நிஜமான சுதந்திரம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எந்த எதிர்பாராத சூழ்நிலையிலும், மிக எளிமையாக, மிக இனிமையாகக் கையாளத் தெரிந்து, எப்போதும் இனிமையாக வாழுகின்ற சுதந்திர மன அமைப்பைப் பெற்றிருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக குணம்.
சுதந்திரத்தன்மையோடு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு நிகழ்ச்சியை, ஒரு சம்பவத்தை, முக்கியமாக எதிர்பாராமல் நிகழும் சம்பவத்தை எதிர்கொள்வதற்கு ஒரு மிகப் பெரிய வைராக்கியவாதியினால், தியாகியினால் மட்டும்தான் முடியும்.
எவ்வளவு பெரிய நல்லது நடந்தாலும், மற்றவர்களுக்கு ஒரு வினாடி தான் 'அது நல்லது' என்று தோன்றும். அதற்குப் பிறகு என்ன செய்வோம்?... “சரி பரவாயில்லை அது அப்படித்தான்பா,” என்று சாதாரணமாக விட்டுவிடுவோம்.
ஆனால் ஒரு சின்னக் கெட்டது நடந்தாலும், அதை சாதாரணமாக விடுவதில்லை. "அதற்கடுத்து என்ன நடக்கப் போகிறதோ? அதற்குப்பிறகு என்ன ஆகுமோ? அதற்குப்பிறகு எப்படி இருப்போமோ?" என்று கவலைப்படுவோம்.
பிறகு அதைப் பூதாகாரமாக்கி நம்முடைய மனதிலே கற்பனையை வளர்த்து மிகச் சிறிய தீமையைக்கூட, மிகப் பெரிய தீமையைப் போல பாவிப்போம். அதற்குப்பிறகு நாம் என்ன செய்வோம் என்று நமக்கே தெரியும். ஆழமான துக்கத்தை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டு விடுவோம்.
ஒரு சின்ன உதாரணம் சொல்ல
வேண்டுமென்றால், ஏதேனும் ஒரு
தொலைக்காட்சியில் வரும் நாடகத்திலோ,
நிகழ்ச்சியிலோ வில்லன் போன்று வரும்
கணவரைப் பார்த்திருப்போம். அந்த
நாடகத்தில் வந்தது போன்றே, உங்கள் கணவர்
ஏதேனும் ஒரு நாளில் அலுவலகத்திலிருந்து
தாமதமாக வந்திருப்பார். அப்போது அவர் ஏன்
லேட்டாக வந்தார்? என்று முதலில் விசாரிக்க
மாட்டோம்.
ஒரு முடிவுக்கு
எடுத்துவிட்டு,
அதன்பிறகு நடக்கும்
விஷயங்களைப்
பார்ப்பது
என்பது, பச்சைக்
கண்ணாடியைப்
போட்டுக்கொண்டு
உலகத்தைப் பார்ப்பது
போன்று.
தொலைக்காட்சியில் பார்த்த வில்லன் மீதியிருக்கும் வெறுப்பை அப்படியே இவர் மீது திருப்பி விடுவீர்கள். அந்த வில்லன் போன்றே இவர் நடந்துகொள்வது பற்றி கற்பனை செய்துகொண்டு, அவரிடம் உடனே சத்தம் போட ஆரம்பித்து விடுவீர்கள்.
பதிலுக்கு அவரும் என்ன செய்வார்? அவரும் ஏற்கனவே அடக்குமுறை செய்கின்ற ஏதாவது ஒரு பெண்மணியை டி.வி.யில் பார்த்திருப்பார் தானே? நீங்கள் கேட்பதற்குப் பதில் சொல்லாமல் பதிலுக்குப் பதிலடியாக என்ன செய்வார்? "என்னை நீ அடக்குகிறாயா? நான் என்ன செய்கிறேன் பார்?" என்று அவர் ஒரு பக்கம் சத்தம் போட ஆரம்பிப்பார்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்... நாம் எதை வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, எதைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். உண்மையில் யாரும் நடக்கும் விஷயங்களை அப்படியே நிஜமாக பார்ப்பது இல்லை.
இரண்டு விஷயம் இருக்கின்றது. நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு, பிறகு முடிவுக்கு வருவது. இரண்டாவது, ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டு, அதற்குப் பிறகு நடக்கின்ற விஷயங்களைப் பார்ப்பது.
ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதன்பிறகு நடக்கும் விஷயங்களைப் பார்ப்பது என்பது, பச்சைக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்ப்பது போன்றது.
பச்சைக் கண்ணாடியை போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்த்தால் உலகம் எப்படித் தெரியும்?
பச்சையாகத்தான் தெரியும்.
