நிஜமான சாதனை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நடந்த நிகழ்ச்சி...
என்னுடைய சிறுவயதில் நடந்த ஒரு அருமையான சம்பவம். சில நிகழ்ச்சிகளை எத்தனை முறை சொன்னாலும் சலிப்பதேயில்லை. ஏனென்றால் அவ்வளவு அருமையான நிகழ்ச்சிகள் அவை.
சில நிகழ்ச்சிகளை
எத்தனை முறை
சொன்னாலும்
சலிப்பதேயில்லை.
ஏனென்றால்
அவ்வளவு
அருமையான
நிகழ்ச்சிகள் அவை.
திருவண்ணாமலையில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.
திருவண்ணாமலை அப்பொழுது பெரிய நகரமாக இருக்கவில்லை. எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கோயிலில் சில நேரம் மகாபாரதம் சொல்வார்கள். பகல் நேரத்தில் மகாபாரதத்தை வயதானவர் ஒருவர் படிப்பார். இரவு நேரத்திலே அந்த ஊரில் இருக்கும் நான்கைந்து பேர் சேர்ந்து அதை நாடகமாக நடிப்பார்கள். இதைத் தெருக்கூத்து என்று தமிழில் சொல்வோம்.
அது தெருமுனையிலே நடக்கின்ற ஒரு சிறிய நாடகம். வசதிக்குத் தகுந்த அளவில் நடைபெறும். நான்கைந்து ஆண்கள் எல்லா வேடங்களிலுமே நடிப்பார்கள். அவர்களே பெண் வேஷமும் போட்டுக் கொள்வார்கள்.
அவர்களுள் வயதானவர் ஒரு உடைந்துபோன மூங்கில்துண்டு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு, கிருஷ்ணராக வருவார். அதே கோலில் ஒரு பெயிண்ட் டப்பாவைக் கட்டி, இன்னொருவர் நாரதராக வருவார். இப்படித்தான் அந்த அந்த தெருமுனை நாடகங்கள் நடக்கும். அதைப் பார்ப்பதற்கு ஒரு பத்துப் பேர்தான் வருவார்கள். அதில் வயதான பாட்டிகளும் இருப்பார்கள். பள்ளிக்குச் செல்லாமல் நான்கைந்து பிள்ளைகளும் ஓடி வந்து விடுவார்கள். அவர்கள்தான் அதைப் பார்க்கும் ரசிகர்கள்.
‘மூன்று காலா? நான்கு காலா?’ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு பெஞ்ச் இருக்கும். பார்ப்பதற்கு நாலுகால் போல் இருந்தாலும், மூன்றுகால் மட்டும்தான் இயங்கும். அதன் மேல்தான் நாடகம் நடக்கும். நாடகம் துவங்கும் பொழுது பெஞ்சுக்கு முன்பாக ஒரு திரை பிடிப்பார்கள். அதில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும். அதன் வழியாகத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். சின்ன வயதில் பாரம்பரியமிக்க நாடகங்களை தெருக்கூத்தைப் பார்த்து பார்த்துதான் வளர்ந்தேன்.
அன்றைய திரௌபதி பற்றிய கதை வந்தது.
‘திரௌபதி வஸ்திராபரணம்தான்’ அன்றைய
நிகழ்ச்சி.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரியும்
என்று நினைக்கிறேன். துரியோதனனின்
சபையிலே துச்சாதனன் தன் உடையைப்
பிடித்து இழுக்க துவங்கியதும், திரௌபதி
தீர்க்க குரலெடுத்து கிருஷ்ணனை அழைப்பார்.
திரௌபதி, “கிருஷ்ணா!” என்று கூப்பிடுவார்.
கிருஷ்ணர் அபயம் கொடுப்பார். அதன் பின்
துச்சாதனன் பிடித்து இழுக்க இழுக்கத் துணி
வளர்ந்துக்கொண்டே செல்லும். துச்சாதனன்
வலுவிழந்து, களைப்படைந்து கீழே விழுந்து
மயக்கமடைந்து விடுவான். இதுதான் அன்றைய
நாடகத்தின் சாரம்.
அன்றைக்குக்
கதையில் யார்
தூங்கினார்கள் என்று
தெரியவில்லை.
சேலையைப்
பிடித்து இழுக்கின்ற
துச்சாதனன் சேலையின்
எண்ணிக்கையைத்
தவற விட்டுவிட்டார்!
அந்தக் காட்சி எப்படி நடக்க வேண்டுமென்றால், திரௌபதியாக நடிக்கும் வயதான ஒருவர்தான் பெண்ணாக நடித்தாக வேண்டும். அவர் ஒரு ஏழு ‘வாயில்’ சேலைகளை உடலில் கட்டிக் கொண்டு வந்துவிடுவார். வாயில் சேலை சற்று மெல்லியவையாக இருக்கும். துச்சாதனன் ஒரு ஐந்தாறு சேலைகளைதான் இழுக்கவேண்டும். அந்த நேரத்தில் திரௌபதியாக நடிப்பவர், ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கூப்பிட வேண்டும்.
