துக்க எதிர்ப்பு சக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நோய் எதிர்ப்பு சக்தியைப் போல, துக்க எதிர்ப்பு சக்தி ஒரு மனிதருக்கு அடிப்படையான தேவை.
ஒரு சின்னக் கதை...
ஒரு குருவும், சீடரும் ஆற்றில் குளிக்கச் சென்றார்கள். சீடர் திடீரென்று ஆற்றில் தவறி விழுந்துவிட்டார். “குருவே காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்,” என்று சீடர் சப்தமிட்டார்.
குரு சொன்னார், “முட்டாளே! எழுந்து நில்,” என்று. சீடரோ “ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ஏதேதோ சொல்கின்றீர்களே? முதலில் என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று மீண்டும் அலறினார்.
குரு சொன்னார், “உன்னாலேயே உன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். எழுந்து நில்”.
சீடர் மீண்டும் சப்தமாக, “குருவே, உங்கள் வேதாந்தத்தை எல்லாம் அப்புறம் பேசுங்கள். உங்கள் அறிவுரையை எல்லாம் அப்புறம் சொல்லுங்கள். முதலில் என்னைக் காப்பாற்றுங்கள்," என்று கெஞ்சினார்.
குரு சீடரை விடவும் சப்தமாக, "எழுந்து, நில்!” என்று கட்டளையிட்டார். அவர் சொன்ன வேகத்தில், சீடர் பயந்து போய் எழுந்து நின்றார். நின்று பார்த்தால், தண்ணீரே முட்டி அளவு ஆழம்தான் இருந்தது. எழுந்து நின்று பார்த்தப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது, தண்ணீர் முட்டி அளவு ஆழம்தான் இருக்கிறது என்று.
உண்மையிலேயே பலருடைய வாழ்க்கையிலும், பெரும்பாலான நேரத்தில், சிறிய பிரச்சினைகளிலேயே சிக்கி விழுந்து விடுகிறார்கள். அதிலேயே சிக்கித் தவிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்து நிற்கும் போதுதான் தெரியும், தண்ணீர் மொத்தமும் முட்டிக்கால் அளவு ஆழம் தான் என்று.
முட்டி அளவு ஆழம் உள்ள தண்ணீரில் விழுந்து தத்தளிக்கின்ற சீடரைப் போல, சிறு சிறு பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு கீழே விழுந்து தத்தளிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.
உண்மையிலேயே உங்களை அழிக்கின்ற
அளவிற்குப் பிரச்சினை, உங்கள்
வாழ்க்கையில் வருவதே இல்லை. அதாவது
பிரச்சினைகள் வருவதற்குக்கூட, ஒரு
அடிப்படையான வாழ்க்கை முறை
தேவைப்படுகிறது.
பொதுவாக நம் வாழ்க்கை முறைகளையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், நம்மை அழிக்கின்ற அளவிற்கு அதன் மூலமாக பிரச்சினைகள் வருவதே இல்லை. ஆனால், இருக்கின்ற அந்தச் சில பிரச்சினைகளையே பூதாகரமாக மாற்றிக் காண்பித்து, நம்முடைய வாழ்க்கையையே இழந்தது போன்று ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம். இது நம் மனத்தின் பழக்கமாக ஆகிவிட்டது.
துக்கமான மன அமைப்பை உருவாக்கிக் கொள்வதால், துக்கத்தை ஈர்க்கத் துவங்கிவிடுகிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில், நான்கு
திசைகளில் இருந்தும் துக்கத்தைத் தருகின்ற எண்ணங்களையும், துக்கத்தைத் தருகின்ற செய்திகளையும்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
மனதிற்கு இருக்கின்ற ஒரு தவறான பழக்கம் என்னவென்றால், யாராவது ஒருவர் கெட்டுப் போய்விட்டார்கள் என்று ஒருவரைப் பற்றி மற்றவர் சொல்வதைக் கேட்பதில் ஒரு ஆனந்தமான சுகமடைகிறது. யாராவது ஒருவருக்கு துக்கம் வந்துவிட்டால், அதைக் கேட்பதில் அவ்வளவு இனிமை இருக்கின்றது.
வெளியில் மற்றவர்களுக்கு முன்னால் மட்டும், வார்த்தையளவில் வேண்டுமென்றால் இதைச் சொல்லுவோம், 'இப்படி ஆயிடுச்சா' என்று. ஆனால் மனதிற்குள்! 'ஆகட்டும்!' 'படட்டும்' 'என்னென்ன பண்ணியிருக்கான் இவன். இவனுக்கு இது வேண்டும்' என்று நினைப்பதுண்டு.
