உச்சத்தைத் தொடுவீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மிக ஆழமான ஒரு கருத்து. புத்தரே 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானம் அடைந்தார். ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரையும் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்.
இதைப்பற்றி புத்தரிடம் ஒருவர் கேட்டார், "ஐயா! நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானமடைந்தீர்கள்! ஆனால் நீங்கள் இளைஞர்களை மட்டும் உங்கள் சீடர்களாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்! இளைஞர்களை மட்டுமே இந்த ஆன்மீக வாழ்க்கைக்குக் கொண்டு வருகின்றீர்களே! காரணம் என்ன?" என்று.
அதற்கு அவர் "வயது முதிர்ந்தவர்களால் ஞானமடைவதற்குத் தேவையான முழு சக்தியையும் உள்வாங்குவது கடினம்" என்று சொன்னார். அதேபோல் மனிதரின் மனமும், மனித மனத்தின் எண்ண ஓட்டங்களும் ஒருமுறை உடைந்து இறந்துவிடுமானால், மனிதனின் மனோசக்தி ஒருமுறை உடைந்து இறந்து விடுமானால், அதை மீண்டும் ஒரு கட்டிற்குள் எடுத்து வருவதும், அதை மீண்டும் ஒரு மூட்டையாகக் கட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.
எந்தத் துறையை எடுத்தீர்களானாலும், அந்தத் துறைக்குள் தனது சக்தியை இளமைக் காலத்தில் செலுத்துகிற ஒரு மனிதர் மட்டும்தான் அந்தத் துறையின் உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியும். அந்தத் துறையின் இறுதியைத் தொடமுடியும். ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும், இளமைக்காலம் அற்புதமான காலம்.