KAILASA Library/அவசிய அறிவியல்/ஆணிவேரே அசைக்கப்படும்Sign in
அவசிய அறிவியல்

ஆணிவேரே அசைக்கப்படும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மருந்து இடிக்கப்பட்ட பீரங்கியாக இருந்தால்தான் தீக்ஷை பற்றிக் கொள்ளும்.

மருந்து இடிக்கப்பட்ட பீரங்கியாக இருந்தால், நெருப்பு வைத்த உடனேயே வெடித்துவிடும். மருந்து இடிக்கப்படாத பீரங்கியாக இருந்தால், தீப்பந்தமே வைத்தாலும் வெடிக்காது.

மருந்து இடிக்கப்பட்ட பீரங்கி என்றால், வாழ்க்கையினுடைய பல்வேறு அனுபவங்களையும் ஆழமாகப் பார்த்த மன அமைப்பு. அந்த மனதிற்கு, இந்த சத்தியம் சொல்லப்பட்டால், நெருப்பு வைத்தது போன்று உடனே வெடித்துவிடும்.

'வால்மீகி' மருந்து இடிக்கப்பட்ட பீரங்கி போன்று தயாராகி இருந்தார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்.

திருமணமாகி காட்டிற்கு வந்த ஆனந்தமான தம்பதிகள், இவரைப் பார்ப்பதற்கு முன்னால் ஆனந்தமாக இருப்பதையும் பார்த்து இருக்கிறார். இவர் அவர்கள் முன்னால் நின்ற உடனேயே, அவர்கள் உடலும் மனமும் கிடுகிடுவென்று நடுங்குவதையும் பார்த்து இருக்கிறார்.

அவர்களைக் கொன்று, நகைகளை கொள்ளையடித்த போது, அவர்களுடைய துக்கத்தின் உச்சியையும் பார்த்து இருக்கிறார்.

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களை,
பலருக்கு காட்டியதோடல்லாமல் தானும்
பார்த்து இருக்கிறார், கொலைகாரராக.

அவரையே அசைத்து விட்டார் நாரதர்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? மருந்து இடிக்கப்பட்ட பீரங்கி போன்று தயாராக இருந்தவருக்கு சரியான தீக்ஷை நிகழ்ந்திருக்கின்றது. எந்த இடத்தில் மருந்து இருக்கிறது? எந்த இடத் தில் நெருப்பு வைக்கவேண்டுமென்று நாரதருக்குத் தெரியும். அதனால், பற்றவைக்க வேண்டிய இடத்தில் சரியாகத் தீயை வைத்துவிட்டார்.

வேடனுக்கு இருந்த ஒரே ஆதாரம், குடும்பத்தின் மீதிருந்த மனரீதியான பலம்தான். எதை நம்பிக்கொண்டு, தன்னுடைய பலமாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தாரோ, எந்த மன உளைச்சலும் இல்லாமல் இருந்தாரோ அதைப்பற்றி புரியவைத்தார். எதற்காக எந்த துக்கமும் இல்லாமல், இத்தனை கொடுமைகளையும் செய்து வந்தாரென்று நாரதருக்கு தெளிவாகத் தெரியும். சரியாக அந்த இடத்தில் உலுக்கிவிட்டார். அவரின் ஆணிவேரையே அசைத்துவிட்டார்.

அரை மணி நேரத்தில், அவர் எதையெல்லாம் ஆதாரமென்று நினைத்திருந்தாரோ, அதன் மீது இருந்த ஈர்ப்பு எல்லாம் கொலைகாரனிடமிருந்து விடுபட்டுப் போனது. ஆணிவேர் அசைந்தது, நின்று கொண்டிருந்த நிலம் நகர்ந்தது.

கடைசியாக பிடித்துவைத்திருந்த எல்லாவற்றையும் உதறி விட்டு வந்தான் கொலைக்காரன். எல்லாமே அவனிடமிருந்து விடுபட்டுப் போனது. 'இது எதுவுமே நிரந்தரமில்லை' என்கின்ற மிகப் பெரிய தெளிவு பிறந்தது. மிகப்பெரிய துக்கத்தை சந்தித்த உடனேயே, நிலைகுலைந்து போய் நாரதரிடம் திரும்பி வந்தார்.

