நீங்களும் இளைஞர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒவ்வொரு நாளுமே நம்முடைய வாழ்க்கை
ஆசையினாலும், அச்சத்தினாலும்தான்
அலைக்கழிக்கப்படுகின்றது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்புச்சுமை!
அதற்கப்பாற்பட்டு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயம்!
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, வாழ்க்கையையே
ஒரு மிகப்பெரிய கனவாகக் காட்டும் கலை
உலகம்.
தன்னுடைய
உண்மையான
வாழ்க்கை எது? நான்
எதன் மூலமாக மலர
முடியும்?" என்கின்ற
தெளிவு இல்லாமல்
இளைஞர்கள்
தன்னுடைய
வாழ்க்கையை
வீணடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இந்தக் கனவுகளை உண்டு, மேலும் மேலும் அந்தக் கனவுகளை நோக்கியே வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான வாழ்க்கை! ஆரவாரமான வாழ்க்கை!
இதன் பிடியிலே சிக்கி, "தன்னுடைய உண்மையான வாழ்க்கை எது? நான் எதன் மூலமாக மலர முடியும்?" என்கின்ற தெளிவு இல்லாமல் நிறைவு இல்லாமல் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தோ! வீணடித்து முடித்த பிறகுதான் திடீரென விழித்துக் கொண்டு, "ஐயஹோ! வாழ்க்கையை வீணடித்து விட்டோமே" என்று வேதனைப்படுகின்றார்.
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உடலால் 30 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால், உள்ளத்தால் இன்னமும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உற்சாகம் உடையவராக இருந்தால், நீங்கள் இளைஞர். உடலால் 30 வயதிற்குக் குறைந்தவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற ஸ்திரம் உடையவர்களே இளைஞர்கள்.
ஒரு வேளை உடலால் 30 வயதிற்கு மேற்பட்டு, உள்ளத்தில் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற தேடுதல் இருப்பவர்களும், வாழ்க்கையை ஆனந்தத்தால் நிறைக்க வேண்டும், வாழ்க்கையை ஆனந்தத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்கின்ற உந்து சக்தி பெற்றிருப்பீர்களென்றால் நீங்களும் இளைஞர்கள்தான்!