பிரபஞ்ச சக்தி உங்களுக்காகவே இறங்கி வருகிறது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தன்னைச் சுற்றியும், தன் மீதும் புற்று உருவானது கூடத் தெரியாத காரணத்தினாலேதான் அவருக்கு ‘வால்மீகி’ என்று பெயர் பிறந்தது.
வால்மீகம் என்றால், சமஸ்கிருத்திலே பாம்புப் புற்று, கரையான் புற்று என்று பெயர். புற்றிற்குள் பாம்பு குடி புகுந்திருக்கும், அதன் மேலே சுற்றி கரையான் புற்று மூடியிருக்கும்.
கரையான் புற்றிற்கு வால்மீகம் என்று பெயர். கரையான் புற்று எழும் அளவிற்கு, அந்த தியானத்திலே ஆழ்ந்து இருந்ததினால், சமாதியிலே மூழ்கி இருந்ததினாலே வால்மீகி என்று பெயர் வந்தது...
அதன்பிறகு, அவருக்குப் பிரபஞ்ச சக்தி மனித உருவெடுத்து தரிசனம் அளித்து ஞானமளிக்கிறது.
ஞானமடைந்து, புற்றிலிருந்து வெளியே வந்தபோது, உடன் அவருடைய அனுபூதியிலிருந்து வெளியே வந்த காவியம் ‘இராமாயணம்’.
வால்மீகியின் அனுபூதியிலிருந்து வெளி வந்த காவியம்தான் இராமாயணம் எனும் ஒரு பரவலான கருத்தும் நம்முடைய சாஸ்திரங்களில் சூத்திரமாகவும் இருக்கின்றது. வால்மீகி எழுதி வைத்தது போல நடிப்பதற்காகவே இறைவன் அவதாரமாக இறங்கி வந்தார்.
ராமர் அவதரிப்பதற்கு முன்பாகவே, வால்மீகி இராமாயணத்தை எழுதி விட்டார் என்று ஒரு கதை உள்ளது.
வால்மீகி எழுதியதற்காகவே இறைவன் வந்து நடித்தார். ஏனென்றால், வால்மீகி சொன்ன வார்த்தை உண்மையாக மாற வேண்டும் என்பதற்காகத்தான். அவ்வளவு பெரிய ஞானி, பக்தன் வால்மீகி.
இந்தக் கதையினுடைய சாரம்
என்னவென்றால், ஆழமான உணர்வு மாற்றம்
நடந்துவிட்டதென்றால், இந்த உலகம்
நிரந்தரமாகவும், சத்தியமாகவும் தெரியாது.
கனவில் பார்ப்பதெல்லாம் ஆழமாக, தெளிவாகத் தெரிகின்ற வரை உங்களால், கனவு தாண்டிய நனவு உண்டு என்று யோசித்துக்கூட பார்த்திருக்க முடியாது.
அதேபோன்று, நனவு தெளிவாக
தெரிகிறவரைக்கும், இதை தாண்டிய "ஞான
நிலை" உண்டு என்று உங்களால் யோசித்துக்கூட
பார்த்திருக்க முடியாது.
ஆழமான
உணர்வு மாற்றம்
நடந்து
விட்டதென்றால்,
இந்த உலகம்
நிரந்தரமாகவும்,
சத்தியமாகவும்
தெரியாது.
கனவின் மீதுகூட, 'இது கனவு' என்கின்ற சந்தேகம் வரும் பொழுதுதான் விழித்துக்கொள்வோம். அதேபோல் 'நனவும்' ஒரு குறைப்பட்ட சத்தியம்தான், முழு சத்தியம் அல்ல என்ற சந்தேகம் வரும் பொழுதுதான் அதிலிருந்து விழித்துக்கொள்வீர்கள்.
எப்படி அந்த சந்தேகத்தை வரவழைப்பது? அதுதான் சூட்சுமமே.
உங்களுடைய சம்ஸ்காரங்களை ஆழ்ந்து பாருங்கள். எந்தெந்த சம்ஸ்காரங்கள் உங்களுடைய ஆணிவேர் என்று பாருங்கள். எது இல்லாமல் வாழமுடியாதென்று நினைக்கிறீர்களென்று பாருங்கள். எதையெல்லாம் ஸ்திரமாக பிடித்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். அப்பொழுது சில ஆசைகள் இருப்பதை கண்டுபிடிப்பீர்கள். அதேபோன்று, இது நடந்துவிட்டால் வாழமுடியாதென்று சில பயங்கள் இருக்கும். சில ஆசைகள், அச்சங்கள் இருக்கும். இதில்தான் உங்களின் ஆணிவேர் இருக்கும். அந்த ஆணிவேரை உலுக்கிவிடுங்கள்.
எப்படி உலுக்குவது? என்றால்...
"இது இல்லாமல் வாழ முடியாதென்று இருக்கும் ஆழமான ஆசையைத் தேர்வு செய்து, தொடர்ந்து பத்து நாளுக்கு அது இல்லையென்று தியானம் செய்யுங்கள்.
