KAILASA Library/அவசிய அறிவியல்/உடலும், வாழ்வும் ஆரோக்கியமாகSign in
அவசிய அறிவியல்

உடலும், வாழ்வும் ஆரோக்கியமாக

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் விடுங்கள். பிரபஞ்சம் இயங்குவதே எதற்கு தெரியுமா? உங்களுக்குத்தான்!

பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பக்தரொருவர், மிகவும் பணிவாய் என்னிடம் கேட்டுக் கொண்டார். “நான் மிகவும் மோசமாய் வாழ்ந்தவன். நானெல்லாம் இந்தப் புனிதமான தியான மண்டபத்திற்குள் வரலாமா? தியானம் செய்யலாமா?”

அவர் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைத் திருத்திக்கொள்ளும் நோக்கத்தோடுத் தியானம் செய்ய வந்திருந்தார்.

அப்போது அவரிடம், “நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா?” என அவரையே திருப்பிக் கேட்டோம்.

“அவர்களுக்காகத்தானே மருத்துவமனையே இருக்கிறது,” என நிதானமாக பதில் அளித்தார்.

"நான் மிகவும் மோசமான உடலை வைத்திருப்பவன். நானெல்லாம், இவ்வளவு சுத்தமான மருத்துவமனைக்குள் வரலாமா? என்று அவர் கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன். அவர் "சிரிப்பேன்" என்றார்.

நானும் அவரைப் பார்த்துச் சிரிக்க, அவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் என்ன மனபாரத்தோடு அங்கு வந்திருந்தாரோ, அது மொத்தமும் அந்த வினாடியில் அவரை விட்டுக் கரைந்தது என்றார்.

என்னை பார்க்க வந்த ஒரு பக்தர், "அப்படி நீங்கள் என்ன செய்தீர்கள்? எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் என்னால் வெளிவர முடியாத மன உளைச்சலில் இருந்து நொடியில் வந்து விட்டேனே!

எப்படி இது சாத்தியம்? என்னாலேயே இதை
நம்ப முடியவில்லை," என்று கேட்டார்.
அப்பொழுது அவரிடம் சொன்னேன், "இரண்டு
விஷயங்கள் இருக்கின்றது ஐயா...

ஒன்று: உங்களின் மனக்காயம் குணப்படுத்தப்பட்டது.

இரண்டாவது: உங்களுக்குள் இருந்த ஆனந்த
உணர்வு, அந்த நிமிடம் பொங்கி எழ
ஆரம்பித்தது."

ஒரு ஞான சத்குருவால் ஒருவருக்குள் பல
நாட்களாக அடைப்பட்டிருக்கும், ஆனந்த
சக்தியை பொங்க வைக்க முடியும்.

> ஒரு ஞான
> சத்குருவால்
> ஒருவருக்குள்
> பல நாட்களாக
> அடைப்பட்டிருக்கும்,
> ஆனந்த சக்தியைப்
> பொங்க வைக்க
> முடியும்

சிறு கதை மூலமாக, ஒரு சத்தியத்தின் மூலமாக, தீக்ஷை மூலமாக, ஒரு தியானத்தின் மூலமாக இதைச் செய்து விட முடியும்.

இப்போது உங்களுக்குள் நிகழ்ந்தது அதுதான். அடைப்பட்டிருக்கும் ஆனந்த சக்தி ஓடினாலே மன உளைச்சல் மட்டுமல்ல, மூட்டுக் குடைச்சலில் இருந்து, கேன்சர் வரை சரிசெய்து கொள்ள முடியும்.

எங்கும் தங்கு தடை இல்லாமல் இந்த ஆனந்த சக்தி பாய்ந்தோடினால், அவர் ஜீவன் முக்த நிலையில் வாழ்வதோடில்லாமல், மற்றவர்களுக்குள்ளும் ஜீவன் முக்தியை மலர உதவ முடியும்" எனச் சொன்னேன்.

மேலும் அவரிடம் இந்த அருமையான கதையையும் சொன்னேன்.

