KAILASA Library/அவசிய அறிவியல்/பிரார்த்தனையில் வாழ்பவர் சொர்க்கத்திலேயே வாழ்கிறார்Sign in
அவசிய அறிவியல்

பிரார்த்தனையில் வாழ்பவர் சொர்க்கத்திலேயே வாழ்கிறார்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Deep prayerful passive mood என்று பிரார்த்தனை பற்றி ஆங்கிலத்தில் சொல்வார்கள். பிரார்த்தனை உணர்வோடு இருக்கின்றவர் தர்மத்தைத் தாண்டி வேறு எதையும் செய்வது இல்லை, தர்மத்திற்கு எதிராக இயங்குவதில்லை.

பிரபஞ்சத்தின் பேரியக்கத்திலேயே அவர் சரணடைந்து இயங்குகின்றார்.

விதை மரமாவது விழும் இடத்தைப் பொறுத்தது.

'பிரார்த்தனை உணர்வோடு, உள்வாங்கும் தன்மை இருக்கின்ற மனத்திலே, இந்தச் சத்தியங்கள் விழுமானால், அது உடனடியாக அனுபூதியாக மாறும்.

உங்கள் சித்தம் பிரார்த்தனை உணர்வால் நிரம்பியதாக இருக்க வேண்டும். பிரார்த்தனை உணர்வால் நிரம்பும் பொழுது, இந்தச் சத்தியங்கள் அந்த வினாடியே உங்களுக்குள் வெளிப்படும்.

ஆழமான பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டவுடன், எப்போதும் உயர்ந்த உணர்விற்குள்ளே இருப்பீர்கள். உங்கள் தர்க்கத்தைத் தாண்டிய பிரபஞ்ச சக்தியோடு உங்களை இணைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கிறார்.

பிரார்த்தனை உணர்வு ஆழமாக, ஆழமாக நம்முள் பக்தி மலரும்.

மலரும் பக்தி ஆழமாக்கப்படும்போது சரணாகதித்தன்மை மலரும்.

சரணாகதித் தன்மை மலர்ந்தால் நிம்மதி மலரும். உங்களுள் என்ன நிகழ்ந்தாலும் அதை வரவேற்கும் ஜீவன் முத்தராய் வலம் வருவீர்கள்.

Paramahamsa Nithyananda

அவசிய அறிவியல்

தனிநபருக்கு...

நீங்கள் உணர்வில்
எழுந்திருங்கள்.
மனித குலம்
தன்னால்
எழுச்சி அடையும்.