இதேபோன்றுதான், நம் வாழ்க்கையும் தெரிகிறது. நாம் எதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகிறோம். வாழ்க்கையே துக்கம், சோகமயம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். ‘என் வாழ்வில் நடந்த துக்கங்கள்’ என்று ஒரு 10, 15 விஷயங்களை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்கிறோம். ஏற்கனவே இப்படி வாழ்க்கையில்நடந்த10, 15விஷயங்களைமனதில் ஆழமாக பதியவைத்துவிட்டு, "வாழ்க்கை என்றாலே இப்படித்தான்" என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். வாழ்க்கை என்றாலே துக்கமயம், வாழ்க்கை என்றாலே சோகமயம் என்கின்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
> எதிர்மறை
> வார்த்தைகளை
> நீங்கள்
> உபயோகிக்க,
> உபயோகிக்க உங்கள்
> வாழ்க்கையில்
> நடக்கும் ஒரு
> சின்னத் தடங்கல்கூட
> மிகப்பெரிய
> தோல்வியைப் போல்
> உங்கள் மனதிற்குத்
> தோன்றும்.
அதுமட்டுமல்ல! சிலர் தனக்குத்தானே மீண்டும், மீண்டும் சில வார்த்தைகளைச் சொல்லிக் க்கொள்வார்கள். "நான் எதைத் தொட்டாலும் உருப்படாது. நான் என்ன சொன்னாலும் நடக்காது. நான் எங்கு போனாலும் விளங்காது," என்று.
இப்படி எதிர்மறை வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்க, உபயோகிக்க உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சின்னத் தடங்கல்கூட மிகப்பெரிய தோல்வியைப் போல் உங்கள் மனதிற்குத் தோன்றும்.
முதலில் ஒரு 1000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால் சின்னதாக துக்கம் வர ஆரம்பிக்கும். அந்தத் துக்கம் வரும் போது நீங்கள் ஏற்படுத்துகின்ற எண்ணப்பதிவுகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? துக்கம் வரும்போது ஆழமாக எதிர்மறையான எண்ணப்பதிவை ஏற்படுத்தி வைப்பீர்கள்.
"நான் எதைத் தொட்டாலும் உருப்படாது. நான் தொட்டால் இப்படித்தான் நடக்குது. நான் எதைத் தொட்டாலும் ராசியே இல்லை," என்று உங்களுக்கு நீங்களே ஒரு சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி வைத்துக் கொள்வீர்கள். அந்தச் சுயபச்சாதாபத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு, 1000 ரூபாய் கூட நஷ்டம் ஆக வேண்டாம். ஒரு 100 ரூபாய் நஷ்டம் வந்தாலே, அதே வார்த்தைகளை மீண்டும், மீண்டும் சொல்லி, உங்களுடைய துக்கத்தை நீங்களே அதிகமாக்கிக் கொள்வீர்கள்.
> கவலை
>
> என்பதும்,
>
> சோகம்
>
> என்பதும்
>
> ஒரு
>
> மனப்பழக்கம்.
அதற்குப்பிறகு 10 ரூபாய் நஷ்டம் வந்தாலும், திரும்பவும் அதே வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்வீர்கள். "ஐயோ! இப்படியே நடந்துட்டு இருக்கே," என்று நொந்துக்கொள்வீர்கள். அப்படி நடக்கத் துவங்கிய பிறகு நஷ்டம் ஏற்படாவிட்டாலும் இயற்கையாகவே துக்கமாக, மந்தமாக இருக்கத் துவங்கிவிடுவீர்கள்.
கவலை என்பதும், சோகம் என்பதும் ஒரு மனப்பழக்கம்.
நமக்குள் இருக்கும் தெளிவு, நமக்குள் இருக்கும் ஞானம் நமக்குப் புரியாத வரை சோகத்திலேயே சூழ்ந்திருப்போம்.
எந்தத் துக்கத்தில் ஆழ்ந்தாலும், அந்தத் துக்கத் தில் இருந்து நாமே எழுந்து வருகின்ற அந்தச் சுயமான தற்காப்பு சக்தி நமக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் வரை, மனம் சோகமயமாகத்தான் இருக்கும்.
அப்போது எப்பேர்ப்பட்ட மாட மாளிகையில் இருந்தாலும், எல்லா விதமான சுகத்தோடு இருந்தாலும் மனம் மன உளைச்சலோடு இருப்பது தவிர்க்க முடியாதது.
உலகத்தில் இருக்கும் எல்லாவிதமான சுகத்தோடு, பெரிய மாடமாளிகையில் இருந்தும்கூட, பலர் கோபுரத்தில் இருந்தும்கூட துக்கத்தில் இருக்கிறார்கள்.
அப்படி இல்லாமல், மிகவும் சாதாரண எளிமையான வாழ்க்கையில் ‘ஆனந்தமயமாக’ இருப்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்.
துக்கமோ, ஆனந்தமோ வெளியில் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தது அல்ல. உள்ளுக்குள் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது என்பது நாம் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
இந்த ஞானக் கருத்துக்கள் மீண்டும், மீண்டும் உங்கள் வாழ்க்கையை மேல் எடுத்து வரும். இந்த ஞானக் கருத்துக்களை உத்வேகத்தோடும், தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் உங்களுக்குள் ஏற்றுக்கொள்வீர்களானால், உங்களுக்குள் வளர்த்துக் கொள்வீர்களானால், ‘துக்க எதிர்ப்பு சக்தி’ மனதிற்கு அதிகமாகும். நிஜமான சுதந்திரம் பிறக்கும்.