அரை மணி
நேரத்தில், அவர்
எதையெல்லாம்
ஆதாரமென்று
நினைத்திருந்தாரோ,
அதன் மீது
இருந்த ஈர்ப்பு
எல்லாம்
விடுபட்டுப்
போனது.

எளிமையாக இருப்பவர்களுக்கு தீக்ஷை விரைவில் நிகழ்ந்துவிடும்.

அர்ஜூனனுக்கு ஏற்பட்ட விஷாதம் (குழப்பத்தைப் போல), துக்கத்தைப் போல, வால்மீகியும் துக்கத்தின் உச்சிக்கே சென்றார். அர்ஜூனனுக்கு துக்கம் ஏற்பட்ட காரணம் வேறு. அவனுக்கு 'இதெல்லாம் தன்னைவிட்டுப் போய்விடுமே' என்ற கவலை. தன் உறவினர்கள் எல்லாம் சென்று விடுவார்களே என்ற கவலையிலே அவனுக்கு துக்கம் ஏற்பட்டது.

வால்மீகிக்கோ, 'இவர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டார்களே' என்ற துக்கம். ஆனால் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே நிரந்தரமில்லை என்று தெரிந்தவுடன் வருகின்ற துக்கம் அது. குழப்பத்தில் ஏற்படுகின்ற மன ஆட்டம்.

மீண்டும், மீண்டும் அர்ஜூனன் சொல்கிறான், 'ஸ்வஜனா' என்று. 'அர்ஜூன விஷாத யோகம்' முதல் அத்தியாயத்தில், அர்ஜூனன் "என்னுடைய மக்கள்" "என்னுடைய மக்கள்" என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

அந்த உணர்வுகள்தான் அவருக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அர்ஜூனன் மூளைரீதியானவர் என்பதால், அதை கருணை என்று சொல்லி மூடி மறைக்க முயன்றார்.

நான் சிலரைப் பார்த்து இருக்கிறேன். குறிப்பாக இளம் வயது இளைஞர்களுக்கு, பிள்ளைகளைப் பார்த்தால் மட்டும்தான் கருணை வரும். பஸ்ஸில் வயதான பாட்டிகள், தாய்மார்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்திருந்தாலும், அவர்களுக்காக எழுந்து இடம் கொடுக்க மாட்டார்கள். வயதுப் பிள்ளைகள் வந்தார்களென்றால், உடனே கருணை வந்துவிடும், உடனே எழுந்து இடம் கொடுப்பார்கள்.

தன் உணர்வுகளை வேறு, வேறு வார்த்தைகளாக சொல்லத் தெரிந்தவரைத்தான் பட்டறிவுடையவர் என்று சொல்கிறேன். அர்ஜூனன் பட்டறிவு மனம் உடையவர். அரசர் அல்லவா! எப்படி மூடி மறைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

கருணையை, பந்தத்தைப் போல வைத்து
வாழ்பவர் 'ஞானி'. பந்தத்தைக் கூட,
கருணையைப் போல காட்டுபவர் 'அஞ்ஞானி.'
அர்ஜூனன் அதைத்தான் செய்கிறார். பந்தத்தை
கூட கருணையைப் போல காட்டினார்.

வால்மீகி அந்த அளவுக்கு பட்டறிவு அனுபவம் பெற்றவர் இல்லை.

அவரிடம் பட்டறிவே இல்லை.

அதனால், அந்த துக்கத்தை உள்ளது உள்ளபடியே
நாரதரிடம் வெளிப்படுத்தினார். நல்லவேளை!
அதனால்தான் நாரதர் எழுநூறு ஸ்லோகங்கள்
சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அர்ஜூனன் புத்திசாலியான முட்டாள்.