வழிப்போக்கர் : “இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள்?”

ஜென்ஞானி : “எழுபது வருடங்கள்”

வழிப்போக்கர் : “அப்படியானால் எழுபது வருடங்களுக்குப் பிறகுப் எங்கே செல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?”

ஜென்ஞானி : ‘ஒரு குதிரையாகவோ மயிலாகவோ பிறப்பேன்”

வழிப்போக்கர்: “அதற்கு பிறகு எங்கே செல்வீர்கள்?”

ஜென்ஞானி : “அதற்கு பிறகா? அனேகமாகப்
பூமிக்கு வராமலே நரகத்திற்குச் சென்று
விடுவேன் என நினைக்கிறேன்”

வழிப்போக்கர் : “நரகத்திற்கா! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு நல்லவர்! நீங்களெல்லாம் போய் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்? !!”

ஜென்ஞானி : “நரகத்திலிருப்பவர்களுக்குத்
தியானம் போதிக்க நான் முன்வரவில்லை
என்றால் வேறுயார் முன்வருவார்களாம்?
அவர்களை யார் காப்பாற்றுவதாம்?
சொல்லுங்கள்”

என்று சொன்ன ஜென் ஞானியின் முன்பு அவரின் உள்ளம் அப்படியே கரைந்துவிட்டது. “மற்றவர்களுக்காகவே வாழும் ஞானிகள், இந்த உலக வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்ததோடல்லாமல், மறு உலக வாழ்க்கையையும் கூட தியாகம் செய்கிறார்களே!

இப்படி யோசிக்கவே என்ன கருணை பொங்க வேண்டும் ? என்ன தாயுள்ளம் வேண்டும்?” என்று உணர்வு பொங்க யோசித்த வழிப்போக்கர், நன்றி பொங்கும் கண்ணீர் பெருக்கோடு ஞானியை வணங்கினார், வெளியே மழை கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது.

இந்த ஜென் கதையைக் கேட்டு முடித்தபோது, அந்தப் பக்தருக்குள் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. வரும்போது இருந்த தாழ்வு உணர்ச்சியில் இருந்து விடுபட்டு, கைகளைக் கூப்பி வணங்கியபடியே, உரிமையோடு நம்முடைய தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். அப்போது அவரின் உடலுக்குள் உற்சாகமூட்டும் புது தெம்பு பிறந்தது. இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரு எதிர்பாராத ஞானத்திருப்பம் செய்து விட்டது.

அதேபோல், இந்தப் புத்தகத்தின் எந்த வரியின் முடிவிலும் அந்த ஞானத்திருப்பம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களுக்குள்ளும் நிகழலாம்.

ஞானத்திருப்பங்கள் ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே. உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் பொங்க வைக்கும்.

எனவேதான் சொல்வதுண்டு, “மருந்து முதலில்
நோயாளிக்குத் தான். தியானம் முதலில்
மனக்குறைபாடுகள் உடையவர்களுக்குத்தான்”

இன்னும் ஆழ்ந்து வரலாற்றை ஆராய்ந்து
பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு எழுதப்பட்ட பல தியானங்களைப்
பயன்படுத்தப்போகும் மனிதர்கள் இன்னும்
பூமியில் உருவாகவேயில்லை எனத்
தெரியவருகிறது.

அதேபோல் இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் மனிதர்களுக்கு தேவையான தியானங்கள் பலவற்றையும், அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த தியானங்களைத்தான் இன்றைய மக்களுக்கு பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.

அப்படியென்றால். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். “உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கிய பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்து கொண்டே இருக்கிறது” என்பது நன்றாகப் புரியவரும்.

நல்லவேளை! இந்தப் பிரபஞ்சம், மனிதகுல வாழ்வை மனிதர்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டையனோசர்கள் என்றோ இந்தப் பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ, அதேபோன்று மனித குலமும் மறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.

மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான், ஜீவன் முக்தர்கள் மீண்டும் மீண்டும் பூமியில் பூக்கின்றார்கள். இதைத்தான் கிருஷ்ணர் மிக ஆழமாக சொல்கிறார், “சம்பவாமி யுகே! யுகே!”

“எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஜீவன் முக்தர்களாக நான் வந்து கொண்டேயிருப்பேன். மனித குலத்தை காப்பாற்றிக்கொண்டே இருப்பேன்” என்பதுதான் இதன் சாரம்.

ஜீவன் முக்தர்கள் பூமியில் பூப்பது, உங்களின் நோய்களை

> ஜீவன்
> முக்தர்கள்
> பூமியில் பூப்பது,
> உங்களை
> ஜீவன்
> முக்தர்களாக
> பூக்க
> வைப்பதற்கு.

குணப்படுத்துவதற்கும், நீங்கள் கேட்கும்
வரங்களை தருவதற்கும், குழந்தை பாக்யம்
பெற ஆசீர்வதிப்பதற்கும், திருமண தடைகளை
நீக்குவதற்கும் அல்ல.

உங்களை ஜீவன் முக்தர்களாக பூக்க வைப்பதற்கு. மேற் சொன்னதையெல்லாம் செய்வதற்கு ஜீவன் முக்தர்கள் தேவையில்லை. அவர்களின் சீடர்கள் போதும். இவையெல்லாம் சின்னச் சின்ன சித்து விளையாட்டுக்கள்.

ஆனால் ஜீவன் முக்தி அளிப்பது உங்களின் ஜீவிதத்தையே மாற்றுவது.

உங்களையல்ல, உங்கள் வாழ்க்கையையே ஆரோக்கியமாக்குவது.

பூமியின் மீது ஒடியாடும் மனித வாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம், ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் கரடி பொம்மையோடு விளையாடுவதுபோல, வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய வேடிக்கை இதுதான்!

அழகான சொற்றொடர் ஒன்று...

“நல்லவேளை. உங்களது முக்கியமான வேலைகளை கடவுள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம் போன்ற வேலைகளை அவர் எடுத்துக் கொண்டு யோசிப்பதை மட்டும் உங்களிடம் விட்டுவிட்டார்.”

ஒரு வேளை எல்லா வேலைகளையும் உங்களிடமே கடவுள் கொடுத்திருந்தால், அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக் கதவை தட்டியிருப்பீர்கள்.

"என்னப்பா? ஏன் திரும்ப வந்தாய்?" என்று அவர் கேட்டால், "கடவுளே! மன்னியுங்கள். நேற்று ரொம்ப பிஸியாக இருந்ததில், இதயத்தை தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது" என்பீர்கள்.

இல்லாவிட்டால், "சாரி கடவுளே! நேற்று மூச்சுவிட மறந்துவிட்டேன்" என்பீர்கள்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும். நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாமே இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.

இது புரியாதவர்களுக்குத்தான்...

"வாழ்க்கை ஒரு பெரிய சாகசம். உடல் ஒரு பெரிய சுமை" என்பது போலத் தெரியும்.

உங்கள் வாழ்வின் பல பகுதிகளை இயற்கையே
தானே முன்னின்று நடத்துகிறது. மனிதன்
எவ்வளவுதான் தன் ஆரோக்கியத்தை
கெடுத்தாலும், முடிந்த அளவு இனிதாகவே
செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருமுறை, "பிரபஞ்சம் எங்கேயிருக்கிறது?"
என ஒருவர் ஆனந்த ஸ்புரண தியானமுகாமில்
கேட்டார்.

அப்போது, "நீங்கள் இயங்கும்போது பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீங்கள் இயங்காத போது அது இல்லை அவ்வளவுதான். நிம்மதியாயிருங்கள்" எனச் சொன்னேன்.

நிஜம் தான்! நீங்கள் தூங்கும்போது உலகமே இயங்கினால்கூட, அது உங்களுக்கு அந்த நிமிடம் நிஜமில்லை. நீங்கள் இயங்காதபோது, வேறு எது இயங்கினாலும், அது உங்களைப் பொறுத்தளவிற்கு, அது நிஜமற்ற ஒன்று.

