ஆன்மீகம் என்ற அறிவியல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இந்தியாவில் இருக்கும் ஒருவர், ஒன்றையும், ஒன்றையும் கூட்டினால் (1+1=2), இரண்டு வரும்.
அதேபோல், அவர் அமெரிக்காவிலிருந்து, ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் (1+1=2), அங்கும் இரண்டுதான் பதிலாக வரும்.
> உங்களுக்குத் தெரிந்த
> விஷயங்களை
> உவமையாகக்
> காட்டி, அதிலிருந்து
> உங்களைப்
> படிப்படியாக மேல்
> நோக்கி எடுத்துச்
> செல்லும் திறன்
> அறிவியலுக்கு உண்டு.
இன்னும் சற்று லண்டனுக்குச் சென்று, அங்கிருந்து ஒன்றையும் ஒன்றையும் கூட்டினாலும் (1+1=2) இரண்டு தான் வரும். இதுதான் கணிதம். இதுதான் அறிவியல்.
இந்தக் கணிதமும், அறிவியலும், மிகத் தெளிவாக நம்முடைய தர்க்க அறிவிற்கும், நம்முடைய பகுத்தறிவிற்கும் விளங்குகின்ற விதத்திலே விளக்கப்படுவதாகவும் இருக்கின்றது.
அறிவியல் என்று விஞ்ஞானிகள் சொல்கின்ற
எல்லா விஷயங்களுக்குமே, இந்த
அடிப்படையான குணங்கள் இருக்கும்.
உங்களுக்கு என்ன தர்க்க அறிவு இருக்கிறதோ, உங்களுக்கு என்ன ஞானம் இருக்கிறதோ, அதை வைத்தே உங்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதை, ஆங்கிலத்தில், From known to the unknown என்று சொல்வோம். அதாவது தெரிந்ததில் இருந்து, தெரியாததிற்கு என்று பொருள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உவமையாகக் காட்டி, அதிலிருந்து உங்களைப் படிப்படியாக மேல் நோக்கி எடுத்துச் செல்லும் திறன் அறிவியலுக்கு உண்டு.
யாராக இருந்தாலும், அவருக்குள்ளும் அதே தெளிவை, அதே புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்த முடியும்பொழுதுதான், அது அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
“இல்லையப்பா! நீ பணக்காரனாக இருந்தால் மட்டும்தான் உனக்குப் புரியும். நீ அமெரிக்கராக இருந்தால் மட்டும்தான் உனக்குப் புரியும். இந்தியர்களுக்கு மட்டும்தான் இந்த அறிவியல் புரியும்,” என்று சொல்ல முடியுமா?
அறிவியல் என்கின்ற வார்த்தையை உபயோகம் செய்வோமானால், அது எல்லோருக்கும் புரியக்கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அது அறிவியல் எனப்படும்.
அதேபோல், ஞானிகளுக்குள் நடந்த அனுபவங்கள் எல்லோருக்கும் நடக்கும் வகையில் ஒரு தெளிந்த சூத்திரமாக வகுத்துத் தந்தால் மட்டும்தான், ‘ஆன்மீகத்தை அறிவியல்’ என்று சொல்ல முடியும்.
சிலர், என்னிடம், “நம்முடைய நாட்டில்
ஆன்மீகமும், அறிவியலும் தனித்தனியாக
அல்லவா இருக்கிறது? ஆன்மீகம் என்ற
ஒன்று மூட நம்பிக்கையாகவே கருதப்பட்டு
வருகிறதே,” என்று கேட்டார்கள்.
அப்போது அவரிடம், “ஆன்மீகம்,
அடிப்படையான குணங்களோடு அமைந்த ஒரு
தெளிந்த அறிவியல்தான்.
எங்கெல்லாம் அடிப்படையான குணங்கள் இல்லாத ஆன்மீகம் பேசப்படுகிறதோ, தெரிந்து கொள்ளுங்கள், அங்கெல்லாம் வெறும் மூடநம்பிக்கை மட்டும்தான் பரப்பப்படுகிறது. அங்கு உண்மையான ஆன்மீகம் பேசப்படவில்லை. உண்மையான ஆன்மீகம் வழங்கப்படவில்லை,” என்று சொன்னேன்.
உள்ளுலக சுதந்திரமே சனாதன தர்மத்தின் லட்சியம்.
அதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை குணம். அதுதான் ஆன்மீகத்தின் குறிக்கோள்.
சுவாமி விவேகானந்தர் மிக அழகாக, அற்புதமாக, ஒரு சொற்பொழிவிலே விளக்குகிறார்.
“Let you flood the religion with reason. Whatever cannot stand before your reasoning, let it be washed away.
The earlier they are washed away, better for the society, better for the humanity.”
“உங்களுடைய பகுத்தறிவின் மூலமாக ஆன்மீகத்தைத் தூய்மை செய்யுங்கள்.
வெள்ளத்தைப்போல் உங்கள் பகுத்தறிவு ஆன்மீகத்தைத் துளைத்து எடுக்க ட்டும்.
