பக்தியை மலர வைப்பதே குருவின் வேலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உ உங்கள் உணர்வு பழுக்காதபோது, உங்களுக்கு ஒரு குரு தேவை.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...
உணர்வு பழுக்காத போது, உள்ளே இருக்கும் உணர்வு எனும் அங்கம் பழுக்காத போது, உணர்வை முதிர வைக்கும் பக்தியை மலர்த்த ஒரு குருவின் துணை தேவைப்படும்.
அதை உங்கள் வாழ்வில் நிதர்சனமாக காட்டக் கூடிய ஒரு குரு தேவைப்படுகிறார்.
குரு என்பவர் யார்?
உங்களுக்குப் புரிகின்ற மொழியில் உங்களுக்குப் புரிகின்ற விதத்தில், "பாரப்பா, பிரார்த்தனை செய்தால் நடக்கிறது. தியானம் செய்தால் இப்படி நடக்கிறது,” என்று நிரூபிக்கக்கூடிய ஒரு விஞ்ஞானியைத்தான் ‘குரு’ என்று சொல்கிறோம்.
ஆனால் நம் உணர்வு ஆழ்ந்து பழுத்து விட்டால், விஞ்ஞானி இல்லாமலே, நிரூபணம் இல்லாமலே பிரார்த்தனையை நாம் உபயோகம் செய்து கொள்ள முடியும்.
ஸ்விட்சைப் போட்டால் ‘பல்ப்’ எரியும் என்பதை எலக்ட்ரீஷியன் ஒரு முறை செய்து காண்பித்தால் போதும் அல்லவா. தினமும் போட்டு போட்டுக் காண்பிக்க வேண்டுமா?
தேவையில்லை.
| ஆழமான | நீங்களே போட்டுக் கொள்வீர்கள் தானே? | | பிரார்த்தனை | | | நடக்கின்ற ஒவ்வொரு | அதுபோன்று ஒரு முறை ஸ்விட்சை போட்டுக் காண்பிக்கின்ற வேலையைத்தான் குரு செய்கிறார்கள். ஒருமுறை உங்களைப் பிரார்த்தனை செய்ய வைத்து, உங்களுக்குள் பக்தியை மலர்த்திவிட்டால். பிறகு தானாகவே என்ன செய்வீர்கள்... | | வினாடியையும் | | | உங்களுக்குள், | | | சக்தி தரிசனத்தை | | | நீங்கள் பெற்றுக் | தொடர்ந்து இந்தப் பக்தியும், பிரார்த்தனை செய்யும் பழக்கமும் உங்களுக்குள் மலர ஆரம்பித்து விடும். | | கொண்டே இருப்பதை | | | உணர்வீர்கள். | |
ஆழமான பிரார்த்தனை நடக்கின்ற ஒவ்வொரு
வினாடியையும் உங்களுக்குள், சக்தி தரிச
னத்தை நீங்கள் பெற்றுக் கொண்டே இருப்பதை
உணர்வீர்கள்.
முதலாவது: எலி, புலியாக மாற வேண்டுமென்றால் மூன்று செயல்கள் நடக்க வேண்டும்.
அந்த எலியினுடைய மூலப்பொருளான களிமண்ணாக எலி மாற வேண்டும்.
இரண்டாவது: அந்த ‘புலி’ என்கின்ற அச்சுக்குள்ளே அந்த மூலப்பொருள் (Ingredients) போக வேண்டும். மூன்றாவது: இந்த அச்சில் சிறிது காலம் நிலைநிற்க வேண்டும். அதிலேயே நிறுத்தப்பட வேண்டும். கட்டப்பட்டுவிட வேண்டும்.
இந்த மூன்றையுமே, பிரார்த்தனை உங்களுக்குள்ளே நடத்தும். முதலில், குறைகளை உணர்கின்ற அகங்காரம் கரையும். 'நான்' என்பது அழிந்து மூலப்பொருளுக்குள்ளே கரையும்.
இரண்டாவதாக, எதுவாக நீங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்தப் பிரார்த்தனையை நம்புகிறீர்களோ எந்த மோல்டிற்குள் போக வேண்டும் என்று நினைப்பீர்களோ, அதற்குத் தயாராகி விடுவீர்கள். பொதுவாக இப்போது இருக்கும் நிலையைவிட மேல் நிலை செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள்.
அது எந்த நிலையோ, அந்த நிலைக்கான அச்சு உருவாகி விடும்.
இந்த அச்சிற்குள் உங்களுடைய சக்தி முழுவதும் நிரப்பப்படும். மூன்றாவது, அந்த மனிதராகவே வெளிப்படுவீர்கள். இந்த மூன்று விதத்தில்தான் பிரார்த்தனை சக்தி வெளிப்படுகிறது.
நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். பிரார்த்தனை சக்திக்கு, அவ்வளவு பெரிய பலம் உண்டு.
நம்முடைய
வாழ்க்கையையே
உருக்கி, வேறு
ஒரு விதத்திலே
வடிவமைக்கக்கூடிய
சக்தியும்,
பிரார்த்தனைக்கு
உண்டு.
நம் உடலையே உருக்கி, வேறு ஒரு உடலாக மாற்றக்கூடிய சக்தியும், நம்முடைய உணர்வையே உருக்கி, வேறு ஒரு உணர்வாக மாற்றக் கூடிய சக்தியும், நம்முடைய வாழ்க்கையையே உருக்கி, வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக் கூடிய சக்தியும், பிரார்த்தனைக்கு உண்டு.
அடித்துத் துணியைத் துவைத்து வெளுப்பதைப் போன்று, நம்முடைய உணர்வை அடித்துத் துவைக்க வைக்கின்ற சக்தி பிரார்த்தனைக்கு உண்டு. பிரார்த்தனை உணர்வோடு நாம் இருக்கின்ற ஒவ்வொரு வினாடியிலும் சக்தி தரிசனம் பெற்றுக் கொண்டே இருப்போம். பிரார்த்தனை உணர்வோடு வாழ்வதற்கு மட்டும் இடம் நேரம் காலம் தேவையில்லை.
செலவு இல்லாத ஆன்மீக சாதனை, பிரார்த்தனை!. காரில் சென்றாலும், பஸ்ஸில் சென்றாலும், நடந்து போனாலும், அந்த உணர்வோடேயே இருத்தல், உங்களை அந்தக் கடவுள் தன்மையிலேயே வாழவைக்கும்.