அவசிய அறிவியல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு பெரிய அலை எழுந்த பொழுது, அந்தக் கடற்கரை ஓரமாக வாழ்ந்து வந்த சிப்பியைக் கடலுக்குள் அழைத்துச் சென்றது. அந்தச் சிப்பியும் அந்த அலையின் போக்கிலேயே ஒத்துழைத்தது. அதனால் அந்தச் சிப்பி அலைக்குள் அழகாக மிதந்து சென்றது. கடலில் அழகாக மூழ்கி, குதித்து விளையாடி, குளித்து, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டது. கடலோடு ஒன்றி சக்திமயமாக மாறியது.
> நீங்கள்
> மிகப்பெரிய
> சக்திதான்
> என்பதை
> நம்பினால்
> போதும்.
அதேபோன்று இன்னொரு சிப்பியும் இருந்தது.
ஆனால் அந்த இன்னொரு சிப்பியோ,
கடலைப் பார்த்து, “ஆ! உன்னை எப்படி
நம்புவேன்? நீ மிகப்பெரிய சக்திதான்
என்று எப்படி ஏற்றுக் கொள்வது?
உன்னைப்பற்றித்தான் எனக்கு எதுவும்
தெரியாதே! எப்படி நம்புவது?” என்று கடலை
நம்பாமல், கடலுக்குள் செல்லாமல் தனியே
இருந்தது. அதன்பின், கரையில் இருக்கும்
மணலையே நன்றாகப் பிடித்துக் கொண்டு,
இரண்டு, மூன்று கூழாங்கற்களையும் தன்னுடன்
சேர்த்துக் கொண்டு வாழத்துவங்கியது.
அவற்றையே தனது வீடு என்று நம்பிக்கொண்டு, அதை விட்டு வெளியே வராமல் தீவுப்போல் இருந்தது. “இதுதான் எனக்கு பாதுகாப்பு,” என்று நினைத்து, தன்னைச் சுற்றி ஒரு சிறையை உருவாக்கிக் கொண்டது. ஆனாலும், இந்தப் பேரலை, சிப்பியின் மீது இருந்த கருணையால், சிப்பியை அந்தச் சிறையோடு சேர்த்து தன்னோடு உள்ளே அடித்துக்கொண்டு சென்றது.
ஆழமாகப் பார்த்தோம் என்றால், இரண்டு சிப்பிகளுக்கும் இடையே, ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. ஒத்துழைப்பு தந்த சிப்பி, ஆனந்தத்தோடு கடலில் மூழ்கி, குதித்து கும்மாளமிட்டது.
“எனக்கு பாதுகாப்பு வேண்டும்,” என்று தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு, கடலோடு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தன்மையில் சிக்கிய சிப்பி, மிகவும் கஷ்டப்பட்டது. அந்த எதிர்ப்பினால் ஏற்பட்ட துக்கத்தை அனுபவித்தது. பிறகு இறுதியில் அதுவும் அதே கடலில் தான் கரைந்தது.
இறுதியில் அந்த இரண்டு சிப்பியுமே கடலில் கரைந்தது. இரண்டு சிப்பிகளுடைய வரலாறும் ஒன்றேதான். ஒரே வரியில் எழுதிவிடலாம். 'சிப்பிக் கடலுக்குள் கரைந்தது' என்ற ஒற்றை வரிதான் அவற்றின் மொத்த வரலாறும்.
தன்னைச் சரணாகதி செய்த முதல் சிப்பியினுடைய வரலாறு, ஓரிரண்டு வார்த்தையில் இருக்கும். "ஒரு சிப்பி இருந்தது. பொங்கும் பிரபஞ்சப் பேரலையோடு அது கலந்தது," என்றிருக்கும்.
இரண்டாவது சிப்பியினுடைய வரலாறு, "ஒரு சிப்பி இருந்தது. அது தன்னைக் கடந்த சக்தியோடு கலக்க அனுமதிக்காமல் தடையை ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனாலும் பிரபஞ்சப் பேரலையில் வேறு வழியில்லாமல் கரைந்தது," என்றிருக்கும்.
எது எப்படி இருந்தாலும் இரண்டினது வரலாற்றையும் பார்த்தீர்களென்றால், அதில் ஒரே ஒரு வார்த்தை வித்தியாசமாக இருக்குமே தவிர, வேறு எதுவுமே வித்தியாசமாக இருக்காது. ஏனென்றால் இரண்டுமே இறைசக்தியின் பாகங்கள்.
பிரபஞ்ச சக்தி இரண்டிற்குமே வாழ்க்கையாக வந்து உதவியது. அதை எப்படிச் சிப்பிகள் பயன்படுத்திக் கொண்டது? என்பதை பொறுத்து வித்தியாசம் நிகழ்ந்தது. இரண்டு சிப்பிகளுக்கும் ஒரே வாய்ப்புதான் கிடை த்தது. அவை அந்த வாய்ப்பை அணுகிய விதத்தைப் பொறுத்து அந்த சிப்பிகளின் வாழ்வு வடிவமைக்கப்பட்டது.