KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/பொங்கும் சுக உணர்வுSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

பொங்கும் சுக உணர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியான முகாம்களில், “ஆரோக்கியம் என்றால் என்ன?'' என்று நான் கேட்கும் போது,

“ஆரோக்கியம் என்றால், நோய்களே இல்லாத நிலை என பலர் பதில் சொல்கின்றார்கள்''. “நோய்களே இல்லாத நிலை ஆரோக்கியமானநிலை'' என்ற முடிவுக்கு மனிதர்கள் வந்ததுதான் ஆரோக்கியத்தை எட்டாக் கனியாக மாற்றிவிட்டது.

ஆழ்ந்து ஆராய்ந்தோமென்றால், இதுதான் ஆரோக்கியத்திற்கு எதிரான கருத்து. “பணக்காரர் யார்?'' என்று கேட்டால்,

“கடன்களே இல்லாதவர் பணக்காரர்'' என்று யாராவது பதில் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். யோசித்துப் பாருங்கள்.

அதேபோல்தான், “நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கிய நிலை'', என முடிவு செய்துகொண்டு, மனித குலம் அதை அடைய முயற்சிக்கிறது. இதனால் சரியான தீர்வைத் தர முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு முறை மருத்துவர் ஒருவர், “நோய்களே இல்லாத நிலையை உலகில் உருவாக்கத்தானே உலகின் எல்லா மருத்துவத் துறைகளும் உழைக்கின்றன. ஆனால் ஆரோக்கியம் பற்றிய உங்களின் கருத்தானது முற்றிலும் புதுமையானதாக இருக்கின்றதே. இதைச் சற்று விளக்கிச் சொல்லுங்கள்?'' என என்னிடம் கேட்டபோது,

“டாக்டர் என்னுடைய இந்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்”

“ம்.....”

“ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரை பணக்காரர் என்று சொல்லிவிடமுடியுமா?”

“ம்ம் ம்ம்....... முடியாது”

Nithyananda portrait

“இன்னொரு விஷயம். கடன்களே இல்லாத பணக்காரர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். பணக்காரர் தொழிலிரீதியாக வாங்கி வைத்திருக்கும் கடன்களைக் காட்டி, அவரை பணக்காரர் இல்லை, என்று சொல்லிவிட முடியுமா?”

“ம்ம்ஹூம் ..... முடியாது.”

“பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல்......?”

“ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல்......?”

ஆரோக்கியத்திற்கு அளவீடாக, நோய்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யவே முடியாது. ஆரோக்கியம் என்பது ரம்மியமான அக உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.

ஆரோக்கியம்
என்பது
ரம்மியமான
அக உணர்வு
சம்பந்தப்பட்டது

ஜென் கூற்று ஒன்று சொல்கிறது,

“எப்போதும் இனிமையான உணர்வாக உள்ளுக்குள்ளிலிருந்து பொங்கிக் கொண்டேயிருப்பது ஆரோக்கியம்”

“அப்புறம் எதை வைத்து முடிவு செய்வது?”

“அதற்கு முதலில், ஆரோக்கியம் என்றால் என்னவென்று “மருத்துவ சாத்திரம்” எழுதிய மகான்கள் சொல்லியிருக்கும் ஆழமான உண்மைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது” எனச் சொன்னேன்.

குழந்தைகளைப் பாருங்கள்.

எவ்வளவு உற்சாகமாய் இருக்கிறார்கள்.

குழந்தை, ஞானி ஆகிய இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்று சாட்சி சொல்லும்.

ஒருவரிடமிருந்து எப்போதும் பொங்கும் இனிமையான சுக உணர்வு, என்று மங்க ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் குன்றத் துவங்குகிறது என்று அர்த்தம்.

ஆத்ம தியானம்

ஆரோக்கியத்தை மீண்டும் பெற ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் வேறொன்றுமில்லை, இழந்த ஆரோக்கிய உணர்வை மீண்டும் பொங்க வைத்தால் போதும்.

பணக்காரராயிருந்தும்கூட கஞ்சனாய் இருக்க முடியும். பணத்தின் எண்ணிக்கையால் மட்டும் பணக்காரராகிவிடமுடியாது. நிஜமான பணக்காரத்துவம் ஒருவரிடமிருக்கும் தாராளத்தன்மையைப் பொருத்தது.

நிஜமான ஆரோக்கியம் என்பது உங்களின் உடலுக்குள் நிகழும் சக்தி புழக்கத்தைப் பொறுத்தது.

சக்தி புழக்கம் நோய். சக்தி புழக்கம் ஆரோக்கியம்,

தியானத்தின் மிக முக்கியமான செயல் நாம் இழந்துவிட்ட சுக உணர்வையும், சக்தியையும் மீட்டுத் தருவதே. இதன் கிளைப்பலனாக நோய் குணமாகிறது.

நோய் திடீரென வராது.

பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவுதான் நோயாக வெளிப்படும்.

குன்றிப்போன சுகஉணர்வே நோயாக வெளிப்படும்.

சிறுகாய்ச்சலுக்கும் படுத்துக்கொள்பவர்களுண்டு. பெரிய வலியால் கூட பெரிதாய் பாதிக்கப்படாமல் நிம்மதியாயிருப்பவர்களும் உண்டு.

அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன்.

ஆரோக்கியமானவரை பெரிய வலிகூட ஒன்றும் செய்யாது.

ஆரோக்கியமற்றவரை சிறிய காய்ச்சல்கூட உலுக்கிவிடும்.

நிஜமான ஆரோக்கியத்தை தொடர் தியானத்தின் மூலம் பெற்றவருக்குள் உற்சாகம் பொங்க ஆரம்பிக்கும். உற்சாகம் பொங்கப் பொங்க, உடலிலுள்ள நச்சுப் பொருட்களெல்லாம் வெளியேறி, நோய் மங்க ஆரம்பிக்கும்.

நோய்கள் மறைந்து ஆனந்தம் பிறக்கும்.

ஆரோக்கியத்தின் அடிப்படையை ஆழமாய் புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையான ஆரோக்கியம் பெற்ற ஒருவரை, உடலின் இயற்கைச் சுற்று மாற்றங்களைத்தாண்டி வேறு எந்த நோய்களும் அண்டாது.

Portrait of Nithyananda