இறுதிவரை உங்களுடன் வரப்போவது யார்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வால்மீகி ஞானமடைவதற்கு முன்பு ஒரு கொடூரமான வேடனாக இருந்தார். கொள்ளைக்காரனாக இருந்தார். காட்டின் வழியாக யார் வந்தாலும், அவரிடம் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்களைக் கொன்று விடுவார். பொருட்கள் எடுத்து வராவிட்டாலும், “ஏன்? எடுத்துக் கொண்டு வரவில்லை,” என்று சொல்லியே கொன்றுவிடுவார். அந்த மாதிரியான கொலைகாரர். மகாபாவி.
> ஞானம்
> அடைந்தவர்கள்
> நல்லதே
> செய்வார்கள்.
> அவர்களின்
> செயல்கள்
> எல்லாம் நம்மை
> மேலேற்றுவதற்கே!
ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக ‘நாரதர்’ வந்தார். நாரதர் ஒரு மிகப் பெரிய ஞானி. அந்தக் காலத்தில் செய்தி வாசிப்பவர் அவர்தான். நிருபர்களுக்கு எப்படி இந்தக் காலத்தில் உரிமை இருக்கிறதோ, எப்படி அந்த அடையாள அட்டையை காண்பித்துவிட்டு போகிறார்களோ, அதுபோல் அந்தக் காலத்தில் இவருக்கென்று ஒரு தனி உரிமை இருந்தது. இவர் நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் நுழைவார்.
இவர் எல்லாவிதமான பத்திரிக்கையும், செய்தி சேகரிப்பும் (Journalism) செய்வார்.
Investigation Journalism, Straight Journalism என்று எல்லா ஆராய்ச்சியுமே செய்கிற நிருபர் இவர்.
தேவைப்பட்ட இடத்தில், தேவைப்பட்ட விதமாகச் செய்வார். ஆனால், இவரிடம் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், இவர் என்னதான் கலகத்தில் ஆரம்பித்தாலும், நல்லபடியாகத்தான் முடியும். அந்த மாதிரியான ஒரு நல்ல உணர்வு படைத்தவர். இவர் ஞானமடைந்தவர் என்பதினால், இவரைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நல்லதே செய்வார்.
நாரதர் வால்மீகி இருக்கும் வழியே வருகிறார். அவர் வந்தவுடனே, கொள்ளைக்காரரான வால்மீகி நாரதரைப் பிடித்துக்கொள்கிறார்.
அவரிடம் இருப்பது, ஒரே தம்புரா தான்.
தம்புராவும் ‘நாராயணா , நாராயணா’ என்றுதான் சொல்கிறது.
அந்தக் கொள்ளைக்காரர் தம்புராவைப் பிடித்து வைத்துக்கொண்டு, ‘ஏன் எதுவும் எடுத்துவராமல் வந்தாய்?’ என்று கேட்டு அவரைச் சாகடிக்க முயற்சி செய்தார்.
நாரதர் சொன்னார், “என்னை சாகடிக்கலாம்! நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப்பார். இதற்கு மட்டும் பதில் சொல்...
இத்தனைக் கொலை, கொள்ளைகளை ஏன் செய்கிறாய்? பாவம் செய்தால் உனக்கு எவ்வளவு கர்மம் வருமென்று தெரியவில்லையா? அந்தக் கர்மத்தை எல்லாம் எப்பொழுது தீர்ப்பாய்?” என்று கேட்டார்.
அதற்குக் கொலைகாரன், “நான்
சம்பாதித்தால்தானே, என் குடும்பத்தைக்
காப்பாற்ற முடியும்.இது அனைத்துமே எனது
குடும்பத்திற்காகத்தானே செய்கிறேன்,”
என்றார்.
நாரதர், “பரவாயில்லை, உனது குடும்பத்திற்காகத் தான் உழைக்கிறாய். அப்போது நீ சேர்க்கும் கர்மத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு அல்லவா?”
“ஆமாம், அதுதானே நியாயம். அவர்களுக்கும் நிச்சயமாக பங்கு உண்டுதான்,” என்றான் கொள்ளைக்காரன்.
