தாய்மை மலர்வது பெண்களுக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மட்டுமல்ல... ஆண்களுக்கும் அவசியம்
ஆண் உடலில் இருப்பவர்களும், தாய்மைக் குணத்தை அடைய முடியும்.
தங்களுக்குள் இருக்கும் தாய்மைக் குணத்தை வெளிப்படுத்துவது ஆண்களுக்கும் அவசியம்.
ஒரு அழகான கதை ...
பிருந்தாவனத்தில் இருக்கின்ற ஒரு கிருஷ்ணர் ஆலயத்தில், ஒரு மூடப் பழக்கவழக்கம் இருந்து வந்தது. அவர்கள் அந்த ஆலயத்திற்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. ஆண்களை மட்டும் அனுமதிப்பார்கள்.
அது ஏன் என்று தெரியவில்லை? இது முதலில் இருந்து வந்த பழக்கம். ஆனால் இப்பொழுது அந்தப் பழக்கம் இல்லை.
‘பெண்களை அனுமதிப்பதில்லை’ என்பது நம்மால் கற்றுப் புரிந்துகொள்ள முடியாத ஒரு கருத்து. உலகத்தினுடைய பாதி ஜீவன்களுக்கு ஆன்மீகத்தை மறுப்பது என்பது மிகப் பெரிய கொடுமையான விஷயம். மிகப் பெரிய தவறும் கூட.
ஆனால் மீரா, பிருந்தாவனம் சென்றே தீர்வது என்றும், அந்த ஆலயத்துக்குள் சென்று, கிருஷ்ணரைத் தரிசித்தே தீர்வது என்றும் முடிவு செய்துவிட்டுச் சென்றார்.
‘மீரா வரப்போகிறார்’ என்பதைக் கேள்விப்பட்ட உடனே, இந்தக் கோயில் பூஜாரிக்குள் நடுக்கம் வந்துவிட்டது. காரணம் வரப்போவது மீரா. மீரா ஒரு பிரபலமான, பொதுமக்கள் மதிக்கின்ற ஒரு பெரிய கிருஷ்ண பக்தை.
அவரை உள்ளே விடாமல் எப்படித் தடுப்பது?
பெண் என்கின்ற காரணத்தால் உள்ளே விடாமல் தடுப்பதா?
> உலகத்தினுடைய
> பாதி
> ஜீவன்களுக்கு
> ஆன்மீகத்தை
> மறுப்பது என்பது
> மிகப் பெரிய
> கொடுமையான
> விஷயம். மிகப்
> பெரிய தவறும்
> கூட.
“கிருஷ்ணரை நேரில் பார்த்து, கிருஷ்ணரோடு விளையாடும் பரவச நிலையில் வாழும் ஒரு ஞானி என்பதால் அவரை அனுமதிப்பதா?, இல்லையா?” என்று அவருக்குள் மிகப்பெரிய தடுமாற்றம் உருவானது.
மீரா தன்னுடைய பக்தர்கள், அன்பர்கள் புடைசூழ தெருக்களில் ஆடிப்பாடிக் கொண்டு கோயிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் கோயிலை நோக்கி வரவர, இவருடைய நடுக்கம் அதிகரிக்கின்றது.
நேரம் ஆக ஆக, மீரா கோயிலின் அருகேயே வந்து விட்டார். வந்த உடனே பூஜாரி தடுக்க முயற்சிக்கின்றார்.
"பெண்கள் இந்தக் கோயிலுக்குள் வரக்கூடாது" என்று சொன்னார்.
உடனே மீரா "ஹாஹா!" வென்று சிரித்து விட்டுச் "பிருந்தாவனத்திற்குள், கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்களும் உண்டோ?" என்று அந்த பூஜாரியிடம் கேட்டார்.
அதைக் கேட்டவுடனே பூஜாரிக்குப் பளீரென்று ஒரு தெளிவு பிறந்தது. பூஜாரி பல ஆண்டுகாலம் கிருஷ்ணனை வழிபடுபவர் என்பதினால், அந்த ஞானத் தெளிவிற்குத் தயாராக இருந்தார்.
> பிருந்தா
> வனத்திற்குள்
> கிருஷ்ணனைத்
> தவிர
> வேறொரு
> ஆண் இருக்க
> முடியுமா?"
ஞானியிடமிருந்து, ஒரே ஒரு வார்த்தை
வந்தவுடன், அவரது உள்ளுணர்வு உலுக்கப்
பட்டுவிட்டது.
"ஆஹா! உண்மைதானே!
பிருந்தாவனத்திற்குள் கிருஷ்ணரைத் தவிர
வேறொரு ஆண் இருக்க முடியுமா?"
மீரா அழகாகச் சொல்கின்றாள்.
"பிருந்தாவனத்திற்குள் கிருஷ்ணரைத் தவிர
மற்ற எல்லோரும் பெண்கள்தான்.
எல்லோரும் அவருடைய கோபியர்கள்தான்.
அவர் ஒருவர் மட்டும்தான் ஆண்.
கோபியர்களுக்கெல்லாம் நாதனான அவர் ஒருவர்
மட்டும்தான் பிருந்தாவனத்திற்குள் இருக்க
முடியும்."
'பிருந்தாவனத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் ஆண்'; இதைக் கேட்டவுடனே அந்த பூஜாரிக்குள் பெண் தன்மை மலரத் துவங்கியது.
"ஆஹா! உண்மைதானே! இத்தனை ஆண்டுகள் கிருஷ்ண வழிபாடு செய்தும் இந்தத் தெளிவு நமக்குள் ஏற்படவில்லையே! கிருஷ்ணரைத் தவிர, வேறு ஒரு ஆண் இருக்க முடியுமா இந்த பிருந்தாவனத்திற்குள்!" என்று தெளிவு அடைகிறார்.
உடனே இவரும், மீராவின் பக்தர்களோடு சேர்ந்து ஆடிப்பாடிக் கொண்டே கோயிலுக்குள் எல்லோரையும் அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், மீராவின் கால்களில் விழுந்து அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொள்கின்றார்.
உண்மையிலேயே இந்த சத்தியம் எல்லோருக்குமே பொருந்தும். மற்ற எல்லோரும் அந்த இடத்தில் பெண்கள்தான்.
பெண் சரீரத்தில் இருப்பவர்களுக்கு, அந்தப் பெண் தன்மையை உணர்வது மிக சுலபம்.
இயற்கையிலேயே பெண்கள் தனக்குள் முழுமையை உணர்வது அவர்களுக்கு எளிமையான ஒரு விஷயம்.
ஆனால் ஆண்களுக்குச் சற்று கடினம். தனக்குள் முழுமையை உணராமல், வெறுமையை உணர்வதால்தான், ஆண்கள் அதிகம் ஞானத்தைத் தேடி ஓடினார்கள்.
பெண்கள் சுபாவத்தினாலேயே, இயற்கையினாலேயே, தனக்குள் ஒரு ஆனந்தத்தையும், முழுமையையும் உணர்வதால்தான் ஞானத்தை நோக்கி ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இருந்த இடத்திலேயே அடைந்தாலும், அந்த அடைந்த ஞானத்தைத் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பகிர்வதிலேயே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழத் துவங்கினார்கள்.