KAILASA Library/அவசிய அறிவியல்/இளைஞர்களே! கட்டுக்கடங்காதSign in
அவசிய அறிவியல்

இளைஞர்களே! கட்டுக்கடங்காத

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்தியை கட்டவிழுங்கள்

தலைமை என்பது பதவியை வைத்து வருவதல்ல. தன்னுடைய தன்மையை வைத்து வருவது. தலைவன் என்பவர், ஒரு பதவியினால் தலைவராக மாறுவதில்லை. தன்னுடைய தலைமைத் தன்மையினால் மாறுகின்றார். தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் ஸ்திரத்துவம், தன்னம்பிக்கை இவைகள்தான் ஒருவரைத் தலைவராக்குகிறது.

ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை, தன்னைத் தனக்குள் ஆராய்ந்து, தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றிய, தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவது.

பள்ளிகளும், கல்லூரிகளும் இதை வழங்க முடியாது என்பதினால் தான், நாம் நம்முடைய தியானபீடத்தின் மூலமாக இதை ஒரு வருட இலவசக் கல்வி முறையாகவே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

ஓராண்டு தனக்குள் மூழ்கி, தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இளைஞர்கள் அத்தனை பேருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும், கல்வியும் தந்து ஓராண்டிற்காவது தங்களுக்குள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பை லைஃப் பிளிஸ்ஸிங் டெக்னாலஜி (LBT) என்ற நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தி இருக்கின்றோம். மேலும் மேற்படிப்பு பயில விரும்பும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்குமே இந்த ஒரு ஆண்டு வாழ்க்கை கல்வியோடு (LBT) பட்ட கல்வியும் சேர்த்து வழங்குகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய சமூக சேவையாக இதைத்தான் நினைக்கிறோம். வேறு எதையும் நான் சமூக சேவை என்று நினைக்கவில்லை.

யாரோ ஒரு 100 பேருக்கு மருந்து கொடுப்பதையோ, 1000 பேருக்கு அன்னதானம் கொடுப்பதையோ, அல்லது ஏதோ சில மேலான பணிகளைச் செய்வதையோ மருத்துவப் பணி செய்வதையோ, நான் மிகப்பெரிய சமூக சேவையாக நினைக்கவில்லை.

சீரழிவு வந்த பிறகு நிவாரணத்திற்கு உதவுவதைவிட, வறுமையை உருவாக்கி விட்டு அவர்களுக்கு சேவை செய்வதைவிட, அடிப்படையான வறுமையின் ஆணிவேரை அறுப்போம்.

வறுமையின் ஆணிவேரை அறுக்க வேண்டுமென்றால், தனி மனிதருடைய வாழ்க்கை உயர்த்தப்பட வேண்டும். அதற்காக அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கைத் தன்மையை, வாழ்க்கைத் தெளிவை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.

இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றீர்கள். ஒன்று வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதியவர்கள்! அடுத்தது வாழப்போகின்ற இளைஞர்கள்!

வாழப் போகின்ற இளைஞர்களே! உங்களுக்கான அருமையான வாய்ப்பு, அற்புதமான வாய்ப்பு..

ஓராண்டு உங்களுக்குள் உங்களை ஆழ்ந்து பரிசோதித்து, உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழுங்கள்.

உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்தீர்களானால், நீங்கள் இப்பொழுது வாழ்வதைவிட 100 மடங்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தோடு, வெளி உலகத்திலும், உள்ளுலகத்திலும் வாழ முடியும். இதுதான் இளைஞர்களுக்கு நான் கூறும் செய்தி.

Nithyananda

அவசிய அறிவியல்

பெண்களுக்கு...

தாய்மைத்
தன்மைக்குள்ளே
மலருவதுதான்
பெண்களின்
இறுதியான
பொறுப்பு.