கேட்டவர். ‘கவலைப்படாதே! இன்னும் வந்த வேலை முடியவில்லை. அதுவரை எதுவும் நடக்காது’ என்றார்.
இந்த வரிகளைக் கேட்டு தெம்படைந்தேன்.
மேலும் அவரிடம் கேட்டேன், ‘மருத்துவர்கள், இந்த கட்டியின் வலி ரொம்ப கொடுமையாயிருக்கும் என்று சொன்னார்களே!... உங்களுக்கு வலிக்கவில்லையா?’ என்று கேட்டேன்.
அதற்கு, ‘எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?’ என்று பதில் கேள்வி கேட்டுச் சிரித்தார்.
மேற்கொண்டு அவரும் எதுவும் பேசவில்லை. எனக்கு கஷ்டமாயிருந்ததால் நானும் எதுவும் கேட்கவில்லை.
நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள் சென்றபோது என்னிடம் சொன்னார்.... 'பூமிக்கு நான் வந்த காரணம் முடிந்தது. போக வேண்டிய நேரம் வந்துவிட்டது,' என்றார்.
"இரண்டு நாள் கழித்து அவரைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் இல்லை. எவ்வளவோ தேடியும் அந்தக் காட்டின் எந்தப் பகுதியிலும் அதற்கப்புறம் அவரை நான் பார்க்கவில்லை.
இதில் எனக்கு மூன்று சந்தேகங்கள் இருக்கின்றது. எனக்கு விளக்கம் தருவீர்களா?"
"சொல்லுங்கள்"
முதல் சந்தேகம், "அவரின் உடல் என்ன ஆனது?"
இரண்டாவது, "என்னைக் குணப்படுத்திய அவருக்கு ஏன் கேன்சர் வந்தது?
மூன்றாவது, ஆறு மாதத்திற்கு முன்பே இறந்திருக்க வேண்டிய அளவுக்கு முற்றி இருந்த கேன்சர் கட்டியின் வலி அவரைப் பாதிக்கவே இல்லை? கடைசிவரை அவரைப் பார்க்கும் வரை அவர் ஆரோக்கியமாய் இருக்கும் மனிதரைப் போல் நிம்மதியாய் இருந்ததோடல்லாமல் அவர் ஆனந்தமாகவே இருந்தது எப்படி?" என்று என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்ன பதில்தான் உங்களுக்கான ஆத்ம தியானம். இந்த பதில் உங்கள் வாழ்க்கைக்கு நேரடியாக உதவும்.

ஆத்ம தியானம்
காட்டிலாக்கா ஓட்டுனரின் மூன்று சந்தேகங்களுக்கு நான் அளித்த பதிலின் சுருக்கம்..
மூன்றாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிடுகின்றேன்.
"அவருக்குள் கேன்சரின் வேதனை துளியும் இருக்க முடியாது. காரணம் அவர் ஒரு ஞானி.
ஞானமடைந்த கணத்திலிருந்து உடல், மனம் கடந்த உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்வதினால் உடலோ, மனமோ அவர்களை உறுத்தாது. வருத்தாது.
இன்றிலிருந்து இந்தத் தியானத்தை உடலும், மனமும் எப்போதெல்லாம் தொந்தரவுக்குள்ளாகின்றதோ... அப்போதெல்லாம் செய்யுங்கள். உடனே நோயுற்ற, நோயற்ற நிலையைத் தாண்டிய, ஆரோக்கிய உணர்வு உடல் முழுவதும் பரவுவதைப் பார்ப்பீர்கள்.
எந்த ஒரு ஆரோக்கியக் குறைபாடு நிகழும்போதும், "அட! என் உடலுக்குள் நான் இருக்கும்போது.... என்னை மீறி என்னை என்ன செய்ய முடியும்?
என்னுடைய ஆனந்தத்தை இந்த கேன்சர் கட்டி என்ன செய்துவிட முடியும்?" என்ற ரமணரின் உணர்வுப் பெருக்குக்குள் நுழையுங்கள். உங்களுக்குள்ளிருந்து ஆரோக்கிய உணர்வு பொங்கிப் பரவுவதை உணர்வீர்கள். அந்த உணர்வு மீதி வேலைகளைச் செய்துவிடும்.
ஆரோக்கியம் அடைய நீங்கள் உழைத்தால்கூட போதும். அது ஞானத்தை உங்களை நோக்கி அழைத்து வந்துவிடும்.
ஆரோக்கிய உணர்வை உங்களுக்குள் வெவ்வேறு வழிகளில் பொங்க வைக்கும் யுக்திகளைத்தான் யோகம், யாகம், தியானம் என்றழைக்கிறோம்.
ஞானமடைவதற்கான முதல்படி ஆரோக்கியம் நன்றாய் வாழ்வதற்கான மூலதனம் ஆரோக்கியம்
எனவே நீங்கள் யாராயிருந்தாலும் ஆரோக்கியத்தை அடைய உழையுங்கள்.
இந்தப் பதிலை உங்களுக்குள் அனுபவமாக்கினால் மற்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே உங்களுக்குள் அனுபவம் ஆகிவிடும்.
அது உங்களுக்குத் தேவையான மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும்.