கிருஷ்ணர் பின்னாலிருந்து வந்து விடுவார். அபயம் கொடுப்பார். உடனே அந்தத் துச்சாதனன் அயர்ந்துபோய் மயங்கிக் கீழே விழவேண்டும்.
இதுதான் நடக்க வேண்டிய காட்சி. இப்படிதான் அந்த காட்சி நடக்க வேண்டும்.
ஆனால் அன்று கதையில் யார் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. சேலையைப் பிடித்து இழுத்த துச்சாதனன் சேலையின் எண்ணிக்கையைத் தவற விட்டுவிட்டார்!
ஏழு சேலைகளில் இவர் ஐந்து அல்லது ஆறு சேலைகளைத்தான் இழுக்கலாம். அதற்குமேல் இழுக்கக்கூடாது. ஆனால் அன்று மறந்துபோய் எண்ணிக்கையை விட்டுவிட்டார்! சேலையை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தார்.
திரௌபதியாக
நடித்தவருக்கு
அதற்கு மேல்
பொறுமை தாங்க
முடியவில்லை.
சண்டை போட
ஆரம்பித்து
விட்டார்.
அந்த நான்கைந்து சேலைகளை இழுக்கும்
வரை திரௌபதி, 'கோவிந்தா! கோபாலா!
மாதவா! மதுசூதனா!' என்று மட்டும்தான் கத்த
வேண்டும். ஐந்தாவது சேலையையும் தாண்டி
கடைசி சேலையை இழுக்கும் பொழுதுதான்
'கிருஷ்ணா!' என்று கத்த வேண்டும். அதுதான்
'கிருஷ்ணர்' மேடைக்குள் வர வேண்டும் என்று
சொல்லும் சமிக்ஞை.
'கிருஷ்ணர்' உடனே பின்னாலிருந்து வந்துவிடுவார். அதுவரை 'கிருஷ்ணா' என்று கூப்பிடக் கூடாது. அவரின் வேறு பெயர்களைச் சொல்லிக் கூப்பிட வேண்டும். 'கிருஷ்ணா' என்ற பெயர் கிருஷ்ணராக நடிப்பவருக்கு சொல்லப்படும் அடையாளக் குறி. அன்றைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. துச்சாதனன் எண்ணிக்கையை மறந்து வேகவேகமாக ஆறாவது, ஏழாவது சேலையை இழுக்க ஆரம்பித்துவிட்டதால், திரௌபதியும் பொறுமை இழந்தார்.
அதுவரை பொறுமையாக, “மாதவா, மதுசூதனா, கோவிந்தா, கோபாலா,” என்று சொல்லிக்கொண்டிருந்தவர் ஏழாவது சேலையை இழுக்க ஆரம்பித்த உடன், “டேய் விடுடா, டேய் விடுடா,” என்று சத்தமிட ஆரம்பித்துவிட்டார்.
நான் கூட, "என்னடா! காலையில் இது போன்ற காட்சி கதையில் வரவில்லையே. பாரதம் படிக்கும்போது கிருஷ்ணர் வருவார் என்றுதானே சொன்னார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இங்கு துச்சாதனனுக்கும், தான் தவறு செய்கிறோமென்று புரியவில்லை. 'திரௌபதி மிக நன்றாக நடிக்கிறார்போல' என்று தானும் உணர்ச்சிப் பூர்வமாக நடிக்க வேண்டுமென்று மிக வேக வேகமாக இழுக்க ஆரம்பித்தார். திரௌபதியாக நடித்தவருக்கு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. மேடையிலேயே சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
அங்குத் திரைக்குப் பின்னால் கிருஷ்ணராக நடிக்கும் தாத்தா இதையெல்லாம் பீடி பிடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.
'கிருஷ்ணா' என்று இப்பொழுது சொல்வார்களே, இன்னும் சொல்லவில்லையே என்று எட்டி எட்டிப் பார்த்தார். அவருடைய பீடி வேறு தீர்ந்து விட்டது. தயாராக இருந்தவர் "இன்னும் கூப்பிடவில்லையே," என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டால்தான் அந்தக் காட்சியில் வந்து நிற்க முடியும்.
ஒரு வழியாக, இந்தச் சங்கடத்திலும்,
சச்சரவிலும் துச்சாதனன் திரௌபதியின்
கடைசி சேலையையும் உருவி விட்டார்.
பார்த்தால், மேடையில், இடுப்பிற்குக் கீழே
'அரைக்கால் சட்டையுடன்' இடுப்பிற்கு மேலே
பெண் வேஷத்துடனும் திரௌபதி நிற்கிறார்.
இடுப்புக்கு மேலே பெண்வேஷம்!
இடுப்புக்குக் கீழே ஆண் வேஷம்!
என்ன செய்ய முடியும்?