அப்போது நாரதர் அவனிடம் சொன்னார், “அவர்களிடம் சென்று பேசிப்பார். உண்மையிலேயே அவர்கள் உனது கர்மத்தைப் பங்கெடுத்துக் கொள்வார்களா என்று தெரிந்து கொண்டு வா. அவர்கள் உண்மையிலேயே உனக்கு உதவுவார்கள் என்றால், மீண்டும் இதே இடத்திற்குத் திரும்பிவா. நீ வரும்வரை உனக்காக நான் இங்கேயே காத்திருக்கிறேன். அதன்பிறகு என்னை சாகடித்துக் கொல்,” என்று.
> இத்தனைக் கொலை,
> கொள்ளைகளை
> ஏன் செய்கிறாய்?
> பாவம் செய்தால்
> உனக்கு எவ்வளவு
> கர்மம் வருமென்று
> தெரியவில்லையா?
> அந்தக் கர்மத்தை
> எல்லாம் எப்பொழுது
> தீர்ப்பாய்?
கொலைக்காரனும் வேக வேகமாக வீட்டிற்கு ஓடினார்.
முதல் முறையாக, தன்னுடைய செல்லப்பிள்ளையான, தன்னுடைய உயிராகக் கருதிய மகனிடம் நேரே சென்று கேட்டார்.
"என் அருமை மகனே, அப்பா உனக்கு எதைக் கேட்டாலும் வாங்கித் தந்திருக்கிறேனில்லையா. இன்று உன்னிடம் நான் ஒன்று கேட்கப் போகிறேன். அதற்கு பதில் சொல்வாயா?" என்று கேட்டார்.
மகனும், "சொல்லுங்கள், அப்பா" என்றான்.
"நான் தினம் தினம், கொள்ளை, கொலை செய்கின்ற பாவத்தில்தான் எவ்வளவோ பொருட்களை வாங்கித் தந்திருக்கிறேன். நான் செய்கின்ற பாவத்தால் என்னை நிறைய கருமங்கள் வந்து சேரும். அதில் நீயும் பங்கெடுத்துக் கொள்வாயா?"
> "என் அருமை மகனே,
>
> அப்பா உனக்கு எதைக்
>
> கேட்டாலும் வாங்கித்
>
> தந்திருக்கிறேன்
>
> இல்லையா.
>
> இன்று உன்னிடம் நான்
>
> ஒன்று கேட்கப்
>
> போகிறேன். அதற்குப்
>
> பதில் சொல்வாயா?"
உடனே மகன் கோபத்துடன், "என்னப்பா, சொல்கிறீர்கள். தன் மகன் கேட்பதை வாங்கிக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமை. பின் எப்படி உங்களுடைய கர்மங்களுக்கு நான் பொறுப்பாக முடியும்?" என்று கேட்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத வால்மீகியின் மனம் சுக்குநூறாக உடைந்தது. ஆனால், எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் எப்போதும் தன்னுடனேயே இருக்கும் மனைவியிடம் சென்றார்.
"அம்மா, நான் தினமும் கொள்ளை அடித்த பணத்தில்தான் உனக்கு சாப்பாடு போடுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா?"
அவள் சொன்னாள், "ஓ! நன்றாகத் தெரியுமே"
"அப்படியென்றால், நான் செய்த பாவத்தில் உனக்கும் பங்கு உண்டுதானே!" என்று கேட்டார்.
உடனே மனைவி, "அதெப்படி? என்னைக் காப்பாற்ற வேண்டியது. உங்களுடைய பொறுப்பு. கொள்ளையடித்து வந்தாலும் கொள்ளையடிக்காமல்
எடுத்து வந்தாலும், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. எந்தக் கர்மமும் எனக்கு வராது” என்று ஒதுங்கிக் கொண்டாள்.
தன்னுடைய வாழ்க்கையையே இழந்துவிட்டதாக உணர்ந்த கொள்ளைக்காரன் இருக்கின்ற ஒரு சிறு நம்பிக்கையோடு, தன்னுடைய தாய், தந்தையரிடம் சென்றார்.