தன்னுடைய முட்டாள்தனத்தைக் கூட மறைத்து மறைத்து, பல்வேறு வார்த்தைகளைக்கொண்டு விளையாடுகின்ற மனம் உடையவர். அதனால்தான் கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் எழுநூறு ஸ்லோகங்கள் சொல்லவேண்டி இருந்தது.

ஆனால் வால்மீகி மிக எளிமையானவர். வேடன், பண்டிதர் அல்ல. மறைத்துப் பேசத் தெரியாதவர். தனக்கு ஏற்பட்ட துக்கத்திலே இடிவிழுந்தாற் போல் கலங்கியவர் அப்படியே வந்து நாரதர் காலில் விழுந்தார். அந்த இடத்தில்தான், அவருக்கு ஆழமான உணர்வு மாற்றம் (Psychological Revolution) நடந்தது, Cognitive shift நடந்தது.

ஞானமடைவதற்கு முதல் தேவை, ஆழமான உணர்வு மாற்றம். (Psychological Revolution)

எதை அவர் ஆணித்தரமாக, அடித்தளமாகப் பிடித்திருந்தாரோ, அதை நாரதர் உலுக்கிவிட்டார். அப்போது நாரதர் சொல்கிறார், "அப்பா! இப்போது வா. இதற்கு மேல்தான், நீ ஆழமாக உனக்குள்ளே போகமுடியும்" என்று புரிய வைத்தார். அதுதான் தீக்ஷை.

கொலைகாரன், "எனக்கு கதி மோக்ஷம் என்ன? என் கர்மத்திலிருந்து யார் விடுடுத்துவார்கள்?" என்று நாரதரிடம் தீர்வு கேட்டார்.

அப்போது, நாரதர் அருகிலுள்ள மரத்தைக் காட்டி, 'இதன் பெயர் என்ன?'

ஞானமடைவதற்கு
முதல் தேவை,
ஆழமான
உணர்வு
மாற்றம்.
(Psychological
Revolution)

என்று கேட்டார் அவன் 'மரா' என்று சொல்கிறான். 'அதையே திரும்பத் திரும்பச் சொல்' என்றார் நாரதர். அவனும் அதையே சொல்கிறான். 'மரா மரா மரா மரா' என்று சொல்லச் சொல்ல அது 'ராம ராம ராம ராம' என்று மந்திரமாக மாறி விடுகிறது.

ஏனென்றால், இவர் மந்திரமாக எதையேனும்
கொடுத்தால் கூட அவருக்கு, அதை சொல்லத்
தெரியாது என்பதால் இப்படிச் சொல்லச்
சொன்னார் நாரதர். அங்கேயே அப்படியே
உட்கார்ந்து அதை ஜெபிக்க ஆரம்பித்த
வேடன்தான் வால்மீகி முனிவரானார்.

கொலைக்காரனுக்குள் துக்கத்தினுடைய ஆழமான உலுக்கலில் Psychological Revolution ஏற்பட்டது. இப்படி உலுக்கல் நிகழும்பொழுது அந்த நேரத்தில் ஞானத்தை நோக்கிச் சென்றோம் என்றால், ஆழமாக ஞானத்திற்குள்ளே சென்று விடுவோம்.

ஏனென்றால், வெளி உலகத்தில் உங்களை ஈர்ப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. ஈர்ப்பதற்கு ஏதாவது இருந்தால்தான் மனம் வெளியே வந்து, உள்ளே சென்று ஏகப்பட்ட சங்கடங்களுக்கு நடுவிலே, தயிர் கடைகிற மத்துப்போல படாத பாடுபடும். வால்மீகிக்கு வெளியே இருப்பின் தேவையே இல்லை. எல்லாமே அறுபட்டுப்போய் விட்டது.

இது ஒவ்வொருக்கும் நிகழும் வரை, எல்லாமே கயிற்றில் கட்டப்பட்ட கீரிப்பிள்ளைகள் தாம்.

