உங்களாலும் 100 மடங்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சாதிக்க முடியும்
இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஒரு ஆண்டுகாலம் தன்னுள் தானே சுய பரிசோதனை செய்வது.
நாம் நினைக்கலாம்! "ஓராண்டு வீணாய்ப்போகுமே! படிப்பு வீணாய்ப்போகுமே! சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே! அந்தஸ்து வீணாய்ப்போகுமே!" என்று. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால், நீங்கள் இப்போது சாதிப்பதை விட, 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை, உங்களுடைய விருப்பமான துறையாக இருந்தால், உங்களுக்குள் சாதிக்க சாதிக்க சக்தி பொங்கும்.
மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்ட துறையாக இருந்தால், ஒவ்வொரு நாளும் வேதனையும், "ஏன் இந்த வாழ்க்கையை எடுத்தோம்?" என்கின்ற ஒரு சலிப்பும்தான் தட்டும்.
சலிப்புடன் இயங்குகின்ற மனிதர் எதையும் சாதிப்பதில்லை!
சலிப்புடன் இயங்குகின்ற மனிதர் எதையும் தன்னுடைய வாழ்க்கையில் அடைவதில்லை!
ஆனால், சலிப்பின்மையோடு வாழும் மனிதர், சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடையாவிட்டாலும்கூட வாழ்ந்தோம் என்கின்ற மிகப்பெரிய திருப்தியோடு வாழ்கின்றார்.
இன்னொரு விஷயம், சலிப்பின்றி வாழ்கின்ற மனிதர் உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற வெற்றியைத் தாண்டிய நிலையை அடைகின்றார்!
சமுதாயம் சொல்கின்ற வெற்றியையும் அடைகின்றார். அதைத் தாண்டிய நிலையையும் அடைகின்றார்.
ஆனால் சலிப்புணர்வோடு வாழ்கின்ற ஒரு மனிதர் சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடைந்தாலும்கூட துக்கமயமாகத்தான் வாழ்கின்றார்.