பிரபஞ்சத்தையே இயக்கிக்கொண்டிருக்கும் மையம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அது இயங்காததால்தான் உங்களின்

ஜீவன் முக்தி
அளிப்பது
உங்களின்
ஜீவிதத்தையே
மாற்றுவது.

வாழ்க்கையையே தான் இயக்குவதாய் மனம் காட்டிக் கொண்டிருக்கிறது. நிஜத்தில் மனக்கண் மூடியிருப்பதால்தான் பிரபஞ்சத்தையே இயக்கும் உங்களின் மையம், உங்களுக்குளிப்பது உங்களுக்கே தெரியவில்லை. அதனால்தான் இப்படி சொல்வதுண்டு.

"மனக்கண் திறக்கும் போது பெரிய அதிசயம் நிகழும்",

கண்களை மூடிய பூனை, கண்ணைத் திறந்ததும் முதலில் ஆச்சரியமாய்ப் பார்க்கும். தன்னைச் சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிறகுதான் அதற்குத் தெரியவரும்,

அதேபோல் மனக்கண் திறந்ததும், பிரபஞ்சமே உங்களை மையமாய் வைத்து இயங்குவதைக் காண்பீர்கள். இப்போது எதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள், நோய்கள் என குறிப்பிடுகிறீர்களோ அவையெல்லாம் அப்போது இருக்காது, வாழ்வு தித்திக்க ஆரம்பிக்கும். இதையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக்கும் வாழ்வியல் கலையைத்தான் தியானம், யோகம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.

பிரபஞ்சத்தையே
இயக்கிக்கொண்டிருக்கும்
மையம் உங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கிறது.

நிஜத்தில், உங்களுடைய உடல் மட்டும் நோயுற்றிருக்கவில்லை. உங்களின் வாழ்வும் நோயுற்றிருக்கின்றது.

"You have a diseased body is a old story. You have diseased life. That must be cured first"

வாழ்க்கை, இறைசக்தியால் பொங்கும் கங்கை போன்றது என்றாலும், அதற்கு ஒரு குறையும் வராது என்றாலும், நம் கையில் சிக்கிய வாழ்வு என்பதனால், அது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும்.

உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான வாழ்வும் அவ்வளவு முக்கியம்.

பார்க்க முடியாத மனம் எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்தான் வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.

மனம் ஒரு பொருள். வாழ்வு ஒரு பொருள். இரண்டும் இன்று உங்களின் அப்பாவி உடலை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கின்றன. உடலும் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. அதனால் குணப்படுத்தப் பட வேண்டியது உடலல்ல. வாழ்வு தான்.

தற்போது, தன்னால் முடிந்த அளவிற்கு,
இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும்
முழுமையாக ஆரோக்கியமடைய, நீங்கள்
செய்ய வேண்டியதெல்லாம், இது மட்டுமே.

இன்று உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும்,
சுதந்திரத்திற்குள்ளும் செயல்பட
அனுமதிக்கப்பட்ட மனதை மட்டும் சரியாய்
கையாளுங்கள்.

அதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள்.

பார்க்க முடியாத

மனம் எப்படி

நம் உடலையே

இயக்குகிறதோ,

அதேபோல்தான்

வாழ்வும்

நம் உடலை

இயக்குகிறது.

உடலும், வாழ்வும் தித்திக்க ஆரம்பித்துவிடும்.

ஆரோக்கியமடைய ஆரம்பித்துவிடும், உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல, பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.

Photograph of Swami Nithyananda
Portrait of Nithyananda
Nithyananda

அவசிய அறிவியல்

மனதிற்கு...
மனத்தடைகளை தகர்த்து
ஆனந்தமான மன அமைப்பினை
உருவாக்கிட உழைக்க
ஆரம்பியுங்கள்.