தாய்மை மலர தனி முயற்சி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தேவையில்லை
பெண்கள் சுபாவத்திலேயே ஆழமான, ஸ்திரமான, தெளிந்த புத்திக்கூர்மை உடையவர்கள்; பொறுப்புடையவர்கள்.
பல பேர் என்னிடம் கேட்பதுண்டு, "பெண் ஞானிகள் குறைவாக இருப்பதற்குக் காரணமென்ன?"
> உண்மையில்
>
> பெண் முழுமை
>
> அடையும் பொழுது,
>
> தாய்மை நிலையை
>
> அடைகின்றார்.
>
> முழுமையான
>
> தாய் உணர்வை
>
> அனுபவிக்கின்றார்.
ஒரு விஷயம், ஞானமடைய வேண்டும்
என்ற தேவையே, தனக்குள்ளேயே ஒரு
வெறுமையை உணரும் பொழுது மட்டும்தான்
வர ஆரம்பிக்கும். பொதுவாக, பெண்கள்
தங்களுக்குள் வெறுமையை உணர்வது குறைவு.
ஆனால் இன்றைய காலகட்டத்திலே ஆண்களின்
வாழ்க்கைப் போக்கையே பெண்களும்
கடைப்பிடிக்க ஆரம்பித்ததினால், அவர்களும்
வெறுமையை உணரத் தொடங்குகிறார்கள்.
தங்களுக்குரிய வாழ்க்கைப் போக்கையும்,
மனப்போக்கையும் கடைப்பிடிக்கும் பெண்கள்
வெறுமையை உணர்வதில்லை.
காரணம், "தாய்மை" என்பது ஒரு மிகப்பெரிய முழுமையைக் கொடுத்து விடுகின்ற நிலை.
ஆண்கள் ஞானம் அடைந்தால் அவர்களுக்கு 'சுவாமி' என்கின்ற அடைமொழி வழங்கப்படும்.
பெண்கள் ஞானமடைந்தால் அவர்களுக்கு 'மாதாஜி' என்கின்ற அடைமொழி வழங்கப்படும்.
'மாதா' என்றால் தாய் நிலையில் இருப்பவர். உண்மையில் பெண் முழுமை அடையும் பொழுது, தாய்மை நிலையை அடைகின்றார். முழுமையான தாய் உணர்வை அனுபவிக்கின்றார்.
தாய்மை என்பது பொதுவாக ஒரு குழந்தை பெறுகின்ற நிகழ்ச்சியோடுமட்டும் தொடர்புடையது அல்ல. உணர்வு ரீதியாகவும் தொடர்புடையது.
ஆனால், ஒரு பெண் முழுமை நிலையான தாய்மை நிலையை அடைய வேண்டுமானால், தனிப்பட்ட எந்தப் பெரிய முயற்சியும் தேவையில்லை.
ஒரு பெண்ணைத் தாயாக மாற்றுகின்ற அந்த இயற்கையே, உணர்வு ரீதியாக, அவர் தாயாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
இது ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய கருத்து, சூட்சுமமான கருத்து. ஆழ்ந்து நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய கருத்து.
ஒரு பெண் உடலளவில் மட்டும் குழந்தையைச்
சுமக்கும்பொழுது, அவர் ‘பூ கர்ப்ப நிலையை’
அடைகின்றார்.
பூ கர்ப்பம், என்றால் குழந்தையைச் சுமந்து பிறவி அளிக்கின்ற ஒரு நிலை. அது ‘பூ கர்ப்பம்.’
குழந்தையைத் தன் இதயத்தில் சுமந்து,
தன் இதயத்திலேயே நினைத்து, நினைத்து
குழந்தையை வளர்க்கும் போது ‘ஹ்ருத் கர்ப்ப
நிலையை’ அடைகின்றார்.
ஆன்மீக ஞானத்தைக் கொடுத்து, அந்த
வாழ்க்கையை வாழும் முறையான நிலையை
அக்குழந்தைக்கு அளிக்கும் பொழுது ‘ஞான
கர்ப்பத்திலே’ சுமந்து, ஞான கர்ப்ப நிலையை
அடைகின்றார்.
பூ கர்ப்பம்,
ஹ்ருத் கர்ப்பம்,
ஞான கர்ப்பம்.
பூ கர்ப்பம் என்றால்...
“ஒரு உடல் பிறவியை” மட்டும் வழங்குவது.
தாய்மை என்பது
சாதாரணமாக ஒரு
குழந்தை
பெறுகின்ற
நிகழ்ச்சியோடு
மட்டும்
தொடர்புடையது
அல்ல. உணர்வு
ரீதியாகவும்
தொடர்புடையது.
ஹ்ருத் கர்ப்பம் என்றால்...
வெளி உலகத்தில் அக்குழந்தை வாழத் தேவையான வாழ்க்கையை, வாழும் முறையை அளிப்பது. ஒரு கலையையோ, அறிவையோ, வித்தையையோ, படிப்பையோ வழங்குவது. வாழ்க்கை வாழும் முறையை வழங்குவது ஹ்ருத் கர்ப்பம்.
ஞான கர்ப்பம் என்றால்...
வெளி உலகில் மட்டுமல்லாமல், உள்ளுலகிலும் வாழும் சக்தியை வழங்குவது.
