சோக மயம் சுய மயமாக...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார், “சாராயம் குடித்தவனை உடனடியாக போதை தெளிவிப்பதற்கான வழி, அவனை, சாதம் வடித்த கஞ்சியைக் குடிக்க வைப்பதுதான். சாதம் வடித்த கஞ்சி குடிக்கவைப்பதுதான்., போதை தெளிந்து போகும்,” என்பார்.
அதேபோன்று துக்கமயமான மன அமைப்பு
உடையவராக மாறியவர்கள், அதிலிருந்து
விடுபடுவதற்கு வழி, ஞானக் கருத்துக்களை
படிப்பதுதான். அது அளிக்கும் புத்தகங்களை
மீண்டும், மீண்டும் படித்தல், ஞானக்
கருத்துக்களைக் கேட்டல் என்பதை செய்ய
வேண்டும்.
இதை நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக
மாற்றிவிட்டால் போதும். இது வாழ்க்கையை
ஆனந்தமயமாக்கும் சாதனையின் சூட்சுமம்.
மற்றவர்கள்
உங்களைப்
பற்றி என்ன
நினைக்கிறார்கள்
என்று
நினைத்துக்
கவலைப்படாதீர்கள்.
சின்னதாக ஒரேயொரு அறிவுரை. இந்த அறிவுரையினால் என்ன பலன் என்று கூட சொல்கிறேன்.
இதை அறிவுரை என்றுகூட சொல்ல முடியாது.
வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்கான ஒரு நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்.
ஏனென்றால், அவர்கள் நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கவலைப்படுகிறார்கள். இது ஒரு பொன்மொழி.
உண்மையில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அவர், நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருமே மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
சரியான நேரத்தில்
சொல்லப்பட்ட ஒரு
சரியான சொல்,
வாழ்க்கையையே
மாற்றும் ஒரு
பெரிய கருவி,
மிகப் பெரிய
சாதனம்.
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டுக்
கொண்டு இருக்கும்போது, இந்த அறிவுரையை
உங்களுக்கு ஒருவர் சொன்னார்கள் என்றால்,
அப்பொழுது அது உங்கள் மனதில் பளிச்சென்று
மாற்றத்தை தந்தால், (Click) எந்த அளவுக்கு
அதனால் உங்கள் மனதிற்கு ஒரு ஆறுதல்
கிடைக்கும், எவ்வளவு பயனடைவீர்கள்
என்பதை யோசித்துப்பாருங்கள்.
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், யாராவது உங்களுக்கு இந்த அறிவுரையோ, தெளிவையோ கொடுத்தார்கள் என்றால், "நீ, அவர் உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று கவலைப்படாதே. அவரே கவலைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நீ அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று நினைத்து, அவர் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்" என்று யாராவது தெளிவு சொன்னார்கள் என்றால், அது அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய உத்சாகமாகவும், துக்கத்திற்கான மருந்தாகவும் இருக்கின்றது.
அதேபோலவே நம்முடைய வாழ்க்கையில் சோகங்கள் வரும் போதெல்லாம், துக்கங்கள் வரும்போதெல்லாம், ஒரு தெளிந்த கருத்து, தெளிந்த அறிவுரை நமக்கு கிடைக்குமானால், அந்த அறிவுரை வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும்.
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட ஒரு சரியான சொல், வாழ்க்கையையே மாற்றும் ஒரு பெரிய கருவி, மிகப் பெரிய சாதனம்.
நம்முடைய வாழ்க்கையிலும், சரியான கருத்துக்கள் துக்கமாக இருக்கும்போது வந்து சேர்ந்தால், அது நம்முடைய துக்கத்தையே மாற்றி விடும்.
இந்தத் தெளிந்த கருத்துக்களை மீண்டும், மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் கேட்டோமானால், கடைப்பிடித்தோமானால், சோகமயமாக இருக்கின்ற மனம் சுகமயமாக மாறும்.
எப்படி இது வரையிலும் துக்கமயமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாக இருந்ததோ, அதேபோன்று ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ்வதும் சாத்தியமே.
ஆனந்தமயமான வாழ்க்கையை
வாழவேண்டுமென்றால், துக்கத்தை
நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும் மனதை
முதலில் நிறுத்தவேண்டும். ஆனந்தமயமான
மனநிலையை உருவாக்க சக்தியும், புத்தியும்
செலுத்த வேண்டும்.
ஆனந்தமான மனஅமைப்பிற்காக உழைக்கத்
துவங்குங்கள். இது வாழ்க்கையையே
ஆனந்தமாக்குவதற்கான மிக எளிய நுட்பம்.
எவ்வளவு சிரத்தையோடு ஆனந்தமயமான
மனநிலைக்காக உழைக்கிறீர்களோ, அவ்வளவு
விரைவாக ஆனந்தமான வாழ்க்கையை வாழத்
துவங்கிவிடுவீர்கள்.
> ஆனந்தத்தின் திசை
>
> நோக்கி
>
> நீங்கள் திரும்பினால்
>
> போதும், துக்கத்தின்
>
> பிடி தளர்ந்துவிடும்.
>
> உங்களை
>
> ஆனந்த சக்தி
>
> ஆட்கொண்டுவிடும்.
மீண்டும், மீண்டும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதினால், மீண்டும், மீண்டும் நம்மை நாமே அளவுக்குக் குறைவாக எடை போடுவதனால்தான், நாம் சுய நம்பிக்கை இல்லாமல் சோகத்திலும், துக்கத்திலும் இருக்கின்றோம்.
நமக்குள் அளப்பரிய சக்தி இருக்கிறது. நாமே உருவாக்கும் தடைகள்தான், நமக்குள்ளிருக்கும் அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தாமல் தடுக்கின்றது. அந்த மனத்தடைகளை நாம்தான் தாண்டி வெளிவர வேண்டும்.
"ஆடு தடை, மாடு தடை, மனைவி தடை, மக்கள் தடை என்பவரெல்லாம், தங்கள் மனத்தடையை வேரறுக்காதவர்கள் சொல்லும் பேச்சு," என்று சொல்வார்கள்.
மனதிற்கான அவசியஅறிவியல், தன் மனத்தடைகளை தேடிக் கண்டுபிடித்து தானே அதிலிருந்து வெளிவருவதே!
துக்கத்தை ஈர்க்கும் மன அமைப்பைத் தகர்த்து, மனத்தடைகளைத் தகர்த்து ஆனந்தமயமான மன அமைப்பை உருவாக்கிட உழைக்க ஆரம்பியுங்கள்.
Every action has an equal and opposite reaction என்பது அறிவியல் விதி.
எப்படி இது நாள் வரை துக்கமாக வாழ்வது சாத்தியமானது என்று இருந்ததோ, அதேபோன்று ஆனந்தமாக வாழ்வதும் சாத்தியமே!
ஆனந்தத்தின் திசை நோக்கி நீங்கள் திரும்பினால் போதும், துக்கத்தின் பிடி தளர்ந்துவிடும். உங்களை ஆனந்த சக்தி ஆட்கொண்டுவிடும்.

அவசிய அறிவியல்
உணர்விற்கு...
என்ன நிகழ்ந்தாலும்,
அதை வரவேற்கும்
ஜீவன் முக்தராய் வலம்
வாருங்கள்.