உங்கள் ஆயுட்காலத்தையே மாற்றலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஸாமாக்கள் தங்களுடைய வாழ்வில் எதிர்பாரவிதமாக நிகழ்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
தங்கள் வாழ்வு முன்னூறு வருடம் என்றால், அதற்குமுன் அவர்கள் தங்களை சுருக்கிக் கொள்வதில்லை.
ஆனால், நாம் ஐம்பது வயது ஆனதுடனேயே வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கின்றோம்? மனரீதியாக, வாழ்வே முடிந்துவிட்டது போன்று பார்க்கத்துவங்குகிறோம்.
இதைத்தான் நாம், மனோ மூப்பு ‘Mental Ageing’ என்றழைக்கிறோம்.
இந்த மன அமைப்பை மாற்றினால், உங்கள் ஆயுட்காலத்தையே மாற்றலாம்.
300 வயது வரை வாழ வேண்டிய வாழ்வு, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, 200, 100 வருடங்களாக மாறி, அது மீண்டும் குறைந்து, இன்று 80... 70... 60.. என்று குறைந்துகொண்டே செல்கிறது. இப்படிச் செல்வதைத்தான் ‘வாழ்வே நோயுற்று இருக்கின்றது’ எனும் பிரயோகம் மூலமாக விளக்க முயற்சி செய்கிறேன்.
Your very life itself is diseased.
இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் 70... 60... 40... 20... என்று மனித இனமே அழிந்துபோய்விடும்.
உங்களின் வாரிசுகள் தங்குவதற்குப் பூமி இருக்கும். ஆனால் வாரிசுகள் இருக்க மாட்டார்கள்.
அதனால் வாழ்வைக் குணப்படுத்துவது, போர்க்கால அவசரத்தோடு நடத்தப்பட வேண்டிய ஒன்று.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் உடலை நம் மனம்தான் வடிவமைக்கின்றது.
சாமுத்திரிகா லட்சணம் பற்றிக்
கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல்
அமைப்பைப் பார்த்தே நம் மனதைப்
பற்றிச்சொல்லிவிடுவார்கள்.
வளைந்த எலும்புகளைக்கூட நிமிர்த்தும் சக்தியைப் படைத்தது மனம்.
வளைந்த
எலும்புகளைக்கூட
நிமிர்த்தும்
சக்தியைப்
படைத்தது மனம்.
ஆன்ம சக்தி மூலமாக ஒருவரின் மூளையைத்
திருத்தி அமைக்க முடியும். ஒருவர்
ஞானமடையும்போது அவருக்குள் நிகழ்வது
இதுதான்.
உங்களுக்குள்ளே ஓடும் குணமளிக்கும் சக்தி
மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் ஆரோக்கியமானவர்களா? யோசித்துப் பாருங்கள்! Not visiting the hospital, is not the scale for health
ஆரோக்கியம் என்பது ‘Clinically fit’ என்பது மட்டும் கிடையாது. அது நம்முடைய வாழ்வின் ஒரு பாகம். அதையும் தாண்டி நமக்குள் ஆழ்ந்து பொங்குகின்ற சக்திமயமாக இருத்தல்தான் ஆரோக்கியம்.
ஆரோக்கியத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளது.
- ரோகம் இல்லாமல் இருப்பது.
- பொங்குகின்ற அளப்பரிய சக்தி உணர்வோடு வாழ்வது.
"அளப்பரிய சக்தியும், உத்சாகமும், உத்வேகமும் பொங்குகின்ற ஒரு உணர்வு ஆரோக்கியம்!"
இந்த உணர்வு எப்போதும் உங்களோடு இருந்தால்தான், நீங்கள் ஆரோக்கியத்தோடு இருக்கின்றீர்கள். அதுதான் ஆரோக்கியத்தின் அளவுகோல்.
ஆரோக்கியமாக இருப்பது அடிப்படை 'குணம்.'
உங்கள் கையில் ஒரு காயம் ஏற்பட்டால்,
அது எப்படி தானாக குணமடைகிறது என்று
தெரியுமா? அது உங்களுக்குள் இருக்கும்
உயிர்சக்தியால்தான்!
உயிர்சக்தி இல்லாமல் போனால், கட்டாயமாக அது குணமடையாது.
காயம் சரியாவதற்காகப் போடப்படும் மருந்துகளுக்கு குணப்படுத்தும் உயிர்சக்தி கிடையாது. ஆனால், காயங்கள் மேற்கொண்டு கிருமிகளால் அதிகமாகாமல் அவற்றால் தடுக்க முடியும். காயத்தைக் குணப்படுத்துவது, உங்களுக்குள்ளே ஓடும் குணமளிக்கும் சக்திதான்.
இப்படி நாமே நம்மை சரி செய்து கொள்ளும் குணமளிக்கும் சக்தியைப் பெற்றிருந்தும், நாம் அந்த சக்தியை உடல் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்வதில்லை.
உணவுமுறை, தூங்கும் விதம், பழகும் விதம் என்ற அன்றாட வாழ்வின் அடிப்படை அம்சங்கள் பற்றி தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வை ஆரோக்கியமாக்கும் தியானங்களைக் கற்றுக்கொள்வது ஆரோக்கிய சேமிப்பு மட்டுமல்ல! அது செல்வச் சேமிப்பும்தான்.
ஆரோக்கியத்தைச் சேமிப்பதனாலேயே பிற்காலத்தில் வர இருக்கும் மருத்துவச் செலவுகள் எல்லாம் மிச்சமாகிவிடும். ஆரோக்கிய சேமிப்பிற்குத் தயாராகுங்கள்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டியது நம் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
உங்கள் 'ஆரோக்கியம்', உங்கள் வாழ்வில் இருக்கிறது. அதுதான் வாழ்வாக வெளிப்படுகிறது.