நம்முடைய
சனாதன தர்மத்திற்கு
மட்டும்தான்,
ஆன்மீகம் என்கின்ற
லட்சியமே
இருந்திருக்கிறது.
எதுவெல்லாம் உங்கள் தெளிந்த அறிவையும்
தாண்டி, தெளிந்த அறிவிற்கும் புலப்பட்டு
நிற்கின்றதோ, அவைகளெல்லாம் இருக்கட்டும்.
மற்றவைகளெல்லாம் அழிந்து போகட்டும்.
மற்றவைகள் அழிவது சமுதாயத்திற்கு நல்லது,”
என்று சொல்கிறார்.
நமது தெளிந்த அறிவிற்கு, தெளிந்த புத்தி
கூர்மைக்கு விளங்குகின்ற விஷயங்களால்
மட்டும்தான் நம்மை உயர்த்த முடியும் என்று
சொல்கிறார்.
உண்மையில், நம்முடைய வேத கலாச்சாரத்தை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் புரிந்துகொள்வீர்கள்... நம்முடைய சனாதன தர்மத்திற்கு மட்டும்தான், ஆன்மீகம் என்கின்ற லட்சியமே இருந்திருக்கிறது. மற்ற எல்லா தர்மங்களும், ஒரு குறிப்பிட்ட சமூக ரீதியாகத்தான் இருந்திருக்கிறது.
ஆன்மீகம் என்ற அடிப்படைக்குள் மூழ்கியது நம்முடைய சனாதன தர்மம் மட்டுமே.
நம் ரிஷிமார்களும், ஞானிகளும் மனிதர்களின் விழிப்புணர்வை உயர்த்த எடுத்த முயற்சிகளும், அதற்காக அவர்கள் செய்த தியாகங்களும், இன்னும் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சேவையையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
வேறு எங்கும் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து செய்யப்பட்டவும் இல்லை. இந்த அளவிற்கு, வேறு யாரும் மனித விழிப்புணர்வின் உள்ளே ஆழமாகச் சென்றதாகத் தெரியவில்லை. வேறு யாரும் இந்த அளவிற்கு உள்ளே ஆழமாகச் சென்று 'ஞானம்' எனும் முத்தை எடுத்ததாக நமக்குத் தெரியவில்லை.
அறிவியலுக்கே உள்ள முதன்மையான குணம், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அவர்களின் நிலையிலேயே இருந்து, அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கத் துவங்குதல். இது நமது சனாதன தர்மத்தில் மட்டும்தான் நடந்து இருக்கிறது.
அதனால்தான், நமது சனாதன தர்மத்தில், உருவ வழிபாடாகிய முதல் நிலையில் இருந்து, அத்வைத வேதாந்தமாகிய இறுதி நிலை வரை, ஞானம் வரை, எல்லா வாய்ப்புகளுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எல்லா வாய்ப்புகளும் எல்லோருக்குமே கிடைக்கிறது;
மேலை நாட்டில் இருப்பது 'சமூக சுதந்திரம்'. அந்தச் சமூக சுதந்திரத்தால்தான் அவர்கள் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டினார்கள். சமூக ரீதியாக அவர்கள் வளர்ந்தார்கள்.
நமது நாட்டிலே 'ஆன்மீக சுதந்திரம்' இருக்கிறது.
மேலை நாட்டிலே நீங்கள் வழிபடும் கடவுளை உங்கள் விருப்பப்படி மாற்ற முடியாது. காரணம், எப்போதும், எல்லோருக்கும் ஒரே ஒரு கடவுள்தான், ஒரே ஒரு வழிபாட்டு முறைதான். ஒரே ஒரு வாய்ப்புதான் வழங்கப்படுகிறது.
உள்ளுலக ரீதியாக சுதந்திரம் கிடையாது. வெளியுலக ரீதியாகத்தான் உங்களுக்கு சுதந்திரம் உண்டு.
உங்கள் ஆராய்ச்சிகளை எல்லாம், வெளி உலகத்தில் செய்யலாம். ஆனால் உள்ளுலகத்தில் செய்ய முடியாது.
ஆனால், சனாதன தர்மத்திலே அப்படி இல்லை.
> சனாதன
>
> தர்மத்தில்தான்
>
> அனைத்து நிலை
>
> மக்களுக்கும்,
>
> அனைத்து
>
> வாய்ப்புகளும்
>
> வழங்கப்படுகிறது.
யார் வேண்டுமானாலும், எந்த ஆன்மீகக் கருத்துக்களை வேண்டுமானாலும் நம்பலாம். எந்தத் தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். எந்த முறையில் வேண்டுமானாலும் வழிபடலாம்.
நமக்கு இன்றும், இந்த மிகப் பெரிய ஆன்மீக சுதந்திரம் இருக்கிறது.
அதனால்தான் நமது நாட்டிலே, இந்த ஆன்மீகம் ஒரு மிகப்பெரிய அறிவியலாகவே வளர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் அதை Research and Development என்று சொல்வோம்.