> ஏழு
> வயதுக்குள்
> முதல்
> ஆசிரியையே
> தாய்.
ஒரு தாயால் மூன்று கர்ப்ப நிலையிலும் உதவி செய்ய முடியும். இன்றைய பெண்கள் இந்த மூன்று கர்ப்ப நிலையிலும் உதவி செய்வதற்கான முழுமையான சக்தி படைத்திருக்கிறார்கள்.
இந்த மூன்று கர்ப்ப நிலையிலும் தாயே இருந்து உதவி செய்யாத போதுதான், வேறு நபர்கள் தேவைப்படுகிறார்கள். முதல் கர்ப்ப நிலையைத் தாய் மட்டும்தான் செய்ய முடியும். இரண்டாவதாகிய கல்வி பயில்விப்பதிலும், வாழும் முறையைக் கற்றுத்தருவதிலும் தாய்க்கு உதவியாக ஆசிரியர்கள் இருக்கலாமே தவிர, தாய்தான் முதல் ஆசிரியை. தாய்க்கு உதவியாகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய மனவியல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், “7 வயதுக்குப் பிறகு நாம் எதையுமே கற்றுக் கொள்வதில்லை,” என்று. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
7 வயதுக்குப் பிறகு நாம் எதையுமே கற்றுக்கொள்வதில்லை. 7 வயதிற்குள் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மன அமைப்புதான், அந்த அமைப்பின் அடிப்படையில்தான் நாம் எதையுமே கற்றுக் கொள்கின்றோம்.
7 வயதுக்குள் நாம் கற்றுக் கொள்கின்ற விஷயம்தான் பெரும்பான்மையானது. அப்படியென்றால் நம்முடைய முதல் ஆசிரியையே தாய்.
ஞானத்திற்குக்கூட தாய்தான் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றாள்.
தெரிந்தோ, தெரியாமலோ சில நேரங்களில் நல்ல விதத்தில் குழந்தையை வளர்க்கின்ற தாய்மார்கள், குழந்தைக்கு, “இப்படித்தான் வாழ வேண்டும்,” என்று வழிகாட்டி வளர்க்கின்றார்கள்.
குழந்தையும், 'இப்படியெல்லாம் வாழவேண்டுமென்று' அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறது. சில நேரத்தில் குழந்தை, சில தாய்மார்களிடமிருந்து எப்படி வாழக்கூடாது என்பதையும் அவர்களிடமிருந்தே கற்றுக் கொள்கின்றது.
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஞானத்திற்குக்கூட தாய்தான் காரணம். மூன்று நிலையிலுமே பெண்களின் பொறுப்பு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது.
உடல், மனம், ஆன்மா என்கின்ற மூன்று
நிலையிலும் முதலில் தாய்தான் உதவி
செய்வாள்.
பெண்ணால் ஒரு உயிரையே உருவாக்க முடியும்.
ஒரு உயிரையே உருவாக்கும் சக்தி நிலவுகின்ற அந்தப் பெண்ணின் உடலில், ஞானம் மலர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் சாத்தியமான ஒன்று.
> ஒரு உயிரையே
>
> உருவாக்கும் சக்தி
>
> நிலவுகின்ற அந்த
>
> பெண்ணின் உடலில்,
>
> ஞானம் மலர்வதற்கு
>
> அதிக வாய்ப்புகள்
>
> இருக்கின்றது.
பெண்களுடைய மிகப் பெரிய பொறுப்பு, தனக்குள் முழுமையை உணர்ந்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் முழுமையை உணர்த்துவது.
‘ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை, தாயும் பிறக்கின்றாள்’.
குழந்தை பிறக்கும் வரை அவள் பெண்தான். தாய் கிடையாது. குழந்தை பிறக்கும்வரை அவளுக்குப் பெண் என்றுதான் பெயர். தாய் என்று பெயர் கிடையாது.
குழந்தை பிறந்த அந்த வினாடியே அவளுக்குத் தாய் என்கின்ற பதவி உயர்வு கிடைக்கின்றது. குழந்தை பிறக்கும் வினாடியில், குழந்தை மட்டும் அல்லாமல், தாயும் பிறக்கின்றாள். தாய்மை உணர்விற்கான ஒரு வாய்ப்பும் பெண்ணிற்குள் மலர்கின்றது.
அதனால்தான் ஒரு குழந்தைக்குப் பிறப்பு தருவதினாலேயே, சுபாவத்தினாலேயே பெண்ணுக்குள் ஒரு பெரிய முதிர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது.
ஒரு குழந்தை, ஒரு பெண்ணுக்குள் இருக்கின்ற, 'தன்னைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்னும் ஒரு மிகப்பெரிய மனமுதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்த முதிர்ச்சி பெண்ணிற்குள் தானாகவே நிகழ்ந்து விடுகின்றது.
உண்மையாகப் பார்த்தால், தாய்மை என்ற குணம் உலகத்திற்கே பொதுவானது.
ஆண் உடலில் இருப்பவர்களும், அந்தத் தாய்மைக் குணத்தை அடைய முடியும்.
ஆனால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதை அடைவதை அவர்கள் ஒரு சாதனையாக செய்தால் மட்டும்தான் அடைய முடியும்.
ஆனால் பெண்ணிற்குச் சுலபமாக, இயற்கையிலேயே தாய்மை குணம் அது நடந்துவிட முடியும்.