இளமையை இழக்காமலிருக்க...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மரணத்தை நோக்கிய பயணம் 'முதுமை.'
வாழ்வை நோக்கிய பயணம் 'இளமை.'
நம்முடைய வாழ்க்கை பொதுவாக
மரணத்தை நோக்கியதாகத்தான் இருக்கின்றது.
மரணத்தை நோக்கி இருக்கும் வாழ்க்கையை
அளப்பரிய 'வாழ்வு சக்தியை' நோக்கியதாகத்
திருப்புவோமானால், அது இளமையை
நேராக்குவதோடு மட்டும் அல்லாமல் ஆன்மீக
வாழ்க்கையாகவும் நமக்குள் மாறிவிடும்.
இல்லையென்றால் இறுதிவரை ஆசையாலும்,
அச்சத்தாலும் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டு இருப்பீர்கள்.
நாளுக்கு நாள் நீங்கள் முதுமையைத்தான் சேர்த்துக் கொண்டிருப்பீர்கள்.
மரணத்தை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருப்பீர்கள்.
நாளுக்கு நாள்
இளமையை நோக்கி
நீங்கள் மலர்ந்து
கொண்டிருக்கிறீர்கள்
என்று அர்த்தம்.
அப்படியில்லாமல் அன்பினாலும், நன்றியினாலும், கருணைப் பெருக்கினாலும் உங்கள் வாழ்க்கையை உங்களால் கடக்க முடிந்ததென்றால், நாளுக்கு நாள் இளமையை நோக்கி நீங்கள் மலர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒவ்வொரு மனிதருக்கும் இளமையிலேயே குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது, எந்த விதமான ஆசை மற்றும் அச்சத்தின் அழுத்தம் இல்லாமல் அவருக்குள்ளே மூழ்கி, தன்னுடைய வாழ்க்கையை எந்தத் துறையில் தான் வாழ்ந்தால் முழுமையான மலர்ச்சி அடைவோம் என்கின்ற ஒரு சோதனையைச் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அந்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், ஒரு வருடம் தனக்குள் மூழ்கிச் சோதனை செய்து கொள்ளும், தன்னைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதர் மற்ற 99 ஆண்டுகளையும் வீணடிக்கின்றார்.
ஒரு ஆண்டை தனக்காக எடுத்துக் கொண்டு, தன்னைப்பற்றி ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, தன்னைப் பற்றித் தெளிந்த சுய பரிசோதனை செய்து, தன்னை உணர்ந்து, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு அருமையான வகுப்புதான் லைஃப் ப்ளிஸ் டெக்னாலஜி. (Life Bliss Technology).
தன்னைப்
பற்றி ஆழ்ந்து
ஆராய்ச்சி செய்யும்
வாய்ப்பு
கிடைக்காத
ஒரு மனிதர்
மற்ற 99
ஆண்டுகளையும்
வீணடிக்கின்றார்.
அவர் அந்த ஒரு வருட வாழ்க்கையை நிறைவிலேயே வாழ்கின்றார். இதற்கான முடிவை எடுப்பது, நீங்கள் பெங்களூரு செல்ல, பெங்களூரு நெடுஞ்சாலையில் செல்வதா? அல்லது சென்னை நெடுஞ்சாலையில் செல்வதா? என்று முடிவெடுப்பதைப் போன்றது...
நீங்கள் அந்த வண்டியைத் திருப்புகின்ற ஒரு கணம்தான், எந்த இடத்திற்கு நீங்கள் போய்ச் சேரப்போகின்றீர்கள் என்கின்ற மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்திற்கு சென்று சேரப் போகின்றீர்கள் என்பது விளைவு. அந்த விளைவை ஏற்படுத்துகின்ற அடிப்படையான காரணம், நீங்கள் எடுக்கின்ற இந்த ஒரு முடிவுதான்.
மற்றபடி பயணம் எந்தப்பக்கமாக இருந்தாலும் ஒன்றுதான். எடுக்கின்ற ஒரு சின்ன முடிவுதான் விளைவையே மாற்றுகின்றது. அதேபோல், ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அடுத்த 50 ஆண்டுகாலம், 60 ஆண்டுகாலம் வாழ்க்கைப் பயணம் என்பது ஒன்றுதான். ஆனால் எடுக்கின்ற திசைதான் விளைவை முடிவு செய்யப் போகின்றது.
என்னைப் பொறுத்தவரை, "ஒவ்வொரு இளைஞரும் ஓராண்டு காலமாவது தன்னைப்பற்றி ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்தத் துறையில் படிப்பதன் மூலம், எந்தத் துறையில் வேலை செய்வதன் மூலம், எந்தத் துறையில் இயங்குவதன் மூலம் தான் முழுமையாக வாழ்க்கையில் மலர முடியும். எந்தத் துறையில் இயல்பாகவே நம்முடைய சக்தி முழுமையாகப் பொங்குகின்றது" என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன். இந்த வாய்ப்பை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வாழ்க்கைக் கல்வியாக வடிவமைத்து வழங்குகின்றோம். இந்தக் கல்வி தன்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பும் தீரர்களுக்கானது.