மிக அழகாக ராமகிருஷ்ணர் சொல்வார், "மழைக் காலங்களில், கீரிப்பிள்ளைகள் ஒரு சின்ன பொந்து தோண்டி, அதற்குள்ளே ஒளிந்துகொள்ளுமாம். அந்த கிராமத்துப் பிள்ளைகள் கீரிப்பிள்ளையைப் பிடிப்பதற்காக அதன் வாலில் நூலைக்கட்டி, அதை ஒரு செங்கல்லோடு கட்டி வைத்து விடுவார்களாம்.

என்னதான் கீரிப்பிள்ளை பொந்துக்குள்ளே ஒளிந்தாலும், இந்த செங்கல்லை பிடித்து, இழுத்தாலும் கயிற்றைப் பிடித்து இழுத்தாலும் என்னவாகும்? அழகாக கீரிப்பிள்ளை வெளியில் வந்துதான் தீர வேண்டும்.

அந்தக் கயிற்றை வெட்டிய பிறகு, கீரிப்பிள்ளைக்கு வெளியில் போக வேண்டிய தேவையும் இருக்காது, வெளியேயும் போகாது. நம்மை வெளியில் பிடித்து இழுக்கின்ற எல்லா கயிறுகளையும் வெட்டி விட்ட பிறகு சாதனை நடந்ததென்றால், முழுமையாக மலர்ந்து விடுவோம்.

வால்மீகிக்கு நாரதர் அதைத்தான் செய்தார்.
பொந்துக்குள் சென்று எப்படி உட்காருவது
என்று அவர் காட்டவில்லை. முதலில், வாசலில்
உள்ள கயிறை எல்லாம் அறுத்து விடுகிறார்.
அதைத்தான் செய்கிறார், 'வீட்டிற்குப்போய்
கேட்டுவிட்டு வா' என்று அவரை அனுப்பி
வைத்தார்.

வால்மீகி மிகப்பெரிய புண்ணியசாலி. அவர்
மனம் எளிமையாகவும், மருந்து அடைக்கப்பட்ட
பீரங்கியாக நிறைந்து இருந்தது ஒரு காரணம்.

வால்மீகி மிகப்பெரிய
புண்ணியசாலி.
அவர் மனம்
எளிமையாகவும்,
மருந்து
அடைக்கப்பட்ட
பீரங்கியாகவும்
நிறைந்து இருந்தது
ஒரு காரணம்.

இரண்டாவது, சரியான குரு, ஞான நெருப்பை வைக்கவேண்டிய இடத்தை கண்டுபிடித்தது இரண்டாவது காரணம்.

இரண்டு காரணத்தினால் ஞானத்தில் வெடித்தார் வால்மீகி. இருந்த கயிறு எல்லாம் அறுபட்டுப் போய்விட்டது. அவர் வந்து நாரதர் காலில் விழுந்ததும், நாரதர் அவருக்கு தீக்ஷை அளித்தார், அந்த வினாடியே ஞானத்திற்கான தீக்ஷை நடந்து விடுகிறது.

இது மிக அருமையான கதை,

‘வெளி உலகத்தையே மறந்து, தன் உடலையே ‘புற்று’ மூடுகின்ற அளவுக்கு, வால்மீகி அந்த மந்திரத்திலேயே லயித்தார் விடுகின்றார்.

வெளி உலகில் எந்த விதமான விருப்பமோ, ஈர்ப்போ அவருக்கு இல்லாமல் போனது. இதற்கு மேலே அவரை உள்ளே இருந்து வெளியே இழுக்க, எந்தக் கயிறும் இல்லை. எந்த செங்கல்லும் இல்லை. யாருமே அவரை இழுப்பதற்கு இல்லை.

அதனால், அவர் அப்படியே மூழ்கிப் போனார். அப்படியே உள்ளே ஆழ்ந்து, கரைந்து, மறைந்து போனார்.

‘மரா மரா மரா’ என்ற ராம மந்திரத்தாலேயே, ராம நாமத்தாலேயே தன்னுள் கரைந்து, மறைந்தார்.

இது மிக அழகான கதை.