அதாவது அந்த இடத்தில் சோகமாகதான் இருக்க வேண்டும் என்பதற்காக மேம்போக்காகத் துக்கமாக இருப்பதாகக் காண்பித்துக் கொள்வார்கள். முகத்தளவில் ஒரு சோகத்தைக் காண்பிப்போமே தவிர, "ஒருவர் துக்கத்தில் இருக்கிறார். ஒருவர் சோகத்தில் இருக்கிறார்," என்னும் அந்தச் செய்தி ஒருவருக்குள் குரூரமான இனிமையையே தருகிறது.
நல்ல
விஷயங்களைத்
திரும்பத் திரும்பக்
கேட்கிறோமா?
திரும்பத் திரும்பப்
படிக்கிறோமா?
அதனால்தான் நாமே விரும்பி என்ன செய்கிறோம்? வேண்டிச் சென்று பக்கத்து வீட்டு விஷயத்தை விசாரிக்கிறோம். யாராவது நம் தெருவைச் சேர்ந்த ஒருவர் வியாபாரத்தில் நொடிந்து போய்விட்டார். அவர்கள் வீட்டில் ஒரு தவறு நடந்துவிட்டது என்றால் உடனே என்ன செய்வோம்?
அதைப்பற்றி பேசுவதற்கென்றே இரண்டு நாள் செலவு செய்வோம்.
நேர் விசாரணை, குறுக்கு விசாரணை, பின்முக விசாரணை என்று 10 பேர் மூலமாக அதே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கேட்போம். எங்காவது ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. ஒருவருக்கு நல்லதாக இருக்கிறதென்றால் அதைத் திரும்பத் திரும்ப கேட்கமாட்டோம்.
ஏதேனும் நல்ல விஷயங்களை என்றாவது திரும்ப திரும்பக் கேட்கிறோமா? திரும்ப திரும்பப் படிக்கின்றோமா?
கிடையாது. ஏதோ ஒரு இடத்தில் ஒரு நல்லது நடந்து உள்ளது என்றால், என்ன செய்வோம்?
"ஓ! அப்படியா?" என்று அங்கிருந்தே நகர்ந்து போய் விடுவோம்.
ஏதாவது ஒரு இடத்தில், ஒரு மன்றத்தின் சார்பாக பத்து மாணவர்களுக்குப் புத்தகம் சேவை நோக்கில் அளிக்கப்படுகிறது என்றால் அதிகபட்சமாக என்ன செய்வீர்கள்? பத்து மாணவர்களுக்குக் கல்வி உதவி அளிக்கப்படுகிறது' என்ற செய்தியைச் சாதாரணமாகக் கேட்பீர்கள்.
துக்ககரமான
செய்திகளை
சேகரிப்பதிலும்,
அதற்காக
முக்கியத்துவம்
அளிப்பதிலும்
நாம் அதிக
நேரத்தையும்,
சக்தியையும்
செலவு
செய்கிறோம்.
இதுபோன்ற செய்திகள் என்றால், அது தலைப்புச் செய்தியாகவும் வருவதில்லை. அது ஒரு நல்ல செய்தியாக நமக்கும் தோன்றாது. அதைத் திரும்பத் திரும்ப நாம் கேட்க மாட்டோம். அதை அப்படியே கேட்டாலும் என்ன நினைப்போம்? அதிகபட்சம் "யார் சிறப்பு விருந்தினர்?" என்றுதான் கேட்போம். என்ன சேவை செய்யப்பட்டது, அது எத்தனைப் பேருக்கு சென்று சேர்ந்தது, யார் அதைச் செய்தார்கள் என்று மேற்கொண்டு விசாரணை செய்வதும் இல்லை. அதற்கான ஒரு சின்ன ஊக்குவிப்பும், பாராட்டும் மருந்துக்குக்கூட வெளிப்படுத்துவதில்லை.
ஆனால், எங்காவது ஒரு விபத்து நடந்துவிட்டது, எங்காவது ஒரு பத்து பேர் இறந்துபோய் விட்டார்கள், ஏதேனும் துக்கமான விஷயம் நடந்துவிட்டது என்றால்...
உடனே என்ன செய்கிறோம். அதை மீண்டும், மீண்டும் கேட்கின்றோம். அதை மீண்டும், மீண்டும் விரிவாகத் தெரிந்து கொள்கின்றோம்.
அதில் ஆழமான கவனத்தைக் காட்டுகின்றோம்.
நம்முடைய வாழ்க்கையில் நேரடியாகத் தொடர்புடையவர்களுக்கு, நம்முடைய உற்றார், உறவினர்களினாலேயே நல்ல விஷயம் நடந்தால், அதைக்கூட அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஆனால், அதே மனிதர் கஷ்டத்தில் இருக்கிறார் என்றால், ஒருவரின் வீட்டில் ஒரு பிரச்சினை வந்துள்ளது என்றால், உடனே என்ன செய்வோம்? அதைக் கேட்பதிலும், அதைப் பரப்புவதிலும் ஒரு ஆழ்ந்த ஆனந்தத்தையும், சுகத்தையும் காண்கின்றோம்.