கணினி நுட்பத்தில், பயன்படுத்துபவருக்கான சொகுசு வடிவமைப்பு (User friendly version) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
ஆன்மீகம் இன்று User friendly version ஆக மாறி இருக்கிறது.
நாம் எல்லோரும் அதை நம் வாழ்வில் உபயோகம்
செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு
இருக்கிறது. அதனால்தான் நம்முடைய நாட்டில்
மக்கள் தொகை என்னவோ, அதே அளவிற்கு
தெய்வங்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.
"ஆன்மீகம் நம் எல்லோருக்கும்
கிடைக்கக்கூடிய, நாம் எல்லோரும்
பயன்படுத்தக்கூடிய, நாம் எல்லோரும் பயணம்
செய்யக்கூடிய சொகுசு வடிவமைப்பு," என்று
சொல்வார்கள்.
நம்முடைய சனாதன தர்மத்தை ஆன்மீக சூப்பர் மார்க்கெட் ("Spiritual super market") என்று சொல்வது வழக்கம்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நம்முடைய அத்தனை தேவைகளும் இந்த நாட்டிலேயே கிடைக்கும். நம்முடைய தர்மம் எதையும் மறுப்பதில்லை.
எந்தெந்த விதத்தில் எல்லாம் நீங்கள் முன்னேற முடியுமோ, அந்தந்த விதத்தில் எல்லாம் உங்களுக்கு அத்தனையும் கிடைக்கும்.
அறிந்தோ, அறியாமலோ ஒருவர் இந்தியாவில் இருப்பதினாலேயே, அவர் ஒரு ஆன்மீக இன்குபேட்டருக்குள் தான் இருக்கிறார்.
ஒரு மனிதர் பிறந்து, ஞானத்திலே மலர்வதற்கு என்னென்ன வேண்டுமோ, அது அத்தனையுமே, அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் சென்று சேர்கிறது.
அவர்கள் தரப்பிலிருந்து, எந்த ஒரு மிகப்பெரிய வேலையுமே செய்யாமல் இருந்தாலும், அதை அவர்களுக்கும் எடுத்துச் சென்று சேர்க்கும் சமூக அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவில் ஞானத்திற்கான கல்வி
இலவசமாக வழங்கப்படுகிறது (Knowledge for
Englightentment is free).
அதை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்
என்கின்ற திறமையும், தேடுதலும் இருந்தாலே
போதும்.
நமது நாட்டிலே, ஆன்மீகக் கல்வி இலவசமாகவே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் முழு சுதந்திரத்தோடு எடுத்துக் கடைபிடித்து, தனக்குள்ளும் அதே ஞான அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள கூடிய, எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் புதுப்பித்துத் தரக்கூடிய ஒருமித்த தெளிந்த அறிவியலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு ஏற்படுத்தித் தருவது என்பது சாதாரண விஷயமல்ல.
ஒரு மனிதர்
பிறந்து,
ஞானத்திலே
மலர்வதற்கு
என்னென்ன
வேண்டுமோ, அது
அத்தனையுமே,
அவர்கள்
அறியாமலேயே
அவர்களுக்குள்
சென்று சேர்கிறது.
ஒருவர் ‘ஞானத்தில் மலர வேண்டும்’ என்று விரும்பினால் அதை உற்சாகப்படுத்தி வரவேற்கும் கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம்.
‘எந்த விதத்திலிருந்து பார்த்தாலும் எல்லோருக்குள்ளும் இந்த ஆன்மீக ஞானம் நடக்க முடியும்’ என்ற சாத்தியக்கூறை இன்றும் நிரூபித்து வரும் ஒரே தர்மம் சனாதன தர்மம்.
எதையும் ஒதுக்காமல், வெறுப்புக்கொள்ளாமல், உதாசீனப்படுத்தாமல் மதிப்புடனும், மரியாதையுடனும் எல்லாவற்றையும் ஏற்று, தன்னுடைய ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டதும் நம் சனாதன தர்மம்தான்.
சிறு வயதிலிருந்து ஆன்மீகம் என்று நாம் பலவற்றைத் தெரிந்து வைத்திருப்போம், புரிந்து வைத்திருப்போம். இந்தப் புத்தகத்தில் உங்களுடன் ஆன்மீகத்தைப் பற்றிய என்னுடைய சொந்த அனுபவத்தை அதன் அறிவியலோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.
இந்த அறிவியல்....
"புத்தருக்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்.
கிருஷ்ணருக்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்.
கிறிஸ்துவிற்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்.
முகம்மதுவிற்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்."
ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உங்களை மேலேற்றும். அதுதான் ஆன்மீகம்.
ஆன்மீகம் ஒரு தெளிந்த அறிவியல்.
ஆன்மீகம் ஒருவரை தெளிவிக்கும் அறிவியல்.
ஆன்மீகம் ஒவ்வொருவருக்குமான 'அவசிய அறிவியல்'
ஆனந்தமாக இருங்கள்! பரமஹம்ஸ நித்யானந்தர்

அவசிய அறிவியல்
உடலுக்கு...
குணப்படுத்தப்பட
வேண்டியது
உடலல்ல...
வாழ்வுதான்.