உருவாக்கும் சக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இளமையிலே நீங்கள் எதற்காக உங்கள் சக்தியைச் செலவிடுகின்றீர்களோ, எதை நோக்கி உங்கள் மனம் ஆழ்ந்து ஈர்க்கப்படுகின்றதோ, அதே வழியில்தான், அதே முறையில்தான் உங்களுடைய வாழ்க்கை முழுமையாக அமையும்.
நம்
வாழ்க்கையைப்
பற்றி
முடிவெடுப்பதும்,
நம்முடைய எதிர்கால
வாழ்க்கைப்
பாதையை
தேர்ந்தெடுப்பதும்
இளமைக்
காலங்களில்தான்.
நம் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதும்,
நம்முடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை
தேர்ந்தெடுப்பதும் இளமைக் காலங்களில்தான்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு,
இளமைக்காலத்தில் உங்களுக்குள்ளே ஒரு
உயிரையே உருவாக்கும் சக்தி மலருகின்றது.
இக்காலத்தில்தான் மனிதருடைய அடிப்படை சக்தியான காமம், இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தியாக அவருக்குள் மலருகின்றது. இன்னொரு உயிரையே இந்த சக்தியினால் உருவாக்க முடியும் என்றால், அந்த சக்தியை அவர் முறையாக உபயோகப்படுத்தினால், தன்னைத் தானாகவே முழு மனிதராக, புது மனிதராக உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆழ்ந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து, இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தி முறையாக உபயோகப்படுத்தப்படும் பொழுது, அதை முறையாக நாம் நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு விடுவோம். அப்பொழுது, இன்னொரு உயிரை மட்டுமல்லாமல், நம்மையும்கூட ஒரு புது மனிதராக உருவாக்கிக் கொள்ள முடியும்.
அந்த சக்தி நம்மையும் ஒரு புது மனிதராக உருவாக்கி விடும்.
அடிப்படையாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் என்னவென்றால்...
ஒன்று: இளமைக்காலம் போற்றத்தக்கது. உடல் ரீதியாக தன் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையே உருவாக்கக் கூடிய சக்தி நமக்குள் நிறைந்து பொங்கி வழிகின்ற காலம்.
இரண்டாவது: மனரீதியாகதான் நம்பும் கருத்துகளைத் தன்னுடைய வாழ்க்கையில் சோதித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்திற்கும் எடுத்துச்சென்று சேர்க்கவேண்டும் என்கின்ற துடிப்பும், மனோசக்தியும் இருக்கும் காலம்.
மூன்றாவது: நாம் எந்தக் கொள்கையை நம்புகின்றோமோ, ஏற்றுக் கொள்கின்றோமோ, எந்தக் கொள்கையை நாம் நம் மனதால் உணர்கின்றோமோ, அந்தக் கொள்கைக்காகத் தன் வாழ்க்கையை முழுமையாகத் தியாகம் செய்யும் தைரியமும், ஆன்ம பலமும் இருக்கின்ற காலம்.
இளமைப் பருவத்தில் மட்டுமே இந்த மூன்று விஷயங்களும் இருப்பதனால், இளமைக்காலமே ஆன்மீகத்திற்கான, முழுமையான ஆன்மீக வாழ்க்கையைத் துவங்குவதற்கான, தன்னுடைய வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமயமாகவும் மாற்றுவதற்கான காலமாக இருக்கிறது.