சுபாவத்தினாலே, இயற்கையாகவே அவ்வாறு செய்யத் துவங்குகின்றோம். துக்ககரமான செய்திகளை உள்வாங்கி, வாங்கி உள்ளேயே பூட்டி வைக்கின்றோ றாம். இந்தத் துக்ககரமான செய்திகளை வாங்கி, வாங்கி உள்ளே வைக்கும் பொழுது, ஒரு சின்ன துக்கம் வந்தால்கூட எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து வைத்து, பெரிய துக்கமாக, பூதாகாரமாக பார்க்கின்றோம்.
சின்ன துக்கம் நடந்தாலும் அதில் இருந்து மேலே வருவதற்கான சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் அதே துக்கத்திலேயே மாட்டிக் கொள்கின்றோம். துக்கம் நடப்பதற்கு முன்பே, அந்தத் துக்கம் நடந்தது போன்று அழ ஆரம்பித்து விடுகின்றோம்.
பாம்பு கடித்து இறந்தவர்கள் 100 பேர் என்றால், பாம்பு கடித்த பயத்தாலேயே இறந்தவர்கள் 10,000 பேர் இருப்பார்கள்.
பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நம்முடைய பக்தர் ஒருவர் மருத்துவராக
கிராமப்புற பகுதிகளில் வேலை பார்த்து
வருகிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது
என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லிக்
கொண்டிருந்தார்.
"எங்கள் ஊரில் விவசாயிகள் வயலில் வேலை செய்யும்போது பலமுறை இதுபோன்று பாம்பு கடித்துவிடும். அப்படிப் பாம்பு கடித்து மக்கள் இறப்பது சகஜமாக இருந்தது,” என்று சொன்னார் அவர்.
அப்போது அவரிடம் கேட்டேன், “ஐயோ! பாம்பு கடிக்கான மருந்து ஏதும் அந்த ஊரில் இல்லையா?”
மருத்துவர் சொன்னார், “இருக்கிறது! இங்குப் பாம்பு கடித்தவுடன் அழைத்து வருவார்கள். அப்படி அழைத்து வருபவர்களில் பெரும்பாலானோருக்கு அந்த விஷம் உடலில் பரவியே இருக்காது.
ஆனால், “பாம்பு கடித்துவிட்டது” எனும் அதிர்ச்சியில்தான் அவர்களின் இதயம் நின்றுவிடுகிறது. கார்டியாக் அரஸ்டாகிவிடுகிறது. (Cardiac arrest)
எந்த ஒரு விஷமுடைய பாம்பு கடித்திருந்தாலும், விஷமில்லாத பாம்பு கடித்திருந்தாலும், அந்த விஷம் உடலில் முழுவதுமாகப் பரவுவதற்குச் சிறிது நேரமாகும்.
சில நேரங்களில் விஷமில்லாத பாம்புகள் அவர்களைக் கடித்திருந்தாலும், அந்தப் பயத்தில்தான் இதயம் நின்று போய்விடுகிறது,” என்று சொன்னார்.
மற்றவர்கள்
உங்களைப்
பற்றி என்ன
நினைக்கிறார்கள்
என்று
நினைத்துக்
கவலைப்படாதீர்கள்.
நம்முடைய வாழ்க்கையிலும்
பார்த்தீர்களென்றால், நிஜமான துக்கம்
வருவதற்கு முன்பாக, நம்முடைய மன ரீதியான
பிரமையினாலேயே, பல நேரத்தில் நாம்
துக்கத்தையும், சோகத்தையும் வரவழைத்துக்
கொள்கின்றோம்.
உண்மையிலேயே நம் ஒவ்வொருவருக்கும்,
நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமாக
வாழும் சக்தியும், மனத்தெளிவும்
இருக்கிறது.
அதை நம்பாமல், அதை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையை வாழும் பொழுதுதான் துக்கமே ஆரம்பிக்கிறது.
எப்படி நம் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறதோ, அதேபோன்று துக்க எதிர்ப்புச் சக்தியும் இருக்கிறது. ஆனால் அதை நம்புவதற்கு நாம் யாரும் தயாராக இல்லை. அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. அதனால்தான் மீண்டும், மீண்டும் நாம் மனதைச் சோகமயமாக வைத்திருக்கின்றோம்.
அதற்குத் தீர்வு... நோய் எதிர்ப்புச்சக்தியைப் போல, துக்க எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதுதான்.