KAILASA Library/அவசிய அறிவியல்/பிரார்த்தனையின் முன்Sign in
அவசிய அறிவியல்

பிரார்த்தனையின் முன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கல்லும் கரையும்

எந்த விக்ரஹத்திற்கு முன்பு உட்கார்ந்து
பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கூட
கவலைப்படாதீர்கள்.

'இராமரிடம்' கேட்கிறீர்களா? அல்லது
'இராமகிருஷ்ணரிடம்' கேட்கிறீர்களா?
'கிருஷ்ணரிடம் கேட்கிறீர்களா? அல்லது
'சிவனிடம் கேட்கிறீர்களா? என்று
கவலையேபடாதீர்கள்.

ஒரு கல்லை நட்டு வைத்து, அதனிடம் கேட்டீர்களென்றால்கூட போதும். வேறு ஒன்றும் தேவையில்லை.

ஆழ்ந்து உருகுங்கள்.

கல் கடவுளாக மாறும்.

> ஆழ்ந்து
> உருகுங்கள்.
>
> கல்
> கடவுளாக
> மாறும்.

எல்லா இடத்திலுமே நட்ட கல்தான் கடவுள். நம் கோவிலில், நம் ஆஸ்ரமத்தில், ஆலமரத்தின் கீழே, எளிமையோடு உட்கார்ந்து பிரார்த்தனை செய்து வருபவர்களைக் கேட்டிருக்கின்றோம். "எங்கள் பிரார்த்தனைகளுக்கு எத்தனையோ முறை பதில் கிடைக்கின்றது, தீர்வு கொடுக்கின்றன" என்று சொல்கிறார்கள். எளிமையாக வாழும் கிராமத்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.

நம்முடைய ஆஸ்ரமத்தில் உள்ள ஆனந்தேஸ்வரர் ஆலயம், இப்போது வந்து செய்து வைத்தது என்று நினைக்காதீர்கள். 'லிங்க மூர்த்தி' ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர்.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்களிடம் வழிபாட்டைப் பெற்றுக் கொண்டிருப்பவர். 1000 வருடங்களாக பழமையான மூர்த்தி இருக்கின்றது என்று தெரிந்ததும் விதர்க்கத்தோடு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்தை வழிபடும் பல கிராமத்து மக்கள் கன்னடத்தில் 'பவாட புருஷன்' என்றும், 'சித்தபுருஷன்', 'ஞானி' என்றும் சொல்கிறார்கள்.

அவர்கள் பிரார்த்தனை செய்வதைப் பார்க்கும் பொழுது உருக்கமாக இருக்கும். அந்த மரத்தோடு பேசுவார்கள். இவர்களுடைய குறையையும் சொல்வார்கள். அதற்கு அவர்களுக்கு கிடைக்கும் விடையையும் நேரடியாக அப்படியே சொல்வார்கள்.

வயதான பாட்டிகள் சில பேர் வருவார்கள். வந்து ஆலமரம் முன்பு நின்று பேசுவார்கள். “சுவாமி, என் மாடு தொலைந்து போச்சு”.

....

“ஓ தெற்கு திசையில், நான்காவது வீட்டில் இருக்கிறதா? நான் போய் பிடிச்சுக்கவா? சரி நான் போய் பிடிச்சுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.

நான் சில நேரத்தில் யோசிப்பதுண்டு. “என்னடா இது? இவர்கள் பிரார்த்தனை செய்வது சரி. ஆனால் அங்கிருந்து பதில் வருகின்ற மாதிரியே இவர்களே பேசுகிறார்களே,” என்று.

சில நேரத்தில் செல்போனில் பேசுகிறீர்கள்
அல்லவா, “என்னப்பா இது. சாமான் காணாமல்
போய் விட்டது”

....

“ஓ வடக்கு பக்கமாக இருக்கிறதா? சரி எடுத்துக்கிறேன், எடுத்திட்டு வந்து உன்னைப் பார்க்கிறேன்,” என்று செல்போனில் உரையாடும் போது இப்படித்தான் பேசுவார்கள்.

நாம் செல்போனில் பேசுவது போல், அவர்கள் உணர்வு செல்பேசியில் பிரபஞ்ச சக்தியோடுப் பேசுகிறார்கள்.

1000

வருடங்களாக

பழமையான மூர்த்தி

இருக்கின்றது

என்று தெரிந்ததும்

விதர்க்கத்தோடு

வந்து பிரார்த்தனை

செய்கிறார்கள்.

உண்மையிலேயே அவர்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டதைப் போன்றே, மூன்றாவது நாள் அவர்கள் சொன்ன அந்த வீட்டிற்குச் சென்று, அவர்கள் மாட்டை அழைத்து வருவார்கள். அது தான் ஆச்சரியமாக இருக்கும். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. ஆயிரக்கணக்கான முறை நானே பார்த்து இருக்கிறேன். எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாமல், நேரிடையாக அவர்களே இறைசக்தியுடன் தொடர்பு கொள்வார்கள்.

அதுதான் பக்தியினுடைய ஆழம்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் உணர்வே, பிரார்த்தனைக்குத் தகுந்தாற்போல பழுத்து விட்டால், வேறு எந்த இடமும், நபரும் உங்களை பிரபஞ்ச சக்தியோடு இணைப்பதற்குத் தேவைப்படாது. கடவுளிடமிருந்து வரும் பதில்களை, நீங்களே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். இது பிரார்த்தனையில் உருகிக் கரைபவர்களுக்குக் கிடைக்கும் தெய்வப் பிரசாதம்.