நீங்கள் நினைக்கலாம், "அப்படி நினைத்தால் உண்மையிலேயே அவர் செத்துப்போய்விடமாட்டாரா?" என்று. கவலைப்படாதீர்கள். சாகவேமாட்டார். அது ஒரு பயம்தான். இந்த பயம்கூட உங்களைவிட்டு போயாக வேண்டும். நீங்கள் நினைக்காமல் இருந்தால், சாகாமல் இருப்பார் என்பது என்ன நிச்சயம்?
அதேபோல், எந்தப் பொருள் இல்லாமல் வாழமுடியாதென்று நினைக்கின்றீர்களோ, 'அது இல்லை' என்று பத்து நாள் நினையுங்கள். அதனால் வரும் துக்கமென்றாலும் பொங்கட்டும்.
ஒரு மரத்தின் ஆணிவேர் பிடித்திருக்கின்ற மண்ணையெல்லாம் கழுவுவது போல் தண்ணீர் ஊற்றினோமானால், வெள்ளம் வந்தால் அந்த மரம் காணாமல் போய்விடும். அது போல், உங்களின் ஆணிவேர் எங்கெங்கெல்லாம் பிடித்து வைத்திருக்கிறதோ, பார்த்துப் பார்த்து அதெல்லாம் கரைந்து போவதுபோல், ஞான வெள்ளத்தைப் பெருக விடுங்கள். உணர்வு வெள்ளம் பெருகட்டும்.
அதேபோல், 'இது நடந்துவிடக்கூடாது, நடந்துவிட்டால் வாழமுடியாது!' என்று எதன் மீதாவது பயம் இருந்தால், 'அது நடந்து விட்டதாக' ஆழ்ந்து பாருங்கள். இந்த பயம் உடம்பெல்லாம் உதறட்டும், நடுங்கட்டும், நெஞ்சு அடைக்கட்டும், உணர்வு பரபரக்கட்டும், தப்பில்லை! உணர்வு வெள்ளத்தாலே உங்களை மூழ்கடியுங்கள், நிறைய வையுங்கள்.
எந்தெந்த இடத்தில் வேர் பிடித்து இருக்கிறீர்களோ, அது உலுக்கப்பட்டாலே தீக்ஷைக்கு தயாராகிவிடுவீர்கள்.
நாரதர், வால்மீகிக்குச் செய்த வேலை உங்களுக்குள் நடந்துவிடும். பிறகு தீக்ஷைக்கு தயாராகிவிடுவீர்கள்.
ஆழமான உணர்வு மாற்றமே (Pschycological Revolution) ஞானத்திற்கு முதல் படி.
வேடனாக இருந்தபோது ஏற்றப்பட்ட ஆழமான உணர்வுத் தெளிவே, வேடன் வால்மீகியாக மாற வித்தாக இருந்தது.
மேம்போக்கான மாற்றம் உருமாற்றம் அல்ல. Superficial change is not transformation.
ஆழமான உணர்வு மாற்றம், 'Congnitive Shift'
என்று ஆங்கிலத்தில் சொல்லுவோம். அந்த
உணர்வுமாற்றம்நடைபெற்றால்தான்உருமாற்றம்
சாத்தியம். இந்த ஆழமான உருமாற்றத்தை
உங்களுக்குள் ஏற்படுத்தி உங்களுக்கு உதவ
வருபவர்களே குருமார்கள். நாரதர் ஞான
குருவாய் இருந்து படிப்படியாக தீக்ஷைகளை
தந்தவுடன், வேடனுக்குள் ஆழமான உணர்வு
உருமாற்றம் நிகழ்ந்தது. அதுவரை உணர்வு
தடுமாற்றம் இருந்தது.
உணர்வு தடுமாற்றத்தை உணர்வு உருமாற்றமாக
மாற்ற ஞான குரு அளிக்கும் புரிந்துக்
கொள்ளுதல்தான் 'தீக்ஷை'.
உங்களை விழிப்பித்துக் கொள்வதுதான், நீங்கள் உங்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை.
ஜீவன் முக்தி, தன்னை ஆழமான உணர்வு உருமாற்றத்திற்குள் அனுமதிப்பவர்களுக்கானது.
உள்ளுலகத்தில் ஜீவன் முக்தராக வாழ்வதற்கும், வெளியுலகில் சாதிப்பதற்கும்கூட இந்த 'Pschycological Revolution' ஒருவருக்குள் நிகழ வேண்டும்.
உங்கள் உணர்விற்குள் வேர் பிடித்திருக்கும் ஆசைகளையும், அச்சங்களையும் தாண்டி ஆழமான உணர்வு மாற்றத்திற்குள் செல்வது தான் உங்கள் வாழ்க்கைக்கும் உபயோகமாக இருக்கும்.
தனிமனித உருமாற்றமே மனித குலத்தின் எழுச்சி.
நீங்கள் ஜீவன் முக்தராக உருமாறுவதே, மனித குலத்தின் எழுச்சி.
நீங்கள் உணர்வில் எழுந்திருங்கள்! மனித குலம் தன்னால் எழுந்து நிற்கும். இதுதான் நான் தனி மனிதருக்கு சொல்ல விரும்பும் செய்தி.


அவசிய அறிவியல்
இளைஞர்களுக்கு...
ஓராண்டு காலமாவது
உங்களுக்குள் ஆழ்ந்து
பரிசோதனை செய்து,
வாழ்க்கையின்
தன்மையை
உயர்த்துங்கள்.