KAILASA Library/அவசிய அறிவியல்/உங்கள் ஆயுட்காலம் 300 வருடங்கள்!Sign in
அவசிய அறிவியல்

உங்கள் ஆயுட்காலம் 300 வருடங்கள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஓவியம், நாட்டியம் என்பதெல்லாம் ஒரு கலை.

அதேபோல் வாழ்வும் ஒரு கலை.

பத்து வருடமாக நீங்கள் ஒரு ஓவியராக இருக்கின்றீர்கள் என்றால், வருடம் ஆக ஆக உங்களுடைய திறன் அதிகமாகிக் கொண்டே போகும்.

வருடம் ஆக ஆக ஓவியத்தின் அழகும், தரமும் அதிகம் ஆகும்தானே?

அதேபோல், நாளாக நாளாக, நம்முடைய
உடலும் அதிகத் திறன் உடையதாகவும்,
ஆரோக்கியமுடையதாகவும், அழகு
உடையதாகவும்தானே மாறவேண்டும். ஆனால்
அப்படி நடப்பதில்லையே?

அதிக ஆனந்தம் பொங்குவதாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன
உளைச்சல், மன அழுத்தம் என்று ஆனந்தம்
குன்றியதாகவே மாறுகிறதே ஏன்?

மேலிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் தீர்வளிக்கும் ஒரு அருமையான சம்பவம் இது.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ...

பரிவராஜகமாக திபெத் சென்றிருந்த போது, திபெத் எல்லையில் இருக்கும் பள்ளத்தாக்கு ஒன்றின் வழியே செல்ல நேரிட்டது.

நாளாக நாளாக,
நம்முடைய
உடலும்
அதிகத் திறன்
உடையதாக மாற
வேண்டும்.
ஆனால் ஆனந்தம்
குன்றுவதாக
மாறுவதேன்?

அங்கே அந்தக்காலத்து லாமாக்கள், பாரம்பரியமான, புராதனமான புத்த சன்யாசிகள் வாழ்கின்ற இரண்டு, மூன்று கிராமங்கள் அங்கு உள்ளன.

நீண்ட நாட்களாக உயிருடன் இருக்கும் சன்யாசிகள் பலர் அங்கு இருக்கிறார்கள்!

அவர்களை நேரிலேயே சென்று பார்க்க வேண்டும் என்று நடந்தே சென்று கொண்டிருந்தேன்.

அந்தக் கிராமத்திலுள்ள ஒரு பெரிய வயலில், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு சன்யாசி, அங்கிருக்கும் காட்டு எருதுகளை வைத்து ஏர் உழுது கொண்டிருந்தார்.

லாமாக்களின் பேசும் மொழி 'பாலி', சமஸ்கிருதத்திலிருந்து சென்ற மொழிதான்.

எனக்குக் தெரிந்திருந்த சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரிடம் பேசினேன்.

"ஐயா! உங்களது ஊரில் வயதானவர்கள் நிறைய
பேர் இருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன்!
உங்களுக்குத் தெரிந்து இப்போது அப்படி
யாராவது இருந்தால் சொல்லுங்களேன்?" என்று
கேட்டேன்.

அதற்கு அவர், "பக்கத்திலுள்ள ஒரு குடிசையில் இருக்கிறார்," என்றார். அவரும் தோட்டத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

நீண்ட
நாட்களாக
உயிருடன்
இருக்கும்
சன்யாசிகள்
அங்கு
நிறையபேர்
இருக்கிறார்கள்!

"எப்படி இவ்வளவு நாள் உயிருடன் இருக்கின்றீர்கள்? உங்களுடைய அனுபவங்களில் ஏதாவது சொல்லுங்களேன்!" என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே, "அவர் என் நண்பர்தான். எனக்கு நடுத்தர வயது. 136 வயதுதான் ஆகிறது," என்றார்.

கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சுபாவத்தினாலேயே அவர்கள் ஒரு மனிதருக்கு 300 ஆண்டுகள் ஆயுட்காலம் என்று நம்புகின்றார்கள். எப்படி நாம் மனித வாழ்வு 100 வயது வரை சாத்தியம் என்று நம்புகின்றோமோ, அதேபோல், அவர்களும் தங்களுடைய ஆயுட்காலம் 300 ஆண்டுகள் என்று தீர்க்கமாக நம்புகின்றார்கள்.

அவர்களுடைய கல்லறைகளைப் சென்று பார்த்தேன். அதில் அவர்களின் ஆயுட்காலம் பொறிக்கப்பட்டிருந்தது. மிகவும் சாதாரணமாக, '280 வருடம், 290 வருடம் வரையிலும் வாழ்ந்திருக்கிறார்கள்' என்பதற்குப் பல சாட்சிகள் அங்கு இருந்ததையும் பார்த்தேன்.

'நம்முடைய
உடலையும், அதன்
இயக்கத்தையும்
தொந்தரவு
செய்யாமல் இருக்க
அனுமதித்தோமானால்,
300 ஆண்டுகளுக்கு
அது தன்னைத்தானே
புதுப்பித்துக்
கொள்ளும்
சக்தி உடையது'

இன்றைய விஞ்ஞானிகள், “நம்முடைய உடலையும், அதன் இயக்கத்தையும் தொந்தரவு செய்யாமல் இருக்க அனுமதித்தோமானால், 300 ஆண்டுகளுக்கு அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உடையது,” என்று சொல்கின்றார்கள்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டி மூலமாக வேறு நான்கு பல்கலைக் கழகங்களின் குழுவினர் அங்குச் சென்று, லாமாக்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றியும், ஆயுட்காலத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள்.

ஆராய்ச்சியின் முடிவில் அவர்களாலேயே,
லாமாக்கள் 300 வருடங்கள் வாழ்வதைப் பொய்
என்று சொல்ல முடியவில்லை.

அங்குள்ள ஒவ்வொருவரும், 150, 160, 180 வயது என்று சர்வ சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர், 180 வயதில் இறந்ததை ‘அகால மரணமடைந்தார்’ என்று சொன்னார்கள். கேட்கவே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

இதையெல்லாம் பார்த்து அவர்களின் வாழ்வைப் பற்றி, வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இன்னும் எனக்கு ஆர்வம் அதிகமானது. அங்கேயே தங்கி, அவர்களின் அபூர்வ வாழ்வு, அவர்களின் பிறப்பு, இறப்பு பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்ய ஆரம்பித்தேன்.

அவர்கள் ‘மனிதர்களுக்கு 300 வயது’ என்று நம்புகின்றார்கள். அவர்கள், தங்கள் பெற்றோரிடமிருந்து இந்த உண்மையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து, “ஒருவரின் உடலும், மனமும், அவர்கள் வாழ்வை எப்படி ஏற்றுக் கொண்டார்களோ, அதற்கேற்றவாறுதான் வடிவமைக்கப் படுகின்றது,” என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.