நீங்கள் இளைஞரா? வயோதிகரா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வாழ்க்கையின் சாரம் இளமைக்காலம்.
இளமைக் காலத்தில் மட்டும்தான், "உடல் ரீதியான அபாரமான சக்தியும், உணர்வு ரீதியான அற்புதமான பலமும், ஆன்மீக ரீதியாக இயங்கும் ஆத்ம சக்தியும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் முழுமையாக இருக்கின்றது."
மனிதர்கள் முதுமை அடைந்த பின்பு, அவர்களுக்கு அனுபவங்கள் ஏராளமான இருக்கும்.
ஆனால், எத்தனை அனுபவங்கள் அவர்கள் கையில் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கையைத் திருத்திக் கொண்டு வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது.
அனுபவத்தின் மூலமாக நாம் எதை மேம்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றோமோ, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பார்க்க வாழ்க்கை அவர்களுக்கு இருப்பதில்லை. முக்கியமாக, அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இளைஞர்கள் ஆயிரம் தவறுகளுடன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், சாதிக்கத் தேவையான சக்தி அவர்களிடம் இருக்கின்றது.
ஆனால் வாழ்ந்து முடித்தவர்களுக்கோ, எத்தனை கடந்த கால அனுபவ அறிவு இருந்தாலும், 'இப்படி வாழ வேண்டும், அப்படி வாழ வேண்டும்' என்கிற எண்ணம் இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கை என்கின்ற வாய்ப்பு முடிந்து விட்டது. இளைஞர்கள் மட்டும்தான் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கும் சக்தியோடும், மனத்துணிவோடும் இருக்கின்றார்கள்.
இளைஞர்களின் பொறுப்பைப் பற்றியும், பொறுப்பின்மையைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். பொறுப்பு என்பது முழுவதுமாகத் தனிமனிதர் சம்பந்தப்பட்டது. தன்னுடைய தனிமனித எழுச்சி சம்பந்தப்பட்டது.
"ஒவ்வொரு மனிதரும் 'தான் யார்'? எந்தத் துறையில் சென்றோமானால் தன்னுடைய வாழ்க்கையைத் தன்னால் மலர வைத்துக்கொள்ள முடியும், எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் சக்தியை மேலும், மேலும் தனக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்" என்பதை உணர்வதுதான் அடிப்படையான பொறுப்பு.
பொறுப்பு என்பது எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்கு அபாரமான சக்தி பொங்குகின்றது, எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்குள் முழுமையான சக்தி மலருகின்றது, எந்தத் துறையில் செல்வதன் மூலம் தன் உயர்வுக்கு, சக்தி வேருக்குச் செல்கின்றோம் என்பதைத் தெரிந்துகொள்வதுதான்.
நாம் எந்தத் துறையில் நுழைந்தால், நம்முடைய முழுமையான சக்தி மலருகின்றது. நாம் எந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தால் நம்மால் இனிமையாக இயங்க முடிகின்றது, நம்முடைய வாழ்க்கை எந்தத் துறையில் மலரும் என்பதைத் தெரிந்துகொள்வதைதான் இளைஞர்களின் பொறுப்பாக சொல்கிறேன்.
இளைஞர்களின் முதல் பொறுப்பே, தம்முடைய வாழ்க்கையில் தாம் சாதிக்கக்கூடிய, தம்முடைய வாழ்க்கை முறையைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்து கொள்வதுதான்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார்...
"குறிக்கோள் இல்லாத ஒரு மனிதர் 100 தவறுகள் செய்வாரென்றால்,
குறிக்கோளோடு வாழ்கின்ற ஒரு மனிதரால் இரண்டு தவறுக்கு மேல் செய்யவே முடியாது'' என்று.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! குறிக்கோள் தெளிவாக இருக்கும் போது, உங்களை அறியாமல் அனாவசியமாக சக்தியை வீணாக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் பொழுது அதைத் தாண்டி, உங்களுடைய சக்தியை அனாவசியமாகச் சீரழிக்க மாட்டீர்கள்.
குறிக்கோள் இல்லாதவர்கள், கண்ணில் பார்க்கின்ற துறையில் எல்லாம் கால் வைத்து, தன்னுடைய பொறுப்பை உணராமல், மீண்டும் மீண்டும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் மிகப்பெரிய இழிவை, இழிவுத் தன்மையை தந்து கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கையை வாழ, வாழ உங்களுக்குள் சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள்.
வாழ்க்கையை வாழ, வாழ, உங்களுக்குள்
சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள்.
வாழ்க்கையை வாழ, வாழ, நீங்கள் மந்தத்
தன்மையை நோக்கிச் செல்வீர்களானால் நீங்கள்
வயோதிகர்கள்.
"நீங்கள் இளைஞர்களா? வயோதிகர்களா?"
என்பதை இதை வைத்துத்தான் முடிவு செய்து
கொள்ள வேண்டும்.
உங்களுடைய வயதைவிடவும், உங்களுடைய
சூழ்நிலையை விடவும், நீங்கள் இளைஞர்களா?
வயோதிகர்களா? என்பதை உங்கள்
மனநிலைதான் முடிவு செய்யும்.
வாழ்க்கையை வாழ வாழ, தினமும் வாழ்வதற்கான சக்தியும், உற்சாகமும் எப்பொழுது உங்களுக்குள் பொங்குகின்றதோ, அப்பொழுது நீங்கள் இளமைத்தன்மைக்குள் நுழைகின்றீர்கள்.
வாழ்க்கையை வாழ, வாழ எப்பொழுது நாளுக்கு நாள் மிகவும் மனச்சோர்வும், சோம்பலும் அதிகரித்து மந்தத்தன்மைக்குள் நுழைகின்றீர்களோ, அப்பொழுது நீங்கள் முதுமையை நோக்கிப் பயணிக்கின்றீர்கள்.