‘நான், நான், நான்’
என்று நினைத்துத்
திட்டமிட்டுக்கொண்டே
இருக்கின்றவர்கள்
வாழத்
தெரியாதவர்கள்.
என்னதான் நடிப்பவர்களாக இருந்தாலும், கிராமத்திற்குள் அவர்களின் பெயர் கெட்டுப்போகும் இல்லையா? வயதான பாட்டிகள் எல்லாம் சிரிக்கிறார்கள். அப்போது திரௌபதி வேஷம் போட்டவர் ‘பளிச்’ என்று ஸ்பான்டேனியஸாக (புறத் தூண்டுதல் இன்றி தானாகவே இயங்கும்தன்மை) “கிருஷ்ணா!, நீ வர முடியவில்லை என்பதற்காக, பெண்ணாக இருந்த என்னை, ஆணாக மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாயே!” என்று ஒரு வசனம் பேசினார்.
அத்துணை பேரும் கைத்தட்டினார்கள்.
"நான், நான், நான்" என்று, தன்னைப் பற்றியே நினைக்கும் ஒரு மனிதரால் இவ்வளவு இயல்பாய் செயலாற்ற முடியாது. பட்டுப்புழு போன்று தனக்கென்று ஒரு கூடுகட்டி வைத்துக் கொள்வார்கள். எதிர்பாராத விதத்தில் வருகிற சூழ்நிலைகளை அவர்களால் கையாள முடியாது.
'நான், நான், நான்' என்று நினைத்துத் திட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றவர்கள் தான் வாழத் தெரியாதவர்கள்.
தமிழில் 'வாழாவெட்டி' என்று ஒரு வார்த்தை உண்டு. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். கணவரோடு வாழாமல் வந்து விட்டவர்கள் வாழாவெட்டிகள் அல்ல. வாழ்க்கையோடு வாழாமல் ஒதுங்கி விட்டவர்கள்தான் வாழாவெட்டிகள்.
ஒருவகையில், நாம் எல்லோருமே வாழாவெட்டிகளாகத்தான் இருக்கிறோம். 'நான், நான், நானென்று' தன் மையத்தையே பிடித்து இயங்குகின்ற மனிதர்கள் வாழாவெட்டிகளாகத்தான் வாழும்போதும் இருக்கிறார்கள்.
இதைத்தான் 'நடைப்பிணமாகத் திரிதல்' என்று சொல்லுவோம்.
அகங்காரத்தாலே இறுகிப்போய், சுதந்திரமாகச்
செயல்படுகின்ற மன அமைப்பு இல்லாமல்
போவது.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்...
திரௌபதியாக நடித்தவர் படிக்காதவர். ஒருவேளை நாம் அந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? ஒன்று திரைக்குப் பின்னால் ஓடிப்போய் ஒளிந்திருப்போம். இல்லையென்றால் துச்சாதனனை மேடையிலேயே வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருப்போம். இல்லையெனில், 'கிருஷ்ணா, உன்னை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். மேடையிலேயே என் மானத்தை வாங்கி விட்டாயே என்று திட்டியிருப்போம்.' ஆனால் அவர் எந்த விதத்திலும் அவமானத்திற்குள்ளாகவே இல்லை. துளிகூட நிலை தடுமாறவே இல்லை.
அது மிக அருமையான விஷயம். அவர் தடுமாறிப் போயிருந்தால், அந்தச் சூழ்நிலையை, இயல்பாகச் சமாளித்திருக்க முடியாது. செயலாற்ற முடியாது.
> அவர்
>
> அவமானத்திற்கு
>
> உள்ளாகவே
>
> இல்லை.
>
> நிலை தடுமாறவே
>
> இல்லை.
தடுமாறி இருந்தால், உடனடியாக முடியாது. 'பளிச்' என்று யோசனை வந்திருக்கவே முடியாது.
இப்பொழுதும் எனக்கு அந்தக் காட்சி ஞாபகம் இருக்கிறது. முகத்தில் மஞ்சள் பூசி, சடை முடிந்து, தலையில் பூ வைத்து, இடுப்புக்கு மேலே ரவிக்கை அணிந்து பெண் வேஷத்துடனும், இடுப்புக்குக் கீழே அரைக்கால் சட்டையுடன் திரௌபதியாக நடித்தவர் நின்றார்.
நம்மை இந்த வேஷத்துடன் ஒரு மேடையில் நிறுத்தினால், எப்படி இருந்திருக்கும்? கட்டாயமாக இந்த அளவு சமயோசிதம் நமக்கு இருந்திருக்காது.
அவரிடமிருந்த ஒரு அருமையான குணம்... அவர் கிராமவாசியாக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும், 'நான், நான், நான்' என்று தன்னையே மையமாக வைத்து அவர் யோசிக்கவில்லை. அவர் வாழ்வியலை வாழ்ந்தார். சுதந்திரமான மன அமைப்பு அவருக்கு உயிரோடு இருந்தது.