அவர்களும், "எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பப்பா. ஆனால் உன்னுடைய கருமங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பொறுப்பாகிவிட முடியாது” என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
இவருக்குள் திடீரென்று ஒரு ஆழமான உலுக்கல், நிகழ்ந்தது.
'இவர்கள் கர்மத்தைப் பற்றி கவலைப்படும் மனிதர்கள் இல்லை. ஆழ்ந்த நம்பிக்கைக்குரியவர் என்று நினைத்தவரெல்லாம் சாதாரண கேள்வியிலேயே ஒதுங்கிவிட்டார்களே? இவர்கள் எப்படி வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரப்போகிறார்கள்?' என்று நினைத்தான், அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை அடியோடு உலுக்கப்பட்டுவிட்டது.
சரியான குரு செய்கின்ற வேலையை, இங்கு நாரதர் செய்து இருக்கிறார். நாரதர் பெரிய பிரம்ம ஞானி, பரமஹம்ஸர். இந்த பிரபஞ்சத்திலே தோன்றிய முதல் பரமஹம்ஸர் 'சுகப்பிரம்மம்'. அதற்கு அடுத்த பரமஹம்ஸர், 'நாரதர்'.
> இந்த
> பிரபஞ்சத்திலே
> தோன்றிய முதல்
> பரமஹம்ஸர்.
> 'சுகப்பிரம்மம்'.
> அதற்கு அடுத்த
> பரமஹம்ஸர்,
> 'நாரதர்'.
அவருக்கு நன்றாகத் தெரியும், எந்த இடத்தில், கொள்ளைக்காரனாக இருப்பவர்கள் மாட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று. அவர் மாட்டிக்கொண்டிருக்கின்ற ஒரே விஷயம், குடும்பம். குடும்பத்தையும், அந்த உறவுகளையும் ஆழமாகப் பிடித்து வைத்து இருந்தார். அதுதான் தன் வாழ்க்கையின் சாரம், பலம் என்று நினைத்து இருந்தார்.
ஆனால், அது பலம் இல்லை என்று உலுக்கிக் காண்பித்துவிட்டார் நாரதர். இதுதான் அங்கே நடந்தது. கர்மத்தைப்பற்றிக்கூட அறியாத வேடர் அவர். ஆனால், நாரதர் நிஜத்தை உலுக்கிக் காட்டிவிடுகிறார். இருபத்தியோரு நிமிடத்திற்குள், ஒரு சுழற்சிக்குள், உணர்வுகள் முடிவதற்குள்ளாகவே இவருடைய அடி மனம் கலங்கிவிடுகிறது.
“என்ன இது? யார் யாரெல்லாம் நம்முடைய ஆதாரம் என்று நினைத்தோமோ, அவர்களெல்லாம் சாதாரணமான வார்த்தைகளுக்கே, ‘கர்மத்தை எடுத்துக்கொள்வாயா?’ என்ற வார்த்தைக்கே காணாமல் போய்விட்டார்களே!” என்று யோசித்தார்.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்...
எவையெல்லாம் உங்களுடனே வரும், எவையெல்லாம் நிலைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் அவசரமென்று வரும்போது சுற்றி நிற்காது.
ஒரு தேவையோ, துக்கமோ வரும்பொழுது அது உதவாது.
எவையெல்லாம்
உங்களுடனேயே
வரும், எவையெல்லாம்
நிலைக்கும் என்று
நினைத்துக்
கொண்டிருக்கிறீர்களோ,
அவையெல்லாம்
அவசரமென்று
வரும்போது சுற்றி
நிற்காது.
தனியாகத்தான் நின்று கொண்டு இருப்போம்.
அருமையான ஒரு வரி உண்டு...
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?...
கடைசி வரை குருநாதர் மட்டும்தான், வேறு யாரும் வர முடியாது...
என்னதான் இந்த சத்தியத்தை வார்த்தையாகச்
சொன்னாலும் பட்டறிவாதிகளுக்கு புரியாது.
ஆனால் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கு
இது அனுபவமாக மாறிவிடும்.